Past tense passive voice rules with examples in Tamil
இந்த பதிவில் எப்படி ஒவ்வொரு past tense வகைகளை எப்படி passive voice ஆக மாற்றுவது என்பதைக் காண்போம். மேலும் past perfect continuous tense க்கு ஏன் மற்ற முடியாது என்பதையும் தெளிவாக காண்போம்.
Simple Past Tense passive voice
எந்த ஒரு past tense வகையை, passive voice ஆக மாற்ற 5 steps மட்டுமே போதும். அவை என்னென்ன எப்படி மாற்றுவது என கீழே நாம் ஒவ்வொரு படியாக விளக்கியுள்ளோம்.
Passive voice formula for the simple past tense
ஒரு simple past tense ஐ நாம் முந்தைய பதிவுகளில் அதன் மூன்று வகை வாக்கியங்களை பார்த்தோம் அல்லவா? அதாவது அந்த simple past tense வாக்கியம், அதன் எதிர்மறை வாக்கியம், அதன் வினா வகை வாக்கியம் ஆகிய மூன்றையும் passive voice ஆக மாற்றினால் எப்படி இருக்கும் என கீழே கொடுத்துள்ளோம்.
the simple past tense | Passive voice form |
the simple past tense | Object +was / were + past participle + by + subject. |
the simple past tense interrogative form | Was / were + Object + past participle + by + subject ? |
the simple past tense negative form | Object + was not / were not + past participle + by + subject. |
simple past tense ஐ active voice இல் இருந்து passive voice ஆக மாற்றுவது எப்படி?
the simple past tense ஐ செய்வினையில் இருந்து செயப்பாட்டு வினையாக மாற்ற கீழ்க்கண்ட முறையை பின்பற்றவும்.
Step 1
வாக்கியத்தின் இறுதியில் உள்ள செயப்படு பொருளை(object) வாக்கியத்தில் முதலாக கொண்டு வரவும்.
Step 2
was, were துணை வினைச்சொற்களை செயப்படுபொருளுக்கு ஏற்றாற்போல் உபயோகிக்கவும்.
Step 3
past verb ஐ past participle verb ஆக மாற்றவும்.
Step 4
வாக்கியத்தில் முன்னால் இருக்கும் subject ஐ இறுதிக்கு கொண்டு செல்லவும்.
Step 5
subject க்கு முன்பு by சேர்க்கவும்.
அவ்வளவு தான். நாம் the simple past tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்றி விட்டோம்.
Examples of Active & passive voice rules for the simple past tense
1. I played the game. – நான் விளையாட்டை விளையாண்டேன்.
The game was played by me. – விளையாட்டு என்னால் விளையாடப்பட்டது.
2 .He washed the clothes. – அவன் துணிகளைத் துவைத்தான்.
The clothes were washed by him. – துணிகளானது அவனால் துவைக்கப்பட்டது.
3. She ate an apple. – அவள் ஒரு ஆப்பிளை சாப்பிட்டாள்.
An apple was eaten by her. – ஒரு ஆப்பிளானது அவளால் சாப்பிடப்பட்டது.
4. Rajan played the music. – ராஜன் இசை அமைத்தான்.
The music was played by Rajan. – இசை ராஜனால் அமைக்கப்பட்டது.
5. He did not like the taste. – அவன் இந்த சுவையை விரும்பவில்லை.
The taste was not liked by him. – இந்த சுவையானது அவனால் விரும்பப்படவில்லை.
6. Did I make any mistakes? – நான் ஏதேனும் தவறுகள் செய்தேனா?
Were any mistakes made by me? – என்னால் ஏதேனும் தவறுகள் நடந்ததா?
7. She loved him. – அவள் அவனை விரும்பினாள்.
He was loved by her. – அவன் அவளால் விரும்பப்பட்டான்.
8. She ate a full pineapple. – அவள் முழு பைன்ஆப்பிள் பழத்தை சாப்பிட்டாள்.
A full pineapple was eaten by her. – முழு பைன்ஆப்பிள் பழமானது அவளால் சாப்பிடப்பட்டது.
9. India beat England. – இந்தியா இங்கிலாந்தை வென்றது.
England was beaten by India. – இங்கிலாந்தானது இந்தியாவால் வெல்லப்பட்டது.
10. We played cricket last week. – கடந்த வாரம் நாங்கள் கிரிக்கட் விளையாண்டோம்.
Cricket was played by us last week. – கடந்த வாரம் எங்களால் கிரிக்கட் விளையாடப்பட்டது.
11. She enjoyed the whole party. – அவள் முழு பார்ட்டியையும் கொண்டாடினாள்.
The whole party was enjoyed by her. – முழு பார்ட்டியும் அவளால் கொண்டாடப்பட்டது.
12. God created the people. – கடவுள் மனிதர்களை படைத்தார்.
The people were created by God. – மக்கள் கடவுளால் படைக்கப்பட்டுள்ளார்கள்.
13. She gave the treat. – அவள் உபசரிப்பு செய்தாள்.
The treat was given by her. – உபசரிப்பானது அவளால் செய்யப்பட்டது.
Past Tense active voice பற்றி தெளிவாக அறிய
The past continuous tense passive voice
இப்போது எப்படி ஒரு past continuous tense ஐ அயற்கூற்று வாக்கியமாக மாற்றுவது என காண்போம். மேலே past tense க்கு பார்த்தது போலெ இதற்கும் 5 steps தான். அவற்றை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
Passive voice formula for the past continuous tense
ஒரு past continuous tense ஐ passive voice ஆக மாற்றும்போது எப்படி அது இருக்கும் என்பதை இங்கு காணலாம். மேலும் அதே வாக்கியம் எதிர்மறை மற்றும் வினா வாக்கியமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
the past continuous tense | Passive voice form |
the past continuous tense | Object + was / were + being + past participle + by + subject. |
the past continuous tense interrogative form | Was / were + Object + being + past participle + by + subject ? |
the past continuous tense negative form | Object + was not / were not + past participle + by + subject. |
The past continuous tense ஐ active voiceஇல் இருந்து passive voice ஆக மாற்றுவது எப்படி?
The past continuous tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்ற கீழ்க்கண்ட முறையை பின்பற்றவும்.
Step 1
வாக்கியத்தின் இறுதியில் உள்ள செயப்படு பொருளை(object) வாக்கியத்தில் முதலாக கொண்டு வரவும்.
Step 2
துணை வினைச்சொற்களை செயப்படுபொருளுக்கு ஏற்றாற்போல் was, were க்கு மாற்றி அதனுடன் being சேர்க்கவும்.
Step 3
present participle லிருந்து past participle verb ஆக மாற்றவும்.
Step 4
வாக்கியத்தில் முன்னால் இருக்கும் subject ஐ இறுதிக்கு கொண்டு செல்லவும்.
Step 5
subject க்கு முன்பு by சேர்க்கவும்.
அவ்வளவு தான். நாம் The past continuous tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்றி விட்டோம்.
Examples of Active & passive voice rules for the past continuous tense
1. She was praying to God. – அவள் கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு இருந்தாள்.
God was being prayed to by her. – கடவுள் அவளால் பிராத்தனை செய்யப்பட்டார்.
2. I was not seeing him. – நான் அவனை பார்க்கவில்லை.
He was not being seen by me. – அவனை என்னால் பார்க்கமுடியவில்லை.
3. Dhanush was painting the room. – தனுஷ் அறையை வண்ணம் பூசிக்கொண்டு இருந்தான்.
The room was being painted by Dhanush. – அந்த அறைக்கு தனுஷால் வண்ணம் பூசபட்டுக்கொண்டு இருந்தது.
3. Anirudh was not cooking breakfast. – அனிருத் காலை உணவை சமைக்கவில்லை.
Breakfast was not being cooked by Anirudh. – காலை உணவானது அனிருத்தால் சமைக்கப்படவில்லை.
4. He was playing a cricket game. – அவன் கிரிக்கட் விளையாடிக்கொண்டு இருந்தான்.
A cricket game was being played by him. – கிரிக்கட் அவனால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது.
5. Were they enjoying the movie? – அவர்கள் அந்த படத்தை ரசித்தார்களா?
Was the movie being enjoyed by them? – அந்த படமானது அவர்களால் ரசிக்கப்பட்டதா?
6. We were watching the drama. – நாங்கள் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
The drama was being watched by us. – நாடகம் எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கப்பட்டது.
7. She was watching him. – அவள் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
He was being watched by her. – அவன் அவளால் பார்த்துக்கொண்டு இருக்கப்பட்டான்.
8. The mechanic was repairing the A.C. – மெக்கானிக் A.Cயை பழுதுபார்த்துக்கொண்டு இருந்தான்.
The A.C was being repaired by the mechanic. – A.C யானது மெக்கானிக்கால் பழுதுபார்த்துக்கொண்டிருக்கப்பட்டது.
9. He was caring for the cats. – அவன் பூனைகளை பராமரித்து வந்தான்.
The cats were being cared for by him. – பூனைகள் அவனால் பராமரிக்கப்பட்டு வந்தன.
10. Raja was playing the guitar. – ராஜன் கிடாரை இசைத்துக்கொண்டு இருந்தான்.
The guitar was being played by Raja. – கிடாரானது ராஜனால் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
If clause, Modal auxiliary verbs, Auxiliary verb, prefix & suffix பற்றி அறிய
Conditional Clauses If Clauses in Tamil With Examples
Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in Tamil
Past perfect tense passive voice
நாம் மேலே இரண்டு வகையான past tense க்கு பார்த்ததை போல இப்போது past prefect tense ஐ எப்படி செய்யப்பட்டு வினையாக மாற்றுவது என தெளிவாக காண்போம்.
Passive voice formula for the past perfect tense
ஒரு past perfect tense வாக்கியம் மற்றும் அதன் எதிர்மறை மற்றும் வினா வாக்கியத்தை passive voice ஆக மாற்றினால் கீழே உள்ளவாறு இருக்கும்.
the past perfect tense | Passive voice form |
the past perfect tense | Object + had + been + past participle + by + subject. |
the past perfect tense interrogative form | had + Object + been + past participle + by + subject ? |
the past perfect tense negative form | Object + had not + been + past participle + by + subject. |
past perfect tense ஐ active voiceஇல் இருந்து passive voice ஆக மாற்றுவது எப்படி?
The past perfect tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்ற கீழ்க்கண்ட முறையை பின்பற்றவும்.
Step 1
வாக்கியத்தின் இறுதியில் உள்ள செயப்படு பொருளை(object) வாக்கியத்தில் முதலாக கொண்டு வரவும்.
Step 2
துணை வினைச்சொல் had உடன் been சேர்க்கவும்.
Step 3
past participle verb ஐ அப்படியே வைக்கவும்.
Step 4
வாக்கியத்தில் முன்னால் இருக்கும் subject ஐ இறுதிக்கு கொண்டு செல்லவும்.
Step 5
subject க்கு முன்பு by சேர்க்கவும்.
அவ்வளவு தான். நாம் The past perfect tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்றி விட்டோம்.
Examples of Active & passive voice rules for the past perfect tense
1. I had just completed the task. – நான் பணியை முடித்திருந்தேன்.
The task had been completed by me. – பணியானது என்னால் முடிக்கப்பட்டது.
2. She had reached the target. – அவள் இலக்கை அடைந்தாள்.
The target had been reached by her. – இலக்கானது அவளால் அடையப்பட்டது.
3. She had not left the meeting. – அவள் மீட்டிங்கை விட்டு வெளியேறவில்லை.
The meeting had not been left by her. – மீட்டிங்கை விட்டு அவளால் வெளியே வர முடியவில்லை.
4. Had he loved her? – அவன் அவளை நேசித்தானா?
Had she been loved by him? – அவள் அவனால் நேசிக்கப்பட்டாளா?
5. They had solved the issue. – அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தனர்.
The issue had been solved by them. – பிரச்சனை அவர்களால் தீர்த்து வைக்கப்பட்டது.
6. Dhanush had played golf. – தனுஷ் கோல்ப் விளையாடினார்.
The golf had been played by dhanush. – கோல்ப் தனுசால் விளையாடப்பட்டது.
7. Anirudh had played the piano. – அனிருத் பியானோவை வாசித்தார்.
The piano had been played by Anirudh. – பியானோவானது அனிருத்தால் வாசிக்கப்பட்டது.
8. I had paid the tuition fee. – நான் கல்விக்கட்டணத்தை செலுத்தியிருந்தேன்.
The tuition fee had been paid by me.- கல்விக்கட்டணம் என்னால் செலுத்தப்பட்டது.
9. She had called the police. – அவள் போலீசை அழைத்தாள்.
The police had been called by her. – போலீஸ் அவளால் அழைக்கப்பட்டது.
10. We had missed the plane. – நாங்கள் விமானத்தை தவறவிட்டோம்.
The plane had been missed by us. – விமானம் எங்களால் தவறவிடப்பட்டது.
Past perfect continuous tense passive voice
The past perfect continuous tense ஐ செய்வினையில் இருந்து செயப்பாட்டு வினையாக மாற்ற இயலாது.
The past perfect continuous tense இல் ஒரு செயலானது இறந்த காலத்தில் தொடங்கி அந்த செயலானது அதே இறந்த காலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளை குறிப்பிட உதவுகிறது. இங்கு நாம் அந்த செயலை அல்லது வினையைக் கொண்டு அந்த நிகழ்வை குறிப்பிடுவோம்.
ஆனால் செயப்பாட்டு வினையில் செயப்படுபொருளை (object) வைத்தே வாக்கியம் அமைப்போம். எனவே நம்மால் past perfect continuous tense ஐ செயப்பாட்டு வினையாக மாற்ற இயலாது.
present tense & future tense ஐ எவ்வாறு active voice to passive voice ஆக மாற்றுவது என காண
Conclusion
இந்த பதிவில் அனைத்து past tense களை எப்படி active voice இல் இருந்து passive voice ஆக மாற்றுவது என பார்த்தோம். மேலும் ஏன் Past perfect continuous tense passive voice ஐ அயற்கூற்று வாக்கியமாக மாற்ற இயலாது என்பதனையும் பார்த்தோம். நாம் இதே போல் present tense மற்றும் future tense வாக்கியங்களை எப்படி அயற்கூற்றாக மாற்றுவது என்பதை பற்றியும் எழுதி உள்ளோம். அத்தனையும் படிக்கவும்.
அடுத்தடுத்த பதிவுகளில் ஆங்கில இலக்கணத்தின் மற்ற பிரிவுகளைப் பற்றி விரிவாக காண்போம். இந்த பதிவை பற்றிய கருத்துக்களை comment செய்யவும். உங்களுக்கு இந்த past tense passive voice பற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் comment மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கின் சந்தேகங்களை தீர்க்க காத்திருக்கிறோம்.
நன்றி! வாழ்துக்களும் அன்புகளும்!