All 4 past tenses in Tamil with examples

Home Advanced Grammar All 4 past tenses in Tamil with examples

Learn past tense in Tamil நாம் இந்த பதிவில் 4 வகையான past tenses பற்றியும், அவற்றின் பயன்பாடு, எங்கு, எப்படி, எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காண்போம்.

past tense ஆனது இறந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிட உபயோகப்படுத்துவோம். இது நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

  1. The Simple Past Tense
  2. The Past Continuous Tense
  3. The Past Perfect Tense
  4. The Past Perfect Continuous Tense

Table of Contents

The Simple Past Tense

the simple past tense with examples

ஒரு செயலானது இறந்த காலத்தில் நடைபெற்றது என குறிப்பிட Simple Past Tense உதவுகிறது.

கதைகளில் நடக்கும் விசயங்களை பற்றி கூற பயன்படுகிறது.

பெரும்பாலான இறந்தகால வினைச்சொற்கள், d அல்லது ed கொண்டு முடியும்.

Past verb = did + present verb.

Examples of the simple past tense

  1. I bought a new phone yesterday. – நான் நேற்று ஒரு புது கைபேசி வாங்கினேன்.
  2. She learned to drive quickly. – அவள் வாகனம் ஓட்ட விரைவாக கற்றுக்கொண்டாள்.
  3. He practiced very hard. – அவன் கடினமாக பயிற்சி செய்தான்.

Signal words of the simple past tense

கீழே உள்ளது போன்ற வார்த்தைகளை நாம் பொதுவாக simple past tense இல் காணலாம்.

  1. Last – கடந்த
  2. Ago in – முன்பு 
  3. Yesterday  – நேற்று.

The simple past tense formula & Examples in Tamil

Subject + past verb or Subject + did + present verb

Subject did past verb
I / we / You / They
didpast verb
He / She / It / Name didpast verb

Examples

  1. I cooked food for my family yesterday, or I did cook food for my family yesterday.  – நேற்று நான் என்னுடைய குடும்பத்திற்கு உணவு சமைத்தேன். 
  2. We played football yesterday. – நேற்று நாங்கள் கால்பந்து விளையாண்டோம்.
  3. You prayed at a temple yesterday. – நேற்று நீ கோவிலில் பிராத்தனை செய்தாய்.
  4. They wished me on my birthday. – அவர்கள் என்னுடைய பிறந்தநாளின் போது வாழ்த்து தெரிவித்தனர்.
  5. He washed his clothes. – அவன் அவனுடைய துணிகளை துவைத்தான்.
  6. She went to school. – அவள் பள்ளிக்கு சென்றாள்.
  7. It worked very well compared to other plans. – மற்ற திட்டங்களை விட இந்த திட்டம் நன்றாக வேலை செய்தது.
  8. Haran watched the whole series two days ago. – இரண்டு நாட்களுக்கு முன்பு கரன் முழு தொடரையும் பார்த்தான்.

The simple past negative formula

Subject + did + not + present verb

Subject did not past verb
I / we / You / They
did notpast verb
He / She / It / Name did notpast verb

Examples of the simple past negative form

  1. I did not cook food for my family yesterday. – நேற்று நான் என்னுடைய குடும்பத்திற்கு உணவு சமைக்கவில்லை. 
  2. We did not play football yesterday. – நேற்று நாங்கள் கால்பந்து விளையாடவில்லை.
  3. You did not pray at a temple yesterday. – நேற்று நீ கோவிலில் பிராத்தனை செய்யவில்லை.
  4. They did not even wish me on my birthday. – அவர்கள் என்னுடைய பிறந்தநாளின் போது கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
  5. He did not wash his clothes. – அவன் அவனுடைய துணிகளை துவைக்கவில்லை.
  6. She did not go to school. – அவள் பள்ளிக்கு செல்லவில்லை.
  7. It did not work very well compared to other plans. – மற்ற திட்டங்களை விட இந்த திட்டம் நன்றாக வேலை செய்யவில்லை.
  8. Haran did not watch the whole series two days ago. – இரண்டு நாட்களுக்கு முன்பு கரன் முழு தொடரையும் பார்க்கவில்லை.

The simple past interrogative formula

Did + I / we / you / they / he / she / it / name + past verb

didSubject verb
didI / we / You / Theyverb
didHe / She / It / Nameverb

Examples

  1. Did I cook food for my family yesterday? – நேற்று நான் என்னுடைய குடும்பத்திற்கு உணவு சமைத்தேனா?
  2. Did we play football yesterday? – நேற்று நாங்கள் கால்பந்து விளையாண்டோமா?
  3. Did you pray at a temple yesterday?. – நேற்று நீ கோவிலில் பிராத்தனை செய்தாயா?
  4. Did they wish me on my birthday? – அவர்கள் என்னுடைய பிறந்தநாளின் போது வாழ்த்து தெரிவித்தனரா?
  5. Did he wash his clothes? – அவன் அவனுடைய துணிகளை துவைத்தானா?
  6. Did she go to school? – அவள் பள்ளிக்கு சென்றாளா?
  7. Did it work very well compared to other plans? – மற்ற திட்டங்களை விட இந்த திட்டம் நன்றாக வேலை செய்ததா?
  8. Did Haran watch the whole series two days ago? – இரண்டு நாட்களுக்கு முன்பு கரன் முழு தொடரையும் பார்த்தானா?

சுருக்க சொல்

  • Did + not = Didn’t

Exercises for the simple past tense

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைக்கொண்டு வினாவாக்கியம் மற்றும் எதிர்மறை வாக்கியங்களை அமைத்து பயிற்சி எடுக்கவும்.

  1. I played cricket.
  2. We watched the movie.
  3. You slept very well.
  4. They tried to figure out the issue.
  5. He paid the bill already.
  6. She completed her education last year.
  7. It made me happy.
  8. Haran worked at an IT company.

The Past Continuous Tense in Tamil

ஒரு செயலானது இறந்த காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நடந்து கொண்டு இருந்தது என குறிப்பிட the past continuous tense பயன்படுகிறது.

the past continuous tense with examples in tamil

இறந்த காலத்தில் ஒரு குறிப்பிட செயல் நடந்து முடிந்த பொது மற்றொரு செயல் நடந்து கொண்டு இருந்தது என்பதைக் குறிப்பிட  past continuous tense பயன்படுகிறது.

the past continuous tense இல் நாம் was and were உபயோகிக்கிறோம்.

Examples of the past continuous tense in Tamil

  1. I was traveling to Chennai. – நான் சென்னைக்கு சென்றுகொண்டு இருந்தேன்.
  2. He was talking to me when you called him.  – நீ அவனை அழைத்தபோது அவன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

The Past Continuous Tense Formula & Examples in Tamil

 Subject + was / were + verb + ing.

Subject was / were verb + ing
Iwas verb + ing
we / You / Theywere verb + ing
He / She / It / Name was verb + ing

Examples of the past continuous tense

  1. I was wondering how beautiful she is. – அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று வியந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்.
  2. We were trying to escape from the place. – நாங்கள் அந்த இடத்தில இருந்து தப்பிக்க முயற்சித்துக்கொண்டு இருந்தோம்.
  3. You were sending a message when I slept. – நான் தூங்கிக்கொண்டு இருந்த போது நீ எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பிக்கொண்டு இருந்தாய்.
  4. They were praying unconditionally to God. – மிக ஆழமாக கடவுளிடம் அவர்கள் வேண்டிக்கொண்டு இருந்தனர்.
  5. He was searching for the ball. – அவன் பந்தை தேடிக்கொண்டு இருந்தான்.
  6. She was enjoying the whole trip. – அவள் இந்த முழு பயணத்தையும் மகிழ்ச்சியாக உணர்ந்திருந்தாள்.
  7. It was biting me continuously. – அது என்னை தொடர்ந்து கடித்துக்கொண்டே இருந்தது.
  8. Haran was driving the car when I crossed him. – நான் அவனை கடக்கும்போது கரன் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான்.

The Past Continuous Negative Formula

 Subject + was / were + not + verb + ing.

Subject was not / were not verb + ing
Iwas not verb + ing
we / You / Theywere not verb + ing
He / She / It / Name was not verb + ing

Examples of the past continuous negative form

  1. I was not wondering how beautiful she is. – அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று வியந்து பார்க்கவில்லை.
  2. We were not trying to escape from the place. – நாங்கள் அந்த இடத்தில இருந்து தப்பிக்க முயற்சிக்கவில்லை..
  3. You were not sending a message when I slept. – நான் தூங்கிக்கொண்டு இருந்த போது நீ எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பவில்லை.
  4. They were not praying unconditionally to God. – மிக ஆழமாக கடவுளிடம் அவர்கள் வேண்டிக்கொள்ளவில்லை.
  5. He was not searching for the ball. – அவன் பந்தை தேடவில்லை.
  6. She was not enjoying the whole trip. – அவள் இந்த முழு பயணத்தையும் மகிழ்ச்சியாக இல்லை.
  7. It was not biting me continuously. – அது என்னை தொடர்ந்து கடிக்கவில்லை.
  8. Haran was not driving the car when I crossed him. – நான் அவனை கடக்கும்போது கரன் கார் ஓட்டவில்லை.

The Past Continuous Interrogative Formula

was / were + Subject + verb + ing.

was / were Subject verb + ing
was I verb + ing
werewe / You / They verb + ing
wasHe / She / It / Name verb + ing

Examples of the past continuous interrogative form

  1. Was I wondering how beautiful she is? – அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று வியந்து பார்த்துக்கொண்டு இருந்தேனா?
  2. Were we trying to escape from the place? – நாங்கள் அந்த இடத்தில இருந்து தப்பிக்க முயற்சித்துக்கொண்டு இருந்தோமா?
  3. Were we sending a message when I slept? – நான் தூங்கிக்கொண்டு இருந்த போது நீ எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பிக்கொண்டு இருந்தாயா?
  4. Were they praying unconditionally to God? – மிக ஆழமாக கடவுளிடம் அவர்கள் வேண்டிக்கொண்டு இருந்தனரா?
  5. Was he searching for the ball? – அவன் பந்தை தேடிக்கொண்டு இருந்தானா?
  6. Was she enjoying the whole trip? – அவள் இந்த முழு பயணத்தையும் மகிழ்ச்சியாக உணர்ந்திருந்தாளா?
  7. Was it biting me continuously? – அது என்னை தொடர்ந்து கடித்துக்கொண்டே இருந்ததா?
  8. Was Haran driving the car when I crossed him? – நான் அவனை கடக்கும்போது கரன் கார் ஓட்டிக்கொண்டு இருந்தானா?

வார்த்தை சுருக்கங்கள்

  • was not-wasn’t
  • were not-weren’t

The Past Continuous Tense Exercises

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைக்கொண்டு வினாவாக்கியம் மற்றும் எதிர்மறை வாக்கியங்களை அமைத்து பயிற்சி எடுக்கவும்.

  1. I was cleaning the room.
  2. We were fighting in the corner.
  3. You were singing the song.
  4. They were scolding the old man.
  5. He was waiting for the bus.
  6. She was completing her task.
  7. It was moving when I crossed it.
  8. Haran was sleeping when I called him.

Prefix and suffix, Voice, Conjunctions, Preposition, Articles பற்றி அறிய

Prefix and suffix in Tamil with examples

Active and Passive voice in Tamil

Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil

Preposition with examples in Tamil

Articles & its types in Tamil with examples

The Past Perfect Tense in Tamil

இரண்டு இறந்த கால நிகழ்வுகளை குறிப்பிடும் போது எந்த நிகழ்வு முன்னால் நடந்தது என்பதை குறிப்பிட இந்த Past Perfect Tense உதவுகிறது.

past perfect tense with examples in tamil

பெரும்பாலும் ஒரு வாக்கியமானது  simple past லும் மற்றொருவாக்கியம் past perfect உம் வரும்.

நாம் just ஐ உபயோகித்து அந்த செயலானது இப்போது தான் முடிந்தது என்பதை குறிப்பிட பயன்படுத்தலாம்.

Examples of the past perfect tense in Tamil

1. Haran had gone out when I arrived at the home.

நான் வீட்டுக்கு வந்த பொது கரன் வெளியே சென்றிருந்தான்.

Haran had gone out இது past perfect tense.

I arrived at the home இது Simple past tense.

2. I had saved my document before the computer crashed.

கணினி பழுதாகும் முன்பே நான் என்னுடைய கோப்பை சேமித்துவிட்டேன்.

I had saved my document – past perfect tense.

Before the computer crashed – Simple past tense.

The past perfect tense formula & Examples in Tamil

Subject + had + Past Participle.

Subject hadPast Participle
IhadPast Participle
we / You / TheyhadPast Participle
He / She / It / Name hadPast Participle

Examples

  1. I had just completed my task. – நான் என்னுடைய வேலையை முடித்து இருந்தேன்.
  2. We had watched the series when you left home. – நீ வீட்டைவிட்டு வெளியே சென்ற போது, நாங்கள் தொடரை பார்த்தோம்.
  3. You had slept well. – நீ நன்றாக தூங்கினாய்.
  4. They had lived in the same house. – அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
  5. He had left the meeting when you called him. – நீ அவனை கூப்பிட்டபோது அவன்கூட்டதிலிருந்து கிளம்பிவிட்டான்.
  6. She had gone to work when I reached home. – நான் வீட்டுக்கு வந்த போது, அவள் வேலைக்கு சென்றிருந்தாள்.
  7. It had flown before I saw it. – நான் பார்பதற்கு முன்பே அது பறந்துவிட்டது.
  8. Haran had just completed the first round of the game. – கரன் முதல் சுற்று ஆட்டத்தை முடித்திருந்தான்.

The past perfect negative formula

Subject + had + not + Past Participle.

Subject had notPast Participle
Ihad notPast Participle
we / You / Theyhad notPast Participle
He / She / It / Name had notPast Participle

Examples of the past perfect negative form

  1. I had not just completed my task. – நான் என்னுடைய வேலையை முடிக்கவில்லை.
  2. We had not watched the series when you left home. – நீ வீட்டைவிட்டு வெளியே சென்ற போது, நாங்கள் தொடரை பார்க்கவில்லை.
  3. You had not slept well. – நீ நன்றாக தூங்கவில்லை.
  4. They had not lived in the same house. – அவர்கள் ஒரே வீட்டில் வசிக்கவில்லை.
  5. He had not left the meeting when you called him. – நீ அவனை கூப்பிட்டபோது அவன்கூட்டதிலிருந்து கிளம்பவில்லை.
  6. She had not gone to work when I reached home. – நான் வீட்டுக்கு வந்த போது, அவள் வேலைக்குச் செல்லவில்லை.
  7. It had not flown before I saw it. – நான் பார்பதற்கு முன்பே அது பறக்கவில்லை.
  8. Haran had not completed the first round of the game. – கரன் முதல் சுற்று ஆட்டத்தை முடிக்கவில்லை.

The past perfect interrogative formula

Had + Subject + Past Participle.

had SubjectPast Participle
had IPast Participle
had we / You / TheyPast Participle
had He / She / It / NamePast Participle

Examples of the past perfect interrogative form

  1. Had I completed my task? – நான் என்னுடைய வேலையை முடித்து இருந்தேனா?.
  2. Had we watched the series when you left home? – நீ வீட்டைவிட்டு வெளியே சென்ற போது, நாங்கள் தொடரை பார்த்தோமா?
  3. Had you slept well? – நீ நன்றாக தூங்கினாயா?
  4. Had they lived in the same house? – அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனரா?
  5. Had he left the meeting? – நீ அவனை கூப்பிட்டபோது அவன்கூட்டதிலிருந்து கிளம்பிவிட்டானா?
  6. Had she gone to work when I reached home? – நான் வீட்டுக்கு வந்த போது, அவள் வேலைக்கு சென்றிருந்தாளா?
  7. Had it flown before I saw it? – நான் பார்பதற்கு முன்பே அது பறந்துவிட்டதா?
  8. Had Haran just completed the first round of the game? – கரன் முதல் சுற்று ஆட்டத்தை முடித்திருந்தானா?

வார்த்தை சுருக்கம்

  • Had not – hadn’t

The Past Perfect Tense Exercises

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைக்கொண்டு வினாவாக்கியம் மற்றும் எதிர்மறை வாக்கியங்களை அமைத்து பயிற்சி எடுக்கவும்.

  1. I had missed the bus when I arrived at the bus stop.
  2. We had worked hard.
  3. You had studied Hindi before you moved to North India.
  4. They had established their company before 2000.
  5. He had met her before lunch.
  6. She had received the good news, so she left quickly.
  7. It had gone when I went nearby.
  8. Haran had missed the opportunity because he failed the exam.

The Past Perfect Continuous Tense in Tamil

ஒரு செயலானது இறந்த காலத்தில் ஆரம்பித்து அதே இறந்த காலத்தில் குறிப்பிட நேரம் வரை தொடர்ந்து  நடக்கும்போது அதனை குறிப்பிட Past Perfect Continuous Tense உதவுகிறது. 

past perfect continuous tense with examples in tamil

Example

She had been helping her mom with the kitchen when her dad arrived.

அவள் அப்பா வந்த போது அவள் தன் அம்மாவிற்கு சமையலில் உதவி செய்துகொண்டு இருந்தாள்.

the past perfect continuous tense formula & Examples in Tamil

Subject + had + Been + Verb + ing + object

Subject had been verb + ing
Ihad been verb + ing
we / You / Theyhad been verb + ing
He / She / It / Name had been verb + ing

Examples of the past perfect continuous tense formula

  1. I had been cleaning my shoes when she came to my room. – அவன் என்னுடைய அறைக்கு வந்த போது நான் என்னுடைய காலணியை சுத்தம் செய்துகொண்டு இருந்தேன்.
  2. We had been cheering for the player when he hit a sixer. – அவன் ஒரு சிக்ஸர் அடித்தபோது நாங்கள் அவனை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தோம்.
  3. You had been thinking too much when I noticed you. – நான் உன்னை கவனித்தபோது நீ ஆழமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாய்.
  4. They had been working hard when the manager saw them. – மேலாளர் அவர்களை கவனித்தபோது அவர்கள் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
  5. He had been writing a letter to his father. – தன் தந்தைக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருந்தான். 
  6. She had been preparing for the exam when we called her to play with us. – நாங்கள் அவளை விளையாட அழைத்தபோது அவள் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தாள்.
  7. It had been moving slowly when we saw it. – நாங்கள் பார்த்தபோது அது மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.
  8. Haran had been teaching his students when I saw him. – நான் பார்த்தபோது கரன் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தான்.

The past perfect continuous negative formula

Subject + had not + Been + Verb + ing + object

Subject had not been verb + ing
Ihad not been verb + ing
we / You / Theyhad not been verb + ing
He / She / It / Name had not been verb + ing

Examples for the past perfect continuous negative form

  1. I had not been cleaning my shoes when she came to my room. – அவன் என்னுடைய அறைக்கு வந்த போது நான் என்னுடைய காலணியை சுத்தம் செய்துகொண்டு இருக்கவில்லை.
  2. We had not been cheering for the player when he hit a sixer. – அவன் ஒரு சிக்ஸர் அடித்தபோது நாங்கள் அவனை உற்சாகப்படுத்தவில்லை. 
  3. You had not been thinking too much when I noticed you. – நான் உன்னை கவனித்தபோது நீ ஆழமாக சிந்திக்கவில்லை.
  4. They had not been working hard when the manager saw them. – மேலாளர் அவர்களை கவனித்தபோது அவர்கள் கடுமையாக வேலை செய்யவில்லை.. 
  5. He had not been writing a letter to his father. – தன் தந்தைக்கு கடிதம் எழுதவில்லை. 
  6. She had not been preparing for the exam when we called her to play with us. – நாங்கள் அவளை விளையாட அழைத்தபோது அவள் தேர்வுக்கு படிக்கவில்லை.
  7. It had not been moving slowly when we saw it. – நாங்கள் பார்த்தபோது அது மெதுவாக நகரவில்லை.
  8. Haran had not been teaching his students when I saw him. – நான் பார்த்தபோது கரன் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை.

The past perfect continuous interrogative formula

had + Subject + Been + Verb + ing + object

hadSubjectbeen verb + ing
had Ibeen verb + ing
had we / You / Theybeen verb + ing
had He / She / It / Namebeen verb + ing

Examples of the past perfect continuous interrogative formula

  1. Had I been cleaning my shoes when she came to my room? – அவன் என்னுடைய அறைக்கு வந்த போது நான் என்னுடைய காலணியை சுத்தம் செய்துகொண்டு இருந்தேனா?
  2. Had we been cheering for the player when he hit a sixer? – அவன் ஒரு சிக்ஸர் அடித்தபோது நாங்கள் அவனை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தோமா?
  3. Had you been thinking too much when I noticed you? – நான் உன்னை கவனித்தபோது நீ ஆழமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாயா?
  4. Had they been working hard when the manager saw them? – மேலாளர் அவர்களை கவனித்தபோது அவர்கள் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்களா?
  5. Had he been writing a letter to his father? – தன் தந்தைக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருந்தானா?
  6. Had she been preparing for the exam when we called her to play with us? – நாங்கள் அவளை விளையாட அழைத்தபோது அவள் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தாளா?
  7. Had it been moving slowly when we saw it? – நாங்கள் பார்த்தபோது அது மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததா?
  8. Had Haran been teaching his students when I saw him? – நான் பார்த்தபோது கரன் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தானா?

Tense பற்றி அறிய

All 12 Tenses in Tamil with examples

Present tense மற்றும் future tense பற்றிய அறிய

4 types of present tense in Tamil with examples

All 4 future tenses in Tamil

Conclusion

நாம் இந்த பதிவில் past tense என்றால் என்ன அதன் வகைகள், எப்படி வினா வாக்கியமாக, எதிர்மறை வாக்கியமாக மற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் அனைவருக்கும் புரியும் வண்ணம் தந்துள்ளோம் என நம்புகிறேன். மற்ற இலக்கணப் பிரிவுகளை தெரிந்துகொள்ள நமது மற்ற பதிவுகளை படிக்கவும்.

உங்கள் கருத்துக்களை அல்லது past tense பற்றிய உங்கள் சந்தேகங்களை அறிந்து அதனை தீர்க்க நாங்கள் விரும்புகிறோம், எனவேஅவற்றை comment இல் பதிவு செய்யவும்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *