All 12 Tenses in Tamil with examples
All 12 Tenses in Tamil
ஒரு செயலானது எப்போது நிகழ்ந்தது என்பதை வினைச்சொல்லின் உதவியுடன் கூறுவது tense எனப்படுகிறது.
பொதுவாக, verb ஆனது tense இல் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த verb change பொறுத்தே நாம் tense ஐ வகைப்படுத்துவோம்.
tense ஆனது 3 வகைகளாக பிரிக்கலாம்.
- Present tense – நிகழ் காலம்.
- Past tense – இறந்த காலம்
- Future tense – எதிர்காலம்
மேலே கூறிய ஒவ்வொரு tense உம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன,
The present tense
present tense ஆனது நிகழ் காலத்தை பொறுத்து நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
- The Simple present tense
- The Present continuous tense
- The Present perfect tense
- The present perfect continuous tense
The past tense
Past tense ம் present tense போலவே அதன் காலத்தை பொறுத்து நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுளள்து. அனால் இங்கு இறந்த காலத்தை பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
- The Simple Past Tense
- The past continuous tense
- The Past perfect tense
- The Past perfect continuous tense
The future tense
மேலே கூறிய இரண்டு tense போலவே இந்த future tense உம் நான்கு வகைகளாக எதிர்காலத்தை பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது.
- The Simple future tense.
- The Future continuous tense
- The Future perfect tense
- The Future perfect continuous tense
The present tense
நிகழ்காலம் என்பது ஒரு செயலானது தற்போது நடைபெறுகிறது அல்லது நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்பதை குறிப்பிட உதவுகிறது.
The Simple Present Tense
1. ஒரு செயலானது நடைபெறுகிறது என்பதை குறிப்பிட
Example : We go to school.
2. உலக உண்மைகளை (general truth or a customary action) பற்றி குறிப்பிடும்போது
Example : The sun rises in the east.
3. ஒரு செயல் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதை (things that are planned for the future) பற்றி கூறும் போது.
Example : The game show starts tomorrow.
4. தற்போது நடக்கும் நிகழ்வுகளின் வெவ்வேறு செயல்களைக் குறிப்பிட விரும்பும்போது.
Example : I arrive at home. I see my mother is cooking. I ask her what special food today. She says upma.
Simple Present Tense form
ஒரு வாக்கியமானது Simple Present Tense இல் இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம். நாம் இங்கு present verb ஐ வாக்கியத்தில் உபயோகிப்போம். இந்த present verb ஐ do or does + verb என பிரிக்கலாம்.
Subject + Do / Does + verb + object
I / We / You / They + verb
He / She / It / Name + verb + s/es
Examples
- I eat a banana
- He eats a banana.
Simple Present Tense negative form
Simple Present Tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்றும் போது எப்படி மாற்ற வேண்டும் என்பதனை இங்கு காண்போம். அதாவது do மற்றும் does உடன் not என்னும் எதிர்மறை சேர்க்க வேண்டும்.
Subject + Do / Does + not + verb + object
I / We / You / They + do + not + verb
He / She / It / Name + does + verb
Examples
- I do not eat bananas.
- She does not eat bananas.
Simple Present Tense interrogative form
Simple Present Tense ஐ வினா வாக்கியமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதனை இங்கு காண்போம். Subject க்கு முன்னால் நாம் do அல்லது does ஐ கொண்டு சென்று பின்னர் கடைசியில் வினாக்குறியை உபயோகிக்க வேண்டும்.
Do / Does + Subject + verb + object?
Do + I / We / You / They + Verb?
Does + He / She / It / Name + Verb?
Examples
Do I eat bananas?
Does he eat bananas?
The Present Continuous Tense
ஒரு செயலானது ஆரம்பித்து தற்போது நிகழ்ந்து கொண்டு இருப்பதை குறிக்க (actions in the present, or things that are still going on or happening now) The Present Continuous Tense உதவுகிறது.
வினைச்சொல்லுடன் ing சேர்த்து சொல்லும்போது அது present participle ஆக மாறும்.
Examples
- I am cooking now. – நான் இப்போது சமைத்துக்கொண்டு இருக்கிறேன்.
- He is drawing a picture. – அவன் படம் வரைந்து கொண்டு இருக்கிறான்.
First person be form verb
Singular : I + am
Plural : We + are
Second person be form verb
Singular : you + are
Plural : You + are
Third person be form verb
Singular : he + is
She + is
It + is
Plural : They + are
The Present Continuous Tense Formula
ஒரு வாக்கியமானது Present continuous tense இல் இருந்தால் அதன் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம். இங்கு நாம் am, is, are வரும். மேலும் வினைச்சொல்லுடன் ing சேர்த்து உபயோகிப்போம்.
Form : Subject + am / is / are + verb + ing
I + am + verb + ing
He / She / It + is + verb + ing
We / You / They + are + verb + ing
Examples
- I am eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடுகிறேன்.
- He is eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடுகிறான்.
The Present Continuous Tense Negative form:
இங்கு நாம் Present Continuous Tense ஆனது எதிர்மறையாக இருக்கும்போது எப்படி இருக்கும் என காணலாம். இங்கு am, is, are உடன் not என்னும் எதிர்மறை சொல்லானது சேர்ந்து அந்த வாக்கியத்தை எதிர்மறையா மாற்றும்.
I + am + not + verb + ing
He / She / It + is + not + verb + ing
We / You / They + are + not + verb + ing
- I am not eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடுவதில்லை.
- He is not eating a banana.- அவன் வாழைப்பழம் சாப்பிடுவது இல்லை.
The Present Continuous Tense Interrogative form:
இங்கு நாம் அந்த present continuous tense ஐ எப்படி வினா வாக்கியமாக மாற்றுவது என்பதை காண்போம். நாம் இந்த am, is, are ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து வாக்கியம் அமைத்தால் வினா வாக்கியமாக மாறும்.
Am + I + verb + ing?
Is + He / She / It + verb + ing?
Are + We / You / They + verb + ing?
- Am I eating a banana? – நான் வாழைப்பழம் சாப்பிடுகிறேனா?
- Is he eating a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிடுகிறேனா?
The Present Perfect Tense:
ஒரு செயலானது இறந்த காலத்தில் ஆரம்பித்து அதன் தாக்கம் தற்போதும் இருக்கும் போது(things that happened in the past that affect the present) அதை குறிப்பிட The Present Perfect Tense உதவுகிறது.
the present perfect tense இல் நாம் Have மற்றும் has ஐ உபயோகிப்போம்.
Example
1. We have lived in this house for ten years. (We still live there).
நாங்கள் பத்து வருடங்களாக இந்த வீட்டில் வசிக்கிறோம். (இப்போதும் வசித்துக்கொண்டு இருக்கிறோம்.)
2. He has dirtied his dress. (he made the dress dirty and it is still dirty)
அவன் தன ஆடையை அழுக்கு ஆக்கியுள்ளான். (இப்போதும் அழுக்காக உள்ளது).
The Present Perfect Tense Form :
ஒரு present perfect tense ஐ எப்படி பார்த்தவுடன் கண்டுபிடிக்கலாம் அல்லது எவ்வாறு அந்த வாக்கியத்தை அமைப்பது என்பதை இங்கு காண்போம். நாம் have மற்றும் has உபயோகிப்போம். மேலும் இங்கு past participle ஐ உபயோகிப்போம்.
Subject + Have / Has + Past participle verb
I / we / you / They + Have + Past participle verb
He / She / It / Name + Has + Past participle verb
Example
I have eaten a banana. – நான் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டேன்.
He has eaten a banana. – அவன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டான்.
The Present Perfect Tense Negative form
நாம் present perfect tense ஐ எதிர்மறையாக மாற்ற have மற்றும் has உடன் not என்னும் எதிர்மறை சொல்லை சேர்க்கலாம்.
I / we / you / They + Have + not + Past participle verb
He / She / It / Name + Has + not + Past participle verb
Examples
- I have not eaten a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
- He has not eaten a banana.- அவன் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
The Present Perfect Tense Interrogative form:
இந்த present perfect tense ஐ வினா வாக்கியமாக மாற்ற நாம் உபயோகிக்கும் have மற்றும் has ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் வினைச்சொல்லை வைக்க வேண்டும்.
Have + I / we / you / They + Past participle verb?
Has + He / She / It / Name + Past participle verb?
Examples
- Have I eaten a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டேனா?
- Has he eaten a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிட்டானா?
The Present Perfect Continuous Tense:
ஒரு செயலானது இறந்த காலத்தில் ஆரம்பித்து, தற்போதும் அது நடந்து கொண்டு இருக்குமாயின் அதனைக் குறிப்பிட நாம் The Present Perfect Continuous Tense ஐ உபயோகிக்கலாம். அந்த செயலானது தற்காலிகமானதாகவோ அல்லது முடிவு பெறாததாகவோ இருக்கலாம்
Examples
- I have been working here since 2000. (I still work here). – நான் 2000 ஆம் ஆண்டு முதல் இங்கு வேலை செய்கிறேன். (இப்போதும் செய்கிறேன்.)
- He has been working here for 12 years. (He still works here). – அவன் 12 வருடங்களாக இங்கு பணி புரிகிறான்.
Prefix & suffix, Active & passive மற்றும் Articles பற்றி அறிய
Prefix and suffix in Tamil with examples
The Present Perfect Continuous Tense Form:
ஒரு present prefect continuous tense ஆனது எப்படி இருக்கும் அதன் வாக்கிய அமைப்பு எப்படி இருக்கும் என்பதை காணலாம். இங்கு நாம் have been அல்லது has been ஐ உபயோகிப்போம். மேலும் present participle வினைச்சொல்லை உபயோகிப்போம். இதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த tense இன் கீழ் வருகிறது என்பதை எளிதாக கண்டறியலாம்.
Subject + have been / has been + verb + ing
I / We / You / They + have + been + verb + ing
He / She / It / Name + has + been + verb + ing
Example :
1. I have been eating bananas for an hour. (I started to eat one hour ago and am still eating)
நான் ஒரு மணி நேரமாக வாழைப்பழங்களை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஆரம்பித்தேன், இப்பொழுது வரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்).
2. He has been eating bananas since 3 a.m. (He started to eat at 3 am and is still eating now.)
அவன் காலை 3 மணியில் இருந்து வாழைப்பழங்களை சாப்பிடுகின்றான். (காலை 3 மணிக்கு சாப்பிட ஆரம்பித்து இப்போது வரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான்).
The Present Perfect Continuous Negative form :
Present prefect continuous tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்ற நாம் have been அல்லது has been க்கு நடுவே not ஐ சேர்க்க வேண்டும். அதாவது have not been அல்லது has not been என்பதை மாற்றியமைத்தல் அது எதிர்மறை வாக்கியமாகி விடும்.
I / We / You / They + have + not + been + verb + ing
He / She / It / Name + has + not + been + verb + ing
Examples :
1. I have not been eating bananas for an hour.
நான் ஒரு மணி நேரமாக வாழைப்பழங்களை சாப்பிடவில்லை.
2. He has not been eating bananas since 3 a.m.
அவன் காலை 3 மணியில் இருந்து வாழைப்பழங்களை சாப்பிட்டவில்லை.
The Present Perfect Continuous Interrogative form:
நாம் present prefect continuous tense ஐ வினா வாக்கியமாக மாற்ற have அல்லது has ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து மற்ற வார்த்தைகளை அதன்அதன் இடங்களில் வைக்கும்போது அந்த வாக்கியம் வினா வாக்கியமாக மாறும்.
Have + I / We / You / They + been + verb + ing.
Has + He / She / It / Name + been + verb + ing
Examples
1. Have I been eating bananas for an hour? – நான் ஒரு மணி நேரமாக வாழைப்பழங்களை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேனா?
2. Has he been eating bananas since 3 a.m.? – அவன் காலை 3 மணியில் இருந்து வாழைப்பழங்களை சாப்பிடுகின்றானா?
மேலே குறிபிட்டுள்ள 4 வகைகளும் அவற்றின் முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றினைப் பற்றி முழுவதும் அறிய இதை படிக்கவும். இதில் எங்கு உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகிக்க வேண்டும், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
4 types of present tense in Tamil with examples
The Past Tense
The simple past tense:
ஒரு செயலானது இறந்த காலத்தில் நடைபெற்றது என குறிப்பிட Simple Past Tense உதவுகிறது.
கதைகளில் நடக்கும் விசயங்களை பற்றி கூற நாம் simple past tense ஐ உபயோகிப்போம்.
Examples :
- I opened the door. – நான் கதவை திறந்தேன்.
- He reached home earlier. – அவன் வீட்டுக்கு முன்னதாகவே வந்தான்.
The simple past form:
Simple past form ஆனது past verb எனப்படும் இறந்த கால வினைச்சொல்லை கொண்டு இருக்கும். அந்த இறந்த கால வினைச்சொல்லை நாம் did + present verb என எழுதலாம்.
Subject + past verb or Subject + did + present verb
I / we / you / they / he / she / it / name + did + present verb or
I / we / you / they / he / she / it / name + verb + ed.
Examples
- I ate a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டேன்.
- He ate a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டான்.
The simple past negative form
simple past tense ஐ எதிர்மறையாக மாற்ற did உடன் நாம் not ஐ சேர்த்து வாக்கியத்தை மாற்றினால் போதும். ந்த வாக்கியமானது எதிர்மறையாக மாறும்.
I / we / you / they / he / she / it / name + did + not + present verb
Examples
- I did not eat a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
- He did not eat a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
The simple past question form
simple past tense ஐ வினா வாக்கியமாக மாற்ற நாம் subject க்கு முன்னால் did ஐ கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறியை இட வேண்டும்.
Did + I / we / you / they / he / she / it / name + verb?
- Did I eat a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டேனா?
- Did he eat a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிட்டானா?
The Past Continuous Tense
ஒரு செயலானது இறந்த காலத்தில் குறிப்பிட நேரத்தில் நடந்து கொண்டு இருந்தது (actions that were going on at a certain time in the past) என குறிப்பிட the past continuous tense பயன்படுகிறது.
Example
I was watching television. – நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
இறந்த காலத்தில் ஒரு குறிப்பிட செயல் நடந்து முடிந்த பொது மற்றொரு செயல் நடந்து கொண்டு இருந்தது என்பதைக் குறிப்பிட past continuous tense பயன்படுகிறது.
Example
Haran was doing his homework when the phone rang.
கரன் வீட்டுப்பாடம் செய்துகொண்டு இருந்தபோது தொலைபேசி அடித்தது.
The Past Continuous Form
ஒரு வாக்கியத்தை பார்த்து அது எப்படி past continuous tense வாக்கியம் என்பதை கண்டறிய அதன் அமைப்பை அறிவது அவசியம். இங்கு was அல்லது were உபயோகிப்போம். வினைச்சொல்லுடன் ing ஐ உபயோகிப்போம்.
Subject + was / were + verb + ing
I + was + verb + ing
He / She / it / name + was + verb + ing
We / you / they + were + verb + ing
Examples
- I was eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.
- He was eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
- They were going to a party. – அவர்கள் விருந்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.
The Past Continuous Negative form
Past continuous tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்ற நாம் was அல்லது were துணை வினைச் சொல்லுடன் not என்பதை சேர்க்க வேண்டும். வேறு எந்த சொல்லையோ, குறியீடுகளையோ சேர்க்க வேண்டியது இல்லை.
I + was + not + verb + ing
He / She / it / name + was + not + verb + ing
We / you / they + were + not + verb + ing
Examples
- I was not eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
- He was not eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
The Past Continuous Interrogative form
ஒரு past continuous tense ஐ வினா வாக்கியமாக மாற்றுவது மேல் கூறிய மற்ற எடுத்துக்காட்டுகளை போன்றே ஆகும். அதாவது இதன் துணை வினைச்சொற்களை was அல்லது were ஐ subject க்கு முன்னாள் கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறியினை குறிப்பிட்டால் போதும். வாக்கியம் வினா வாக்கியமாக மாறிவிடும்.
Was + I + verb + ing?
Was + He / She / it / name + not + verb + ing?
Were + We / you / they + not + verb + ing?
Examples
- Was I eating a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டேனா?
- Was he eating a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிட்டானா?
The Past Perfect Tense
இரண்டு இறந்த கால நிகழ்வுகளை குறிப்பிடும் போது எந்த நிகழ்வு முன்னால் நடந்தது என்பதை குறிப்பிட இந்த Past Perfect Tense உதவுகிறது.
Examples
1. I had eaten a banana when he came to my room.
அவன் என் அறைக்கு வந்த போது வாழைப்பழம் சாப்பிட்டு இருந்தேன்.
செயல் 1 என் அறைக்கு வருதல்
செயல் 2 சாப்பிடுதல்
செயல் 2 ஆனது முதலில் நிகழ்ந்து முடிந்து விட்டது, அதே போல் செயல் 1 ஆனது அதற்கு பின்னால் நிகழ்ந்தது.
2. He had completed his work before I arrived at the office.
நான் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே அவன் தன் வேலையை முடித்துவிட்டான்.
நாம் just ஐ உபயோகித்து அந்த செயலானது இப்போது தான் முடிந்தது என்பதை குறிப்பிட பயன்படுத்தலாம்.
Examples
The train had just left when I arrived at the station.
நான் ஸ்டேஷன்க்கு வந்த போது ரயில் கிளம்பியிருந்தது.
The Past Perfect Form:
Past perfect tense ஆனது had என்ற துணை வினைச்சொல்லை பெற்றிருக்கும். வினைச்சொல்லானது past participle ஐ கொண்டு இருக்கும். இதன் வாக்கிய அமைப்பானது present perfect tense ஐ போன்று இருக்கும். ஆனால் அங்கு have அல்லது has ஐ உபயோகித்திருப்போம். இங்கு had என்பதை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
Subject + had + Past Participle.
I / We / You / They / He / She / It / Name + had + Past Participle.
Examples
- I had dinner. – நான் இரவு உணவை சாப்பிட்டுவிட்டேன்.
- I had eaten a banana. – நான் வாழைப்பழம் சாப்ப்பிட்டிருந்தேன்.
- He had eaten a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டிருந்தான்.
The Past Perfect Negative form:
Past perfect tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்றுவது மிகவும் எளிமையானது. மேலே நாம் மற்ற tenses க்கு பார்த்தது போலவே துணை வினைச்சொல்லுடன் not ஐ சேர்த்தால் போதும். இங்கு நாம் had உடன் not ஐ சேர்த்து எதிர்மறை வாக்கியமாக மாற்றலாம்.
Subject + had + not + Past Participle.
I / We / You / They / He / She / It / Name + had + Not + Past Participle.
Examples
- I had not eaten a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
- He had not eaten a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
The Past Perfect Interrogative form:
நாம் Past perfect tense ஐ வினா வாக்கியமாக மாற்றுவது மிக எளிமையானது. துணை வினைச்சொல்லான had ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் மற்ற வகை tenses க்கு பார்த்தது போலவே வினா குறியினை உபயோகித்தால் போதுமானது.
Had + Subject + Past Participle?
Had + I / We / You / They / He / She / It / Name + Past Participle?
Examples
- had I eaten a banana? – நான் வாழைப்பழம் சாப்பிடேனா?
- had he eaten a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிடானா?
The Past Perfect Continuous Tense
ஒரு செயலானது இறந்த காலத்தில் ஆரம்பித்து அதே இறந்த காலத்தில் குறிப்பிட நேரம் வரை தொடர்ந்து நடக்கும்போது அதனை குறிப்பிட Past Perfect Continuous Tense உதவுகிறது.
The Past Perfect Continuous Form
Past perfect continuous tense ஆனது had been என்ற துணை வினைச்சொல்லுடன் present participle verb ஆனது வரும். அதாவது வினைச்சொல்லுடன் ing ஆனது சேர்ந்து வரும். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்.present perfect continuous tense க்கும் இதே போலவே வாக்கிய அமைப்பு இருக்கும். ஆனால்had been க்கு பதிலாக have been அல்லது has been ஐ உபயோகிப்போம்.
Subject + had + Been + Verb + ing
I / We / You / They / He / She / It / Name + had + been + verb + ing
Examples
- I had been eating a banana when my friend called me.- என் நண்பர் என்னை அழைத்தபோது நான் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.
- He had been working. – அவன் வேலை செய்து கொண்டு இருந்தான்.
The Past Perfect Continuous Negative form
Past perfect continuous tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்ற நாம் had க்கும் been க்கும் நடுவே not என்பதனை சேர்த்தால் போதும். அந்த குறிப்பிட்ட வாக்கியமானது எதிர்மறை வாக்கியமாக மாறும்.
Subject + Had + not + Been + Verb + ing
I / We / You / They / He / She / It / Name + had + not + been + verb + ing
Examples
- I had not been eating a banana, when my friend called me. – என் நண்பர் என்னை அழைத்தபோது நான் வாழைப்பழம் சாப்பிடவில்லை.
- He had not been working. – அவன் வேலை செய்யாமல் இருந்தான்.
The Past Perfect Continuous Interrogative Form
நாம் ஒரு Past perfect continuous tense ஐ வினா வாக்கியமாக மாற்ற had ஐ மட்டும் subject க்கு முன்னாள் கொண்டு வர வேண்டும். மேலும் been ஆனது அதே இடத்தில இருக்க வேண்டும். வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறியினை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வினா வாக்கியமாக மாற்றலாம்.
Had + Subject + been + verb + ing?
Had + I / We / You / They / He / She / It / Name + been + verb + ing?
Examples
- Had I been eating a banana when my friend called me? – என் நண்பர் என்னை அழைத்தபோது நான் வாழைப்பழம் சாப்பிட்டுகொண்டு இருந்தேனா?
- Had he been working? – அவன் வேலை செய்துகொண்டு இருந்தானா?
மேலே கூறிய 4 வகை past tense உம் அவற்றின் முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி முழுவதும் அறிய கீழே உள்ள லிங்க்கை படிக்கவும். இதில் எவ்வாறு உபயோகிக்க வேண்டும், எங்கு, எந்த சூழ்நிலையில் உபயோகிக்க வேண்டும், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
All 4 past tenses in Tamil with examples
Future Tense:
எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை குறிக்க இந்த future tense ஆனது உதவுகிறது. இவை நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி ஒவ்வொன்றாக காண்போம்.
The simple future tense:
ஒரு செயலானது எதிர்காலத்தில் நடப்பதைக் குறிப்பிட simple future tense உதவுகிறது.
simple future tense இல் நாம் எதிர்காலத்தில் தொடங்கி எதிர்காலத்தில் முடியும் செயல்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
Examples
I will go to work.
நான் வேலைக்கு போவேன்.
The simple future form
Simple future tense வாக்கியமானது shall அல்லது will எனும் துணை வினைச்சொல்லை பெற்று இருக்கும். நாம் சாதாரண வினைச்சொல்லை இங்கு உபயோகிப்போம்.
Subject + Shall / will + verb.
I / We + Shall + verb
He / She / It / Name + Will + verb
Examples
- I shall/will eat a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடுவேன்.
- He will eat a banana. – அவன் வாழைப்பழத்தை சாப்பிடுவான்.
The simple future negative form
ஒரு Simple future tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்ற துணை வினைச்சொல்லான will அல்லது shall உடன் நாம் not ஐ சேர்த்தால் போதும். அந்த simple future tense ஆனது எதிர்மறையாக மாறும்.
I / We + Shall + not + verb
He / She / It / Name + Will + verb
Examples
- I shall not / will not eat a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட மாட்டேன்.
- He will not eat a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட மாட்டான்.
The simple future interrogative form
நாம் மற்ற வகை tense களை எப்படி வினா வாக்கியமாக மாற்றினோமோ அதே போல் தான் இந்த Simple future tense க்கும் மாற்றுவோம். shall அல்லது will ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறியினை உபயோகிக்க வேண்டும்.
Shall + I / we + Verb?
Will + He / She / It / Name + verb?
Examples
- Shall / will I eat a banana? – நான் வாழைப்பழம் சாப்பிடுவேனா?
- Will he eat a banana? – அவன் வாழைப்பழத்தை சாப்பிடுவானா?
Going to
“going to.” ஆனது எதிர்கால செயல்களை அல்லது நிகழ்வுகளை பற்றி பேச உதவுகிறது.
Example
I am going to watch a movie with my friend.
Going to form
இதன் வாக்கிய அமைப்பு பார்க்க present continuous tense போல இருக்கும். ஆனால், நாம் இங்கு going to என்பதை துணை வினைச்சொற்களான am, is ,are க்கு அடுத்து உபயோகிப்போம். இங்கு verb ஐ மட்டும் உபயோகிப்போம். verb உடன் ing சேர்ந்து வராது.
Subject + am / is / are + going to + verb + object.
I + am + going to + verb + object
We / you / they + are + going to + verb + object.
he / she / it / name + is + going to + verb + object.
Examples
- I am going to eat a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடப் போகிறேன்.
- He is going to eat a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடப் போகிறான்.
Going to negative form
Going to வாக்கியங்களை எதிர்மறை வாக்கியங்களா மாற்றுவது மிகவும் எளிமையானது. துணை வினைச்சொற்களான am, is, are க்கு அடுத்து not என்பதனை உபயோகித்தால் போதுமானது.
I + am + not + going to + verb + object
We / you / they + are + not + going to + verb + object.
he / she / it / name + is + not + going to + verb + object.
- I am not going to eat a banana. – நான் வாழைப்பழம் சாப்பிடப் போவதில்லை.
- He is not going to eat a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிடப் போவதில்லை.
Going to interrogative form
ஒரு Going to வாக்கியத்தை வினா வாக்கியமாக மாற்ற நாம் துணை வினைச்சொற்களான am, is, are ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறியினை உபயோகிக்க வேண்டும்.
am + I + going to + verb + object?
are + We / you / they + going to + verb + object?
is + he / she / it / name + going to + verb + object?
- Am I going to eat a banana? – நான் வாழைப்பழம் சாப்பிடப் போகிறேனா?
- Is he going to eat a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிடப் போகிறானா?
குறிப்பு
நாம் முன்பு பார்த்தது போல எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட நாம் simple present tense ஐ உபயோகிப்போம்.
Examples
The new supermarket opens tomorrow. – புதிய பல்பொருள் அங்காடி நாளை திறக்கப்படுகிறது.
The Future Continuous Tense
எதிர்காலத்தில் ஒரு செயலானது தொடங்கி அது குறிப்பிட்ட காலம் வரை நிகழ்வதைக் (when an event starts in the future and continues for a certain period of time) குறிப்பிட Future Continuous Tense உதவுகிறது.
Examples
I will be working at 10 a.m. – நான் காலை பத்து மணிக்கு வேலை செய்வேன்.
The Future Continuous Form
ஒரு future continuous tense வாக்கியமானது shall be அல்லது will be என்ற துணை வினைச்சொற்களை பெற்று இருக்கும். மேலும் வினைச்சொல்லானது present participle ஆக வரும். அதாவது வினைச்சொல்லுடன் ing சேர்ந்து வரும்.
Subject + shall be / will be + verb +ing + object.
I / we + shall be + verb + ing + object
You / they / he / she / it / name + will be + verb + ing + object
Examples
- I shall be eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பேன்.
- He will be eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பான்.
The Future Continuous Negative form
நாம் future continuous tense ஐ எதிர்மறை வாக்கியமாக மாற்ற shall be மற்றும் will be க்கு நடுவே not ஐ சேர்த்தால் போதும். அதாவது shall not be மற்றும் will not be என இருக்கும்.இவ்வாறு மாற்றுவதன் மூலம் அந்த வாக்கியமானது எதிர்மறையாக மாறும்.
I / we + shall + not + be + verb + ing + object
You / they / he / she / it / name + will + not + be + verb + ing + object
Examples
- I shall not be eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்க மாட்டேன்.
- He will not be eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்க மாட்டான்.
The Future Continuous Interrogative form
shall மற்றும் will ஐ subject க்கு முன்னால் கொண்டு வந்து be ஐ அதனுடைய இடத்திலேயே வைத்து, வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறியினை இட்டால் போதும். அந்த வாக்கியமானது வினா வாக்கியமாக மாறும்.
Shall + I / we + be + verb + ing + object?
Will + You / they / he / she / it / name + be + verb + ing + object?
Examples
- Shall/will I be eating a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பேனா?
- Will he be eating a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பானா?
The Future Perfect Tense
ஒரு செயலானது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்து முடிந்திருக்கும் (situation that will be completed between now and some point in the future) என கூறும் இடங்களில் the future perfect tense உதவுகிறது.
Examples
No, It will not work. I will have left already.
Think about this situation. At 9 a.m. in the morning, you ask your girlfriend to meet your mom now, and she says she has some work and comes home at 11 a.m. My mom will be at the temple at 11 a.m. So you can say to your girlfriend,
No, it will not work. She will have already left for the temple.
இல்லை, அது வேலை செய்யாது. நான் ஏற்கனவே கிளம்பியிருப்பேன்.
காலை 9 மணிக்கு உங்கள் காதலியிடம் உங்கள் அம்மாவை பார்க்க வருமாறு அழைக்கிறீர்கள். ஆனால் அவரோ எனக்கு வேலை இருக்கிறது நான் 11 மணிக்கு சந்திக்கிறேன் என கூறுகிறாள். ஆனால் 11 மணிக்கு உங்கள் அம்மா கோவிலுக்கு சென்று இருப்பார். அப்போது நீங்கள் இந்த The Future Perfect Tense ஐ பயன்படுத்தி பதில் அளிக்கலாம்.
The Future Perfect Tense Form
Future perfect tense வாக்கியத்தில் shall have அல்லது will have இருக்கும். இங்கு நாம் past participle வினைச்சொல்லை உபயோகிப்போம். இந்த இரண்டினைக்கொண்டு நாம் இந்த வாக்கியமானது future perfect tenseஎன கண்டறியலாம்.
Subject + shall have / will have + past participle + object
I / we + shall have / will have + past participle + object
You / they / he / she / it / name + will have + past participle + object
Examples
- I shall / will have eaten a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பேன்.
- He will have eaten a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பான்.
The Future Perfect Negative form
நாம் ஒரு future perfect tense வாக்கியத்தினை எதிர்மறை வாக்கியமாக மாற்ற நாம் shall have மற்றும் will have க்கு இடையே not என்பதனை உபயோகிப்போம். அதாவது shall not have மற்றும் will not have என வரும். இதன்மூலம் அந்த வாக்கியமானது எதிர்மறை வாக்கியமானதாக மாறும்.
I / we + shall / will + not + have + past participle + object
You / they / he / she / it / name + will + not + have + past participle + object
Examples
- I will not have eaten a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்க மாட்டேன்.
- She will not have eaten a banana. – அவள் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்க மாட்டாள்.
The Future Perfect Interrogative form
நாம் மேலே மற்ற tense களை போலவே இங்கும் துணை வினைச்சொல்லான shall அல்லது will ஐ மட்டும் subject க்கு முன்னால் கொண்டு வருவோம். have ஆனது அதே இடத்தில் இருக்கும். மற்ற வகை வினா வாக்கியங்களை போலவே இதற்கும் நாம் வினா குறியினை வாக்கியத்தின் இறுதியில் தர வேண்டும்.
Shall / will + I / we + have + past participle + object?
Will + You / they / he / she / it / name + have + past participle + object?
Examples
- Will I have eaten a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பேனா?
- Will she have eaten a banana? – அவள் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பாளா?
Future Perfect Continuous Tense
ஒரு செயலானது எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரம் வரை நீடிக்கும் என குறிப்பிட future perfect continuous tense உதவுகிறது.
அந்த செயலானது நிகழ் காலத்திலோ, இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ கூட தொடங்கி இருக்கலாம். ஆனால், அந்த செயலானது எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரம் வரை நீடித்து இருக்க வேண்டும்.
Examples
- I will have been learning grammar for two weeks. – நான் இரண்டு வாரங்கள் இலக்கணம் கற்றுக்கொண்டு இருப்பேன்.
- He will have been waiting for the last three hours. – அவன் கடைசி மூன்று அணி நேரங்கள் காத்துக்கொண்டு இருப்பான்.
Future Perfect Continuous Form
ஒரு வாக்கியத்தில் will have been அல்லது shall have been ஆகியவை இருந்து வினைச்சொல்லானது present participle ஆக இருப்பின் அந்த வாக்கியமானது கண்டிப்பாக future perfect continuous tense ஆக இருக்கும்.
Subject + shall / will + have + been + verb + ing + time reference.
I / We + shall / will + have + been + verb + ing
You / They / He / She / It / Name + have + been + verb + ing
Examples
- I will have been eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பேன்.
- He will have been eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பான்.
Future Perfect Continuous Negative form
நாம் இந்த future perfect continuous tense வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற shall have அல்லது will have மற்றும் been க்கு இடையே not ஐ சேர்த்தால் போதும். வெரி எந்த ஒரு சொல்லையோ அல்லது குறியீடுகளையோ சேர்க்கவோ அல்லது நீக்கவோ வேண்டியது இல்லை.
I / We + shall + have + not + been + verb + ing.
You / They / He / She / It / Name + will + have + not + been + verb + ing.
Examples
- I will not have been eating a banana. – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்க மாட்டேன்.
- He will not have been eating a banana. – அவன் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்க மாட்டான்.
Future Perfect Continuous Interrogative form
நாம் ஒரு future perfect continuous tense வாக்கியத்தினை வினா வாக்கியமாக மாற்ற will அல்லது shall ஐ subject இந்த முன்னாள் கொண்டு வந்து பின் வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறியாய் சேர்த்தால் போதும்.
Will + I / We / You / They / He / She / It / Name + have + been + verb + ing?
Examples
- Will I have been eating a banana? – நான் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பேனா?
- Will he have been eating a banana? – அவன் வாழைப்பழம் சாப்பிட்டு இருப்பானா?
மேலே கூறிய 4 வகை future tense உம் அவற்றின் சுருக்கமான விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி முழுவதும் அறிய கீழே உள்ள லிங்க்கை படிக்கவும். இதில் எங்கு, எந்த சூழ்நிலையில், எப்படி உபயோகிக்க வேண்டும், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Conclusion
இந்த பதிவில் tense என்றால் என்ன, அதன் வகைகள், அதன் அமைப்பு, எப்படி எதிர்மறை மற்றும் வினா வகை வாக்கியமாக மாற்ற என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி விவரிக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு tense பற்றிய நல்ல புரிதலைத் தரும் என நம்புகிறேன்.
உங்களுக்கு tense இல் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அதனை comment இல் பதிவிடுங்கள். . உங்கள் சந்தேகங்களை நங்கள் தீர்க்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்கள் கருத்துக்களை comment இல் பதிவிடுங்கள். இது எங்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளை இன்னும் சிறப்பாக பதிவிட உதவும்.
நன்றி! அன்புகளும் வாழ்த்துக்களும்!
Very good excellent Sir
Thanks MariMuthu Sir. please feel free to share our content with anyone you know who could need it.
Clearly explained. Thanks sir.
Thanks Divya Mam. Please feel free to forward our content to anybody you know who could benefit from it.
Sir,
For me, It’s an absolutely an session.
I’m taking many examples from your explanations.
Thanks a lot.
Thanks Surendhar Rangaswamy sir. Please feel free to check out our other articles and forward our content to anyone you know who could benefit from it.