Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) Meaning in Tamil

Home Advanced Grammar Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) Meaning in Tamil

Table of Contents

Modal Auxiliary verbs (மாதிரி வினைச்சொற்கள்)

Modal Auxiliary verbs ஐ தமிழில் மாதிரி வினைச்சொற்கள் என அழைக்கப்படும். இது துணை வினைச்சொற்கள் (Auxiliary verbs) இன் ஒரு பகுதி ஆகும்.

இந்த modal verbs ஆனது வாக்கியத்தின் main verbக்கு அதன் உணர்வுகளை, பொருளை, திட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது.

இந்த modal verbs ஆனது தனித்து நின்று பொருளை தராது. இது பொருளை தர வேண்டுமாயின் auxiliary verb ஐ போல main verb இன் உதவி தேவைப்படும்.

Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in Tamil

நாம் இந்த modal verb களை tense அதாவது காலத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. சில modal verbs அதன் காலத்தை குறிப்பிட்டு காட்டுவதில்லை. அதாவது shall என்பதன் past tense ஆனது should ஆகும். நாம் இந்த should ஐ ஒரு செயல் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று அதிகாரம் செயும் இடங்களிலும் உபயோகப்படுத்தலாம். அது போன்ற இடங்களில் நாம் tense ஐக் கொண்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.

Example:

you should follow traffic rules. – நீ போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இங்கு நாம் இதை இறந்த கால வாக்கியமாக எண்ணக்கூடாது. ஏனெனில் shall இந்த past tense should ஆகும். ஆனால் இங்கு should ஆனது வேறு பொருளை தரும்.

Auxiliary verbs பற்றி தெரிந்து கொள்ள

Auxiliary verb or helping verbs in Tamil

பொதுவாக உபயோகிக்கும் modal verbs

இந்த பதிவில் முக்கியமான அதிகம் உபயோகப்படுதுகின்ற அனைத்து modal verbs பற்றி தெளிவாக காணலாம்.

  • shall
  • should
  • may
  • might
  • can
  • could
  • must
  • will
  • would

Can and Could

Can மற்றும் could ஆகியவை முடியும்(ability), திறன் வாய்ந்த(capacity), சாத்தியமுள்ள(possibility) போன்றவற்றை குறிக்கும் வினைசொற்கள் ஆகும். இவை உதவி வினைச்சொற்கள் ஆகும்.

Can என்பதன் இறந்த கால சொல்லே Could ஆகும்.

Can மற்றும் Could ஐ singular nouns, plural nouns, and pronouns இல் உபயோகிப்போம்.

How to Use Can and Could with examples in tamil

Can (முடியும்) meaning in Tamil

1. திறன் அல்லது அனுமதியை( ability or permission) பற்றி குறிப்பிட can உதவுகிறது. மேலும் இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் மற்றும் ஒரு செயலானது நடக்க அதிக வாய்ப்புக்கள் உள்ள போது(general truth & strong possibility of being true) அதை குறிப்பிட நாம் can ஐ உபயோக்கிக்கலாம்.

ஒரு செயலானது(Skills) தற்காலத்தில் நிகழ்ந்து கொண்டு இருப்பதை குறிப்பிட can உதவுகிறது.

Examples

  • A bee’s sting can cause heavy pain. – ஒரு தேனீ கடிக்கும் போது அதன் வலி கடுமையாக இருக்கும்.
  • I can run faster than Raja. – என்னால் ராஜாவை விட வேகமாக ஓட முடியும்.
  • You can drive safely when you follow the rules and regulations. – விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் உன்னால் பாதுகாப்பாக வண்டி ஓட்ட முடியும்.
  • He can dance well. – அவனுக்கு நன்றாக ஆடத் தெரியும்.
  • She can hold her breath for three minutes. – அவளால் 3 நிமிடங்கள் வரை மூச்சை அடக்க முடியும்.

2. நம்மால் இப்போது உணர்ந்து  கொள்ளக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய, மற்றும் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடியவற்றை குறிப்பிட நாம் can ஐ உபயோகிக்கலாம்.

Examples

  • I can smell it. – என்னால் அதை நுகர முடிகிறது.
  • He can not hear what you say. – நீ சொல்வதை அவனால் கேட்க முடியாது.
  • Don’t worry. They can understand your situation. – கவலைப்படாதே, உன் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவார்கள்.
  • I can see you. – நான் உன்னை பார்க்க முடிகிறது.
  • Can you remember me? We met yesterday. – என்னை ஞாபகம் இருக்கிறதா? நாம் நேற்று சந்தித்தோம்.

தெரிந்து கொள்க

Cannot என்பது single word ஆகும். can not என உபயோக்கிக்கக்கூடாது.

Could meaning in Tamil

1. ஒரு செயல் நடக்க குறைவான chances இருக்கும்போது

ஒரு செயலானது நடக்க மிகவும் குறைவான வாய்ப்புக்கள் உள்ளபோது நாம் could உபயோகிப்போம்.

இது பொதுவான உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்கள், மற்றும் திறன்களை பற்றி பேச உதவுகிறது.

Examples

  • She could dance well to all western songs. – அவளால் அனைத்து மேற்கத்திய பாடல்களுக்கும் நடனமாட முடியும்.
  • He could come to the meeting. – அவன் கூட்டத்திற்கு வரலாம்.
  • I could not remember when I saw you. – உன்னை பார்த்தும் ஞாபகம் வரவில்லை.

2. கடந்த காலத்தில் உணரக்கூடிய நிகழ்வுகள்

நம்மால் கடந்த காலத்தில் உணர்ந்து  கொள்ளக்கூடிய(able to sense), புரிந்துகொள்ளக்கூடிய(understand), மற்றும் இறந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடியவற்றை(remember at a past time) குறிப்பிட நாம் could ஐ உபயோகிக்கலாம்.

Examples

  • I could smell that. – என்னால் நுகர முடிந்தது.
  • He could see you. – அவனால் உன்னை பார்க்க முடிந்தது.
  • She could not hear what you say. – நீங்கள் சொல்வதை அவளால் கேட்க முடியவில்லை.

3. கருத்துக்களை கூறும்போது

நாம் ஒருவருக்கு ஏதாவது ஒன்றை  பரிந்துரை செய்யும்போது could ஐ உபயோகிக்கலாம்.

யாரவது ஒருவர் உங்களிடம் அறிவுரை கேட்கிறார் எனில் அவருக்கு நீங்கள் பொறுமையாக பதில் அளிக்கும் சூழலில் நீங்கள் could ஐ உபயோகிக்க வேண்டும்.

Examples

  • You could try fruit juice instead of carbonated drinks. – கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கு பதிலாக நீங்கள் பழச்சாறுகளை அருந்தலாம்.
  • You could wait for your time to achieve your goal. – உங்கள் இலக்கை அடைய உங்கள் நேரத்திற்காக காத்திருக்கலாம்.
  • We could go out for dinner. – நாம் இரவு உணவுக்கு வெளியே செல்லலாம்.

4. வலுவான உணர்வுகளை வெளிப்படுத்தும்போது

வலுவான உணர்வுகளை(மகிழ்ச்சி அல்லது துக்கம்)  நாம் வெளிப்படுத்த could ஐ உபயோக்கிக்கலாம்.

Examples

  • I am so sad. better I could hug you. – நான் சோகமாக இருக்கிறேன். நான் உன்னை அணைத்துக்கொள்வது நல்லது.
  • I am irritated. better I could go from here. – நான் எரிச்சலாக இருக்கிறேன். நான் இங்கிருந்து செல்வது நல்லது.
  • I am so tired I could sleep. – நான் சோகமாக உள்ளேன். என்னால் உறங்க முடியும்.

5. கோரிக்கை வைக்கும்போது

நாம் ஒரு கோரிக்கையை வைக்கும் போது can and could உபயோகிக்கலாம்.

மரியாதை நிமிர்த்தமாக அல்லது பணிவாக  பேசும் போது நாம் could ஐ உபயோகிக்கலாம். ஆனால் can சற்று அதிகாரமாக உள்ள இடங்களில் மட்டும் உபயோகிக்கலாம்.

Examples

  1. Could you please tell me the address? – இந்த முகவரி எங்குள்ளது என்று சொல்ல முடியுமா?
  2. Can you show me the price table? – விலை அட்டவணையை காட்ட முடிமா?
  3. Could you please move, I have to go there. – நீங்கள் கொஞ்சம் நகர முடிமா? நான் அங்கு செல்ல வேண்டும்.

எளிமையாக கூறவேண்டுமெனில்

  • ஒரு தெரிந்த நன்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் உதவி கேட்கும் போது நாம் can உபயோகிக்கலாம். 
  • தெரியாத நபர்கள் அல்லது மூன்றாவது நபர்களிடம் உதவி கேற்கும் போது நாம் could ஐ உபயோகிக்க வேண்டும்.

Common structure with can and could

Can

  • Can + hardly
  • Can + only
  • Can not + even 

Could

  • Could + at least
  • Could + always
  • Could + easily.

Active and passive voice, tense, direct and indirect speech பற்றி அறிய

Direct speech and Indirect speech in Tamil

Active and Passive voice in Tamil

All 12 Tenses in Tamil with examples

Would and should

How to Use Would, and Should with Examples in tamil

“Would” and “should” ஆகியவை auxiliary verbs க்கு கீழ் வரும். இதனை எவ்வாறு எத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும் என்பதை காண்போம்.

Will இன் இறந்த கால வினைச்சொல்லே Would ஆகும்.

Examples of would

  • Haran said he would come. – கரன் அவன் வருவதாக சொன்னான்.
  • She would marry only a billionaire. – அவள் மில்லியனரை மட்டுமே திருமணம் செய்துகொள்வாள்.
  • We knew you would love this food. – உனக்கு இந்த உணவு பிடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.

Would meaning in Tamil

ஆசை, வழக்கமான செயல்கள், கற்பனை நிகழ்வுகளை குறிப்பிட would ஐ உபயோகிக்கலாம்.

Examples

  • If I win the lottery, I would move to the USA. – நான் லாட்டேரி வென்றால், அமெரிக்காவுக்கு செல்வேன்.
  • I would spend more time reading during my adulthood.  – நான் என்னுடைய பதின்மபருவதில் அதிக நேரம் புத்தகம் படிப்பேன்.

would வரும் இடங்களில் நாம் could உம உபயோகிக்கலாம். இரண்டுமே கற்பனை நிகழ்வுகளை குறிக்க உதவுகிறது.

Would like meaning in Tamil

நாம் மக்களுக்கு ஏதாவது தரும் போது அல்லது நாகரிகமாக நமக்கு ஏதாவது  வேண்டும் என கேட்கும் சூழ்நிலைகளில் would like உபயோகப்படுத்த வேண்டும். 

Examples of would like

  • I am tired. I would like to sleep. – நான் சோர்வாக உள்ளேன். நான் தூங்க விரும்புகிறேன்.
  • Would you like to drink a cup of milk? – நீங்கள் ஒரு கப் பால் குடிக்க விரும்புகிறீர்களா?
  • What dress would you like to wear today? – இன்று எந்த ஆடையை நீங்கள் அணிய விரும்புகிறீர்கள்?

Would love meaning in Tamil

நாம் ஒருவருக்கு ஏதாவது செய்யும்போது அதை அவர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் would love என உபயோகிக்கலாம்.

Examples of would love

1. Would you like this dress? – உங்களுக்கு இந்த ஆடை பிடித்திருக்கிறதா?

Yes, I would love this. – ஆம், நான் இதை விரும்புகிறேன்.

2. Would you like coffee or tea? – நீங்கள் காபி அல்லது டீ விரும்புகிரீர்களா?

Yes, I would love both. – ஆம், நான் இரண்டையும் விரும்புகிறேன்.

Yes, I would love coffee. – ஆம், நான் காபி விரும்புகிறேன்.

Should meaning in Tamil

ஒரு செயலானது நடக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களிலும், மக்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டிய செயல்களை குறிப்பிடும்போதும் நாம் should உபயோகிக்க வேண்டும்.

Examples of Should

  • You should follow the rules. – நீ விதிகளை பின்பற்ற வேண்டும்.
  • You should study well before the exams. – தேர்வுகளுக்கு முன்னரே நீ நன்றாக படிக்க வேண்டும்.
  • You should stop eating junk food. – நீ துரித உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • Should I do more exercise? – நான் இன்னும் உடற்பயற்சி செய்ய வேண்டுமா?
  • You should turn off your computer when you are not using it. – நீ கணினியை உபயோக்காத போது அதனை அணைத்து வைக்கவும்.
  • We all should drink more water. – நாம் அனைவரும் அதிக நீரை குடிக்க வேண்டும்.

Would சுருக்கங்கள்

I wouldI’d
We wouldWe’d
You wouldYou’d
They wouldThey’d
He wouldHe’d
She wouldShe’d
It wouldIt’d
should notShouldn’t
would not Wouldn’t

May and might

May and might மாதிரி உதவி வினைச்சொற்களின் கீழ் வருகின்றன. இதை நாம் எத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும் என்பதை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.

How to use May and Might with examples in tamil

May meaning in Tamil

1. அனுமதி கேட்க

நீங்கள் ஒரு செயலை செய்ய முன்னால் இருப்பவரிடம் அனுமதி கேட்கும் இடங்களில் நாம் may வை உபயோகிக்கலாம்.

Examples

  • May I come in? – நான் உள்ளே வரலாமா?
  • May I use your pen? – நான் உனது பேனாவை உபயோகிக்கலாமா?
  • We may go to the park in the evening. – நாங்கள் மாலை பூங்காவுக்கு செல்லலாம்.

2. அனுமதி அளிக்க

நீங்கள் ஒரு செயலை செய்ய அனுமதி அளிக்கும் இடங்களில் இந்த may வை உபயோகிக்கலாம்.

Examples

  • You may come in. – நீங்கள் உள்ளே வரலாம்.
  • You may go now. – நீங்கள் இப்போது செல்லலாம்.

3. ஒரு செயல் நடக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளபோது

might உடன் ஒப்பிடும்போது செயல்களானது நடக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது பற்றி குறிப்பிடும்போது நாம் may வை உபயோகிக்கலாம்.

Examples

  • If it continues to be sunny, there may be a drought. – தொடர்ந்து இவ்வாறு வெயில் அடித்தால் வறட்சி ஏற்படும்.
  • Take an umbrella, it may rain. – குடையை வைத்துக்கொள்ளுங்கள் மழை பெய்யலாம்.
  • I may go to work if I feel fresh. – நான் புத்துணர்ச்சியாக இருந்தால் வேலைக்கு செல்லலாம்.
  • He may go to watch a movie. – அவன் படம் பார்க்க போகலாம்.

Might meaning in Tamil

1. Past tense of may

M ay இன் இறந்த கால வினைச்சொல்லே Might ஆகும்.

Examples

  • I realized I might get the job if I spoke well. – நன்றாக பேசினால் வேலை கிடைக்கும் என்பதை உணர்ந்தேன்.
  • I knew my teacher might find out the mistake. – எனது ஆசிரியர் இந்த தவறை கண்டுபிடிக்கக்கூடும் என்பது எனக்கு தெரியும்.

2. செயல் நடக்க வாய்ப்பு உள்ளது என கூறும்போது

நடக்க சாத்தியமான விசயங்களை பற்றி குறிப்பிடும்போது நாம் might ஐ உபயோகிக்கலாம்.

Examples

  • Put your purse inside the bag or it might get stolen. – உங்கள் பணப்பையை பையினுள் வைக்கவும் இல்லையேல் அது திருடப்படலாம்.

3. கற்பனை மற்றும் வாய்ப்பு குறைவான செயலை கூற

ஒரு செயலானது நிகழ வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ள போது நாம் might ஐ உபயோகிக்கலாம். 

அதே போல் கற்பனையான சூழ்நிலைகளை பற்றி பேசும்போதும் நாம் might ஐ உபயோகிக்கலாம்.

Examples

  • I might win the lottery. – நான் லாட்டரியில் வெல்லலாம்.

இந்த எடுத்துக்காட்டில் லாட்டரியில் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. எனவே இங்கு நாம் might உபயோகிக்கிறோம்.

  • I might buy myself an Apple MacBook. – நான் ஒரு ஆப்பிள் மேக் புக் வாங்கலாம்.

Conjunctions, Adverbs, Adjective, Pronoun, Noun பற்றி அறிய

Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil

Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil

Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples

Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & its types in Tamil with examples

Noun(பெயர்ச்சொல்) and its types in Tamil

Conclusion

நாம் இந்த பதிவில் modal auxiliary verb என்றால் என்ன அதன் வகைகள் என்ன அவற்றை எந்தெந்த சூழ்நிலைகளில் நாம் உபயோகிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்த்தோம். குறிப்பாக, can, could, may, might, would, shouldபற்றி மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் பார்த்தோம்.

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கள், ஏதேனும் இந்த modal auxiliary verb பற்றிய சந்தேகங்களை comments இல் கேட்கவும்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

6 Responses

  1. kalvikarasi says:

    super.

  1. 25/07/2023

    […] Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in T… […]

  2. 28/07/2023

    […] Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in T… […]

  3. 15/08/2023

    […] Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in T… […]

  4. 16/08/2023

    […] Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in T… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *