Conditional Clauses If Clauses in Tamil With Examples
If clause in Tamil
ஆங்கிலத்தில் If clause ஆனது பொதுவாக வெவ்வேறு சாத்தியகூறுகளை பற்றியும், நிகழக்கூடிய நிகழ்வுகள், உண்மையில்லாத நிகழ்வுகள் பற்றி கற்பனை செய்ய என பல சூழ்நிலைகளில் நாம் உபயோகிக்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் வாக்கியத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அவை என்ன என்ன என இங்கு நாம் காணலாம்.
என்ன நடந்து இருக்கும் என்ன நடக்கலாம் என்ன நடக்க வேண்டும் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட conditional clauses உபயோகப்படுகின்றன.
ஆங்கிலத்தில் அதிக அளவு உபயோகப்படுத்தப்படும் conditional clause IF ஆகும்.
நாம் If clause ஐ உபயோகிக்கும் போது வினைச்சொல்லின் காலத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.
If clause வகைகள்
நான்கு வகையான If clause உள்ளன.
- Zero conditional
- First conditional
- Second conditional
- Third conditional
Zero conditional If clause in Tamil
பொதுவான உண்மைகளைப் பற்றி பேசும்போது இந்த Zero conditional நாம் உபயோகிக்க வேண்டும். அதாவது பொது குறிப்பிட்ட செயலானது குறிப்பிட்ட விளைவு மட்டுமே தரும் எனும்போது உபயோகிக்க வேண்டும்.
நாம் Zero conditional ஐ உபயோகிக்கும் போது இரண்டு வாக்கியங்களும் (If clause and main clause) Simple present tense மட்டுமே இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் Simple future tense ஐ உபயோகிக்க கூடாது.
Zero conditional ஐ உபயோகிக்கும் போது If, When என இரண்டையும் உபயோகிக்கலாம் இதனால் அதன் பொருள் எப்பொழுதும் மாறாது.
இந்த Zero conditional இல் நேரத்தை குறிப்பிடும்போது இப்பொழுது அல்லது எப்பொழுதும் (now or always) என இரண்டு வகையான காலத்தை குறிப்பிடலாம்.
Example
- If you don’t brush your teeth, you get cavities. – நீ பல் துலக்காமல் இருந்தால் பற்சொத்தை வரும்.
- When people smoke cigarettes, their health suffers. – மக்கள் சிகரெட் புகைக்கும் போது அவர்களின் உடல் நலமானது பாதிக்கிறது.
- If you don’t brush your teeth, you will get cavities. என்பது தவறான வாக்கிய அமைப்பு ஆகும். இவ்வாறு உபயோகிக்கக்கூடாது.
Format
If clause – If + simple present
Main clause – simple present
இது நடந்தால் அது நடக்கும் என குறிப்பிட இந்த Zero conditional உதவுகிறது,
More examples
- If you eat too much, you feel full. – நீ அதிகமாக சாப்பிட்டால் வயறு நிரம்பியதாய் உணர்வாய்.
- If you press the switch, the motor turns on. – நீ அந்த பொத்தானை அழுத்தினால் அந்த மோட்டார் வேலை செய்ய தொடங்கும்.
- If you touch the ice, it makes your hand chill. – நீ ஐஸை தொட்டால், கை குளிர்ந்த உணர்வைப் பெறும்.
- If you freeze the water, it becomes ice. – நீரை குளிர்விக்கும்போது பனிக்கட்டியாக மாறும்.
- If you mix yellow and blue, you get green. – நீ மஞ்சள் மற்றும் நீல நிறத்தினை கலக்கும்போது பச்சை நிறத்தை பெறுவாய்.
Direct & Indirect, Active & Passive, 12 Tenses பற்றி அறிய
Direct speech and Indirect speech in Tamil
First conditional If clause in Tamil
ஒரு செயலனை செய்யும்போது அதன் விளைவானது எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பு (கண்டிப்பாக நடக்கும் என கூற முடியாது. நடக்கலாம், நடக்காமல் போகலாம்) இருக்கும் பட்சத்தில் குறிப்பிட இந்த First conditional ஆனது பயன்படுகிறது.
If class ஆனது simple present tense ஆகவும் main class ஆனது simple future tense ஆகவும் இருக்க வேண்டும்.
Format
If + Simple present tense, Simple future tense.
இது நடந்தால் அது நடக்கலாம் எனும் சூழ்நிலைகளில் இதனை உபயோகிக்கலாம்.
Example
If you rest, you will feel better. – நீங்கள் ஓய்வு எடுத்தால் நன்றாக இருப்பது போல் உணர்வீர்கள்.
மேற்கண்ட எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டோமேயானால் அந்த நபர் ஓய்வு எடுத்த பின், அவர் நன்றாகவும் இருக்கலாம் அல்லது அதே நிலையில் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகள் வரும்போது நாம் First conditional உபயோகிக்க வேண்டும்.
More examples
- If I work hard, I will get a promotion. – நான் கடுமையாக வேலை செய்தால் பதவி உயர்வு பெறுவேன்.
- If I invest in a proper stock, I will become rich. – நான் சரியான பங்கினை வாங்கினால் பணக்காரன் ஆவேன்.
- If he practices every day, he will become a good athlete. – அவன் தினமும் பயிற்சி செய்தால் அவன் சிறந்த விளையாட்டு வீரனாக வருவான்,
- If he misses the bus, he will walk to reach the office. – அவன் பேருந்தை தவறவிட்டால் அலுவலகத்துக்கு நடந்து செல்வான்.
- If I clean the room, I will get a chance to see a movie. – நான் அறையை சுத்தம் செய்தால் படம் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவேன்,
கவனத்தில் கொள்க
பொதுவாக simple future tense ஆனது main clause மட்டும் வரும். ஆனால் If clause ல் ஒரு செயலானது நடந்த முடிந்த பின், main clause இல் செயலானது தொடங்கும்மேயானால் இரண்டு கிளாஸ்களிலும் நாம் simple future tense உபயோகிக்க வேண்டும்.
Example
If aspirin will ease my headache, I’ll take a couple tonight. – ஆஸ்பிரின் எனது தலைவலியை குறைக்கும் பட்சத்தில், நான் இன்று இரவு இரண்டு எடுத்துக் கொள்வேன்.
Second conditional If clause in Tamil
ஒரு செயலில் விளைவானது நம்ப முடியாத அளவு இருக்கும் பொழுது அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு ஒன்று நடக்கவே இயலாது எனும் போது நாம் இந்த Second conditional உபயோகிக்க வேண்டும்.
இதில் வரும் வாக்கியங்கள் ஆனது உண்மையின் அடிப்படையில் இருக்காது. இது கற்பனையாகவும் இருக்கலாம் அல்லது செயலானது நடக்கவே இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கும் இது போன்ற இடங்களில் நாம் எதனை உபயோகிக்க வேண்டும்.
Format
If clause – Simple past
Main clause – Auxiliary modal verbs (could, should, would, might)
Example
If I inherited a billion dollars, I would travel to the moon. – என்னிடம் பில்லியன் டாலர் இருந்தால் நான் நிலவிற்கு பயணம் செய்வேன்.
மேலே கூறிய எடுத்துக்காட்டில் என்னிடம் மில்லியன் டாலர் இருக்கப் போவதில்லை. அப்படியே இருந்தாலும், நான் நிலவுக்கு பயணம் செய்ய மாட்டேன். இத்தகைய சூழ்நிலைகளை குறிப்பிடும்போது நாம் இந்த Second conditional உபயோகிக்க வேண்டும்.
More examples
- If I had wings, I would fly. – எனக்கு இறக்கைகள் இருந்தால் பறப்பேன்.
- If I won the prize, I would go on vacation. – நான் பரிசு வென்றால் விடுமுறைக்கு செல்வேன்.
- If it were a weekend, we would plan a trip. – வார இறுதி என்றால், ஒரு பயணத்திற்கு திட்டமிடுவோம்.
- If I had a dragon, I would play with it. – என்னிடம் டிராகன் இருந்தால் நான் அதனுடன் விளையாடுவேன்.
- If I had a time machine, I would go to my past. – என்னிடம் கால இயந்திரம் இருந்தால், என்னுடைய கடந்த காலத்துக்கு செல்வேன்.
Third conditional If clause in Tamil
கடந்த காலத்தில் வேறு ஏதாவது நடந்து இருந்தால், தற்போதைய சூழ்நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என குறிப்பிடும் போது இந்த Third conditionalஐ உபயோகிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இது நடந்திருக்காது. நடந்து இருந்தால் பரவாயில்லை என குறிப்பிடும் போதும் உபயோகிக்கலாம். மேலும், இரண்டுமே நடக்காமல் இருக்கும்போது என்னும் சூழ்நிலையிலும் உபயோகிக்கலாம்.
Format
If clause – had + Past participle or past perfect
Main clause – modal auxiliary verb + have + Past participle
Example
If I had cleaned the house, I could have gone to the movies. – நான் வீட்டை சுத்தம் செய்திருந்தால் திரைப்படத்துக்கு போய் இருக்கலாம்.
மேலே கூறிய எடுத்துக்காட்டில் வீடானது இன்னும் சுத்தம் செய்யவில்லை. அவ்வாறு செய்து இருந்தால் எனும்போது சூழ்நிலை வேறு மாதிரி இருந்திருக்கும். அதாவது திரைப்படத்துக்கு போய் இருக்கலாம்.
More examples
If he had played well, we would have won the match. – அவன் நன்றாக விளையாடியிருந்தால் நாம் பந்தயத்தில் வெற்றி பெற்றுஇருப்போம்.
If we had taken the correct route, we would have gone to the store at the right time. – நாம் சரியான பாதையில் சென்றிருந்தால், குறித்த நேரத்திற்குகடைக்கு சென்றுருப்போம்.
If I had won the race, I would have celebrated with my friends. – நான் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தால் நண்பர்களுடன் கொண்டடி இருப்பேன்,
If she had studied hard, she would have gotten the first mark. – அவள் கஷ்டப்பட்டு படித்து இருந்தால் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பாள்.
If he had listened to my opinion, he would not have gotten into trouble. – என் கருத்தை கேட்டிருந்தால் அவர் எந்த பிரச்சனையிலும் சிக்கி இருக்க மாட்டார்.
Conclusion
நாம் இந்த பதிவில் If clause என்றால் என்ன, அவற்றின் 4 வகைகள் என்னென்ன அவற்றை எப்படி மற்றும் எத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும், ஒவ்வொன்றும் எந்த அமைப்பில் இருக்கும் போன்றவற்றை தெளிவாக எடுத்துக்கட்டுக்களுடன் விளக்கியுள்ளோம். உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
இந்த பதிவில் If clause பற்றியும் அதன் வகைகள் பற்றியும் தெளிவாக பார்த்தோமல்லவா?. உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை comment செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்.
நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!