How To Plan Your English Learning In Day To Day Life – Tamil Tips

How To Plan Your English Learning In Day To Day Life - Tamil Tips

ஆங்கிலத்தை தினசரி வாழ்க்கையில் கற்றுக்கொள்ளுமாறு அமைப்பது எப்படி?

நமக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால், நம்மால் கேட்க அதற்கென சரியாக நேரத்தை ஒதுக்க முடியாது. நாம் நினைத்தால் அதற்கென சிறிது நேரம் ஒதுக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். எனக்கும் இப்படி பல முறை நடந்துள்ளது. அந்த அனுபவத்தில் கூறுகிறேன். உங்களுக்கும் அவ்வாறே நடந்து இருக்கும் என நம்புகிறேன். 

எனவே, இந்த பதிவில் நாம் ஆங்கிலம் கற்பதற்கு என நேரத்தை ஒதுக்காமல் நம் வாழ்வின் தினசரி அங்கமாக ஆங்கிலத்தை கொண்டு வருவது எப்படி அதனைக் கொண்டு ஆங்கிலத்தை கற்பது எப்படி பேசுவது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

எப்படி தினசரி வாழ்வில் ஆங்கிலம் கற்பதை வாழ்க்கை முறையோடு கொண்டு வருவது?

  1. படங்கள் பார்ப்பதன் மூலம் 
  2. ஆங்கில நாவல்கள்/புத்தகங்கள்/செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் 
  3. பாடல்கள் கேட்பதன் மூலம் 
  4. நம்மை சுற்றி ஆங்கிலம் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுதல் 
  5. சமூக வலைத்தளங்கள் உதவியுடன் 

எப்படி-தினசரி-வாழ்வில்-ஆங்கிலம்-கற்பதை-வாழ்க்கை-முறையோடு-கொண்டு-வருவது

படங்கள் பார்ப்பதன் மூலம் 

 அனைவரும் கூறுவது தான் மேம்போக்காக ஆங்கில படங்கள் பார்த்து ஆங்கிலம் எப்படி பேசுகிறார்கள் எந்த மாதிரியான வாக்கியங்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என அறிந்து அதனை நாமும் பின்பற்றலாம் என்று. 

ஆனால் யாரும் எவ்வாறு அதனை அதாவது படம் பார்த்து எப்படி கற்க வேண்டும் என ஆழமாக குறிப்பிடுவதில்லை. 

எவ்வாறு தெளிவாக, ஆழமாக நன்கு கற்கலாம் என்பதை இங்கு காண்போம்.

ஆங்கிலப்படங்கள் மட்டுமே பார்க்க வேண்டுமா?

பலர் ஆங்கிலம் கற்கும் போது ஆரம்ப நிலை ஆங்கிலத்திலே இருப்பார்கள். எனவே அவர்களால் முழுமையாக படத்தை பார்த்து அதனை புரிந்து படிக்க இயலாது. எனவே, ஆங்கிலப்படங்களே பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் நம்முடைய தமிழ் படங்களை ஆங்கில subtitle உடன் பார்க்கலாம். இப்போது அனைத்து தமிழ் படங்களும் OTT யில் ஆங்கில subtitles உடன் கிடைக்கிறது. அதனை பார்க்கலாம். 

ஒவ்வொரு தமிழ் வார்த்தை, வாக்கியதிற்கு எப்படி ஆங்கில subtitle  கொடுத்துள்ளார்கள் அதனை எப்படி நாம் புரிந்து கொள்ளலாம் அதனை எவ்வாறு நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் மற்றவர்களுடன் பேச உபயோகிக்கலாம் என்பது பற்றிய  ஒரு தெளிவு கிடைக்கும்.

எவ்வாறு படங்களை பார்த்து குறிப்புகளை எடுக்கலாம்?

ஒரு படத்தை ஒரு முறை பார்த்து அதில் வாக்கியங்களை, வார்த்தைகளை எப்படி உபயகோகித்து உள்ளார்கள் என்பதை அறிவது கடினம். எனவே நாம் ஒரு படத்தை குறைந்தது 5 – 6 முறை பாருங்கள். படம் அலுக்காமல் இருக்க உங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை பாருங்கள்.

ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியம் உங்களுக்கு புரியவில்லை எனில் அந்த சீனை திரும்ப திரும்ப போட்டு பாருங்கள். அந்த வாக்கியம் அல்லது வார்த்தைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். 

குறிப்பெடுத்த அந்த வாக்கியங்கள் அல்லது வார்த்தைகளை உங்கள் மனதில் பதியும் வரை அடிக்கடி படியுங்கள், மனப்பாடம் செய்யுங்கள், மேலும் அந்த வாக்கியங்களை அன்றாட வாழ்வில் உபயோகிக்க முயலுங்கள்.

அந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் இல் ஆங்கிலத்தில் type செய்யுங்கள். சரியோ தவறோ ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள். பல ஆங்கில சரிபார்ப்பு செயலிகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் உங்கள் ஆங்கில பதிவை சரி பாருங்கள். என்னென்ன தவறுகள் செய்துள்ளீர்கள் என அவை தெளிவாக காட்டும்.

அந்த தவறுகளை சரி செய்து அதனை பற்றிய குறிப்புகளை எடுங்கள். சில ஆங்கில சரி பார்ப்பு செயலிகளை இங்கு குறிப்பிடுகிறேன், அதனை உபயோகப்படுத்தி பாருங்கள்.

  1. https://www.grammarly.com/grammar-check
  2. https://quillbot.com/grammar-check
  3. https://www.gingersoftware.com/grammarcheck

யார் ஆங்கில படங்களை பார்க்கலாம்?

இந்த மூன்று தளத்தையும் நான் உபயோகித்து உள்ளேன். மிகவும் அருமையானது. முடிந்த அளவு அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்டி அது ஏன் அவ்வாறு வரக்கூடாது என காரணத்தையும் கூறும். இதனை நாள் தோறும் உங்கள் வாழ்க்கையில் பிற நேரங்களிலும் தாராளமாக பயன்படுத்தலாம். 

உங்களால் ஆங்கில படங்களை பார்க்க முடியும் பார்த்தல் ஓரளவு புரியும் என்பவர்கள் தாராளமாக ஆங்கில படங்களை தாராளமாக subtitle உடன் பார்க்கலாம். 

நீங்களும் புது ஆங்கில வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை குறிப்பெடுத்துக்  கொள்ளலாம். மேலும் அவர்கள் எவ்வாறு அதனை பேசுகிறார்கள் என்பதை பார்த்து நீங்களும் அவ்வாறே பார்த்து திரும்ப திரும்ப முயற்சி செய்யுங்கள்.

மேலும் மேலே புதிதாக ஆங்கிலம் கற்பவர்களுக்கு கூறிய வழி முறைகளை நீங்களும் உபயோகிக்கலாம்.

Movie-suggestions-to-learn-english

நான் சில ஆங்கில படங்களை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். அவற்றினை subtitle  உடன் பாருங்கள். இந்த படங்களை அணைத்து வயதினரும் பார்க்கலாம். இவை அனைத்தும் OTT இல் கிடைக்கும்.

  1. Forrest Gump 
  2. Home Alone
  3. Toy Story movie series
  4. Harry Potter movie series
  5. The lion king
  6. The King’s speech
  7. Finding Neemo
  8. Pirates of the caribbean movie series
  9. Ice Age movie series

இந்த படங்களின் பெயர்களை இனி அடிக்கடி புதுப்பிக்கிறேன். அவற்றையும் பார்த்து ஆங்கில அறிவை மேம்படுத்துங்கள்.

ஆங்கில நாவல்கள்/புத்தகங்கள்/செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் 

உங்களுக்கு படங்கள் பார்க்க பிடிக்காதா? பரவாயில்லை. உங்கள் பொழுது போக்கு நேரங்களை ஆங்கில நாவல்கள், ஆங்கில புத்தகங்கள், அல்லது ஆங்கில செய்தித்தாள்களுடன் செலவிடுங்கள்.

புது புது வார்த்தைகளை, வாக்கியங்களை தேடுங்கள், அதன் பொருளை அறிந்து குறிப்பெடுங்கள். அதனை அடிக்கடி திரும்ப திரும்ப பார்த்து மனதில் பதிய வையுங்கள். பின்பு அன்றாட வாழ்வில் அதனை உபயோகிக்க பழகுங்கள்.

நீங்கள் படித்த புத்தகத்தையோ, நாவலையோ அல்லது செய்தியினையோ பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதி அதனை மேலே கூறிய ஆங்கில சரி பார்ப்பு செயலிகளைக் கொண்டு சரி பாருங்கள். அதில் உள்ள தவறுகளை சரி செய்து ஏன் அந்த தவறு ஏற்பட்டது என்பதனை அந்த செயலிகள் உதவியுடன் கண்டறிந்து அதனையும் குறிப்பெடுங்கள்.

Movie-suggestions-to-learn-english

இவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களை அமைக்கவும் ஒரு நல்ல பயிற்சியாக அமையும். 

நான் ஒரு சில புத்தகங்களை பரிந்துரை செய்கிறேன். அவற்றை படிக்க முயற்சி செய்யுங்கள்.

  1. The Chronicles of Narnia book series
  2. The Secret Garden
  3. The Adventures of sherlock holmes
  4. Lord of the flies
  5. The road
  6. Charlotte’s web
  7. The Hobbits

பாடல்கள் கேட்பதன் மூலம் 

நீங்கள் வழக்கமா கேட்கும் பாடல்களை தவிர்த்து ஆங்கில பாடல்களை கேட்க முயலுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப பாடல்களை தேர்ந்தெடுங்கள். பாடலினை கேர்க்கும்போது அதன் பாடல் வரிகளை பாடலுடன் சேர்த்து படியுங்கள். இது உங்களுக்கு பல புதிய ஆங்கில வார்த்தைகளை பரிட்சயப்படுத்தும். 

அந்த ஆங்கில வார்த்தைகளை குறிப்பெடுத்து அதனை நன்றாக மனதில் பதிய வைத்து அந்த வார்த்தைகளை அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்துங்கள்.

மேலே சொன்னது போல அந்த பாடல் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதி அதனை அங்கிள் சரிபார்ப்பு செயலிகள் உதவியுடன் சரி பாருங்கள். இது உங்கள் ஆங்கிலம் எழுதும் திறமையை அதிகப்படுத்தும்.

நம்மை சுற்றி ஆங்கிலம் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுதல் 

எப்பொழுதும் உங்களை சுற்றி ஆங்கிலம் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள். 

ஆங்கிலம் பேசுபவர்கள், ஆங்கில படங்கள், பாடல்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் என அமைத்துக்கொள்ளுங்கள்.

மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேச தயக்கம் வேண்டாம். தவறாக பேசினாலும் பரவாயில்லை. அவர்களிடம் பேசியதில் எதாவது தவறு உள்ளதா என அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இது அடுத்த முறை அந்த வாக்கியத்தினை பேசும்போது அந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கும் ஆங்கிலம் பற்றிய பயம் போகும். உங்களுக்கும் ஆங்கிலத்தில் பேச ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.

ஆங்கிலம் கற்க குறிப்புக்கள், திட்டங்களை காண

Proven Tips To Learn English For Tamil Speakers

Tamil Speaker’s Path to English Proficiency: A Study Plan Guide

சமூக வலைத்தளங்கள் உதவியுடன் 

ஆம். சமூக வலைதளங்கள் மூலமாக நம்மால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும். பலர் பல விதமான ஆங்கிலம் பற்றிய குறிப்புகளை தருகிறார்கள். அவர்களை பின்தொடருங்கள். அவர்களின் பதிவுகளை காணுங்கள். நான் பார்த்த வரை அவை அனைத்தும் மிக தெளிவாக புதுமையாக உள்ளன. அவர்களை பின் தொடர்ந்து தினமும் அவர்களின் பதிவுகளை பார்த்து அதில் உங்களுக்கு தெரியாதவற்றை குறிப்பெடுத்து அதனை அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நாமும் நமது சமூக வலைதள பக்கங்களில் ஆங்கிலம் பற்றிய பல பதிவுகளை குறிப்பிட்டுள்ளோம். அதனையும்  படியுங்கள். 

Conclusion 

ஆங்கிலம் கற்றுக்கொள்வது சற்று கடினம் தான். ஆனால் முடியாது என்று இல்லை. ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயிற்சி மற்றும் விடா முயற்சி அவசியம். தன்னம்பிக்கையுடன் எப்படியாவது ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதத்தில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நம்மளும் ஆங்கிலம் கற்று அனைவரிடமும் சரளமாக பேசுவோம், ஆங்கிலத்தில் பிழைகளின்றி எழுதவும் முடியும்.

நன்றி வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *