Proven Tips To Learn English For Tamil Speakers

ஆங்கிலம் கற்க நிரூபிக்கப்பட்ட குறிப்புகள் 

ஆங்கிலத்தை கற்கும் போது நாம் பல்வேறு தடைகளை எதிர்கொள்வோம். அவற்றை எப்படி எதிர்கொள்வது, எந்த விதமான tips களை உபயோகித்து ஆங்கிலம் கற்பதை எளிமையாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

Proven Tips To Learn English For Tamil Speakers

குறிப்புகள் எடுத்தல் & திரும்ப படித்தல் 

நீங்கள் எப்பொழுதும் ஒரு புது வார்த்தைகளை, புது வாக்கியங்களை, இலக்கணம் படிக்கும்போது என அனைத்து இடங்களிலும் குறிப்புகள் எடுத்துப்படிப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் உங்களுக்கு அதனை திரும்ப படிக்க உதவும். இதனை அடிக்கடி திரும்ப திரும்ப பார்த்து வர மனப்பாடம் ஆகி விடும். எனவே இன்று முதல் எது படித்தாலும் அதனை குறிப்புகள் எடுத்து அதனை முறையாக பத்திரப்படுத்தி வையுங்கள். எப்பொழுதும் இது மிக பெரிய உதவியாக இருக்கும்.

நீங்கள் நோட்டு புத்தகங்களிலோ, கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ உங்களின் வசதிக்கேற்ப குறிப்புகளை எடுக்கலாம்.

படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் 

நாம் குறிப்புகள் எடுத்து விட்டோம். அதனை மனப்பாடம் ஆகும் வரை திரும்ப படித்து விட்டோம். அடுத்து என்ன செய்வது? நாம் படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் அவசியம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒவ்வொரு வாரத்தின் 6 நாட்கள் ஆங்கிலம் படிக்க ஒதுக்குகிறீர்கள் எனில், ஆறாவது நாள் இதற்கு உபயோகிக்கலாம். 

நீங்கள் படித்ததை மீண்டும் ஒரு முறை திரும்ப படித்து பின் உங்களுக்கு நீங்களே ஒரு test  அல்லது quiz போன்று எழுதி பாருங்கள். உங்களுக்கு நீங்களே கேள்விகளை கேட்டு பதில் சொல்லி அதனை எழுதி வையுங்கள்.

எழுதியதை அல்லது உங்கள் பதில்களை ஆய்வு செய்யுங்கள். எவ்வளவு சரியாக செய்துள்ளோம் எவ்வளவு தவறாக செய்துள்ளோம் என்பதை அறிந்து அந்த தவறுக்களை எப்படி சரி செய்யலாம் என்பதை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

இந்த ஓரு செயலுக்காக உங்கள் plan இல் ஒரு நாளை ஒதுக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்றாகும்.

Proven Tips List To Learn English For Tamil Speakers

திட்டமிடல் 

ஆங்கிலம் கற்க திட்டமிடல் மிகவும் அவசியம். திட்டமிட்டு அதன்படி தொடர்ந்து படித்து வர எளிமையாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம். எப்படி நம்முடைய goal க்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதனை இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். அதனை படித்து தெளிவு பெறவும். அதனை உபயோகித்து உங்கள் திட்டமிடலை உருவாக்குங்கள். 

திட்டமிடுதலை படிக்க இந்த பதிவு உபயோகமாக இருக்கும். 

Acronyms ஐ உபயோகித்தல் 

ஆங்கிலத்தில் பலவற்றை படிக்கும்போது அதனை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள இந்த Acronyms உதவியாக இருக்கும். 

Acronyms என்பது ஒரு வாக்கியத்தில் வரும் பல எழுத்துக்களின் முதல் எழுத்துக்களை ஒன்றாக அமைத்து உருவாகும் ஒரு புதுச்சொல்லை குறிப்பது ஆகும்.

இது உங்களுக்கு அந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்களை படிக்கும்போது அதன் முழு வாக்கியங்களை ஞாபகத்துக்கு கொண்டு வர உதவும்.

எடுத்துக்காட்டு 

நமக்கு coordinating conjunctions பற்றி தெரியும். மொத்தம் ஏழு வார்த்தைகள் உள்ளன. அவை For, And, Nor, But, Or, Yet, So.

இதனை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள நாம் அதன் முதல் எழுத்துக்களை சேர்த்து ஒரு வார்த்தையை உருவாக்கலாம்.

For, And, Nor, But, Or, Yet, So இன் முதல் எழுத்துக்களை சேர்த்து FANBOYS என்ற ஒரு வார்த்தையினை உருவாக்கலாம். 

coordinating conjunctions வரும்போது நாம் இந்த FANBOYS ஐ நினைவில் வைத்துக்கொண்டால் நம்மால் அந்த 7ஐயும் நினைவுக்கு கொண்டு வர முடியும்.

வானவில்லின் ஏழு வண்ணங்களை நினைவில் வைக்க VIBGYOR என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளலாம். VIBGYOR என்பதன் விரிவாக்கம்  Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red.

Acronyms ஐ உபயோகித்தல்

இதுபோல் நீங்கள் நினைவில் வைத்துள்ள வார்த்தைகளை comment இல் தெரிவியுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Language Learning Applications

ஆங்கிலம் கற்க இணையத்தில் பல செயலிகள் உள்ளன. அவை ஆங்கிலம் கற்க தேவையான அனைத்து பாடங்களையும் தரும். குறிப்பாக, பாடங்கள், பயிற்சி வினாக்கள், வினாடி வினா, ஒளி வடிவ பாடங்கள், ஒலி வடிவ பாடங்கள் என அனைத்தும் இருக்கும். இதன் உதவியுடன் ஆங்கிலங்களை கற்கும்போது நமக்கு ஆங்கிலத்தை வேகமாக கற்க உதவும்,

சில websites ஐ நான் இங்கு தருகிறேன். அதனை முயன்று பாருங்கள்.

இதன் நிறை குறைகள் பற்றி தனியாக ஒரு பதிவை எழுதுகிறேன். அந்த பதிவில் இது போல இன்னும் பல இணையப்பக்கங்கள் இருக்கும்.

Language Exchange Partners Website

இத்தகைய websites ஆங்கிலத்தில் ஒருவருடன் மற்றொருவர் ஆங்கிலத்தில் பேச உதவுகிறது. எடுத்துக்காட்டாக உங்களுக்கு தமிழ் தெரியும், ஆங்கிலம் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள், இன்னொருவருக்கு ஆங்கிலம் தெரியும் அவர் தமிழ் கேட்க ஆசைப்படுகிறார் எனில் நீங்கள் அவருடன் மொழி அறிவை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அவர்களுடன் நீங்கள் இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு ஆங்கிலம் மற்றவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் பேசும் விதம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அறிய உதவும். இது ஆங்கிலம் கற்க பெரும் உதவியாக இருக்கும்.

சில websites ஐ நான் இங்கு தருகிறேன். அதனை முயன்று பாருங்கள்.

இந்த இணையப்பக்கங்களின் நிறை குறைகள் பற்றி தனியாக ஒரு பதிவை எழுதுகிறேன். அந்த பதிவில் இது போல இன்னும் பல இணையப்பக்கங்கள் இருக்கும்.

எழுதுதல், கேட்டல் மற்றும் படித்தல்

நம்மை சுற்றி எப்போதும் ஆங்கிலம் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். எது படித்தாலும் அது ஆங்கிலமாக இருக்க வேண்டும். ஆங்கில புத்தகங்கள், ஆங்கில செய்தித்தாள்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதாவது நாம் எழுத வேண்டும் எண்ணும்போதும் நாம் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும். 

ஆங்கிலத்தில் உள்ள விடியோக்கள், ஆடியோக்கள், podcasts என ஏதாவது ஒன்றை ஒரு நாளைக்கு ஒரு 15 நிமிடங்களாவது கேற்க வேண்டும். இந்த மூன்றையும் தொடர்ந்து செய்து வர ஆங்கிலம் கற்க மிகவும் உதவியாக இருக்கும்.

தினமும் ஆங்கில கற்க திட்டமிட, எப்படி படிக்க வேண்டும் என்ற திட்டத்தை காண

How To Plan Your English Learning In Day To Day Life – Tamil Tips

Tamil Speaker’s Path to English Proficiency: A Study Plan Guide

இலக்கணத்தை தெளிவாக அறிதல் 

ஆங்கிலத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள இலக்கணம் பற்றிய தெளிவு மிகவும் அவசியம். எனவே முக்கியமான இலக்கணங்கள் பற்றியும் அவற்றை எப்படி உயோகிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் நம்முடைய தளத்தில் இலக்கணம் பற்றிய அணைத்து முக்கியமான தகவல்களை எடுத்துக்காட்டுகளுடன் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அதனை படித்து பயன் பெறவும்.

பாராட்டிக்கொள்ளுங்கள்

ஏதேனும் புதிதாக கற்றுக்கொண்டீர்களா அல்லது திட்டமிட்டபடி ஆங்கிலத்தை அன்றைய தினம் படித்தீர்களா? அருமை, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். பெருமைப்படுங்கள். இது உங்களுக்கு அடுத்த நாளைய அல்லது அடுத்த முயற்ச்சிக்கு உதவியாக உந்துகோலாக இருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு எடுங்கள் 

நீங்கள் தொடர்ந்து படிக்க திட்டமிட்டுளீர்கள் எனில் அந்த திட்டத்தில் ஓய்வுக்கும் சேர்த்து திட்டமிடுங்கள். புத்தக ஒரு விஷத்தை கற்கும்போது மிகவும் கடினமாக இருக்கும். தொடர்ந்து படிப்பது உங்களை சோர்வாக்கும். எனவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஓய்வு எடுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்கு பிடித்ததை செய்து புத்துணர்வாகி மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். இது திட்டமிட்ட பாட அளவை அன்றைய நாளில் முடிக்க பெரும் உதவி செய்யும்.

Conclusion 

இந்த பதிவில் எப்படி நாம் ஆங்கிலத்தை எளிமையாக கற்கலாம் என்பதை பார்த்தோம். குறிப்பாக, குறிப்புகள் எடுத்தல் & திரும்ப படித்தல்,  திட்டமிடல், Acronyms ஐ உபயோகித்தல், learning  and speaking websites, இலக்கணத்தை தெளிவாக அறிதல் , சீரான இடைவெளியில் ஓய்வெடுத்தல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்தோம். 

இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்திருக்கும் என நம்புகிறேன். 

உங்களுக்கு இதில் பிடித்த தகவல்களை comment  செய்யவும். மேலும் நீங்கள் உபயோகிக்கும் study  techniques ம் கமெண்டில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் உதவும்.

நன்றி வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *