Home

வணக்கம்.englishpal.in தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். 

நாங்கள் இந்த தளத்தில் ஆங்கிலம் கற்பது பற்றிய அனைத்து தகவல்களையும் தரவுள்ளோம். குறிப்பாக, Grammar, vocabulary building, language tips & tricks, reading and writing practices, free resources, free text tools போன்ற அனைத்தையும் தரவுள்ளோம். அனைத்தையும் படித்து ஆங்கில அறிவை வளர்த்து நல்ல நிலைக்கு செல்ல எங்கள் englishpal.in தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

Englishpal home page

தற்போது இந்த பக்கத்தில் grammar சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் மேலே கூறிய மற்ற அனைத்தையும் பதிவிடுகிறோம்.

Grammar 

நாங்கள் இந்த தளத்தில் grammar இன் difficulty level பொறுத்து மூன்று வகைகளாக பிரித்து அவற்றை விளக்கியுள்ளோம். அவையாவன,

Basic Grammar

Advanced Grammar

இந்த இரண்டு வகைகளில் முக்கியமாக ஆங்கிலம் கற்க பேச எழுத தேவைப்படும் அனைத்து இலக்கணங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றில் என்னென்ன உள்ளன என்பதை காண்போம்.

Basic Grammar

இதில் ஆங்கில இலக்கணத்தின் மிகவும் எளிமையான மற்றும் அடிப்படையாக தெரிந்து வைத்துக்கொள்ளக் கூடியவற்றை குறிப்பிட்டுள்ளோம். இவை மிகவும் அடிப்படையானவை. இவற்றை நன்கு கற்று தெளிவு பெற்றால் ஆங்கிலத்தின் பிறவற்றை கற்க எளிமையாக இருக்கும்.

Advanced Grammar

மேலே basic இல் உள்ளதை படித்து தெளிவான பின் இதனை படித்தால் மிகவும் எளிமையாக இருக்கும். Basic ஐ காட்டிலும் இதன் difficulty level அதிகம். 

ஆங்கிலத்தில் எவ்வாறு வாக்கியங்களை காலத்தைப் பொறுத்து அமைப்பது, அந்த வாக்கியத்தை எவ்வாறு எதிர்மறை வாக்கியமாக (Negative sentences), வினா வாக்கியமாக (Interrogative sentences) மாற்றுவது போன்றவற்றை tense இல் காணாலாம்.

Active voice (செய்வினை) மற்றும் passive voice (செயப்பாட்டு வினை) என்றால் என்ன அது காலத்தை அதாவது tense ஐ பொறுத்து எவ்வாறு மாறும் என்பதை எடுத்துக்கட்டுக்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Direct speech and indirect speech என்றால் என்ன அவை வாக்கியத்தினை பொறுத்து எப்படி மாறும், காலத்தை (tense) பொறுத்து எப்படி மாறும், அவற்றை எளிதாக எவ்வாறு ஞாபகம் வைத்துக்கொள்வது போன்றவற்றைப் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளோம்.

Auxiliary மற்றும் modal auxiliary verbs பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

If  clause  மற்றும் Prefix  and suffix பற்றி தெளிவாகவும் மிகவும் எளிமையாகவும் எடுத்துக்கட்டுக்களுடன் விளக்கியுள்ளோம். மேலும் பல பகுதிகள் advanced வகையில் அடுத்தடுத்து வரும். அனைத்தையும் படித்து தெளிவு பெறுங்கள்.

ஒவ்வொரு வகையை தெளிவாக படித்து அதனை உணர்ந்தபின் அடுத்த வகைக்கு செல்வது நல்லது. நீங்கள் முதலில் basic  முடித்து பின் intermediate ஐ தெளிவு பெற்று பின் advanced படிப்பது சிறப்பானதாக இருக்கும்.

Vocabulary

Homepage Vocabulary

இந்த Vocabulary வகையின் கீழ் நாம் எப்படி நம்முடைய ஆங்கில சொற்களின் அறிவை வளர்ப்பது என தெளிவாக கூறியுள்ளோம். இங்கு தற்போது Abbreviations மற்றும் Acronyms என்றால் என்ன, எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும், எனவும், பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும்  Abbreviations மற்றும் Acronyms என்னென்ன என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதனை காண கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படியுங்கள்.

இனி வரும் பதிவுகளில் நாம் phrasal verbs, common verbs, idioms, and phrases மற்றும் மற்ற Vocabulary தொடர்பாக உள்ளவற்றை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும், அன்றாட வாழ்வில் அதிகமாக உபயோகிப்பயைகள் போன்றவற்றை எடுத்துக்கட்டுகளுடன் எழுத இருக்கிறோம். அதனை படிக்க நமது இணையதளத்தில் காண காத்திருங்கள். விரைவில் நாங்கள் அவற்றை இங்கு பதிவிடுகிறோம்.

Resources & Plans

நாம் அனைவருக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அவற்றை கற்றுக்கொள்ள சரியாக திட்டமிட்டு படிக்கிறோமா என்றால் நம்மில் பெரும்பாலோனோர் கூறும் பதில் இல்லை என்பதாகும். நாம் சரியாக தினமும் திட்டமிட்டு அதனை தினசரி சரியாக செய்து பயின்று வந்தால் நம்மால் விரைவாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். அனால் சரியான திட்டமிடல் இல்லாததால் நமது ஆங்கிலம் கற்கும் இலக்கானது நடக்காமல் போக கூடாது.

Home English study plan

நான் என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் படித்த முறைகள், நான் எப்படி திட்டமிட்டேன் போன்றவற்றை நான் உங்களுக்கு இங்கு சில பதிவுகளாக கொடுத்துள்ளேன். அவற்றை நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு எப்படி ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைக்கும்.

இனி வரும் பதிவுகளில் தனித்தனியாக எப்படி நமது ஆங்கிலதை தெளிவாக பேச, பிழையில்லாமல் அனைத்து சூழ்நிலைகளும் எழுத, எப்படி மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள, எப்படி தெளிவாக மற்றவர்களுக்கு புரியும்படி படிக்க நமது தினசரி நாட்களில் எப்படி திட்டமிட வேண்டும் என்பதை பற்றி நாம் இனி வரும் பதிவுகளில் குறிப்பிட உள்ளோம். அவை அனைத்தையும் படித்து சரியாக திட்டமிட்டு படித்து ஆங்கிலம் கற்க வாழ்த்துக்கள்.

Home page free resource

இந்த பகுதியில் ஆங்கிலம் கற்க, ஆங்கில அறிவை பெருக்க, குறிப்பாக ஆங்கிலத்தில் பேச உதவும் இணையதளங்கள், ஆங்கிலத்தை எழுத பயிற்சிகள் உள்ள இணையதளங்கள், ஆங்கிலத்தை கேட்டு புரிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் போன்றவற்றை பற்றி பதிவுகள் இடுவோம்.

இங்கு நான் கூறும் இணையதளங்கள் அனைத்தும் முற்றிலும் இலவசம் ஆகும். இவற்றை உபயோகிக்க நாம் எந்த பணமும் கட்ட வேண்டியது இல்லை. நான் என்னுடைய ஆங்கிலம் கற்க உபயோகித்த இணையதளங்களை மட்டுமே இங்கு கூறுகிறேன். எனவே இவை அனைத்தும் எனக்கு எப்படி உதவியது அதே போல் உங்கள் ஆங்கிலம் கற்கும் பயணத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இனி வரும் நாட்களில் நாம் உபயோகிக்கும் இணையதளங்களை பற்றி பதிவிட உள்ளேன். அவை அனைத்தையும் படித்து உங்கள் ஆங்கிலம் கற்க ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்.

Text Tools

நான் இந்த பகுதியை உருவாக்கியதன் முக்கிய காரணம் நமது வாசகர்களின் நேரத்தை, வேலைப்பளுவை மிச்சமாக்கி அவர்கள் மிக சிறப்பாக அவர்கள் ஆங்கிலம் எழுதும் பணிகள் மற்றும் ஆங்கில வார்த்தைகளை வேடிக்கையான முறையில் கற்கவே ஆகும்.

English Text Tools

நாம் ஆங்கிலத்தில் எழுதும்போது பல்வேறு வகைகளில் அவற்றின் அமைப்பை மாற்ற வேண்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் நமது இந்த பகுதில் உள்ள tools கொண்டு அவற்றை ஒரு வினாடிக்கு சரியாக மாற்ற முடியும். அவை என்னென்ன என இங்கு நாம் காண்போம்.

இந்த Text Comparison Tool உதவியை கொண்டு நாம் இரண்டு கோப்புக்களை எழுத்து, வார்த்தை, வாக்கியம் என நம்மால் ஒப்பேடு செய்து இரண்டு கோப்புகளில் உள்ள சிறு சிறு மாற்றங்களை கண்டறிய முடியும்.

நாம் எழுதியதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, வார்த்தைகளின் எண்ணிக்கை, வாக்கியங்களின் எண்ணிக்கை, பத்திகளின் எண்ணிக்கை, மற்றும் பல தகவல்களை நாம் எழுதும்போதே இந்த Character & Word Counter Online Tool மூலம் அறியலாம்.

நாம் ஆங்கில வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை A இல் இருந்து Z வரிசையிலோ அல்லது Z இல் இருந்து A என்ற வரிசையிலோ வரிசைப்படுத்த இந்த A to Z and Z to A Order Sort Tool ஐ உபயோகிக்கலாம். வினாடிக்கு குறைவான நேரத்தில் இது வரிசைப்படுத்தி தரும். 

ஆங்கிலத்தில் உள்ள சொற்களின் பொருள், அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும், அதற்க்கு இணையான சொற்கள், எதிர்ச்சொற்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த Online English Dictionary உதவும்.

ஆங்கிலத்தில், சில இடங்களில் நாம் எழுத்துக்களை மாற்றி உபயோகிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வார்த்தைகள் அனைத்தும் ஆங்கில பெரிய எழுத்துக்களில் (capital case) எழுத வேண்டும் என இருக்கும்போது நாம் அதை சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதி விட்டோம் எனில் நாம் இந்த Case Converter Tool உதவியுடன் நம்மால் அதனை பெரிய எழுத்தாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த tool உதவியுடன் நம்மால் UPPERCASE, lowercase, Title Case, camelCase, PascalCase, Capital Case, CONSTANT_CASE, மற்றும் dot.case என நமது தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

நாம் இந்த Random Password Generator உதவியுடன் நம்மால் நமது இணைய தேவைகளுக்கு வினாடிக்கு குறைவான நேரத்தில் கடவுச்சொல்லை உருவாக்க முடியும்.

இந்த To-Do List Tool உதவியுடன் நமது தனிப்பட்ட மற்றும் வேலை சம்பந்தமான செயல்களை பதிவிட்டு அவற்றை அதே திட்டமிட்டவாறு முடிக்க உதவிகரமாக இருக்கும். இதை நாம் நமது அன்றாட வாழ்வில் ஒரு குறிப்பேடு போல் உபயோகித்துக்கொள்ளலாம்.

இந்த Random Quote Generator செயலுக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு ஒரு நேர்மறை பழமொழி காட்டும். உங்களுக்கு வேண்டுமானால் பல பழமொழிகளை நீங்கள் இங்கு படிக்க முடியும். உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் வரும்போது இந்த Quote Generator உங்களுடைய எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க உதவி செய்யும்.

இந்த Hangman Game அல்லது Word Guessing Online ஆனது நமக்கு புது புது வார்த்தைகளை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ள உதவுகிறது.

மேலே கூறிய செயல்களை நாம் செய்தால் அதற்க்கு நாம் அதிக நேரத்தை ஒதுக்கி நமது கவனத்தை செலுத்தி அவற்றை சரியாக செய்ய வேண்டும். ஆனால் இப்போது அப்படி தேவை இல்லை. நமது மேலே கூறிய செயலிகளை உபயோகித்து உங்கள் பணியை விரைவாக முடித்து, மீதி இருக்கும் நேரத்தை நல்ல உபயோகமுள்ள நேரமாக மாற்றுங்கள்.

இனி வரும் காலங்களில் நாங்கள் இந்த தளத்தில் ஆங்கிலம் தொடர்பான பல பதிவுகளை பதிவேற்றுவோம். எனவே அனைத்தையும் படியுங்கள். மேலும் இந்த பக்கமானது புது புது posts வரும்போது தொடர்ந்து புதுப்பிக்கப்படும். எனவே எதனையும் தவற விடாமல் படிக்கவும். 

உங்கள் ஆங்கிலம் கற்கும் பயணத்தில் நாங்களும் ஒரு சிறு அங்கமாக இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அனைவரும் மென்மேலும் ஆங்கிலத்தை நன்றாக கற்று வாழ்வில் ஒரு நல்லதொரு நிலையை அடைய மனதார வாழ்த்துகிறோம்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!