Articles (பெயர்சொற்குறிகள்) & its types in Tamil with examples

Home Basic Grammar Articles (பெயர்சொற்குறிகள்) & its types in Tamil with examples

complete guide to articles & its types with perfect examples

Articles

Articles என்பதன் தமிழ் பொருள் பெயர்சொற்குறிகள் ஆகும். இந்த பெயர்சொற்குறிகள் பெரும்பாலும் பெயர்ச்சொல்லுக்கு முன்பு வரும். ஒரு பெயர்ச்சொல்லை(nouns) குறிப்பிட்டு சுட்டிகாட்ட இந்த articles பயன்படுகிறது.

ஆனால், ஒரு சில பெயர்ச்சொல்லுக்கு (nouns) முன்பு articles வராது.

ஆங்கிலத்தில் மூன்று articles மட்டுமே உள்ளன. அவை, a, an, the ஆகும்.

இந்த a, an, the என்றல் என்ன எங்கு உபயோக்கிக்க வேண்டும், எங்கு உபயோகிக்க கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

Articles பற்றி அறிய noun அதாவது பெயர்ச்சொல் பற்றிய தெளிவு அவசியம். எனவே noun பற்றி தெரிந்து கொள்ள இதனை படிக்கவும்.

Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil

Types of articles

இந்த article ஆனது இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

  1. Definite articles – நிச்சயமான பெயர்சொற்குறி
  2. Indefinite articles – நிச்சயமற்ற பெயர்சொற்குறி

Definite article

The – Definite article

நாம் the article ஐ ஒருமை மற்றும் பன்மை என இரு பெயர்சொற்களிலும் உபயோகிக்கலாம்.

நிச்சயமான பெயர்சொற்குறியானது (Definite articles)  the என்ற சொல்லை மட்டுமே கொண்டுள்ளது. இங்கு நாம் a அல்லது an ஐ உபயோகிக்க கூடாது.

நாம் மற்றொருவருடன் பேசும் போது இருவருக்கும் தெரிந்த ஒரு பொருளையோ, நபரையோ குறிப்பிடும்போது அந்த பெயர்ச்சொல்லுக்கு முன்னால் கண்டிப்பாக the article ஐ உபயோக்கிக்க வேண்டும்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது நபரை பற்றி பேசும் போது நாம் கண்டிப்பாக the article ஐ உபயோக்கிக்க வேண்டும்.

Examples of definite article

  1. The lady – அந்த பெண் / இந்த பெண்  
  2. The bus – அந்த பேருந்து / இந்த பேருந்து 
  3. The radio – அந்த வானொலி / இந்த வானொலி 
  4. Turn the radio on now.- அந்த வானொலியில் சத்தத்தை அதிகமாக்கு.
  5. The bus is making a loud noise.- அந்த பேருந்து அதிக சத்தத்தை ஏற்படுத்துகின்றது.

“The” article ஐ எப்போது உபயோகிக்க வேண்டும்?

1. The – article ஆனது superlative adjectives க்கு முன்பு கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. One of the tallest boys
  2. The cutest baby!

2. The – article ஆனது புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயர்களுக்கு (famous buildings names) முன்பு வரும்.

Examples

  1. The Qotb Minar
  2. The Taj Mahal

3. The – article ஆனது மிகவும் பழமையான, புனிதத்தன்மை உள்ள புத்தகங்களின் (old, holy books) பெயர்களுக்கு முன்னால் வரும்.

Examples

  1. The Bible
  2. The bhagavad or the bhagavad geetha

4. The – article ஆனது உயரிய பதவிகளின் (higher job positions) பெயருக்கு முன்னால் உபயோகிக்கலாம்.

Examples

  1. The CEO
  2. The Dean

5. The – article இசைக்கருவிகளின் பெயர்களுக்கு முன்னால் வரும்.

Examples

  1. The piano
  2. The violin

6. The -ஆனது அனைத்து திசைகளின் பெயர்களுக்கு முன்னால் உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. The south
  2. The north
  3. The east
  4. the west.

7. இந்த உலகத்தில் ஒன்றே ஒன்று தான் உள்ளது என்ன இருக்கும் பொருட்களைக் குறிப்பிடும் பொது அதற்கு முன் நாம் the article ஐ உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. The sun
  2. The moon
  3. The sky
  4. The earth

8. ஒரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது பிரதேசங்களை குறிப்பிடும்போது நாம் the உபயோகிக்கக்கூடாது. ஆனால் குழுக்களாக உள்ள நாட்டினையோ (a group of countries like states, republics, and kingdoms) அல்லது குழுக்களாக உள்ள பிரதேசங்களையோ நாம் கண்டிப்பாக The உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. The China is wrong. We have to write China only.
  2. The united states of america
  3. The United Kingdom

9. உலகில் உள்ள குறிப்பிட்ட இடங்கள் ( Points on the globe)

உலகில் உள்ள இடங்களை குறிப்பிட்டு கூறும் இடங்களில் அந்த இடங்களுக்கு முன் நாம் the உபயோகிக்க வேண்டும்.

Example : the south pole (தென் துருவம்)

10.   மலைத் தொடர்கள் (Mountain ranges)

மலைத்தொடர்கள் பற்றி பேசும் இடங்களில் நாம் கண்டிப்பாக the பெயர்சொற்க்குறியை உபயோகிக்க வேண்டும்.

Example : The Himalayas

11. Island chains

ஒன்றுடன் ஒன்று இணைந்த தீவுகள் அல்லது சங்கிலி தீவுகள் ஆகியவற்றை பற்றி பேசும் இடங்களில் நாம் the என்னும் article ஐ உபயோகிக்க வேண்டும். இங்கு a அல்லது an உபயோகிக்க கூடாது.

Example : The Pacific Islands

12. Geographical areas (புவியியல் பகுதிகள்)

புவியியல் பகுதிகள் (Geographical areas) பற்றி குறிப்பிடும் இடங்களில் நாம் கண்டிப்பாக the என்னும் article ஐ உபயோகிக்க வேண்டும்.

Example : The North

13. Group of lakes (குழு ஏரிகள்)

குழுக்களாக இருக்கும் ஏரிகளை குறிப்பிடும் இடங்களில் நாம் the article ஐ உபயோகிக்க வேண்டும். இங்கு நாம் a அல்லது an ஐ உபயோகித்தால் அது தவறாகி விடும்.

Example : The Great Lakes

14. Rivers, seas, oceans (ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள்)

ஆறுகள், கடல்கள், மற்றும் பெருங்கடல்கள் பற்றி குறிப்பிடும் இடங்களில் நாம் the என்னும் பெயர்ச்சொற்குறிகளை உபயோகிக்க வேண்டும்.

Example : The Indian ocean, The Nile river

15. Deserts (பாலைவனங்கள்)

பாலைவனங்களை பற்றி குறிப்பிடும் இடங்களில் நாம் இந்த the என்னும் நிச்சயமான பெயர்ச்சொற்குறியை உபயோகிக்க வேண்டும்.

Example : The Sahara desert.

எப்போது THE Article ஐ உபயோகிக்கக்கூடாது?

மேலே நாம் எங்கெங்கு the பெயர்ச்சொற்குறிகளை உபயோகிக்க வேண்டும் என பார்த்தோம். இங்கு எந்தெந்த இடங்களில் உபயோக்கிக்க கூடாது என்பதை ஒவ்வொன்றாக தெளிவாக காண்போம்.

1. Continents (கண்டங்கள்)

ஏதாவது ஒரு கண்டத்தின் பெயரை குறிப்பிடும் போது the உபயோகிக்கக் கூடாது.

Example : Asia 

2. Mountains (மலைகள்)

மலைகளின் பெயரை குறிப்பிடும் போது the article வராது.

Example : Everest 

3. Islands (தீவுகள்)

தனி தீவின் பெயரை குறிப்பிடும்போது நாம் the பெயர்ச்சொற்குறியை உபயோகிக்க கூடாது. கூட்டமாக இருக்கும் தீவுகளை குறிக்க the உபயோகிக்கலாம்.

Example : andaman nicobar island

4. Streets (தெருக்கள்)

தெருக்களை குறிப்பிடும்போது the என்னும் article ஐ உபயோகிக்க கூடாது.

Example : Ranganathan Street 

5. Cities and towns (நகரங்கள்)

நாம் எங்கெல்லாம் இந்த நகரங்களின் பெயர்களை குறிப்பிடுகிறோமோ அங்கு இந்த the என்னும் பெயர்ச்சொற்குறிகளை உபயோகிக்க கூடாது.

Example : Coimbatore

6. States (மாநிலங்கள்)

மேலே கூறியது போல நகரங்களை குறிப்பிடும்போது எப்படி உபயோகிக்க கூடாதோ அதே போல் மாநிலங்களை குறிப்பிடும்போதும் நாம் the வை உபயோகிக்க கூடாது.

Example : Tamil Nadu 

7. Lakes (ஏரிகள்)

ஏரிகளை பற்றி குறிப்பிட்டு சொல்லும் இடங்களில் நாம் இந்த the என்னும் பெயர்ச்சொற்குறிகளை உபயோகிக்க கூடாது.

Example : Veeraanam Lake

Tense, preposition, conjunction, Active & passive voice பற்றி அறிய

All 12 Tenses in Tamil with examples
Preposition with examples in Tamil
Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil
Active and Passive voice in Tamil

Indefinite articles

Indefinite articles ஐ தமிழில் நிச்சயமற்ற பெயர்சொற்குறி என கூறலாம்.

Indefinite articles (நிச்சயமற்ற பெயர்சொற்குறி) a மற்றும் an ஆகும்.

நாம் ஒருமை பெயர்ச்சொல்லுக்கு (singular noun) மட்டுமே இந்த indefinite articles ஐ உபயோகிக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியாத ஒரு நபரையோ அல்லது பொருளையோ பற்றி பேசும் போது Indefinite articles ஐ உபயோகிக்க வேண்டும்.

ஆங்கில மெய் எழுத்துக்கள்(consonants) வரும் இடங்களில் நாம் a வை உபோகிக்க வேண்டும்.

example : a pen, a man, a shirt.

ஆங்கில உயிர் எழுத்துக்கள்(vowels) வரும் இடங்களில் நாம் an வை உபோகிக்க வேண்டும்.

Example : an elephant.

VOWEL sound nouns கண்டறிவது எப்படி?

ஆங்கில உயிர் எழுத்துக்கள் (vowel) வரும் இடங்களில் அல்லது noun உச்சரிக்கும்போது முதல் எழுத்தின் ஒலி உயிரெழுத்துடன் ஒலித்தாலோ நாம் an ஐ உபயோகிக்க வேண்டும்.

Example : an auto, an elephant, an event.

ஆங்கில உயிர் எழுத்துக்கள் (vowel) : a, e, i, o ,u

ஆங்கில மெய் எழுத்துக்கள்(consonant) : vowel எழுத்துக்களை தவிர மீதம் உள்ள 21 எழுத்துக்கள்.

Consonant words இன் முதல் எழுத்தானது vowel sound இல் தொடங்குகிறதா என குழப்பம் இருப்பின் நாம் தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலியினை கொண்டு கண்டறியலாம்.

தமிழ் உயிரெழுத்துக்கள் – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஒள. ஒரு noun ஆனது இந்த உயிர் எழுத்துக்களின் ஒலியைக் கொண்டு தொடங்கினால் நாம் தாராளமாக an ஐ உபயோகிக்கலாம்.

Example:

  1. a honest sentence is wrong.

an honest sentence is right.

Honest = ஆனஸ்ட். இங்கு முதல் எழுத்து ஆ என்னும் தமிழ் உயிரெழுத்துடன் தொடங்குகிறது. எனவே நாம் an உபயோகிக்க வேண்டும்.

  1. An european is wrong

            a european is right.

European = யூரோபியன். முதல் எழுத்தின் ஓசை தமிழ் எழுத்தின் உயிர் எழுத்துடன் வர வில்லை. எனவே a european என்பதே சரி.

  1. an LCD display
  2. an HR company
  3. a URL
  4. a UK based company.

மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களின் ஓசையுடன் தொடங்குவதன் எடுத்துக்காட்டுகள் hour, honor, இங்கு நாம் an hour, an honor என குறிப்பிடலாம்.

Articles ஐ Pronouns உடன் உபயோகிக்கலாமா?

நாம் பொதுவாக ஒரு பொருளை குறிப்பிட articles ஐ உபயோகிப்போம். இதே பணியைத்தான் pronounsஉம் செய்கிறது. எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது தவறு.

Example : What are you doing in the my room என்பது தவறு. இதை article அல்லது pronoun ஏதாவது ஒன்றை உபயோகித்து சரி செய்யலாம்.

What are you doing in my room என்பது சரி.

What are you doing in the room என்பதும் சரி.

Articles தவிர்க்கப்பட வேண்டிய இடங்கள் (Omission of Articles)

ஒரு சில இடங்களில் நாம் a, an, the என எந்த articles உம உபயோகப்படுத்தக் கூடாது. அவை என்னென்ன என இங்கு காண்போம்.

1. Before uncountable nouns (கணக்கிட முடியாத பெயர்சொற்கள்)

பொதுவாக ஒரு கணக்கிட முடியாத பெயர் சொற்கள் வரு இடங்களில் நாம் articles ஐ உபயோகிக்க மாட்டோம். அனால் இது நாம் அதை பொதுவாக கூறும்போது மட்டுமே ஆகும்.

Uncountable nounsஐ குறிப்பிட்டு கூறும்போது நாம் கண்டிப்பாக article the வை உபயோகிக்க வேண்டும்.

Example :

  1. Salt is good for food taste.
  2. Honey is sweet.
  3. Give me some water.
  4. Give me a bottle of water. (Here we mentioned the uncountable things in terms of countable units.)

2. Before plural countable nouns (கணக்கிட கூடிய பன்மை பெயர்சொற்கள் முன்பு)

plural countable nouns ஆனது வாக்கியத்தில் பொதுவானதாக வரும்போது நாம் எந்த articles ஐயும் உபயோகிக்கத் தேவை இல்லை. 

ஆனால், plural countable nouns ஐ குறிப்பிட்டு கூறும் போது நாம் The article ஐ உபயோகிக்க வேண்டும்.

Example

  1. Computers are useful machines.
  2. Children usually cry a lot.

3. உணவுகளின் பெயர்களுக்கு முன்னால் நாம் articles ஐ உபயோகிக்கக்கூடாது.

  1. example 
  2. Breakfast,
  3. dinner,
  4. lunch

4. மொழிகளுக்கு முன்னால் நாம் articles ஐ உபயோகிக்கக்கூடாது.

Example :

  1. Tamil
  2. English
  3. Hindi

நாம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், புனித இடங்கள், சிறை போன்றவற்றை பொதுவாக கூறும் போது நாம் எந்த articles ஐயும் உபயோகிக்கத் தேவை இல்லை. அனால், அவற்றை குறிப்பிட்டு கூறும்போது articles ஐ கட்டாயம் உபயோகிக்க வேண்டும்.

Conclusion

இந்த பதிவானது articles என்றால் என்ன, அதன் வகைகள், எங்கு உபயோகிக்க the வேண்டும், எங்கு a, an உபயோகிக்கவேண்டும், எங்கு எந்தெந்த article உபயோகிக்கக்கூடாது, எந்த இடங்களில் article ஐ உபயோகிக்கவே கூடாது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக பார்த்தோம். இது உங்களுக்கு article பற்றிய தெளிவான ஒரு புரிதல் தந்திருக்கும் என நம்புகிறேன்.

இனி வரும் பதிவுகளில் ஆங்கில இலக்கணத்தின் மற்ற பிரிவுகளை காண்போம்.

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை comment இல் தெரிவிக்கவும். உங்களுக்கு ஏதேனும் இது சம்பந்தமாக சந்தேகம் இருப்பினும் நீங்கள் comment இல் பதிவு செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

நன்றி!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *