Tamil Speaker’s Path to English Proficiency: A Study Plan Guide
ஆங்கிலம் கற்றுக்கொள்ள எப்படி திட்டமிடுவது?
பொதுவாக ஆங்கிலம் படிக்க அனைவருக்கும் ஆசை, ஆர்வம் இருக்கும். ஆனால், சரியான திட்டமிடாததால் நம்மால் அதனை கற்றுக்கொள்ள கடினமாக இருக்கும். பல்வேறு இடையூறுகள் வரும். இதற்கு பொதுவான காரணமாக நான் நினைப்பது சரியான திட்டமிடுதல் இல்லாதது தான்.
ஆம். யோசித்துப் பார்க்கும் போது சரியான திட்டமிடுதல் இல்லாதது தான் நாம் ஆங்கிலம் கற்க, பேச தடையாக இருக்க பெரும்பங்கு ஆற்றுகிறது. இந்த பதிவில் நாம் எப்படி ஆங்கிலம் படிக்க திட்டமிட வேண்டும் அதனை எவ்வாறு சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதனை காண்போம்.
உங்கள் தற்போதைய ஆங்கில அறிவை கண்டறியுங்கள்
எந்த அளவு ஆங்கிலம் தெரியும் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இது நாம் தற்போது எங்கு எந்த அளவில் உள்ளோம் எப்படி அந்த அளவில் இருந்து முன்னேற வேண்டும் என்பதனை பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும்.
இதனை எவ்வாறு தெரிந்து கொள்வது? எளிமை. பல வழிகள் உள்ளன. இணையத்தில் உள்ள quiz , online language proficiency tests போன்றவை ஏராளமாக உள்ளன. அதனை எழுதி பாருங்கள். அதில் வரும் மதிப்பெண்ணை பொறுத்து உங்கள் தற்போதைய ஆங்கில புலமையின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதனை தெரிந்து கொள்ளலாம். அதனை கொண்டு நீங்கள் உங்கள் திட்டமிடலை ஆரம்பிக்கலாம்.
SMART திட்டமிடல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடல் இருக்கும். அது அவருடைய தற்போதைய ஆங்கில புலமையை பொறுத்து அமையும். தன்னை எவ்வாறு அதிகப்படுத்தவேண்டும் என்பதனை கண்டறிய இந்த SMART திட்டமிடல் முறை மூலம் செயல்படுத்தலாம்.
SMART என்பதன் விரிவாக்கம் Specific Measurable Achievable Relevant Time bound என்பதாகும். அவை என்னென்ன என்பதை இப்போது காண்போம்.
Specific
நீங்கள் ஆங்கிலத்தின் எந்த பகுதியை மேம்படுத்த வேண்டும் என்பதனை அறிய வேண்டும். ஏனெனில் நாம் அனைத்து பகுதியையும் ஒரே நேரத்தில் மேம்படுத்த முடியாது அல்லது பெரிய அளவில் எடுத்துக்கொண்டால் அது கடினமாக இருக்கும் எனவே ஆங்கிலத்தின் மேல் உள்ள ஈர்ப்பை குறைத்து படிக்க விருப்பம் இல்லாமல் போய் விடும்.
நீங்கள் ஆங்கிலத்தை நன்றாக கற்ற வேண்டும் என்பதற்கு பதிலாக எந்த பகுதியில் பலவீனமாக உள்ளேர்களோ அதனை முதலில் கற்க வேண்டும் என திட்டமிடுங்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் சரியாக பேச வேண்டும் என்பது போன்று முடிவெடுங்கள்.
Measurable
நீங்கள் என்னென்னவாறு முன்னெடுப்புகளை எடுத்தீர்கள் என்பதனை உங்களுக்கு தெரிய வேண்டும். அந்த வகையில் திட்டமிடுதல் அவசியம். அதாவது இந்த கால அளவுக்குள் இதனை நான் முடிக்க வேண்டும் என்பது உங்கள் திட்டமிடலில் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் இன்னும் 1 மாதத்தில் 500 புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிடுதல் வேண்டும்.
Achievable
உங்களின் திட்டமிடலானது செயல்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லையேல் அது உங்களுக்கு ஈடுபாடு இன்மையை தரும். உங்களுக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நினைப்பு வரும்போது உங்கள் திட்டமானது அதன் அளவீட்டை விட அதிகமாக இருக்கும்போது உங்களுக்கு ஒரு வித வெறுப்பையே தரும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரே வாரத்தில் 1000 புது வார்த்தைகளை கற்க வேண்டும் என்ற திட்டமிடல் கூடாது. ஏனெனில் 1000 புது வார்த்தைகளை கற்பது என்பது கடினம் அதுவும் ஏழு நாட்களில் என்பது மிகவும் கடினம். எனவே திட்டமிடலானது சரியாக முடிகின்ற அளவில் இருக்க வேண்டும்.
Relevant
உங்கள் திட்டமிடலானது எதற்காக ஆங்கில அறிவை மேம்படுத்த போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அது வேலைக்காக, படிக்க, பேச, எழுத என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்களுக்கு ஆங்கிலத்தினை கற்க அல்லது மேம்படுத்த எதுவாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக உங்கள் திட்டமிடலானது நல்ல வேலைக்கு செல்ல மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என இருக்குமாயின் உங்களால் அதனை நோக்கி பயணிக்க முடியும்.
Time bound
மேலே கூறிய விஷயங்களை எந்த கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெளிவாக அறிய வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஒரு பகுதியினை முடிக்க வேண்டும் என திட்டமிடல் அவசியம். இந்த நேர திட்டமிடல் ஆனது Achievable இல் கூறியது போல இயல்பில் செயல்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நாம் மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் இன்னும் 6 மாதங்களில் பிழையின்றி பேசுவேன் என கால அளவை தீர்மானிக்கலாம்.
SMART plan எடுத்துக்காட்டு
இந்த SMART method முழுவதுமாக அமைந்தவாறு இந்த எடுத்துக்காட்டை கூறலாம்.
நான் பிழையில்லாமல் தன்னம்பிக்கையுடன் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்து, 6 மாதங்களில் ஆங்கிலத்தில் சரளமாக மற்றவர்களுடன் பேசி, வேலைக்கு ஆங்கிலத்தில் நேர்முகத்தேர்வை தன்னபிக்கையுடன் எத்ரிக்கொள்வேன் என திட்டமிடுதல்.
இது போல் உங்கள் goal என்ன என்பதை தீர்மானித்து மேலே கூறியவாறு SMART முறை உதவியுடன் திட்டமிடுங்கள்.
படிக்கும் அட்டவணையை (study time table) தயாரித்தல்.
சரி, நாம் நம்முடைய goal ஐ தீர்மானித்து விட்டோம். அதனை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது? அதற்குத்தான் நாம் இந்த படிக்கும் கால அளவை அட்டவணையை உருவாக்கி அதன் உதவியுடன் படிக்க ஆரம்பிக்கலாம்.
மேலே SMART planning இல் கூறிய எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். நம்முடைய goal ஆனது ஆங்கிலத்தை பிழையில்லாமல் சரளமாக பேச வேண்டும். எனவே அதற்காக, தினமும் ஆங்கிலத்துக்கென காலை ஒரு மணி நேரம் ஒதுக்கலாம் என திட்டமிடலாம்.
இந்த ஒரு மணி நேரத்தையும் நீங்கள் சிறு சிறு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். அந்த ஒரு மணி நேரத்தில் 20 நிமிடங்கள் படிக்கவும், 10 நிமிடங்கள் படித்ததை குறிப்பெடுக்கவும், படித்ததை 15 நிமிடங்கள் கண்ணாடியின் முன்பு எப்படி பேசலாம் என்பதனை முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பேசியதை record செய்து அதில் என்ன பிழை இருக்கிறது என்பதனை நீங்களே கேட்டு கண்டறியலாம். அல்லது நண்பர்களின் உதவியோ, இணையத்தின் உதவியோ மீதி இருக்கும் அந்த 15 நிமிடங்களுக்கு நாடலாம்.
சரி, நாம் goal ஐ தீர்மானித்து விட்டோம், study plan உம் உருவாக்கி விட்டோம். ஏதன் உதவியுடன் படிப்பது எந்திர சந்தேகம் வரலாம். சந்தேகமே வேண்டாம். இணையத்தில் ஆங்கிலம் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமது தளமும் ஆங்கிலம் கற்க தேவையான தகவல்களை தருகிறது. நமது தளத்தின் உதவியையும் நாடலாம்.
ஆங்கிலம் கற்க உதவும் குறிப்புகள், எப்படி தினசரி வாழ்வில் ஆங்கிலத்துக்கு நேரம் ஒதுக்கி பயில இதை படியுங்கள்.
Proven Tips To Learn English For Tamil Speakers
How To Plan Your English Learning In Day To Day Life – Tamil Tips
உங்கள் செயல்பாடுகளை கவனியுங்கள்
ஆம். நமது செயல்பாடுகளை கவனித்தால் அவசியம். நாம் நம்முடைய அட்டவணையின் படி தான் செல்கிறோமா? எங்கு தொய்வு ஏற்படுகிறது? நேர அளவை கூட்டலாமா அல்லது குறைக்கலாமா? எதற்கு நேரம் அதிகம் செலவிட வேண்டும்? எப்படி study materials ஐ தேர்வு செய்வது போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். அதன்படி உங்கள் அட்டவணையை மாற்றுங்கள்.
திட்டமிடும்போது என்னென்னவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்?
ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு புதிய மொழியை கேட்க பொறுமை மிக அவசியம். அந்த பொறுமையோடு அந்த மொழியினை கற்க நம்முடைய முழு ஈடுபாடையும் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் என திட்டமிட்டால், கண்டிப்பாக அந்த ஒரு மணி நேரத்தை ஆங்கிலத்துக்கு என ஒதுக்கி படிக்க வேண்டும்,
நீங்கள் திட்டமிட்டபடி படிக்கிறீர்களா? உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் படித்ததற்கு உங்களுக்கு நீங்களே சிறு பரிசை கொடுத்துக்கொள்ளுங்கள். பரிசானது, மிட்டாய், அல்லது ஏதேனும் தின்பண்டங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்களுக்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தினை தரும்.
உங்களை சுற்றி ஆங்கிலம் இருக்கும் இடங்களை, சுற்றுசூழலை அமைத்துக்கொள்ளுங்கள். கிடைக்கும் நேரங்களில், கிடைக்கும் இடங்களில் ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்யுங்கள்.
படிக்கும் கால அட்டவணை எடுத்துக்காட்டு
நாம் வாரத்தின் ஆறு நாட்கள் தினசரி அரை மணி நேரம் ஒதுக்குவதற்கு தயாராக இருக்கிறோம் எனில் கீழே உள்ளவாறு திட்டமிடலாம்.
நாள் 1 – தினமும் 15 புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளுதல். இதில் அந்த 15 வார்த்தைகளினை தமிழில் மொழியாக்கம் செய்து அதனை எழுதி மனப்பாடம் செய்தல்.
நாள் 2 – ஆங்கிலத்தில் பேசுதல். பேச வேண்டியதை தயார் செய்தல். கண்ணாடியின் முன்னாள் நின்று 5 நிமிடம் பேச தயார் செய்ததை பேசுதல். பேசியதை பதிவு செய்து அதில் உள்ள பிழைகளை 10 நிமிடங்களில் சரி செய்தல்.
நாள் 3 – ஆங்கிலம் படிக்கும் திறனை வளர்த்தல். ஏதாவது கதை, செய்திகள் என 15 நிமிடங்கள் படித்தல்.பின்பு அதில் உள்ள புது வார்த்தைகள், எழுதிய விதம் பற்றி குறிப்பெடுத்தல்,
நாள் 4 – பேசுதல். எப்படி மற்றவர்களுடன் பேச வேண்டும் என்பதனை நீங்களே மனதில் திட்டமிடுதல். அதாவது நீங்கலே ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் நடக்கும் உரையாடல்களை உருவாக்கி பேசி பழகுதல்.
நாள் 5 – ஆங்கில இலக்கணத்திற்கு என ஒதுக்குதல். இலக்கணத்தின் குறிப்பிட்ட பகுதியை தெளிவாக படித்தல்.
நாள் 6 – இந்த 5 நாட்கள் என்னென்ன செய்தோம் என்பதை மீண்டும் ஒருமுறை பார்த்து, எவ்வாறு improve செய்யலாம் என்பதனை அறிதல்.
Conclusion
இந்த பதிவானது SMART planning என்றால் என்ன, எப்படி திட்டமிடல் வேண்டும், அட்டவணை தயாரித்தல், என்னென்ன கருத்தில் கொள்ள வேண்டும் என்பதனை பற்றி தெளிவாக கொடுத்துள்ளோம். இது உங்களின் ஆங்கில கற்றலுக்கு முதல் படியாக அமையும் என நம்புகிறோம்.
இந்த பதிவினைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இது எங்களுக்கு இது போன்ற பல பதிவுகளை எழுத ஊக்குவிக்கும்.
நன்றி.
1 Response
[…] படிக்க இந்த பதிவு உபயோகமாக […]