Exclamatory sentences Direct to indirect speech in Tamil

Exclamatory sentence – ஆச்சர்ய வாக்கியம்

Exclamatory sentence ஆனது தமிழில் ஆச்சர்ய வாக்கியம் என அழைக்கப்படுகிறது. திடீரென ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது இந்த வகை வாக்கியங்கள் வரும். இது அனைத்து வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்தும். இது கோபமாக, மகிழ்ச்சியாக என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Example – Wow! I love this place.

இந்த வகை வாக்கியத்தை கீழ்கண்ட குறிப்புகளை வைத்து அதனை அறிந்து கொள்ளலாம்.

  • இந்த வகை வாக்கியத்தில் ஆச்சரியக்குறி(!) வரும்.
  • இந்த வாக்கியமானது ஆச்சர்யம், கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும். 
  • பெரும்பாலான வாக்கியங்கள் how, what இல் தொடங்கி அதனைத் தொடர்ந்து noun அல்லது adjective வரும்.
  • So, much, very போன்ற உணர்ச்சிகளை அதிகமாக காட்ட உதவும் வார்த்தையினை கொண்டிருக்கும்.

Exclamatory sentences Direct to indirect speech in Tamil

Exclamatory sentences ஐ Direct இல் இருந்து indirect speech ஆக மாற்றுவது எப்படி?

step 1 

  • Reporting verb ஐ மாற்ற வேண்டும்.
  • Say / Said – Exclaim / Exclaimed

Step 2

Step 3 

Step 4

  • Tense ஐ சரியாக மாற்ற வேண்டும். (Tense பற்றியும் அதன் வகைகள் பற்றியும் அறிய All 12 Tenses in Tamil with examples)

Step 5

  • Adverbial ஐ அதன் பொருள் மாறாமல் சரியாக மாற்ற வேண்டும். 

மேலும் கீழே வரும் சில குறிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நாம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

கவனத்தில் கொள்க

  1. வாக்கியத்தில் alas, hurrah, wow, shit போன்றவை வரும்போது அது வரும் சூழ்நிலைக்கேற்ப நாம் அதற்கு பதிலாக with joy அல்லது with sorrow என மாற்ற வேண்டும்.
  2. what, how போன்ற வார்த்தைகள் வரும்போது அதற்கு பதிலாக very என்ற சொல்லை உபயோகிக்க வேண்டும்.
  3. வாக்கியத்தின் இறுதியில் subject வரும்போது அதனை conjunction க்கு முன்னால் கொண்டுவர வேண்டும்.

நாம் மற்ற வகை வாக்கியங்களை மாற்றும்போது கூறியது போல இங்கும் மேலே கூறிய அனைத்து steps ஐயும் நாம் உபயோகிக்க மாட்டோம். வரும் வாக்கியத்தை பொருத்து அது மாறுபடும்.

Examples

Example 1

The customer said, “How delicious this cake tastes!”

இவ்வாக்கியத்தில் ஆச்சர்யக்குறி வந்துள்ளது மேலும் இது மகிழ்ச்சியில் கூறுவதுபோல் உள்ளது. எனவே இந்த வகை வாக்கியம் exclamatory sentence ஆகும்.

Step 1

reporting verb ஐ மாற்ற வேண்டும். said என்பது exclaimed என மாறும். – the customer exclaimed

Step 2

Quotation mark மற்றும் comma வை நீக்கிவிட்டு that என்னும் conjunction ஐ மாற்ற வேண்டும். – the customer exclaimed that 

Step 3 

இங்கு subject பின்னால் வந்துள்ளது. அதனை conjunction க்கு முன்னால் கொண்டு வர வேண்டும்.- the customer exclaimed that the cake 

Step 4

tense ஐ மாற்ற வேண்டும். இங்கு simple present வந்துள்ளது. அதனை simple past ஆக மாற்ற வேண்டும். – the customer exclaimed that the cake tasted 

Step 5 

how என்னும் வார்த்தை வந்துள்ளது. எனவே அதற்கு பதிலாக very என மாற்ற வேண்டும். – the customer exclaimed that the cake tasted very delicious.

indirect speech –  the customer exclaimed that the cake tasted very delicious.

Example 2

Direct speech – King said, “What a talented artist he is!”

  1. இங்கு வாக்கியமானது exclamatory sentence. எனவே நாம் said என்பதை exclaimed என மாற்ற வேண்டும். – King exclaimed
  2. that என்னும் conjunction ஐ உபயோகிக்க வேண்டும். – King exclaimed that
  3. subject வாக்கியத்தின் இறுதியில் வந்துள்ளது. அதனை conjunction க்கு பின்னால் போட வேண்டும்.
  4. tense அல்லது verb ஐ மாற்ற வேண்டும். – King exclaimed that he was 
  5. what என்பதற்கு பதிலாக very என்பதை உபயோகிக்க வேண்டும்.

Indirect speech – King exclaimed that he was a very talented artist.

Example 3

Direct speech – she said, “How loud the drum music is!”

  1. முதலில் exclamatory sentence என அறிந்தவுடன் அதன் reporting verb ஐ மாற்ற வேண்டும். said என்பது exclaimed என மாற்றவும். – she exclaimed
  2. that என்னும் conjunction ஐ உபயோகிக்க வேண்டும். – she exclaimed that
  3. வாக்கியத்தின் இறுதியில் வந்துள்ள subject ஐ முன்னால் கொண்டு வரவும். – she exclaimed that the drum music
  4. tense ஐ மாற்றவும். – she exclaimed that the drum music was
  5. how என்பது very அல்லது so என மாறும்.

Indirect speech – she exclaimed that the drum music was very loud.

Example 4

Direct speech – Raja said, “How cold it is today!”

  1. முதலில் exclamatory sentence இன் reporting verb ஐ said இல் இருந்து exclaimed என மாற்றவும். – Raja exclaimed
  2. Quotation mark மற்றும் comma வை நீக்கிவிட்டு that என்னும் conjunction ஐ உபயோகிக்கவும். – Raja exclaimed that
  3. பின்னால் உள்ள subject ஐ conjunction க்கு அடுத்து கொண்டு வரவும். பின்பு verb இன் tense ஐ மாற்றவும், – Raja exclaimed that it was
  4. how என்பது இங்கு very அல்லது so என மாறும்.

Indirect speech –  Raja exclaimed that it was very cold today.

Example 5

Direct speech – Praba said, “What a beautiful drawing you have drawn!”

  1. முதலில் reporting verb ஐ said இல் இருந்து exclaimed என மாற்றவும். – Praba exclaimed
  2. Quotation mark மற்றும் comma வை நீக்கிவிட்டு that என்னும் conjunction ஐ உபயோகிக்கவும். – Praba exclaimed that 
  3. பின்னால் உள்ள subject ஐ conjunction க்கு அடுத்து கொண்டு வரவும்.  – Praba exclaimed that he 
  4. இங்கு present perfect tense வந்துள்ளது. அதனை Past perfect tense க்கு மாற்றவும். – Praba exclaimed that he had drawn 
  5. how என்பது இங்கு very அல்லது so என மாறும்.

Indirect speech – Praba exclaimed that he had drawn a very beautiful drawing.

இனி வரும் எடுதுக்கட்டுகளில் எவ்வாறு மாற்ற வேண்டும் என மட்டும் குறிப்பிடுகிறேன். என் அவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை மேலே குறிப்பிடபட்டுள்ளவற்றை வைத்து அறிந்து கொள்ளவும்.

Example 6

Direct speech – Prime minister said, “How brave our soldiers are!”

  1. Reporting verb ஐ மாற்றவும். – Prime minister exclaimed
  2. that எனும் conjunction ஐ உபயோகிக்கவும். – Prime minister exclaimed that
  3. Pronoun ஐ அதன் பொருள் மாறாமல் மாற்றவும். இங்கு our என்பது their என மாறும். – Prime minister exclaimed that their
  4. are என்பது were என மாறும். – Prime minister exclaimed that their soldiers were 
  5. how என்பது very என மாறும்.

Indirect speech – Prime minister exclaimed that their soldiers were very brave.

Direct & Indirect Speech மற்றும் அதன் வகைகளை தெரிந்து கொள்ள

Direct speech and Indirect speech in Tamil

Interrogative sentences – Direct speech & indirect speech in Tamil

Statement sentences – Direct to indirect speech with examples in Tamil

Imperative sentences direct and indirect speech in Tamil

Example 7

Direct speech – she said, “How rude he is!”

  1. Reporting verb ஐ said இல் இருந்து exclaimed என மாற்றவும். – She exclaimed
  2. that எனும் conjunction ஐ உபயோகிக்கவும். – She exclaimed that
  3. பின்னால் இருக்கும் subject ஐ conjunction க்கு அடுத்து கொண்டு வரவும். – She exclaimed that he
  4. is என்பது was என மாறும். – She exclaimed that he was 
  5. how என்பது so என மாறும்.

Indirect speech – She exclaimed that he was so rude.

Example 8

Direct speech – the passenger said to the conductor, “Shit! I have forgotten my wallet at home.”

  1. இங்கு Exclamatory sentence வந்துள்ளதால் நாம் reporting verb ஐ said to இல் இருந்து exclaimed என மாற்ற வேண்டும். – the passenger exclaimed
  2. shit என வெறுப்பை கூறியதால் நாம் அதற்கு பதில் with sorrow வை உபயோகிக்கலாம். – the passenger exclaimed with sorrow to the conductor
  3. Comma, quotation mark க்கு பதிலாக that என்னும் conjunction ஐ உபயோகிக்கவேண்டும். – the passenger exclaimed with sorrow to the conductor that 
  4. Pronoun ஐ வாக்கியத்தின் பொருள் மாறாமல் மாற்ற வேண்டும். இங்கு you என்பது he என மாறும். my என்பது his எனவும் மாறும். – the passenger exclaimed with sorrow to the conductor that he
  5. இங்கு வாக்கியமானது present perfect tense இல் உள்ளது. அதனை past perfect tense இல் மாற்ற வேண்டும்.

Indirect speech –  the passenger exclaimed with sorrow to the conductor that he had forgotten his wallet at home.

Example 9

Direct speech – she said, “Wow! I like this movie.”

  1. இங்கு Exclamatory sentence வந்துள்ளது. எனவே  நாம் reporting verb ஐ said என்பதை exclaimed என மாற்ற வேண்டும். – She exclaimed
  2. wow என மகிழ்ச்சியுடன் கூறியதால் நாம் அதற்கு பதில் with joy என மாற்றலாம். – She exclaimed with joy
  3. that என்னும் conjunction ஐ உபயோகிக்கவேண்டும். – She exclaimed with joy that
  4. Pronoun ஐ வாக்கியத்தின் பொருள் மாறாமல் மாற்ற வேண்டும். இங்கு I என்பது she என மாறும். – She exclaimed with joy that she
  5. இங்கு வாக்கியமானதுsimple  present tense இல் உள்ளது. அதனை simple  past tense இல் மாற்ற வேண்டும். – She exclaimed with joy that she liked
  6. this என்னும் adverbial ஆனது that என மாறும்.

Indirect speech – She exclaimed with joy that she liked that movie.

பயிற்சி வினாக்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்க்கியங்களை நாங்கள் நேர்கூற்றிலும் அயற்கூற்று வடிவத்திலும் கொடுத்துள்ளோம். அதனை நீங்கள் எவ்வாறு மாறும் என்பதை ஒவ்வொரு steps ஆக comment இல் தெரிவியுங்கள்.

Exercise 1

Direct speech – Rani said, “How cute the cat is!” 

Indirect speech – Rani exclaimed that the cat was very cute.

Exercise 2

Direct speech – The producer said, “Hurrah! We have planned very well.”

Indirect speech – The producer exclaimed with joy that they had planned very well.

Exercise 3

Direct speech – Haran said, “Wow! What a nice man he is.”

Indirect speech – Haran Exclaimed with joy that he was a very nice man.

Exercise 4

Direct speech – he said, “Alas! I have lost my bag.”

Indirect speech – he exclaimed with sorrow that he had lost his bag.

Conclusion

இந்த பதிவில் நாம் எப்படி ஒரு ஆச்சர்ய வாக்கியத்தை நேர்கூற்றில் இருந்து அயற்கூற்றாக மாற்றினோம் என்பதை 12 வித எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக கண்டோம். இதனை தெளிவாக அறிவதன் மூலம் உங்களுக்கு இந்த வகை வாக்கியங்களை அயற்கூற்றாக மாற்றுவதற்கு மிக எளிமையாக இருக்கும் என நம்புகிறோம்.

இந்த Exclamatory sentence வாக்கியத்தை பட்ரிவ் அதனை எவ்வாறு அயற்கூற்றாக மாற்றுவது பற்றியோ எதேனும் சந்தேகம் இருப்பின் அதனை comment இல் தெரிவியுங்கள். நாங்கள் உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறோம்.

மற்ற வகை வாக்கியங்களை எவ்வாறு direct இல் இருந்து indirect speech ஆக மாற்றுவது என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.

நன்றி!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *