Prefix and Suffix Meaning in Tamil

Home Advanced Grammar Prefix and Suffix Meaning in Tamil

Prefixes மற்றும் suffixes ஆங்கில மொழியில் பொதுவானவை. அவை நாம் ஆங்கில மொழியினை நன்கு கற்றுக்கொள்ளவும், மொழியை எப்படி உபயோகிக்கவேண்டும் என்றும், தெரியாத புது வார்த்தைகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

இந்த பதிவில் prefix, suffix என்றால் என்ன, எப்படி மாறும், எடுத்துக்காட்டுகள்,  எப்படி prefix, suffix இல் அனைத்தையும் long term இல் கற்று தெளிவது என காண்போம்.

Prefix and suffix in Tamil with examples

Prefix meaning in Tamil

Prefix ஆனது ஒரு வார்த்தையின் முன்னால் சேர்த்து அந்த வார்த்தையினை வேறொரு வார்த்தையாக மாற்ற உதவுகிறது. 

இந்த Prefix ஆனது தனியாக வரும்போது எந்த பொருளையும் தருவதில்லை. ஆனால் இது மற்றொரு வார்த்தையுடன் சேர்ந்து வரும்போது அது பொருளைத் தருகிறது.

நாம் வார்த்தையுடன் Prefix ஐ சேர்க்கும்போது அது நமக்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது. இது நமது கருத்துக்களை கூறவும், ஒரு செயல் திரும்ப திரும்ப நடப்பதை பற்றியும், எதிர்மறையாக கூறவும் உதவுகிறது.

List of prefix & its examples in Tamil

1. Antibody 

இதனை பிரித்தால் Anti + body

இதில் Anti என்பது Prefix இது எதிரான (against) என்ற சொல் வரும் இடங்களில் பொதுவாக உபயோகிப்போம்.

Body என்பது root word or base word ஆகும்.

2. Ex-minister

Ex-minister என்பதனை பிரிக்கும்போது Ex + Minister என பிரியும்.

Ex என்பது  Prefix ஆகும். இது முந்தைய (former), பழைய போன்ற பொருள் தர வேண்டிய இடங்களில் உபயோகிப்போம்.

Minister என்பது இங்கு root or base word

3. Hyperactive 

Hyperactive என்பதை hyper + active என பிரிக்கலாம்.

இதில் Hyper என்பது prefix ஆகும். இதனை அதிகம்(high) என்ற பொருள் வர வேண்டிய இடங்களில் உபயோகிப்போம்.

Active என்பது root word ஆகும்.

இது போன்ற மேலும் எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PrefixMeaningExamples
a-, an- Without abyss, amoral, anhydrous
ante-Before, in front ofAntemeridian, antedate, anterior 
anti-Against, opposite ofAntibody, antibacterial, antiseptic.
auto-Self, sameAutomobile, autobiography, autofocus, auto dial
Co-, con, col, comtogether, withCo-worker, co-operative, co-edit, companion, contact, concentrate, collaborate 
circumAbout, aroundCircumscribe, circumvent
contro-Against, oppositeContrast, contradict 
contra- Opposite, againstControversy 
deOpposite action, down, offDebug, degrade, demonetization 
disNegative, off, awayDisagree, dishonest, disbelief 
ex-Out of, former, previousEx-minister, ex-girlfriend, exhale, extract
eelectronicE-ebook, e-plan, e-mail
ecoEnvironment relatedEco-system, eco-friendly,eco-plastic
extraMorethan, beyond, outsideExtraordinary, extra-curricular, extra-strong
homoSame, similarHomophones, homonym
heteroDifferent, otherHeterogeneous, hetrodox
hyperToo much, high, morehyperactive, hypertension, hyper
In, ir, im, ilWithout, not, opposite ofIllegal, immortal, irrational, indistinct
In, imIn, into, movement toInspect, insect, insert, import, implement 
interAmong, between, connectedInteract, interrelated, interstellar
Intra, introInside, withinIntramuscular, introvert
macroBig, largeMacro-scale, macrostructure, 
microSmall, Microscale, microscope, microstructure
monoOne, singleMonoculture, monopoly
multiMany, Multimedia, multi-level
nonNot, negative of Nonsense, nonessential
overToo much, aboveOverheat, overhead, 
omniEvery, all, totalOmnivorous, omniscient
postBehind, afterPost graduate, postmortem, postoperative
prebeforePreview, pre industrial, 
proIn favor ofProject, proactive, pro feminist
pseudoWrong, false,Pseudo-science, 
retrobackwardsRetrospective, 
semihalfsemicircle
subUnder, part of somethingSubway, submarine, subsection
transAcross, beyondTransist, transcribe, transmit
ultraextremeUltra thin, ultra small, ultrasound
unNot, lacking, opposite ofUnusual, unplug, unfriendly
wellusefulWell written, well designed

Conjunction, Preposition, Adverb, Adjective, Pronoun, மற்றும் Noun பற்றி அறிய

Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil

Preposition with examples in Tamil

Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil

Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples

Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil

Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil

Suffix meaning in Tamil

suffix ஆனது ஒரு வார்த்தையின் இறுதியில் சேர்த்து புது வார்த்தையினை உருவாக்க உதவுகிறது.

suffix ஆனது prefix ஐ போல் பொருளைத் தராமல் வேறு விதத்தில் பொருளைத் தரும்.

suffix ஆனது மூல வார்த்தையின் (root verb) வகுப்பை மாற்றி வேறு ஒரு பொருளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, வினைச்சொல்லின் பின்னால் நாம் suffix ஐ சேர்க்கும்போது பெயர்ச்சொல்லாக மாறுகிறது.

sing – பாடு.

sing + er – singer – பாடகர்.

இங்கு sing என்பது வினைச்சொல். அதனுடன் er ஐ சேர்க்கும்போது அது ஒரு common noun ஆக மாறுகிறது.

Noun suffix with examples in Tamil

1. Freedom – Free + dom

இங்கு free என்பது base or root word ஆகும்.

dom என்பது suffix ஆகும். dom என்பது இங்கு இருக்கும் நிலை என்னும் பொருளைத் தரும்.

dom என்பது இருக்கும் நிலை (State of being) மற்றும் இடத்தை base word க்கு தகுந்தாற்போல் மாறும்.

2. Approval – Approve + al

Approve – root word 

Al – suffix

Al என்பது செயலைக் குறிக்கும்.

மேலும் எடுத்துக்காட்டுகளுக்கு கீழே உள்ள அட்டவணையை காணவும்.

SuffixMeaningExamples
ageconditionMarriage, leakage, passage, dosage
alaction arrival, referral 
cyState, qualityPiracy, privacy, literacy 
domState of being, placefandom, kingdom, moviedom, dukedom
Er, eePerson who performs actionDriver, reader, painter, nominee, employee, 
hoodState of beingParenthood, seniorhood, boyhood, womanhood
ionconditionCollection, communication, perfection, invention, opinion
ismbeliefFeminism, egoism, magnetism
istPerson one who is somethingDentist, scientist, novelist, realist, 
iceThe result of an actionPrejudice, injustice, armistice
logytheoryBiology, psychology, dermatology
mentCondition of an actionExcitement, engagement, disappointment
orperson who does somethingCompetitor, supervisor, contractor, instructor
shipPosition heldOwnership, spaceship, courtship, friendship
Sion, tionState of beingPermission, division, decision, innovation, regulation, exhibition
tudeResult of an actionAptitude, attitude, latitude, altitude
tyqualityCelebrity, charity, liberty, loyalty

Adjective suffix with examples in Tamil

சில root word உடன் suffix ஐ சேர்க்கும்போது அது adjective அதாவது பெயர் உரிச்சொல்லாக மாறும்.

Examples

1. Professional என்பதை நாம் profession + al என பிரிக்கலாம்.

இங்கு profession என்பது root word 

al என்பது suffix.

al எனும் suffix ஐ நாம் சேர்ந்த (belonging to ) என்னும் பொருள் தர வேண்டிய இடங்களில் உபயோகிப்போம்.

2. Golden என்பதை gold + en என பிரிக்கலாம்.

இங்கு gold – என்பது root word.

en என்பது suffix. 

en என்னும் suffix ஐ செய்யப்பட்ட (made off) என்னும் பொருள் தரும் இடங்களில் உபயோகிக்க வேண்டும்.

இது போன்ற மற்ற suffix களை எடுத்துக்காட்டுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SuffixMeaningExamples
ableCapable of beingReadable, believable, sustainable, favourable
alBelonging toProfessional, national, educational
Ar, edqualityfamiliar , circular, gifted, learned
enMade ofWoolen, golden, 
ibleCapable ofVisible, terrible, flexible
icPertaining toEpic, fanatic, ethic, lyric
iveHaving the nature ofCreative, decisive, narrative, detective
lesswithoutFearless, helpless, endless, emotionless
ousCharacterized by an attributeReligious, joyous
yCharacterized byGreedy, wealthy, fishy
fulNotable forDoubtful, shameful, beautiful

Prefix and suffix வார்த்தையில் சேர்ந்து வரும்போது

சில சமயங்களில் நாம் prefix and suffix ஆகிய இரண்டையும் நாம் வார்த்தையில் சேர்க்கும் சூழ்நிலை வரலாம். அத்தகைய சூழ்நிலைகளில் நாம் இரண்டயும் சேர்த்து உபயோகிக்கலாம்.

Example

1. Unhappily – மகிழ்ச்சியற்றது 

இந்த வார்த்தையை நாம் பிரித்தால் un + happy + ly என மாறும்.

இங்கு happy என்பது root or base verb

un என்பது prefix.

ly என்பது suffix.

மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்,

  1. Unhappiness – மகிழ்ச்சியின்மை – un + happy + ness
  2. Rewriter – மீண்டும் எழுதுபவர் – re + write + er
  3. Submarines – sub + marine + s – நீர்மூழ்கி கப்பல்கள் 
  4. Super Powerful – super + power + ful – மிக சக்தி வாய்ந்த 
  5. Dislikement – dis + like + ment – விருப்பமின்மை 
  6. Precooking – Pre + cook + ing – முன்சமையல் 

Prefix and suffix பற்றிய அறிவை improve செய்ய

Prefix and suffix பற்றிய அறிவானது ஆங்கில vocablary ஐ improve செய்ய உதவுகிறது. தெரியாத புதிய வார்த்தைகளையும் அறிய உதவுகிறது.

ஒரு வார்த்தையை எடுத்து அதனை எவ்வாறு பிரிக்க முடியும் என பார்க்கவும். பின்னர் அதன் ஒவ்வொரு பிரிக்கப்பட்ட பகுதியின் பொருளை கண்டறிய முயற்சி செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் prefix and suffix ஐ நன்கு அறியலாம்.

இதனை ஒரு நாளிலோ அல்லது இந்த பதிவினை படிப்பதன் மொள்ளமாகவோ மட்டும் முற்றிலுமாக கற்றுக்கொள்ள முடியாது. தினமும் தொடர்ந்து பல்வேறு வார்த்தைகளை மேலே கூறியவாறு பிரித்து, படிக்கும் போது மட்டுமே நம்மால் தெளிவடைய முடியும்.

நீங்கள் புதிதாக ஒரு வார்த்தையினை காணும்போது மேலே கூறியவாறு அதனை எவ்வாறு பிரிக்கலாம், என்னென்ன எழுத்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது, அது எவ்வாறு வார்த்தையை மாற்றுகிறது என காண ஆரம்பித்தால் ஆங்கில வார்த்தைகள் பற்றியும், புரியாத வார்த்தைகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் புரியவும் உதவும்.

Tense, active and passive voice, direct and indirect speech பற்றி அறிய

Direct speech and Indirect speech in Tamil

Active and Passive voice in Tamil

All 12 Tenses in Tamil with examples

Conclusion

நாம் prefix மற்றும் suffix என்றால் என்ன, பொதுவாக உபயோகிக்கும் prefix மற்றும் suffix மற்றும் அவை எப்படி வாக்கியங்களுடன் சேர்த்து உபயோகிக்க வேண்டும், எப்படி prefix மற்றும் suffix ஐ ஞாபகம் வைத்துக்கொள்வது என எடுத்துக்கட்டுக்களுடன் தெளிவாக பார்த்தோம். இந்த பதிவை படித்தபின் உங்களுக்கு prefix மற்றும் suffix பற்றிய ஒரு நல்ல புரிதலைப் பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன். 

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை கமெண்ட் இல் பதிவு செய்யவும். இது எங்களுக்கு நல்ல உந்துதலைத் தரும்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

7 Responses

  1. 22/07/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  2. 22/07/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  3. 22/07/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  4. 22/07/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  5. 28/07/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  6. 15/08/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

  7. 16/08/2023

    […] Prefix and suffix in Tamil with examples […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *