Conjunctions (இணைப்புச் சொற்கள்) Meaning in Tamil

Home Basic Grammar Conjunctions (இணைப்புச் சொற்கள்) Meaning in Tamil

ஆங்கிலத்தில் சொற்கள் மற்றும் சொற்றொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் Conjunctions (இணைப்புச் சொற்கள்) எனப்படுகின்றன.

Conjunctions and its types with examples in Tamil

பொதுவாக மூன்று வகை இணைப்புச்சொற்களை நாம் உபயோகிப்போம். அவையாவன,

  1. And (மற்றும்)
  2. Or (அல்லது)
  3. But (ஆனால்)

இது இல்லாமல்,

  1. Conjunctions of time (கால இணைப்புச் சொற்கள்)
  2. Conjunctions of reason (காரண இணைப்புச்சொற்கள்)
  3. Conjunctions of place (இட இணைப்புச்சொற்கள்)
  4. Conjunctions of purpose (நோக்க இணைப்புச்சொற்கள்)

என 4 வகை இணைப்பு சொற்கள் வகைகள் உள்ளன. மேலே கூறிய 3 மற்றும் இந்த 4 என மொத்தம் இந்த ஏழு வகை இணைப்புசொற்களை இந்த பதிவில் தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.

Table of Contents

And (மற்றும்)

and என்பதன் தமிழ் பொருள் மற்றும் ஆகும். இது இரண்டு ஒத்த பொருளுடைய வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை இணைத்து ஒரே வாக்கியமாக மாற்ற உதவுகிறது.

AND Conjunction with Examples in Tamil

ஒரே மாதிரியான சொற்களை இணைக்க

And ஆனது ஒரே மாதிரியான அல்லது ஒத்த சொற்களை இணைக்கப் பயன்படுகிறது. 

Examples

  1. We buy sweets and chocolates from the grocery store. – நாங்கள் மளிகைக் கடையில் இனிப்புக்கள் மற்றும் சாக்லேட் வாங்குகிறோம்.
  2. We planned to visit cities and villages. – நாங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
  3. The sofa is soft and comfortable. – சோபா மென்மையாக மற்றும் வசதியாக உள்ளது.
  4. I like fishing and eating. – எனக்கு மீன் பிடிக்க மற்றும் உண்ணப் பிடிக்கும்.
  5. My hobbies are skiing and scuba diving. – என்னுடைய பொழுதுபோக்குகள் பனிச்சறுக்கு மற்றும் ஸ்கூபா டைவிங்.

ஒத்த சொற்றொடர்களை இணைக்க

And ஆனது ஒத்த சொற்றொடர்களை இணைக்கப் பயன்படுகிறது.

Examples

  1. We like going shopping and watching movies. – நாங்கள் ஷாப்பிங் செல்லவும் திரைப்படம் பார்க்கவும் விரும்புகிறோம்.
  2. Most of my shoes are dirty and need to be stitched. – என்னுடைய பெரும்பாலான காலணிகள் அழுக்காகவும் தைக்க வேண்டியதாகவும் உள்ளது.
  3. The house looks nice and fresh. – வீடு அழகாக மற்றும் புதியதாக தெரிகிறது.

இரு ஒத்த வாக்கியங்களை சேர்த்து ஒன்றாக்க

நாம் and ஐ உபயோகித்து இரண்டு ஒத்த வாக்கியங்களை சேர்த்து ஒரு வாக்கியமாக மாற்றலாம். இதற்க்கு கூட்டு வாக்கியம் (compound sentence) என்று பொருள்.

Examples

1. I am working in my room. Haran is playing in the garden.

I am working in my room and Haran is playing in the garden.

நான் எனது அறையில் வேலை செய்துகொண்டு இருக்க கரன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறான்.

2. Anirudh is playing music. Dhanush is acting in a movie.

Anirudh is playing music and Dhanush is acting in a movie.

அனிருத் இசையமைக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார்.

பல ஒத்த வார்த்தைகள் வரும்போது

ஒரு வாக்கியத்தில் பல்வேறு ஒத்த வார்த்தைகள் வரும்போது நாம் and ஐ உபயோகிக்கலாம். ஒவ்வொரு வார்த்தைக்கு இடையே நாம் காற்புள்ளி(comma) உபயோகிக்க வேண்டும்.

பின்பு கடைசி இரண்டு வார்த்தைகளுக்கு இடையே and உபயோக்க வேண்டும்.

Examples

  1. We are going to buy sweets, snacks, groceries, and vegetables. – இனிப்புக்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்கப்போகிறோம்.
  2. This event was conducted by Haran, Rajan, Aniruth, and Dhanush. – இந்த நிகழ்ச்சியை கரன், ராஜன், அனிருத் மற்றும் தனுஷ் நடத்தினர்.
  3. Tomorrow I have to go to the office, assign a task to my team, and attend a meeting with management. – நாளை நான் எனது அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். என்னுடைய அணிக்கு வேலைகளை ஒதுக்க வேண்டும் மற்றும் நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

And இன் வேறு சொற்கள்

நாம் and ஐ Not only But also, As well as, Both எனவும் அழைக்கலாம். அவற்றைப்பற்றி எடுத்துக்காட்டுகளுடன் கீழே கொடுத்துள்ளேன். அதை கவனியுங்கள்.

Not only But also

He cleaned the room. He put all the things in their places. – அவன் அறையை சுத்தம் செய்தான். அவன் எல்லா பொருட்களையும் அதனுடைய இடத்தில வைத்தான்.

என்பதை Not only.. But ..also… ஐ கொண்டு எழுதும்போது

He not only cleaned the room, but he also put the things in their places. – அவன் அறையை சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல் எல்லா பொருட்களையும் அதனுடைய இடத்தில் வைத்தான்.

As well as

1. They visited Chennai. They visited Mumbai. – அவர்கள் சென்னைக்கு சென்றனர். அவர்கள் மும்பைக்கு சென்றனர்.

என்பதனை as well as கொண்டு கீழ்கண்டவாறு மாற்றி எழுதலாம்.

They visited Chennai as well as Mumbai. – சென்னைக்கு மட்டுமின்றி மும்பைக்கும் அவர்கள் சென்றனர்.

Both

1. Haran cooks faster than Anirudh. He cooks faster than Dhanush too. – அனிருத்தை விட கரன் வேகமாக சமைப்பார். அவன் தனுஷை விடவும் வேகமாக சமைப்பார்.

எனபதனை both இன் உதவியுடன் கீழ் உள்ளவாறு எழுதலாம்.

Haran cooks faster than both Anirudh and Dhanush. – அனிருத் மற்றும் தனுஷை விட கரன் வேகமாக சமைப்பார்.

Preposition, Adverbs, Adjective, Pronoun, Noun பற்றி அறிய

Preposition with examples in Tamil

Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil

Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples

Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil with examples

Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil

But (ஆனால்)

But என்பதன் தமிழ் பொருள் ஆனால் என்பதாகும். தொடர்பில்லாத மற்றும் பொதுவாக ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களை அல்லது சொற்தொடரை இணைக்க “but” ஐ உபயோகிக்கலாம்.

How to Use BUT Conjunction with Examples in Tamil

Examples

  1. The teacher is very strict but takes care of her students. – ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர், ஆனால் தனது மாணவர்களை நன்றாக கவனித்துக் கொள்வார்.
  2. He speaks loudly but clearly. – அவன் சத்தமாக ஆனால் தெளிவாக பேசுகிறான்.
  3. She plays always but scores very well in the exams. – அவள் எப்போதும் விளையாடுகிறாள் ஆனால் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பாள்.
  4. The weather was cold but partly warm. – வானிலையானது குளிர்ச்சியாக இருந்தது ஆனால் ஓரளவு சூடாகவும் இருந்தது.
  5. The singers are talented but very young. – பாடகர்கள் நல்ல பாடும் திறன் உள்ளவர்கள் ஆனால் வயது குறைவு.
  6. Some people are big but gentle. – சிலர் பெரிய உருவத்தில் இருப்பார்கள் ஆனால் மென்மையானவர்கள்.

எதிர் சொற்றொடர்களை இணைக்க

but ஆனது மேலே கூறியவாறு ஒன்றுக்கொன்று எதிரான சொற்றொடர்களை இணைக்கப் பயன்படுகிறது.

Examples

  1. I am older than Anirudh but younger than Dhanush. – நான் அனிருத்தை விட வயதில் பெரியவன் ஆனால் தனுஷை விட சிறியவன்.
  2. This vehicle is very old but drives well. – இந்த வண்டியானது மிகவும் பழையது ஆனால் நன்றாக ஓடுகிறது.

ஒரே வாக்கியமாக மாற்ற

நாம் but ஐ உபயோகித்து எதிரெதிராக இரண்டு வாக்கியங்களை சேர்த்து ஒரு வாக்கியமாக மாற்றலாம். இதற்க்கு கூட்டு வாக்கியம் (compound sentence) என்று பொருள்.

Examples

1. I switched on the internet on my phone. I did not receive any notification after that. என்பதை கீழே உள்ளவாறு ஒரே வாக்கியமாக மாற்றலாம்.

I switched on the internet on my phone, but did not receive any notification after that.

நான் என்னுடைய கைபேசியில் இணையத்தை தொடங்கினேன் ஆனால் எந்த தகவலும் எனக்கு வரவில்லை.

2. He phoned Anirudh. He was not in the music room. என்பதை கீழே உள்ளவாறு ஒரே வாக்கியமாக மாற்றலாம்.

He phoned Anirudh, but he was not in the music room.

நான் அனிருத்துக்கு போன் செய்தேன் ஆனால் அவன் இசையமைப்பு அறையில் இல்லை.

But இன் வேறு சொற்கள்

But ஐ நாம் Although, Even though, Though, While எனவும் வாக்கியத்தில் உபயோகிக்கலாம். இவையும் but தரும் அதே பொருளையே தரும். கீழே ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்கட்டுக்களுடன் விளக்கி இருக்கிறேன்.

Although (இருந்தாலும்)

Grandma is old but very active.

எனது பாட்டி வயதானவர் ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

இந்த வாக்கியத்தை Although வை கொண்டு கீழ் உள்ளவாறு மாற்றலாம்.

Although Grandma is old, she is very active.

பாட்டிக்கு வயதாகி இருந்தாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

Even though (கூட)

The dessert was more oily but tasty. – இனிப்பில் அதிக எண்ணெய் ஆனால் சுவையாக இருந்தது.

என்ற இந்த வாக்கியத்தை Even though வை கொண்டு கீழ் கண்டவாறு மாற்றி எழுதலாம்.

Even though the dessert was more oily, it was tasty. – இனிப்பில் அதிகம் எண்ணெய் இருந்தாலும் கூட சுவையாக இருந்தது.

Though (இருந்தாலும்)

This vehicle is very old but drives well. – இந்த வாகனம் மிகவும் பழமையானது ஆனால் நன்றாக ஓடுகிறது.

என்பதனை though வை கொண்டு கீழே உள்ளவாறு மாற்றி எழுதலாம். அதன் பொருள் மாறாது.

Though this vehicle is very old, it drives well. – இந்த வாகனம் மிகவும் பழமையானது என்றாலும் நன்றாக ஓடுகிறது.

While (போது)

I am working in my room. Haran is working in the office. – நான் என் அறையில் வேலை செய்கிறேன். கரன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.

என்ற இந்த வாக்கியத்தை while கொண்டு மாற்றி கீழே உள்ளது போல் எழுதலாம்.

I am working in my room while Haran is working in the office. – கரன் அலுவலகத்தில் வேலை செய்யும்போது நான் என் அறையில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன்.

Or (அல்லது)

How to Use OR Conjunction with Examples in tamil

Or என்பதன் தமிழ் பொருள் அல்லது ஆகும். பொதுவாக “or” ஆனது இல்லை மற்றும் பிற எதிர்மறை வார்த்தைகளுடன் வரும். இது சொற்கள் மற்றும் சொற்றொடர்களை இணைக்கப் பயன்படுகிறது.

Examples

  1. He does not like sweets or snacks. – அவருக்கு இனிப்புகள் அல்லது தின்பண்டங்கள் பிடிக்காது.
  2. I did not see or hear anything differently. – எனக்கு வித்யாசமாக எதுவும் பார்க்கவோ அல்லது கேட்கவோ இல்லை.
  3. He has no interest in singing or dancing. – அவனுக்கு ஆடுவது அல்லது பாடுவதில் ஆர்வம் இல்லை.

இரு possible சொற்றொடர்களை இணைக்க

நடக்க வாய்ப்பு உள்ள இரு சொற்றொடர்களை இணைக்க “or” பயன்படுகிறது.

Examples

  1. Which one is easier to travel by train or by plane?வ – ரயில் அல்லது விமானம் எதில் பயணம் செய்வது எளிமையானது?
  2. You could call him smart or great. – நீங்கள் அவரை புத்திசாலி அல்லது சிறந்தவர் என்று அழைக்கலாம்.
  3. It is your time. Will you go to take a bath or stay in bed? – இது உங்கள் நேரம். நீ குளிக்கப்போகிறாயா அல்லது படுத்துக்கொண்டு இருப்பாயா?

வார்த்தை குழுக்களை இணைக்க

ஒரு வாக்கியத்தில் பல்வேறு ஒத்த வார்த்தைகள் வரும்போது நாம் or ஐ உபயோகிக்கலாம். And க்கு பார்த்தது போல ஒவ்வொரு வார்த்தைக்கு இடையே நாம் காற்புள்ளி(comma) உபயோகிக்க வேண்டும். பின்பு கடைசி இரண்டு வார்த்தைகளுக்கு இடையே or உபயோக்க வேண்டும்.

Examples

  1. I can travel by car, bus, train, or plane. – நான் கார், பேருந்து, ரயில் அல்லது விமானத்தில் பயணிக்க முடியும்.
  2. I have not finished my breakfast, lunch, or dinner. – நான் என்னுடைய காலை உணவு, மதிய உணவு, அல்லது இரவு உணவு முடிக்கவில்லை.

கலப்பு வாக்கியமாக மாற்ற

நாம் or ஐ உபயோகித்து இரண்டு வாக்கியங்களை சேர்த்து ஒரு வாக்கியமாக மாற்றலாம். இதற்க்கு கூட்டு வாக்கியம் (compound sentence) என்று பொருள்.

Examples

  1. Make it quick! We will not make it on time. – சீக்கிரம் செய்! நாங்கள் அதை சரியான நேரத்தில் செய்ய மாட்டோம்.
  2. Make it quick or we will not make it on time. – சீக்கிரம் செய் அல்லது  நாங்கள் அதை சரியான நேரத்தில் செய்ய மாட்டோம்.
  3. Would you like to have a coffee? Shall we order tea? – நீங்கள் காப்பி குடிக்க விரும்புகிறீர்களா? நாம் டீ ஆர்டர் செய்வோமா?
  4. Would you like to have a coffee or Shall we order tea? – நீங்கள் காப்பி குடிக்க விரும்புகிறீர்களா அல்லது  நாம் டீ ஆர்டர் செய்வோமா?

Or இன் வேறு பெயர்கள்

கீழே கூறப்பட்டுள்ள Neither nor, Either or, Or else ஆகியவற்றை or க்கு மாற்றாக உபயோகிக்கலாம். இந்த வார்த்தைகளும் இதே பொருளைத் தரும்.

Neither nor (அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல்)

His speech was not funny. It was not interesting. – அவரது பேச்சு வேடிக்கையாக இல்லை. அது சுவாரசியமாக இல்லை.

என்பதனை Neither nor உபயோகித்து கீழ் உள்ளவாறு அதன் பொருள் மாறாமல் மாற்றி எழுதலாம்.

His speech was neither funny nor interesting. – அவரது பேச்சு வேடிக்கையாகவோ சுவாரசியமாகவோ இல்லை. 

Either or (இது அல்லது)

You can do your task now. You can do your task after some time. – நீங்கள் உங்கள் பணியை இப்போது செய்யலாம். நீங்கள் சிறிது நேரம் கழித்தும் உங்கள் வேலையை செய்யலாம்.

என்ற வாக்கியத்தை Either nor உபயோகித்து அதன் பொருள் மாறாமல் கீழ் உள்ளவாறு மாற்றி எழுதலாம்.

You can do your task either now or after some time. – நீங்கள் உங்கள் வேலையை இப்போது அல்லது சிறிது நேரம் கழித்து செய்யாலாம்.

Or else (இல்லையெனில்)

We could walk. We could book a taxi. – நாம் நடக்கலாம். நாம் டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.

என்பதை கீழ் உள்ளவாறு எழுதலாம்.

We could walk or else book a taxi. – நாம் நடக்கலாம் இல்லையெனில் டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.

Conjunctions of time (கால இணைப்புச் சொற்கள்)

ஏதாவது ஒரு செயலானது  நடக்கும் காலத்தினை (எப்போது நடக்கும் என்று) விவரிக்க உதவுகின்றன. இவை நடக்கும் காலத்தினை தெளிவாக எடுத்துரைக்க உதவுகிறது.

Common words

  1. Before முன்பு 
  2. After பின்பு 
  3. Since இருந்து 
  4. Until வரை 
  5. When எப்போது, போது 
  6. While போது 
  7. As போன்று
  8. As soon as கூடிய விரைவில் 

Examples

  1. You tell him to leave this room before I scold him. – நான் திட்டுவதற்கு முன்பு இந்த அறையை விட்டு அவனை வெளியேற சொல்லுங்கள்.
  2. I will do my homework after finishing my part time job. – என் பகுதி நேர வேலையை முடித்துவிட்டு பிறகு வீட்டுப்பாடம் முடிப்பேன்.
  3. Since the new manager arrived, we have all enjoyed our work more. – புதிய மேலாளர் வந்ததிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தோம்.
  4. You can not eat snacks until you have finished your lunch. – உன்னால் மதிய உணவை முடிக்காமல் தின்பண்டங்கள் சாப்பிட முடியாது.
  5. Until the chicken is cooked, we cannot eat barbeque. – இறைச்சி வேகாமல் நம்மால் பார்பிக்யூ உண்ண முடியாது.
  6. I will call you when I reach home. – நான் வீடு சென்றதும் உன்னை அழைக்கிறேன்.
  7. He cooks while I draw some pictures. – நான் சில படங்கள் வரையும்போது அவர் சமைக்கிறார்.
  8. I am working in the office while he is working at home. – அவன் வீட்டில் வேலை செய்யும்போது நான் அலுவலகத்தில் வேலை செய்கிறேன்.
  9. When I call you, you have to pick up the call on the second ring. – நான் உன்னை தொலைபேசியில் அழைக்கும்போது இரண்டாவது மணியில் எடுக்க வேண்டும்.
  10. We went inside as soon as the lion came out of the cage. – கூண்டிலிருந்து சிங்கம் வெளியே வந்த உடனே நாங்கள் உள்ளே சென்றோம்.
  11. As soon as you finish your task, you can go home. – எவ்வளவு சீக்கிரம் நீ வேலையை முடித்ததும் வீட்டுக்கு செல்லலாம். 

Conjunctions of place (இட இணைப்புச்சொற்கள்)

ஏதாவது ஒரு செயலானது  எங்கு நடக்கிறது என்று விவரிக்க உதவுகின்றன. எந்த இடத்தில நடக்கிறது என்பதனை தெளிவாக கூற பயோகிக்கிறோம்.

common words

  1. Where எங்கே 
  2. Wherever எங்கிருந்தாலும் 

Examples

  1. Do you know where he is staying? – அவன் எங்கே தங்கி இருக்கிறான் என்று தெரியுமா?
  2. She follows me wherever I go. – நான் எங்கு சென்றாலும் அவள் என்னை பின்தொடர்கிறாள்.

Conjunctions of reason (காரண இணைப்புச்சொற்கள்)

Conjunctions of reason என்பதன் தமிழ் பொருள் காரண இணைப்புச்சொற்கள் ஆகும். ஏதாவது ஒரு செயலானது எதற்கு அல்லது என்ன காரணத்திற்காக நடக்கிறது என்று விவரிக்க உதவுகின்றன.

Common words

  1. Because ஏனெனில் 
  2. Since இருந்து 
  3. As என 
  4. In case ஒரு வேளை 

Examples

  1. I spit it out because it tastes bitter. – அது கசப்பு சுவையுடன் இருந்ததால் நான் அதை துப்பிவிட்டேன்.
  2. I took a banana since it was the only fruit in the bowl. – கிண்ணத்தில் ஒரே ஒரு பழம் இருந்ததால், நான் அந்த வாழைப்பழத்தை எடுத்தேன்.
  3. Since you have finished your task, you can go home now. – நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டதால் நீங்கள் வீட்டுக்கு செல்லலாம்.
  4. I will never leave you because I love you. – நான் உன்னை நேசிப்பதால் உன்னைவிட்டு விலக மாட்டேன்.
  5. My mom turned on the TV as it was her show time. – என் அம்மா டிவி பார்க்கும் நேரம் என்பதால் டிவியை ஆன் செய்தாள்.
  6. Take headache medicine in case your head hurts. – உங்களுக்கு ஒரு வேளை தலை வலித்தால் தலைவலி மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.
  7. In case you forget your task, I will remember it for you through a message. – ஒரு வேளை உங்கள் பணியை மறந்துவிட்டால் நான் ஒரு குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

Conjunctions of purpose (நோக்க இணைப்புச்சொற்கள்)

ஏதாவது ஒரு செயலானது  என்ன நோக்கத்திற்காக நடக்கிறது என்று விவரிக்க உதவுகின்றன. ஒரு செயலானது நடந்து விட்டது. அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதனை குறிப்பிட இந்த நோக்க இணைப்புச்சொற்கள் உதவுகின்றன.

Words

  1. So அதனால் 
  2. So that அதனால் 
  3. In order to பொருட்டு 

Examples

  1. You just send his number through a message so I can save it easily.  – அவருடைய எண்ணை எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். அதனால் நான் எளிமையாக  பதிவு செய்து கொள்வேன்.
  2. You should keep your phone charged so that we can speak more time. – உன்னுடைய தொலைபேசியினை முழுவதுமாக சார்ஜ் செய்து கொள். அதனால் நம்மால் அதிக நேரம் பேச முடியும்.
  3. She does go to the gym everyday in order to keep fit. – அவள் தன்னை உறுதியாக வைத்துக்கொள்ள தினமும் ஜிம் செல்கிறாள்.
  4.  Listen to some mild music in order to get sleep. – தூக்கம் வருவதற்கு மெல்லிசையை கேளுங்கள்.
  5. Take notes during the lecture so that you can recall it later easily. – பாடம் நடத்தும்போது குறிப்புரை எடுத்துக்கொள்ளுங்கள் அதனால் அதை மீண்டும் நினைவுபடுத்த எளிமையாக இருக்கும்.

Conclusion

இந்த பதிவில் conjunctions என்றால் என்ன, அதன் வகைகள் என்னென்ன, அவற்றினை வேறு எவ்வாறு கூறலாம் என்பதனால் அனைத்து விதமான conjunctions க்கும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு எல்லா வகை இணைப்புச்சொற்களை பற்றய நல்ல புரிதலையும் எப்படி ஆங்கிலம் பேசும் போதும் எழுதும்போதும் உபயோகிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த conjunction பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை தயங்காமல் comment இல் கேளுங்கள். நாங்கள் விடையளிக்கிறோம்.

இந்த பதிவினைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் இல் தெரிவிக்கவும்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

2 Responses

  1. P. Gunasekaran says:

    IT IS EXCELLANT
    THANKS FOR YOUR TO SERVICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *