Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples
Adjective (உரிச்சொல்)
adjective என்பதன் தமிழ் பொருள் உரிச்சொல் என்பதாகும். பெயர்ச்சொல் (noun) மற்றும் பிரதிப் பெயர்ச்சொல்லை (pronoun) விவரித்துக் கூற நாம் இந்த Adjectives (உரிச்சொற்கள்) உபயோகப்படுத்துகிறோம். .
மக்கள், இடங்கள், மற்றும் பொருட்களினை பற்றி கூடுதல் தகவல்களை தருகிறது. அதாவது அவற்றின் குணத்தை பற்றி, அளவை பற்றி, நிறத்தை பற்றி, எதனால் ஆனது என்பது பற்றி கூடுதலான தகவலை தர பயன்படுகிறது.
Adjective ஐ பற்றி அறிவதற்கு முன் நாம் பெயர்ச்சொல் (noun) மற்றும் பிரதிப் பெயர்ச்சொல்லை (pronoun) பற்றி தெளிவாக அறிய வேண்டும். ஏனெனில் இது இந்த இரண்டை பற்றி விவரித்து கூற உதவுகிறது. noun மற்றும் pronoun பற்றி அறிய கீழ் உள்ளவற்றை படிக்கவும்.
Examples of adjectives
- a small cat. – ஒரு சிறிய பூனை. (இங்கு பூனை என்பது பெயர்ச்சொல். சிறிய என்று பூனையின் உருவத்தை குறிப்பிட பயன்படுத்தி உள்ளோம். இந்த சிறிய என்பது adjective ஆகும்.)
- a wise man. – ஒரு புத்திசாலி மனிதன்.
- Your drawing is beautiful. – உனது ஓவியம் அழகாக இருக்கிறது.
- an old building – ஒரு பழைய கட்டிடம்.
Adjective பத்தின உங்க புரிதலை தெரிஞ்சுக்க இந்த Test ஐ try பண்ணுங்க – Adjective Quiz
kinds of adjectives
- Describing Size of people or things
- Describing Color of things
- Describing Quality of people or things
- Adjectives based on what things are made of
- Adjectives of origin.
Describing the size of people or things.
சில உரிச்சொற்கள் மக்கள் அல்லது பொருட்களின் அளவை பற்றி குறிப்பிட உதவுகின்றன. இந்த அளவுகள் என்பது சிறியது, பெரியது, நடுத்தர அளவு போன்றவற்றை குறிக்கும்.
Examples
- a high mountain – ஒரு உயரமான மலை
- a big house – ஒரு பெரிய வீடு.
- a tall man – ஒரு உயரமான மனிதன்.
- a short woman – ஒரு குள்ளமான பெண்மணி.
- a fat boy – ஒரு பருத்த பையன்.
Describing the color of things
சில உரிச்சொற்கள் பொருட்களின் நிறங்களினை பற்றி குறிப்பிட உதவுகின்றன. கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் மற்ற நிறங்கள் என எந்த நிறமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
Examples
- a black dog – ஒரு கருப்பு நாய்.
- a red carpet – ஒரு சிவப்பு கம்பளம்.
- a blue ribbon – ஒரு நீல ரிப்பன்.
- Blue shocks – நீல நிற காலுறைகள்.
Describe the quality of people or things
சில உரிச்சொற்கள் மக்கள் அல்லது பொருட்களின் குணங்களை(தன்மையை) பற்றி குறிப்பிட உதவுகின்றன. குணங்கள் என கூறும்போது அழகு, ஆளுக்கு, குளுமை, சூடு, இளமை, வயது போன்ற குணங்களும் மற்ற வகையான குணங்களும் இதில் அடங்கும்.
Examples
- a handsome girl – ஒரு அழகான பெண்.
- an ugly dog – ஒரு அழுக்கான நாய்.
- a beautiful song – அழகான பாடல்.
- a wonderful movie – அருமையான திரைப்படம்.
- a hot water – சுடு தண்ணீர்.
- an old aunt – வயதான அத்தை.
Adjective based on what things are made of
சில உரிச்சொற்கள் ஒரு பொருள் எதனால் செய்யப்பட்டு உள்ளது என்பது பற்றி குறிப்பிட உதவுகின்றன. இது பெரும்பாலும் அந்த பொருளின் மூலத்தினை குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டுக்கு உலோகங்கள், மரங்கள், செயற்கை மூலதனங்கள் என பலவற்றை கூறலாம்.
Examples
- a plastic bag – ஒரு பாலிதீன் பை.
- a brick wall – ஒரு செங்கல் சுவர்.
- a silk saree – ஒரு பட்டு புடவை
- a steel door – ஒரு இரும்பு கதவு.
- a gold ring – தங்க மோதிரம்.
Adjective of origin
சில உரிச்சொற்கள் ஒரு நபர் அல்லது பொருள் எந்த நாட்டில் இருந்து வந்தது அல்லது உருவானது என்பது பற்றி கூற உதவுகின்றன. அதாவது அந்தந்த நாட்டில் அவை புகழ் மிக்கவையாக இருக்கும். அதனால் அந்ததந்த நாட்டின் பெயருடன் சேர்த்து கூறுவோம். உணவு, கலை, செறுடை, பழக்கவழக்கங்கள் என எதுவாகவும் இருக்கலாம்.
Examples
- The french fries – பிரன்ச் பிரைஸ்
- An Indian temple – ஒரு இந்திய ஆலயம்.
- An Australian kangaroo – ஆஸ்திரேலிய கங்காரூ.
- Chinese food – சைனிஸ் உணவு
- a British uniform – பிரிட்டிஷ் சீருடை.
The Order of Adjective – Adjective ஐ வாக்கியத்தில் வரிசைப்படுத்த
சில சமயங்களில் ஒரு வாக்கியத்தில் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட உரிசொற்களை பயன்படுத்தும் சூழ்நிலை வரலாம். அவ்வாறு வரும் போது அதை எவ்வாறு வரிசைப்படுத்தி உபயோக்கிக்க வேண்டும் என காண்போம்.
கீழ்க்கண்ட வரிசையின் அடிப்படியிலேயே நாம் உபயோக்கிக்க வேண்டும்.
அளவு (Size), தரம் (Quality), நிறம் (Color), தோற்றம் (Origin), பொருட்கள் (Substances).
Example 1
a big blue steel box.
Big – Size
Blue – Color
Steel – material
Example 2
a large and beautiful Indian temple.
Large – size
Beautiful – Quality
Indian – Origin
Adjective endings
adjectives ஆனது ஒரு சில வகை எழுத்துக்களை கொண்டு முடியும். எடுத்துக்காட்டுக்கு ful, less, y, ous, al, ing என பல வகைகளில் முடியும். அவை என்னென்ன என்பதைப்பற்றி எடுத்துக்காட்டுகளுடன் இங்கு காண்போம்.
Some adjectives end in -ful
ஒரு noun or pronoun அதன் அளவு அதிகமாக அல்லது முழுவதும் உள்ளது என்பதை குறிப்பிட இந்த adjective பயன்படுகிறது.
Examples
- a faithful dog (lot of faith) – ஒரு நம்பிக்கையான நாய்.
- a careful mother – கவனமுள்ள ஒரு தாய்.
- a useful book – ஒரு பயனுள்ள புத்தகம்.
- Cheerful fans – உற்சாகமான ரசிகர்கள்
- a beautiful heart. – அழகானமனது.
Some adjectives end in -less
இந்த adjective மேலே பார்த்த -ful adjective க்கு எதிரானது. அதாவது இது ஒரு noun or pronoun குறைவாக உள்ளது என்பதை குறிப்பிட பயன்படுகிறது.
Examples
- a careless worker – ஒரு கவனக்குறைவான வேலையாள்.
- a useless book – பயனற்ற ஒரு புத்தகம்.
- Cheerless fans – உற்சாகமில்லாத ரசிகர்கள்.
- a faithless worker – நம்பிக்கையில்லாத தொழிலாளி.
- a leafless tree (without leafs) – இலையில்லாத ஒரு மரம்.
Some adjectives end in – y
- a noisy vehicle – சத்தமுள்ள ஒரு வாகனம்.
- a lazy worker – சோம்பேறித்தனமான தொழிலாளி.
- An easy exam – எளிமையான தேர்வு.
- Cleanly hands – சுத்தமான கைகள்.
- a stormy sea – சீற்றமான கடல்.
Some adjectives end in – ous
- a dangerous route – கடுமையான வழி
- a humorous man – நகைச்சுவையான மனிதர்.
- a famous story teller – சிறந்த கதைசொல்லி.
- a poisonous snake – விசமுள்ள பாம்பு.
Some adjectives end in – al
- a national bird – தேசியப் பறவை.
- Personal trainer – தனிப் பயிற்சியாளர்.
- Magical power – மந்திர சக்தி.
- a traditional dress – பாரம்பர்ய உடை.
Some adjectives end in -ing
- Loving family – அன்பான குடும்பம்.
- a caring mother – பாசமான தாய்.
- a cunning fox – தந்திரமான நரி.
- Smiling face – சிரித்த முகம்.
Some adjectives that end in -ic, -ish, -ible, -able, -ive and -ly
- a fantastic dancer – அற்புதமான நடனக் கலைஞர்.
- a romantic partner – ஒரு காதல் துணை
- Basic grammar – அடிப்படை இலக்கணம்.
- Foolish character – முட்டாள்தனமான குணம்.
- Childish behavior – குழந்தைத்தனமான பண்பு.
- a terrible gameplay – பயங்கரமான விளையாட்டு.
- Horrible movie – பயங்கரமான திரைப்படம்.
- Comfortable clothes – சௌகரியமான ஆடைகள்.
- Valuable things – மதிப்புமிக்க பொருட்கள்.
- Expensive car – விலையுயர்ந்த மகிழுந்து.
- Talkative friends – அதிகமாக பேசும் நண்பர்கள்.
- a lovely dress – அழகான உடை
- a lively dog – உற்சாகமான நாய்.
Comparison of adjective
Comparative forms of adjective
இரண்டு பெயர்ச்சொற்களை ஒப்பீடு செய்யும் போது இந்த comparative forms of adjectives உதவுகிறது.
இந்த comparative forms of adjectives பெரும்பாலும் -er என்றே முடியும்.
comparative forms of adjectives குறிப்பிடும் போது அதனுடன் than என்ற வார்த்தையை -er க்கு பின்னால் உபயோகிக்க வேண்டும்.
Examples
- Big – bigger
- Cheap – cheaper
- Football is bigger than a cricket ball.
Superlative forms of adjectives.
மூன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட பெயர்ச்சொற்களை ஒப்பீடு செய்யும் போது இந்த superlative forms of adjectives உதவுகிறது.
இந்த superlative forms of adjectives பெரும்பாலும் -est என்றே முடியும்.
superlative forms of adjectives குறிப்பிடும் போது அதனுடன் the என்ற வார்த்தையை superlative forms of adjectives க்கு முன்னால் உபயோகிக்க வேண்டும்.
Examples
- Tall – Taller – Tallest
- Short – Shorter – shortest.
- Praba is the smartest student in his class.
எளிமையாக கூற வேண்டுமானால், விளக்கை சந்திரனுடன் ஒப்பிடும் பொது Moon is brighter than the lamp என கூறுவோம். அதுவே அந்த விளக்கையும், சந்திரனையும் சூரியனுடன் ஒப்பிடும் போது The sun is the brightest thing in the world என கூறலாம்.
Adjective பத்தின உங்க புரிதலை தெரிஞ்சுக்க இந்த Test ஐ try பண்ணுங்க – Adjective Quiz
மேலும், இந்த Comparison of adjectives பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம். மேலும் இது போன்ற ஆங்கில இலக்கணத்தின் மற்ற பிரிவுகளை தெளிவாக அறிந்துகொள்ள நமது மற்ற பதிவுகளை காணவும்.
Conclusion
நாம் இந்த பதிவில் adjectives எனப்படும் உரிச்சொல் என்றால் என்ன, அவற்றின் வகைகள், எங்கெங்கு உபயோகிக்க வேண்டும், எவ்வாறு adjectives முடியும் என்பது பற்றி எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்கி இருக்கிறோம். இது உங்களுக்கு adjectives பற்றிய ஒரு நல்ல புரிதலை தரும் என நம்புகிறேன். இந்த Adjective and its types பற்றிய உங்கள் கருத்துக்களை comments இல் தெரிவிக்கவும். இது எங்களுக்கு இது போன்ற பல பதிவுகளை இட ஊக்குவிக்கும்.
உங்களுக்கு இந்த adjectives பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை comment இல் பதிவிடுங்கள். உங்கள் சந்தேகங்களை தெளிவாக்க உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நன்றி! வணக்கம்.