DIY, POV, FYI, ETA, VIP, ATM Full Form, Examples & Meaning In Tamil

நாம் Abbreviations என்றால் என்ன, Acronyms என்றால் என்ன என்பதை பற்றி முந்தைய பகுதிகளில் தெளிவாக விளக்கி இருந்தோம். உங்களுக்கு அது பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த பதிவை படிக்கவும். இங்கே குறிப்பிடப்பட்ட பதிவின் தொடர்ச்சியே இந்தபதிவு ஆகும். அதனை படிக்கவில்லையெனில் அதனை படித்துவிட்டு இதனை தொடரவும். Learn Commonly Used Abbreviations & Acronyms in Tamil 

Abbreviations and Acronyms in Tamil Part 2

இந்த பதிவில் நாம் DIY, POV, FYI, ETA, VIP, ATM என்றால் என்ன அவற்றை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக காணலாம், வாருங்கள்.

DIY

Do It Yourself என்பதன் சுருக்கமே DIY ஆகும். DIY தமிழ் பொருள் நீங்களாகவே செய்யுங்கள், நீங்களே செய்யலாம் போன்றவை ஆகும்.

For example, I am going to create a DIY pen stand. இதன் பொருள் நான் பேனாக்கள் வைக்க உதவும் பெட்டியை நானே தயார் செய்ய உள்ளேன் என்பதாகும். அதாவது யாருடைய உதவியும் இல்லாமல் அவரே அந்த பேனா பெட்டியை உருவாக்கப்போகிறார் என பொருள்படும்.

எத்தகைய சூழ்நிலைகளில் DIY ஐ  உபயோகிக்கலாம்?

எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் அல்லது அந்த செயலில் கற்று தேர்ந்தவரின் உதவி இல்லாமல் அல்லது செய்யும் செயலில் பல வருட அனுபவம் உள்ளவர்களின் உதவி இல்லாமல் நாமே செயல்களை செய்யும் போது அல்லது இதை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது நாம் DIY அல்லது Do It Yourself என கூறலாம். 

அந்த செயல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு பொருளினை வடிவமைத்தல், பழுது பார்த்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Examples 

  1. Did you watch the DIY videos on YouTube? – YouTube இல் DIY காணொளிகளை பார்த்தீர்களா? 
  2. Can you make a DIY gift for my birthday? – என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு DIY பரிசு வழங்க முடியுமா? அல்லது என்னுடைய பிறந்தநாளுக்கு நீயாகவே ஒரு பரிசு செய்து தர முடியுமா?
  3. I made a DIY garden kit for my garden. – நான் என்னுடைய தோட்டத்திற்கு ஒரு DIY கிட்டை உருவாக்கினேன்.
  4. I found a great DIY recipe online. It’s awesome. – நான் இணையத்தில் ஒரு DIY சமையல் காணொளியை கண்டுபிடித்தேன். அது அருமையாக இருக்கிறது.
DM, DIY, POV, FYI, ETA, VIP, ATM meaning in tamil

POV

Point Of View என்பதன் சுருக்கமே POV ஆகும். POV தமிழ் பொருள் முதல் நபரின் பார்வையில் இருந்து, முதல் நபரின் கண்ணோட்டம், ஒரு நபரின் இடத்தில இருந்து பார்ப்பது, எனது பார்வையில் போன்றவை ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு, From my POV, the movie is really nice. இதன் தமிழ் அர்த்தமானது என்னுடைய பார்வையில் படமானது நன்றாக இருக்கிறது. இங்கு அந்த நபர் அவருடைய பார்வையில் இருந்து அந்த படத்தினைப் பற்றிய அவரின் கருத்தை கூறுகிறார். எனவே இங்கு POV உபயோகித்துள்ளார். 

எத்தகைய சூழ்நிலைகளில் DM ஐ  உபயோகிக்கலாம்?

நாம் பேசும்போது என்னுடைய இடத்தில இருந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் அல்லது என்னுடைய இடத்தில இருந்து பார்த்தால் தான் உனக்கு புரியும் என்று கூறும் இடங்களில் நாம் இந்த போவே என்ற சுருக்கத்தை உபயோகிப்போம். இதை நாம் அனைத்து சூழ்நிலைகளுக்கும் எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி, துக்கம், கோபம் என எல்லா இடங்களிலும் நாம் உபயோகப்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களிலும் நாம் இந்த வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பதை காண்போம்.  குறிப்பாக Youtube, TikTok  போன்ற செயலிகளில் அதிக அளவு இந்த point of view அல்லது POV காணொளிகள் காணப்படும்.அதை காணொளி எடுப்பவர் அவருடைய பார்வையில் இருந்து பதிவு செய்வார். அதை நாம் பார்க்கும்போது நாம் நேரடியாக அந்த அந்த காணொளியில் உள்ள நிகழ்வை நேரடியாக பார்ப்பதைப் போல் தோன்றும்.

Examples 

  1. From my POV, this is a good idea. – என்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இது ஒரு நல்ல யோசனை.
  2. Please share your POV on this matter. – இந்த விஷயத்தைப்பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
  3. I appreciate your POV; it is very informative. – உங்களுடைய கண்ணோட்டத்தை நான் பாராட்டுகிறேன். இது அதிக தகவல்களை கொண்டுள்ளது.
  4. Please consider everyone’s POV before taking any decision. – நீங்கள் எந்த ஒரு முடிவை எடுக்கப்போகும் முன் அனைவரின் கருத்தை கவனத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.

FYI

FYI என்பதன் விரிவாக்கம் For Your Information ஆகும். FYI தமிழ் பொருள் நீ தெரிந்து கொள்ள,  உங்கள் தகவலுக்கு, உங்களின் தகவலுக்கு என்பதாகும்.

நாம் ஒருவரிடம் ஒரு தகவலை கூற வேண்டும் என்னும் சூழ்நிலைகளில் நாம் இந்த FYI ஐ உபயோகிப்போம்.
எடுத்துக்காட்டாக FYI, I will be in a meeting at 3p.m. please do not disturb. நான் மதியம் மூன்று மணிக்கு ஒரு சந்திப்பில் இருப்பேன் என உங்களுக்கு தெரிவிக்கிறேன். தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம். இதில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்பது FYI அல்லது  For Your Information ஆகும்.

எத்தகைய சூழ்நிலைகளில் FYI ஐ  உபயோகிக்கலாம்?

மேலே கூறியது போல ஒருவருக்கு ஒரு தகவலை தெரிவிக்க அல்லது  கூற முற்படும்  இடங்களில் நாம் இந்த FYI ஐ உபயோகிப்போம்.

Examples 

  1. FYI, I missed my bus. I have to book a taxi. – தகவலை தெரிந்து கொள், நான் பேருந்தை தவற விட்டேன். நான் ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்ய வேண்டும். 
  2. Just an FYI, I am not available tomorrow. – நான் நாளை இருக்க மாட்டேன். உங்கள் தகவலுக்கு.
  3. FYI, our company rules have changed. நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், நன்மது நிறுவன விதிகள் மாறிவிட்டன.
  4. Our project deadline has been extended, Just an FYI. – நமது திட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் தகவலுக்கு.

ETA

Estimated Time of Arrival என்பதன் சுருக்கம் ETA ஆகும். ETA தமிழ் பொருள் கணிக்கப்பட்ட வருகை நேரம் அல்லது வருகையின் மதிப்பிடப்பட்ட நேரம் ஆகும்.

ஒரு பொருளோ அல்லது நபரோ இந்த நேரத்தில் அவர் சென்றடைய வேண்டிய இலக்கை அல்லது இடத்தை பற்றி குறிப்பிடும்போது நாம் இந்த Estimated Time of Arrival அல்லது ETA உபயோகிப்போம். இது சரியான நேரமாக குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிட்டதட்ட இந்த நேரம் என கூறும் இடங்களில் உபயோகிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, I am running a bit late, my ETA is 6 pm. நான் சிறிது தாமதமாக வந்துகொண்டு இருக்கிறேன். நான் ஆறு மணிக்கு அங்கு வந்து சேருவேன்.

இந்த வாக்கியத்தில் ஒரு நபர் ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்தை அடைவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, அவர் சிறிது நேரம் தாமதமாகி விட்டார் எனவே அவர் அந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட மாலை ஆறு மணி ஆகும் என குறிப்பிடுகிறார்.

எத்தகைய சூழ்நிலைகளில் ETA ஐ உபயோகிக்கலாம்?

பெரும்பாலும் இந்த வார்த்தையானது ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்யும் இடங்களில் உபயோகிக்கப்படுகிறது. இந்த ETA நேரத்தைக்கொண்டது அவர்கள் அத்ரக்கான திட்டப்பணிகளை செய்வர். 

ETA ஆனது நாம் நம் அன்றாட வாழ்வில் குறிப்பிட்ட இலக்கை அடைய, அல்லது இடத்தினை அடையும் இடங்களில் நாம் உபயோகிப்போம்.

Examples 

  1. The package is on the way, and its ETA is 6 am. – பொட்டலாமானது வந்து கொண்டு இருக்கிறது நாளை காலை ஆறு மணியளவில் வந்து சேரலாம்.
  2. The train’s ETA is 5:15 pm. – தொடர்வண்டியானது மாலை 5.15 மணியளவில் வந்து சேரும்.
  3. I am leaving now. ETA to the theater is about 10 minutes. – நான் இப்போது கிளம்புகிறேன். நான் திரையரங்குக்கு இன்னும் பாத்து நிமிடங்களில் வந்து சேருவேன்.
  4. Can you let me know your ETA so I can plan accordingly? – நான் என்னுடைய திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் நீ வரும் நேரம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?  

BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, மற்றும் HTML விரிவாக்கத்தை அறிய இதை காண்க

VIP

VIP என்பதன் விரிவாக்கம் Very Important Person ஆகும். VIP தமிழ் பொருள் பிரபலமான நபர், மிக முக்கியமான நபர், மிகுந்த செல்வாக்கு உடையவர், மிகுந்த ஆளுமை உடையவர், சமூக அந்தஸ்து உள்ள நபர், பிரபலமான நபர் ஆகும்.

எடுத்துக்காட்டாக, our VIP customers receives exclusive discounts in our website. –  எங்கள் இணையத்தளத்தில் எங்களின் சிறப்பு வாடிக்கையாளர்கள் பிரத்யேக சலுகைகளை பெறுகிறார்கள். 

இந்த எடுத்துக்காட்டில்  VIP என்பது சிறப்பு அந்தஸ்தை குறிக்கிறது.

எத்தகைய சூழ்நிலைகளில் VIP ஐ உபயோகிக்கலாம்?

மிகுந்த ஆளுமை உடைய நபர்கள், சமூகத்தில் முக்கியமான நபர்கள், செல்வாக்கு உள்ள நபர்கள் மற்றும் இது போன்ற நபர்களை பொதுவாக குறிக்கும் இடங்களில் நாம் இந்த VIP அல்லது Very Important Person என்பதனை உபயோகிப்போம்.

Examples 

  1. We need to make seating arrangements for the VIPs. – வி.ஐ.பிகளுக்கு நாம் இருக்கை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
  2. The hotel has a VIP room for private gatherings. – தனிப்பட்ட கூட்டங்களுக்காகவே ஹோட்டலில் வி.ஐ.பி அறை உள்ளது.
  3. We used VIP entrance to avoid the regular long line. – நாங்கள் நீண்ட வரிசையை தவிர்க்க வி.ஐ.பி சிறப்பு நுழைவு வாயிலை பயன்படுத்தினோம்.
  4. The VIP parking area is only for VIP vehicles. – வி.ஐ.பி வாகனங்கள் நிறுத்தும் இடமானது வி.ஐ.பிகளுக்கு மட்டுமே.

ATM

Automated Teller Machine என்பதன் சுறுக்கம் ATM ஆகும். ATM தமிழ் பொருள் தானியங்கி வங்கி இயந்திரம் அல்லது தானியங்கி பண இயந்திரம் ஆகும். 

இது எந்த ஒரு மனிதரின் உதவி இல்லாமல் பணத்தினை நமது வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கவும், பணத்தினை வங்கிக்கணக்கில் வைக்கவும் உதவும் ஒரு மின்னனு கருவி ஆகும். 

எடுத்துக்காட்டு – This ATM is out of service. I need to find another one. – இந்த ATM ஆனது வேலை செய்யவில்லை. நான் வேறொன்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

எத்தகைய சூழ்நிலைகளில் ATM ஐ உபயோகிக்கலாம்?

இது ஒரு கருவியின் பெயர் என்பதால் அந்த இயந்திரத்தின் பெயர், தேவை, பயன்பாடு உள்ள அனைத்து இடங்களிலும் நாம் ATM அல்லது Automated Teller Machine ஐ உபயோகிக்கலாம்.

Examples 

  1. You can deposit and withdraw money from the ATM. – ATMஇல் நம்மால் பணத்தை எடுக்கவோ பணத்தை வங்கிக்கணக்கில் போடவோ முடியும்.
  2. ATMs save my time and energy eliminating the need to go to the bank. – ATMகள் ஆனது வங்கிக்கு செல்லும் தேவையை நீக்கி என்னுடைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகின்றன.
  3. You can withdraw money at any time using ATMs, even if the bank closes. – வங்கி மூடியிருந்தாலும் நம்மால் எந்த நேரத்திலும் ATM உதவியுடன் பணத்தை எடுக்கலாம்.
  4. Usually, I withdraw my salary amount from the nearby ATM. – நான் என்னுடைய சம்பளப்பணத்தை வழக்கமாக பக்கத்தில் உள்ள ATM இல் எடுப்பேன்.

Conclusion

இது நம்முடைய Abbreviations மற்றும் Acronyms இந்த இரண்டாவது பதிவு ஆகும். இதில் DM, DIY, POV, FYI, ETA, VIP, ATM ஆகியவற்றை பற்றி ஒவ்வொன்றாக தெளிவாக கற்றோம். இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் மற்ற Abbreviations மற்றும் Acronyms ஐ பதிவிட உள்ளோம். அந்த பதிவுகளின் விவரத்தை இங்கு இணைக்கிறேன். அவை அத்தனையும் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் comment இல் பதிவிடுங்கள். . அது எங்களுக்கு இது போன்று மேலும் பல பதிவுகளை எழுத ஊக்குவிக்கும். இது போல மற்ற எந்தெந்த Abbreviations காலை பற்றி பதிவிட வேண்டும் எம்பாதனையும் கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

நீங்கள் ஏதாவது புதிதாக இந்த பதிவில் கற்றுக்கொண்டீர்கள் என்றாலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அத்தனையும் comment இல் பதிவு செய்யவும்.

நன்றி! வணக்கம்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *