Free Online Resources for English Listening Skills in Tamil
ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டுமாயின் நாம் நன்றாக ஆங்கிலத்தில் எழுத, பேச, கேட்டு புரிந்து கொள்ள, பார்த்து படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையது.
என்னை பொறுத்தவரை, ஆங்கிலத்தை கேட்டு புரிந்து கொள்வது என்பது ஒரு வித கலை ஆகும். ஆங்கிலம் ஒன்று தான். ஆனால், ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு மாதிரி பேசுவார்கள்.
எடுத்துக்காட்டுக்கு, அமெரிக்காவில் ஒரு விதமாக ஆங்கிலம் பேசுவார்கள், இங்கிலாந்தில் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். அதே போல் இந்தியாவிலும் ஆங்கிலம் பேசும் முறையானது வித்யாசமாக இருக்கும். எனவே அவற்றை புரிந்து கொள்ள அவர்கள் பேசுவதை முதலில் கேட்க வேண்டும். அவர்களுடன் அடிக்கடி உரையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால் நிஜமாக அதற்க்கு வாய்ப்புக்கள் உண்டா என கேட்டால் கொஞ்சம் கடினம் தான்.
ஆனால், இதனை சரிசெய்யும் விதமாக இணையத்தில் பல இணையப் பக்கங்கள் உள்ளன. அவை பல ஆங்கில ஆடியோக்கள் இருக்கும். அந்த ஆடியோ வை கேட்டு அதற்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய ஆங்கிலம் கேட்கும் திறனும் அதே சமயம் அதனை புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.
நாம் எதிரில் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்தால் மட்டும் தானே நம்மால் சரியாக பதில் சொல்ல முடியும்? எனவே கேட்டல் மற்றும் கேட்டலை தெளிவாக புரிந்து கொள்ளுதல் என இரண்டுமே அவசியம்.
நான் என்னுடைய ஆங்கிலம் கற்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ஒரு சில இணைய தளங்களில் நான் listening practice எனப்படும் ஆங்கிலம் கேற்கும் திறனை அதிகரிக்க உபயோகிக்கின்றேன். அவற்றில் முக்கியமானவற்றை உங்களுக்கு இந்த பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன். அவற்றை படித்து நீங்களும் உங்களுடைய கேற்கும் திறனை அதிகரியுங்கள்.
எவ்வாறு நாம் ஆங்கிலத்தை தினசரி கேட்பது?
உங்களுடைய நாளில் தினமும் ஒரு 15 நிமிடங்கள் இந்த listening practice க்கென்று ஒதுக்குங்கள். நான் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்துக்கு சென்று ஒரு நாளைக்கு ஒரு ஆடியோ என கேளுங்கள்.
ஏதேனும் புது வார்த்தைகள் அந்த ஆடியோவில் கேட்டால் அதனை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அதன் பொருளை அறிந்து பின்னர் அதனை கொண்டு வாக்கியங்களை அமைத்து நம் அன்றாட வாழ்க்கையில் அந்த வார்த்தையினை உபயோகப்படுத்தி பேசி பாருங்கள்.
நன்றாக கேட்டு புரியும் வரை கேளுங்கள். நீங்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் கேட்கலாம். பிறகு அந்த ஆடியோவில் கூறப்பட்டதால் இருந்து சில கேள்விகள் கேற்கப்படும். அவற்றிக்கு சரியாக பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
தவறாக பதில் அளித்தாலும் பரவாயில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சரியாக பதில் அளிக்க முயன்று பாருங்கள்.
தொடர்ந்து இதே போல் செய்து வாருங்கள். மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றால்போல் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாகவும் சரியாகவும் பதில் அளிக்க முடியும்.
British Council Listening
எனக்கு விருப்பமான இணையதளங்களில் இது முதல் இடத்தை பிடிக்கிறது. ஏனெனில் இந்த இணையத்தளமானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை என்னென்ன என இப்போது காண்போம்.
இந்த இணையத்தளத்தில் ஆங்கிலம் கற்கும் அனைவருக்கும் ஏற்றவாறு கேட்கும் செயல்பாடுகள் இருக்கும். இந்த ஆடியோக்கள் பல நாடுகளில் எப்படி பேசுவார்கள் என்பதை ஒத்திருக்கும். அதே போல் இந்த உரையாடல்கள் நம் அன்றாட வாழ்வில் நடப்பதாக இருக்கும்.
இதில் 5 வகைகளாக ஆங்கில உரையாடல்கள், ஆங்கிலம் கற்கும் நபரின் ஆங்கில புலமைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கும்.அவையாவன,
- A1 listening
- A2 listening
- B1 listening
- B2 listening
- C1 listening
கேட்கும் நபரின் ஆங்கில புலமை ஆரம்பகட்டத்தில் இருந்தால் அவர் A1 மற்றும் A2 listening ஐ கேற்கலாம். அவர்களுக்கு ஏற்றவாறு அந்த ஆடியோக்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
கேட்கும் நபரின் ஆங்கில புலமை ஆரம்பகட்டத்தில் இல்லாமலும் அதிக புலமை இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருப்பவருக்கு B1 மற்றும் B2 listening ஆனது வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
ஆங்கிலத்தில் அதிக புலமை இருந்து, அவர் மேலும் அவரின் புலமையை அதிகரிக்க விரும்புகிறார் எனில் அவர் C1 listening ஐ தேர்ந்தெடுக்கலாம்.
முக்கிய சிறப்பம்சங்கள்
மேலே கூறிய 5 வகைகளில் சென்று பார்த்தால் ஒவ்வொன்றிலும் 12 வகையான சூழ்நிலைகளை குறிப்பிட்டு இருக்கும். அந்த சூழ்நிலைகளில் நடக்கும் உரையாடல்கள் எப்படி இருக்கும் என பதிவிட்டு இருப்பார்கள். அவற்றை கேட்டு அது சம்பந்தமாக அவர்கள் சில கேள்விகள் கேட்பார்கள். அதற்கு பதிலளிப்பதன் மூலம் நாம் நம்முடைய புரிதல் திறனை கணக்கிட்டு கொள்ளலாம். எவ்வளவு முறை வேண்டுமானாலும் நாம் கேட்டு அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.
ஒவ்வொரு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல், சில முன்னேற்பாடு வினாக்கள் இருக்கும். பின்னர், சூழ்நிலை தொடர்பான ஆடியோ வரும். அதன் பின்னர் அந்த ஆடியோ தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
இந்த இணையதளத்திற்கு செல்ல – British Council Listening
ELLLO
என்னுடைய இந்த வரிசையில் இரண்டாம் இடத்தை இந்த இணையதளத்திற்கு தருவேன். இதில் ஆயிரக்கணக்கான ஆடியோக்கள் மற்றும் விடியோக்கள் உள்ளன. அவை குறைந்தது ஒரு நிமிடம் முதல் அதிகபட்சமாக ஏழு நிமிடங்கள் (நான் பார்த்தவரை) இருக்கும்.
இதில் மொத்தம் ஏழு வகைகளில் ஆடியோக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம் கற்கும் மாணவர்களின் ஆங்கில நிலையை பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது. இதில் level 1 முதல் 3 வரை ஆரம்ப நிலை ஆங்கில கற்கும் மாணவர்களுக்கும், level 4 இல் இருந்து 6 வரை இடைநிலை ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கும், level 7 ஆனது நன்றாக ஆங்கிலம் தெரிந்த மாணவர்களுக்கும் என பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில், One minute English, Views, Mixer, News என மற்ற பிரிவுகளும் உள்ளன. இவற்றில் ஆங்கிலம் கேற்கும் திறனை அதிகரிக்க பல்வேறு வகையான ஆடியோ மற்றும் விடீயோக்கள் உள்ளன.
முக்கிய சிறப்பம்சங்கள்
மற்ற இணையதளங்களில் இல்லாத அளவு இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த இணையத்தளத்தில் வீடியோ வடிவில், ஆடியோ வடிவில், மற்றும் எழுத்து வடிவில் நமக்கு இருக்கும். இதன் மூலம் நாம் எது தேவையோ அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆங்கில ஆடியோ ஓடும்போது நாம் அதனுடன் சேர்ந்து படிக்க இந்த எழுத்து வடிவில் இருப்பதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இலக்கணம் பற்றிய ஆடியோக்களில் எந்த வகையான ஆங்கிலங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் “Grammar” என்பதன் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கும்.
நாம் கேட்ட வீடியோ சம்பந்தமாக quiz இருக்கும். இதன் மூலம் நாம் கேட்ட ஆடியோக்களை எப்படி புரிந்துள்ளோம் என்பதை அந்த வினாக்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த இணையத்தளத்தில் உள்ள ஆடியோக்களை பயன்படுத்திக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல ELLLO
ஆங்கில எழுத்து பயிற்சியை மேம்படுத்த இதனை படியுங்கள்
Free Online Resources for Improving English Writing Skills
ஆங்கில இலக்கண மற்றும் எழுத்து பிழைகளை கண்டறிய உதவும் இணையதளங்கள்
BBC The English We Speak
என்னுடைய மூன்றாவது விருப்பமானது இந்த BBC The English We Speak இணையதள பக்கம் ஆகும். இதில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள்
இந்த ஆடியோக்கள் ஒரு வார்த்தை அல்லது சொற்தொடரை கொண்டு அந்த ஆடியோக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த ஆடியோவை கேட்டு முடித்தபின் நமக்கு அந்த வார்த்தையோ அல்லது சொற்தொடரோ எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும், அதன் பொருள் என்ன என அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
ஆடியோவில் வரும் உரையாடலானது எழுத்து வடிவில் அந்த ஆடியோக்கு கீழ் இருக்கும். இத்தனையும் படித்து நம்முடைய படிக்கும் திறனையும் மேம்படுத்தலாம்.
நம்மால் இந்த ஆடியோக்களை மற்றும் ஆடியோவில் வரும் சொற்களை PDF வடிவிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாத இடங்களிலும் நம்ம உபயோகம் செய்து கொள்ளலாம்.
இதில் ஒரு சிறு குறை என்னவெனில் நாம் கேட்க்கும் ஆடியோக்களை சரியாக கேட்டோமா என தெரிந்துகொள்ள நமக்கு எந்த ஒரு வினாக்களும் இல்லை. மற்றபடி இந்த இணையத்தளமானது ஆங்கிலம் கேட்கும் பயிற்சிக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
இந்த இணையதளத்திற்கு செல்ல – BBC The English We Speak
இந்த இணையத்தளமானது முற்றிலும் இலவசம் ஆகும். எவ்வளவு முறை வேண்டுமானாலும் நாம் உபயோகித்துக் கொள்ளலாம்.
Ted talk
என்னுடைய அடுத்த விருப்பமான இணையத்தளம் என்னவென கேட்டால் நான் இந்த Ted talk இணையதளத்தை சொல்லுவேன்.
இந்த இணையத்தளத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் சாதனை புரிந்தவர்கள் அவர்களுடைய கருத்துக்களை, பயணங்களை பற்றி தெளிவாக ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதனை கேற்பதன் மூலம் நமக்கு மற்ற துறைகளில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் அதே சமயம் நம்முடைய முக்கிய குறிக்கோளான ஆங்கிலம் கேட்டலுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.
இதிலும் மேலே கூறிய அதே குறை தான். இது நாம் முதலில் பார்த்த British council இணையதளத்தை போல் வினாக்கள் இருக்காது. எனவே நாம் அன்ஹா உரையாடலை சையாக கேட்டோமா என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.
இந்த விடீயோக்களை பார்க்கும் போது உங்களுக்கு ஏதேனும் நீங்கள் தெரியாத வார்த்தை வந்தால் அதனை குறிப்பெடுத்து அதன் பொருளை அறிந்து நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் படி இருங்கள். இதன் மூலம் நம்முடைய ஆங்கில சொற்கள் அறிவும் வளரும்.
ஆக இந்த இணையதளத்தை உபயோகிப்பதன் மூலம் நாம் ஆங்கிலம் தொடர்பாக மூன்று விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல –Ted talk
Listen A Minute
இந்த இணையதளமும் நான் பரிந்துரைக்கும் ஆடியோ இணையதளங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இதில் அகர வரிசைப்படி 480 ஆடியோக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு நிமிட அளவிற்கு இருக்கும். அந்த ஆடியோவின் எழுத்து வடிவம் கீழே “READ” பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும்.
முக்கிய சிறப்பம்சம்
நாம் ஆடியோவை கேட்டோம் அல்லவா? அது தொடர்பான வினாக்கள் இதில் கேட்கப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, அந்த வாக்கியத்தில் விடுபட்ட எழுத்துக்களை நிரப்புதல், பிழையுடன் கொடுக்கப்பட்ட வார்த்தைகளின் சரியான வார்த்தைகளை கண்டறிதல், மாற்றியமைக்கப்பட்ட வார்த்தைகளை ஒழுங்குபடுத்தல் என பல பயிற்சிகள் இருக்கும். அவற்றை சரியாக பதில் அளிப்பதன் மூலம் நாம் நம்முடைய ஆங்கிலம் கேட்கும் விதத்தை அதிகரிக்கலாம்.
இந்த இணையத்தளமானது முற்றிலும் இலவசம் ஆகும். இந்த இணையதளதுக்கு செல்ல – Listen A Minute
ESL Fast
இந்த இணையதளமும் பல்வேறு வகையான ஆடியோக்களைக் கொண்ட அருமையான இணையதளம் ஆகும்.
இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றினுள் பல்வேறு வகைகளில் ஆடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை
- Beginners
- Intermediate
முக்கிய சிறப்பம்சங்கள்
மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் ஆங்கிலம் கற்கும் நபர்களின் ஆங்கில அறிவை பொறுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு நிமிடத்துக்குள் இருக்கும். அதிகபட்சம் 4 நிமிடங்கள் வரை இருக்கும். அதன் கீழே அந்த ஆடியோவின் எழுத்து வடிவமானது கீழே கொடுக்கப்பட்டு இருக்கும்.
மேலே கூறியவற்றில் இல்லாத ஒரு சிறப்பம்சம் இதில் உள்ளது. அதாவது அந்த ஆங்கில ஆடியோக்களுடன் சேர்ந்து நாமும் அந்த ஆடியோக்களை அவர்கள் படிப்பது போலவே படிக்கலாம். கீழே “Start reading” என்ற பொத்தானை அழுத்தும்போது மஞ்சள் நிறத்தில் நாம் சொல்லல வேண்டிய வார்த்தைகள் குறிப்பிடப்படும். அந்த வார்தைகளானது மேலே ஆடியோவில் ஒலிக்கும். இதன் மூலம் நாம் ஆங்கிலத்தை கேட்க்கும் பயிற்சியும் அதே சமயம் பேசும் பயிற்சியும் மேற்கொள்ளப்படும்.
மேலே கூறிய இணையத்தளங்களைப்போல் இந்த இணையத்திலும் அணைத்து ஆடியோக்களும் முற்றிலும் இலவசம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல ESL Fast
ESL Lab
இந்த இணையத்தளமானது மேலே கூறிய இணையதளங்களை போல பல்வேறு வகையான ஆடியோக்களை கொண்டுள்ளது. இது மூன்று பகுதிகளாக பிரித்து ஆடியோக்களை வழங்கியுள்ளது.அவையாவன
Easy – இது ஆங்கிலம் கற்க ஆரம்பித்து இருக்கும் மாணவர்களுக்காக எளிமையான ஆடியோக்களை கொண்டிருக்கும்.
Intermediate – ஓரளவு ஆங்கிலம் தெரிந்த மாணவர்களை கருத்தில் கொண்டு இங்கு ஆடியோக்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
Difficult – ஆங்கிலம் நன்றாக தெரிந்த மாணவர்களுக்கு தகுந்தாற்போல் இங்கு ஆடியோக்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்
மேலே கூறிய ஒவ்வொன்றிலும் 50+ ஆடியோக்கள் உள்ளன. அவற்றினை கேட்ட பிறகு அது சம்பந்தமான வினாக்கள், கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்றவைகள் இருக்கும். நீங்கள் கேட்ட ஆடியோவினைக்கொண்டு அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
மேலும் இது Interviews, Life stories, மற்றும் Culture videos என மேலும் மூன்று பகுதிகளில் வீடியோ வடிவிலும், அவற்றின் எழுத்து வடிவத்திலும் இருக்கும். மேலும் இவை அனைத்தும் அந்த விடியோக்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். அதற்க்கு பதில் அளிக்கலாம். பதில் தெரியவில்லை எனில் மீண்டும் ஆடியோ அல்லது வீடீயோவை மீண்டும் பார்த்து அதற்க்கு சரியாக பதில் அளிக்கலாம்.
இந்த இணையதளத்தை காண – ESL Lab
Conclusion
இந்த பதிவில் நாம் எப்படி நாம் English listening skills ஐ மேம்படுத்துவது எனவும் நான் உபயோகித்த அனுபவத்தில் எந்தெந்த இணையதளங்கள் சிறப்பாக உள்ளது என்பதனையும் பார்த்தோம். மேலே உள்ள அனைத்து இணையத்தளங்களையும் பாருங்கள். உங்களுக்கு பிடித்த இணையத்தளத்தில் இருந்து தொடங்குங்கள். அந்த இணையதளத்தில் உள்ளவை முடிந்த பிறகு அடுத்தஇணையதளத்திற்கு வாருங்கள், அதில் உள்ள வினாக்களுக்கு விடை அளியுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம்மால் எளிதில் ஆங்கிலத்தை கேட்டு புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் சரியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை comments இல் பதிவிடுங்கள். மேலும் நீங்கள் உங்களுடைய listening skills ஐ மேம்படுத்த வேறு இணையதளங்களை பயன்படுத்துகிறீர்களா? அதை பற்றி comment இல் பதிவு செய்யுங்கள். இது நம்முடைய மற்ற மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
உங்களுடைய ஆங்கிலம் கற்கும் முயற்சியானது நன்றாக நடக்க எனது வாழ்த்துக்கள். நன்றி ! வணக்கம்.