Free Online Resources for Improving English Writing Skills  

நாம் அனைவரும் ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருப்போம். அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவோம். நீங்கள் இந்த பதிவை இப்போது படித்துக்கொண்டு இருப்பதன் காரணமும் அந்த ஆர்வம் தானே?

நாம் ஆங்கிலம் கற்கும் போது நான்கு இடங்களில் கவனம் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுதல், ஆங்கிலத்தில் எழுதுதல், ஆங்கிலத்தை கேட்டு புரிந்து கொள்ளுதல், ஆங்கிலத்தில் படித்தல் ஆகும். இவற்றில் நாம் தெளிவாக இருந்தால் நம்மால் ஆங்கிலத்தின் உதவியுடன் மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.

நான் சந்தித்த பல பேர்களில் சிலர் நன்றாக ஆங்கிலம் பேசுவர், மற்றவர்களின் ஆங்கிலத்தை புரிந்து கொள்வர். ஆனால் அவர்களால் நன்றக எழுத முடியாது. ஆங்கிலத்தில் எழுதுதல் என்பது ஒரு கலையை போன்றது. அதனை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியம். நீங்கள் யாருக்கேனும் அனுப்பும் குறுஞ்செய்தியை இருந்து வேலைக்காக அனுப்பும் மின்னஞ்சல் வரை அனைத்து இடங்களிலும் நாம் எழுதி ஆக வேண்டும்.

Free Online Resources for Improving English Writing Skills

நீங்கள் வேலை செய்யும் இடங்களில் ஆங்கிலத்தில் எப்படி பேசுவார்களோ அதே போல மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அத்தகைய சூழ்நிலைகளில் நாம் நன்றாக எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, சரியான வாக்கிய அமைப்பு, எப்படி, யாருக்கு எழுத வேண்டும் என பலவற்றை நினைவில் வைத்து எழுத வேண்டி இருக்கும். 

மேலே கூறிய சூழ்நிலைகளை கையாள நமக்கு தேவையான அளவு பயிற்சி தேவைப்படும். அத்தகைய பயிற்சிகளை நாம் இணையத்தில் பெற முடியும். நான் இந்த பயிற்சிக்கு உபயோகித்த இணையதளங்களை பற்றி உங்களுக்கு கூறுகிறேன். இவை உங்களின் எழுத்து பயிற்சியையும் மேம்படுத்தும்.

எப்படி எழுத்து பயிற்சியை மேம்படுத்துவது?

இதற்கும் நாம் எப்படி ஆங்கிலத்தை கேற்க வேண்டும் என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இதற்கும் அதே போல் தான் நாம் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பதிவை இன்னும் படிக்கவில்லை எனில் இதில் படியுங்கள் – Free resources for improving your English listening skills.

உங்களுடைய ஆங்கிலம் படிப்பதற்கான நேரத்தில் ஒரு 30 நிமிடங்களை இந்த எழுத்து பயிற்சிக்கு ஒப்படையுங்கள். நான் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கென்று 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். பிறகு நீங்கள் எழுதியதை பொறுத்து அது அதனுடைய கருத்தை தரும். அதனைக்கொண்டு உங்கள் எழுத்துக்களை மாற்றி அமைக்க ஒரு 10 நிமிடங்கள் செலவிடுங்கள். 

மீதி இருக்கும் 10 நிமிடங்களில் எந்த வகையான எழுதியது நல்ல படியான கருத்தை தந்தது என கண்டு அந்த வகையை குறைத்துக்கொள்ளுங்கள்.

வாரத்துக்கு ஒரு முறை நீங்கள் எழுதியதை படித்துப்பார்த்து அடுத்தடுத்த கட்டங்களில் எழுதும்போது அந்த வகைகளை உபயோகித்து உங்களுடைய ஆங்கில எழுத்து பயிற்சியை முன்னேற்றமடைய செய்யுங்கள்.

தொடர்ந்து இந்த பயிற்சியினை மேற்கொண்டு வர நம்மால் எளிமையாக ஆங்கிலத்தில் எழுதலாம். சூழ்நிலைகளை கொடுத்து எழுதச்சொல்வதன் மூலம் நம்மால் யோசித்து எழுத முடியும். இது நமது ஆங்கில எழுதும் திறனை மட்டுமல்லாமல், கற்பனை திறனையும் வளர்கிறது.

நான் ஒரு மூன்று வகையான இணையதளங்களை என்னுடைய எழுத்து பயிற்சிக்கு உபயோகித்துக்கொண்டு இருக்கிறேன். அவை என்னுடைய ஆங்கிலம் எழுதும் முறையை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது. அவை என்னென்னவென நாம் இங்கு காண்போம்.

Free Online websites for Improving English Writing Skills 1

Write & Improve

நம்முடைய எழுத்து பயிற்சிக்கு நான் முதல் இடத்தை கொடுப்பது இந்த இணையதளத்திற்கு ஆகும். இந்த இணையத்தளமானது Cambridge University க்கு சொந்தமானது.

இது முற்றிலும் இலவசமாக நாம் உபயோகித்துக்கொள்ளலாம். நம்முடைய Mail ID கொடுத்து புது கணக்கை தொடங்கி உபயோகிக்கலாம். இந்த கணக்கை தொடங்க பணம் செலுத்த தேவை இல்லை. முற்றிலும் இலவசம். ஆனால் இதில் கணக்கை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கணக்கை தொடங்காமலும் நம்மால் இதனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 

இந்த இலவச கணக்கை தொடங்குவதால் சில பயன்கள் உள்ளன. நாம் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் பதிவாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். எனவே எடுத்துக்காட்டுக்கு நான் எனது கணினியில் உபயோகிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியில் தட்டச்சு செய்து விட்டு விட்டேன். மீதியை தட்டச்சு செய்ய நான் கணினியை உபயோகப்படுத்த வேண்டும் என இல்லை. என்னால் அந்த கணக்கை கொண்டு விட்ட இடத்தில் இருந்து என்னால் தட்டச்சை தொடர முடியும். 

இதில் நாம் எழுதும் இடத்தை workbook என அழைக்கிறார்கள். மொத்தம் 5 வகையான workbooks இங்கு உள்ளன. ஒவ்வொருவரின் ஆங்கில அறிவை பொறுத்து முதல் மூன்று workbooks பிரிக்கப்படுகின்றன. அவையாவன, 

  • W&I Beginner 
  • W&I Intermediate
  • W&I Advanced

 W&I Beginner  ஆனது நாம் ஆங்கிலம் கற்க எழுத ஆரம்பகாலகட்டத்தில் இருக்கிறோம் எனில் இதில் இருந்து தொடங்கலாம். இதில் பல வகையான எழுதும் சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

W&I Intermediate ஐ நமக்கு ஆங்கிலம் ஓரளவுக்கு நன்றாக எழுத பேச தெரியும் என இருப்பவர்கள் இதில் எழுத ஆரம்பிக்கலாம். இவற்றிக்கு கீழும் பல எழுதும் பணிகள் பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என நினைப்பவர்கள் இந்த W&I Advanced ஐ தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்கலாம்.

மேலும் இங்கு இரண்டு பகுதிகள் உள்ளன. அவை 

  • W&I Business
  • W&I Just for fun!

W&I Business இந்த பகுதியில் வேலை சம்பந்தமான சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டு அது சம்பந்தமாக நாம் எப்படி எழுத வேண்டும் என சில விதிமுறைகளுடன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை உபயோகித்து நாம் எழுத வேண்டும். எடுத்துக்காட்டுக்கு மேலாளருக்கு meeting தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பும்படி ஒரு சில குறிப்புகளுடன்  சொல்லப்பட்டு இருக்கும். 

W&I Just for fun! இந்த பகுதியில் சில வேடிக்கையான வகையில் எழுதும் வகைகள், சூழ்நிலைகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு நான்கு வார்த்தைகளை கொடுத்து அதனைக்கொண்டு ஒரு கதையை எழுதும்படி குறிப்பிடப்பட்டு இருக்கும். நாம் இதனை நமது பொழுதுபோக்கிற்காக உபயோகிக்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள் 

இந்த தளத்தில் நம்மால் எதனை முறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதி நாம் எழுதியதை சரி பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் நாம் எழுதியதை சரி பார்த்து அதை எப்படி சரியாக எழுத வேண்டும் என அதன் கருத்தை தெரிவிக்கும். 

நாம் எழுதியதை இந்த செயலியானது எழுத்துக்கள் அளவிலும் வாக்கியங்களின் அளவிலும் அதன் கருத்துக்களை தரும். அவை என்னனென்ன என  காண கீழே உள்ள படத்தை பார்க்கவும். இந்த தகவலானது அந்த இணைய பக்கத்தில் “Help” என்பதை தொடும்போது வரும்.

Free English Listening Website
Source: Write & Improve

எழுத்துக்களில் உள்ள பிழைகளை மேலே குறிப்பிட்ட குறியீடுகளை கொண்டு காண்பிக்கும். அது எழுத்துப்பிழையாக இருக்கலாம். ஏதேனும் வார்த்தைகளை விட்டிருக்கலாம் அல்லது அந்த இடத்திற்கு அந்த வார்த்தைகளை சரியான பொருளை தராமல் இருக்கும்.

வாக்கியமானது நன்றாக இருந்தால் அது வெள்ளை நிறமாக இருக்கும். வாக்கியமானது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இதை விட எழுதலாம் என்பதை குறிக்க ஆரஞ்சு நிறத்தில் மெல்லியதாக காட்டப்பட்டு இருக்கும்.நாம் எழுதிய வாக்கியமானது அதிக பிழைகள் இருப்பின் அது அடர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

Free English Listening Website
Source: Write & Improve

நாம் எவ்வளவு முறை எழுதினோம், என்னென்ன வார்த்தைகளை வாக்கியங்களை மாற்றினோம் என்பதை நம்மால் காண முடியும். ஒவ்வொரு முறை நாம் எழுதியது முந்தைய முறையை விட நன்றக எழுதினோமா இல்லையா என்பதை “Your Progress” இல் இருக்கும் graph மூலம் கண்டறியலாம். முதல் முறையை காட்டிலும் மற்ற புள்ளிகள் மேலே போனால் நாம் நன்றாக எழுதி இருக்கிறோம் என பொருள். 

Free English Listening Website
Source: Write & Improve

நாம் ஒவ்வொரு முறை எவ்வளவு நேரம் எழுதி இருக்கிறோம் என்பதனை கணக்கிட timer இதில் உள்ளது. நாம் எழுத ஆரம்பிக்கும்போது இதனை on செய்து முடித்தவுடன் off செய்தால் நாம் எடுத்துக்கொண்ட நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சிறு குறை 

நாம் எழுதியதை பொறுத்து நாம் எந்த அளவில் அதனை எழுதியுள்ளோம் என குறிப்பிடும். அவை அவ்வளவு சரியாக இல்லை என்பது என்னுடைய கருத்து. இது ஒன்று தான் எனக்கு குறையாக படுகிறது. மற்றபடி இந்த இணையத்தை நாம் தாராளமாக ஆங்கில எழுதும் பயிற்சிக்கு உபயோகிக்கலாம். 

இந்த இலவச இணையதளத்துக்கு செல்ல – Write & Improve 

British Council Writing Website 

நான் அதிகமாக என்னுடைய எழுத்து பயிற்சிக்கு உபயோகிக்கும் இணையதளத்தில் இதற்க்கு இரண்டாம் இடம் உண்டு.

இதிலும் எழுதுபவரின் ஆங்கில புலமையை பொறுத்து 5 வகைகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் 10+ சூழ்நிலைகள் பற்றி கொடுக்கப்பட்டு இருக்கும்.

Free English Listening Website
Source: British Council Writing Website 

நீங்கள் ஆங்கிலத்தை இப்பொழுது தான் கற்க ஆரம்பித்து இருக்கிறீர்கள் எனில் நீங்கள் இந்த A1 Writing மற்றும் A2 Writing க்கு சென்று அதில் கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு சூழ்நிலையை தேர்ந்தெடுத்து அதில் கூறியவாறு பயிற்சி செய்யலாம்.

உங்களுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியும் உங்களால் நன்றாக சமாளிக்க முடியும் எனும்போது நாம் B1 Writing மற்றும் B2 Writing க்கு செல்லலாம். அதற்க்கு தகுந்தாற்போல் சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். 

நீங்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் நபர், உங்களால் நன்றாக ஆங்கிலம் பேச எழுத முடியும் எனில் நீங்கள் C1 Writing ஐ தாராளமாக தேர்ந்தெடுத்து உங்கள் எழுத்து பயிற்சியை தொடரலாம்.

இதன் சிறப்பம்சங்கள் 

நாம் இதே British Council இணையதளத்தின் listening practice இல் பார்த்தோம் அல்லவா? அதே போல் இதிலும் அந்த எழுத்து பயிற்சி தொடர்வதற்கு முன் ஒரு சிறிய முன் தேர்வு போல் ஒன்று உள்ளது. இதில் அந்த சூழ்நிலை தொடர்பான வாக்கியங்களை கொடுத்து அவற்றை சரியான இடத்தில வைக்குமாறு உள்ளது. 

இதை முடித்தவுடன், நமக்கான ஒரு சூழ்நிலையானது தரப்படும். அதனை நாம் படிக்க வேண்டும்.  அதில் ஒரு சூழ்நிலைகளில் எப்படி ஒரு பேசும் வழக்கு இருக்கும் என காட்டப்படும்.

பின்னர், நாம் இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி எழுத வேண்டும் என தகவல்கள் தரப்படும். இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் எழுதும்போது எத்தகைய வார்த்தைகளை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகிக்க கூடாது என கூறப்பட்டு இருக்கும். 

நாம் மேலே பார்த்த தகவல்கள், சூழ்நிலைகளில் பேசப்பட்டவைகளை பொறுத்து tips க்கு கீழே கொடுக்கப்பட்ட 3 வகை தேர்வுகளை எழுத வேண்டும்.

இதனை தொடர்ந்து நாம் செய்து வர பல்வேறு சூழ்நிலைகளில் நாம் எழுத வேண்டி வரும்போது எவ்வாறு எழுத வேண்டும் என ஒரு நல்ல தெளிவானது கிடைக்கும். ஏனெனில் இதில் கூறப்பட்டுள்ள அணைத்து சூழ்நிலைகளும் நாம் நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் அந்த சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அது தனிப்பட்ட சூழ்நிலைகளாகவும் இருக்கலாம் அல்லது வேலை சம்பந்தமான சூழ்நிலைகளாக இருக்கலாம்.

குறைகள் 

இதில் ஒரு சிறு குறையாக நான் பார்ப்பது மேலே கூறப்பட்ட இணையதளத்தில் நாம் எழுதியதை பற்றி கருது கிடைக்கும் அல்லவா? அப்படி இங்கு கிடைக்காது. மாறாக நாம் சரியாக பதில் அளிப்பதைக்கொண்டு நமது போது திறன் மற்றும் புரிதல் திறனை கணக்கிட முடியும்.

மற்றபடி இதில் உள்ள நிறைகளே அதிகம். கட்டாயம் நீங்கள் ஆங்கிலம் எழுதி பயிற்சி எடுக்க விரும்பினால் கட்டாயம் இந்த இணையதளத்தை உபயோகப்படுத்தவும்.

இந்த இணையதளத்துக்கு செல்ல – British Council Writing Website 

பயனுள்ள ஆங்கில தமிழ் அகராதிகளை காண

Free Online English to Tamil Dictionaries in Tamil

www.esolcourses.com

இந்த இணையத்தளமானது மற்ற மேலே குறிப்பிட்ட இரண்டு இணையதளங்களை போல் அல்லாமல் ஒரு வகை quiz website போல் இருக்கும். அதாவது கோடிட்ட இடத்தை நிரப்புதல், சரியானவற்றை தேர்ந்தெடுத்தல், போன்றவை இதில் வரும்.

Free English Listening Website
Source: www.esolcourses.com

இதில் A0-A1, A1-A2, A2, A2-B1, B1-B2, C1-C2 மற்றும் Festivals and Seasonal (All Levels) என ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொன்றிலும் 15+ வகை சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் A வை கொண்டுள்ள பகுதிகள் ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்பவர்களும், B ஐ கொண்டுள்ள வகைகள் ஓரளவு ஆங்கிலம் தெரிந்த நபர்களுக்கும், C ஐ கொண்டுள்ள வகைகளில் நன்றாக ஆங்கிலம் தெரிந்த நபர்களுக்கும் என பிரிக்கப்பட்டு இருக்கும்.  Festivals and Seasonal (All Levels) பகுதியானது அனைவர்க்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

இதில் நாம் அதிகமாக எழுத மாட்டோம். அவர்கள் கேற்கும் கேள்விகளுக்கு மட்டுமே தட்ட்டச்சு செய்து எழுதுவதாக இருக்கும். எனவே இதனை அடிக்கடி எழுதுவதன் மூலம் நமக்கு இலக்கணப்பிழைகள், எங்கு எந்த துணை வினைச்சொற்கள், இணைப்பு சொற்கள் மற்றும் மற்ற வார்த்தைகள் வர வேண்டும் என்பது பற்றிய நல்ல ஒரு புரிதலை தரும்.

இந்த esolcourses இணையதளத்துக்கு செல்ல – www.esolcourses.com/

Hemmingway Editor 

நான் அடிக்கடி உபயோகிக்கும் ஆங்கில எழுத்து பயிற்சி செயலியில் இது முக்கியப்பங்கு ஆற்றும். ஏனெனில் இதனை கொண்டு ஒரு நபருக்கு படிக்க மிக கடினமாக உள்ள வாக்கியங்கள் என்னென்ன, ஓரளவுக்கு கடினமாக உள்ள வாக்கியங்கள், என்னென்ன செய்யப்பட்டு வினை வாக்கியங்கள் உபயோகித்துள்ளோம், எவ்வளவு வினைஉரிச்சொற்கள் உபயோகித்துள்ளோம், எவ்வளவு வார்த்தைகள், எழுத்துக்கள் உபயோகித்துள்ளோம், சாதரணமாக படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என அனைத்து தகவல்களையும் இது தரும். 

Free English Listening Website
Source: Hemmingway Editor 

சிறப்பம்சங்கள் 

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித நிறத்தில் காட்டும். அதனைக்கொண்டு நம்முடைய எழுத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை காட்டும்.

செயல்பட்டு வினை வாக்கியங்களை நாம் உபயோகிக்கும் போது அவற்றை பச்சை நிறத்தில் காட்டும்.

சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால் அது படிக்க மிகவும் கடினமானதாக இருக்கும். இப்படி காட்டும்போது அந்த வாக்கியங்களை நாம் மாற்றி எழுதி அனைவராலும் எளிதில் படித்து புரியும்படி எழுத வேண்டும்.

மஞ்சள் நிறத்தில் கட்டப்பட்டால் அதுவும் படிக்க கடினமான வாக்கியங்கள் ஆகும். இது சிவப்பை காட்டிலும் கொஞ்சம் படிக்க எளிமையானதாக இருக்கும். 

வினைஉரிச்சொற்களை நீல நிறத்தில் காட்டும். இந்த நீல நிறமானது நமது எழுத்தில் அதிகம் காட்ட கூடாது. அதாவது நாம் அதிக அளவு adverbs ஐ வாக்கியங்களில் அல்லது பத்திகளில் உபயோகிக்க கூடாது. அதாவது ஒரு வாக்கியத்தில் இரண்டு அல்லது அதற்கு குறைவான வினைஉரிச்சொல்லை உபயோகிக்க வேண்டும். 

ஊதா நிறத்தில் இருந்தால் அந்த வார்த்தை அல்லது சொற்தொடருக்கு இன்னும் எளிமையான வார்த்தைகளை உபயோகிக்கலாம் என பொருள். எனவே அத்தகைய இடங்களில் அதே பொருள் தரும் மிக எளிமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.

மேலும் இது நாம் எவ்வளவு வார்த்தைகள், எழுத்துக்கள், வாக்கியங்கள், பத்திகள் உபயோகித்துள்ளோம் என்பதையும் காட்டும். மேலும் இது ஒரு சாதாரண நபரால் எவ்வளவு நிமிடங்களில் பபிடிக்க முடியும் போன்ற தகவல்களையும் தரும். 

இந்த செயலியானது முற்றிலும் இலவசம் ஆகும். இதனை நாம் உபயோகிக்க – Hemmingway editor

ஆங்கில எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை கண்டறிய உதவும் இலவச இணையதளங்கள்

Top Free English Spelling & Grammar Checker Tools in Tamil  

ChatGPT 

நீங்கள் அடிக்கடி இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும். இதனை நாம் நம்முடைய ஆங்கில எழுதும் பயிற்சிக்கு உபயோகிக்கலாம்.

எப்படி என யோசிக்கிறீர்களா? எளிமை. ChatGPT யிடம் நாம் எந்த நிலையில் ஆங்கிலத்தில் இருக்கிறோம், அதாவது Beginner, Intermediate, Advanced என்பதை கூறி, எழுத்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்பதையும் கூறி, எனக்கு தகுந்தாற்போல் 30 சூழ்நிலைகளை எவ்வளவு வார்த்தைகளுடன் எழுத வேண்டும் என்பதையும் குறிப்பிடுமாறு கூறுங்கள். உங்களுக்கு தேவைப்பட்ட அளவை குறிப்பிடலாம். பின்னர் அது தரும் சூழ்நிலைகளை பொறுத்து நீங்கள் எழுத ஆரம்பியுங்கள். 

Free English Listening Website
Source: ChatGPT

நீங்கள் எழுதியதை ChatGPT யிடம் கொடுத்து சரிபார்க்க சொல்லி, எப்படி இதனை நன்றாக எழுதுவது என கேளுங்கள். அது உங்களுக்கு உங்கள் எழுத்தை பற்றியும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றியும் கூறும். 

இதனை தொடர்ந்து நடைமுறை படுத்தி வர எளிமையாக நம்மால் எழுத முடியும். 

எடுத்துக்காட்டுக்கு நான் கீழே கூறிஉள்ளவாறு முயற்சி செய்யுங்கள். இதனை ஆங்கிலத்தில் prompt என்பார்கள். நாம் எவ்வளவு தகவல்களை தருகிறோமோ அதை பொறுத்து நமக்கு தெளிவான சரியான பதில்கள் கிடைக்கும். 

Hi, consider yourself a well-experienced English writing expert, and you are going to give me writing tasks assigned to me to improve my English writing skills. I am a beginner in English writing. Please give me 30 situations to write information about day-to-day life and how many words I should use for each task. once you give me the list, I will start writing and give it to you. please check them and give me a list of all the errors in the text I gave. and suggest how to improve my writing skills to the next level, like beginner to intermediate.

இதில் உங்களுக்கு ஏற்றவாறு உங்கள் ஆங்கிலம் அறிவை பொறுத்து Beginner, Intermediate, Advanced என்பதை கொடுங்கள். எவ்வளவு சூழ்நிலைகள் வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். 

நீங்கள் எழுதியதை மீண்டும் ChatGPT யிடம் கொடுத்து சரி பார்க்கும்போது நாம் எழுதியதில் உள்ள பிழைகளையும், எப்படி நன்றாக அந்த வாக்கியங்களை அமைக்கலாம் எனவும், எப்படி அடுத்த நிலையை அடையலாம் எனவும் கூறும்.

இதுவும் முற்றிலும் இலவசமான ஒன்று ஆகும். இதனை உபயோகிக்க – ChatGPT

Conclusion 

நான் மேலே கூறிய இணையதளங்கள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட ணைபவத்தில் குறிப்பிடப்பட்டவையே ஆகும். இந்த இணையத்தளங்கள் எனக்கு என்னுடைய எழுதும் விதத்தை மேம்படுத்தியது மற்றும் இன்னும் மேம்படுத்திக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆன்ரம்பத்தில் நீங்கள் எழுத ஆரம்பிக்கும்போது மிகவும் கடினமாக இருப்பதாக தோன்றும். சில நாட்களில் உங்களுக்கு பழகி விடும். உங்களை அறியாமல் அடுத்தநாள் எழுத தயாராக இருப்பீர்கள். எனக்கும் அப்படிதான் இருந்தது. எனவே தைரியமாக எழுதும் பயிற்சியை ஆரம்பித்து எழுத ஆரம்பியுங்கள்.

எங்களுடைய பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை comment இல் பதிவிடுங்கள். இது எங்களுக்கு நல்ல ஒரு உந்துகோலாக அமையும். உங்கள் ஆங்கிலம் எழுதும் பயிற்சி நல்லபடியாக இருக்க என்னுடைய வாழ்த்துகள்.

நன்றி! வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *