How to change singular nouns to plural nouns in Tamil?

Home Basic Grammar How to change singular nouns to plural nouns in Tamil?

நம் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் பேச பெயர்ச்சொல் (noun) ஆனது பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பெயர்ச்சொல் அதன் இடத்திற்கு ஏற்றவாறு ஒருமையிலோ அல்லது பன்மையிலோ சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் அதன் பொருள் மாறுவதோடு அதன் பொருள் தவறானதாகவும் மாறும். ஒருமை பெயர்ச்சொல் வரும் இடங்களில் ஒருமை பெயர்ச்ச்சொல்லை மட்டும் உபயோகிக்க வேண்டும். அதேபோல் பன்மை பெயர்ச்சொல் வரும் இடங்களில் பன்மை பெயர்சொல்லும் உபயோகிக்க வேண்டும். அதனை மாற்றி உபயோகிக்க கூடாது.

singular noun ஐ எப்படி plural noun ஆக மாற்றுவது என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் காணலாம். இந்த பதிவில் நாம் சில நுட்பங்களை கூறியுள்ளோம். அவை உங்களுக்கு ஒருமை பெயர்ச்சொல்லில் இருந்து பன்மை பெயர்ச்சொல்லுக்கு மாற்ற பெரிதும் உதவும்.

changing singular nouns to plural nouns in tamil

Noun (பெயர்ச்சொல்) ஐ பற்றி முழுவதும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த பதிவை காணவும்.

Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil

பொதுவாக singular noun னை  plural noun ஆக மாற்ற, singular noun உடன் -s, -es, -ies, or -ves மற்றும் பல suffix களை சேர்க்க வேண்டும். அவை எப்படி என பார்க்கலாம்.

Noun உடன் s சேர்க்கும்போது

பெரும்பாலான singular noun ஐ plural noun ஆக மாற்ற அதன் இறுதியில் s சேர்த்தால் போதுமானது. ஆனால் இது அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது. பல இடங்களில் s, -ss, -ch, -sh, -x -ves, மற்றும் அதன் spelling ஐ மாற்ற வேண்டிய nouns என பல உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

Examples

Singular nounsPlural nouns
a computerComputers
a teacherteachers
an uncleuncles

Nouns ஆனது –s, -ss, -ch, -sh, or -x இல் முடியும்போது

s, -ss, -ch, -sh, or -x ஆகிய எழுத்துக்களைக் கொண்டு முடியும் nounகளை , plural nouns ஆக மாற்ற அதன் இறுதியில்– es ஐ சேர்க்க வேண்டும். இங்கு எந்த எழுத்துக்களையும் நீக்கக் கூடாது.

Examples singular nouns -s இல் முடியும்போது

s இல் noun ஆனது முடியும்போது அதன் இறுதியில் es என்பதனை சேர்த்து அந்த noun ஐ plural noun ஆக மாற்ற வேண்டும்.

Singular nounsPlural nouns
busbuses
gasgases

Examples singular nouns -ss இல் முடியும்போது

மேலே S இல் முடியும் பெயர்ச்சொல்லுக்கு பார்த்தோம் அல்லவா? அதே போல் ss இல் முடியும் பெயர்ச்சொற்களை பன்மை பெயர்ச்சொல்லாக மற்ற அதனுடன் es ஐ சேர்க்க வேண்டும்.

Singular nounsPlural nouns
dressdresses
grassgrasses

Examples singular nouns -ch இல் முடியும்போது

ஒருமை பெயர்ச்சொல்லானது ch ஐ கொண்டு முடியும்போது அதனுடன் நாம் es ஐ சேர்த்து பன்மை பெயர்ச்சொல்லாக மற்ற வேண்டும். இங்கு நாம் எந்த எழுத்தையும் நீக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Singular nounsPlural nouns
Beach beaches
Witch witches 

Examples singular nouns -sh இல் முடியும்போது

எந்த ஒரு ஒருமை பெயர்ச்சொல்லானது sh இல் முடிந்தால் அதை பன்மை வினைச்சொல்லாக மற்ற அதன் இறுதியில் அதாவது sh க்கு அடுத்து es ஐ சேர்க்க வேண்டும்.

Singular nounsPlural nouns
FlashFlashes
marshmarshes

Examples singular nouns -x இல் முடியும்போது

மேலே மற்ற வகை ஒருமை பெயர்ச்சொற்களுக்கு கூறியது போலவே இங்கும் நாம் எந்த எழுத்துக்களையும் நீக்காமல் x இல் முடியும் ஒருமை பெயர்ச்சொற்களை பன்மை பெயர்ச்சொல்லாக மாற்ற அதனுடன் es என்பதை சேர்த்தால் போதுமானது.

Singular nounsPlural nouns
boxboxes
foxfoxes

noun ஆனது -y இல் முடியும்போது

ஒரு noun ஆனது y என்ற எழுத்தைக்கொண்டு முடியும்போது அதனை plural noun ஆக மாற்ற y க்கு பதில் i சேர்த்து அதனுடன் es ஐ சேர்க்க வேண்டும். (y க்கு பதில் ies சேர்க்க வேண்டும்.) அதாவது y எழுத்தை நீக்கி விட்டு அதற்கு பதிலாக ies என்பதனை சேர்க்க வேண்டும்.

Examples

Singular nounsPlural nouns
Babybabies
Storystories
Citycities
Partyparties
Auntyaunties

Noun -y இல் முடிந்து முந்தைய எழுத்து vowel இருக்கும்போது

ஒரு noun ஆனது y எழுத்தைக்கொண்டு முடியும் போது, அதன் முந்தைய எழுத்து ஆங்கில உயிரெழுத்துக்களை(VOWELS) கொண்டிருந்தால் அதனுடன் வெறும் s சேர்த்தால் போதுமானது. (ay,ey,iy,oy,uy என முடியும் போது அதனுடன் வெறும் s சேர்த்தல் போதும்.)

Examples

Singular nounsPlural nouns
Keykeys
Monkeymonkeys
Boyboys
Daydays

Noun ஆனது “f” இல் முடியும்போது

பெரும்பாலான nouns f இல் முடியும் போது அதனை plural ஆக மாற்ற அந்த f ஐ நீக்கி அதற்க்கு பதிலாக v சேர்த்து இறுதியில் es சேர்க்க வேண்டும்.

Examples

Singular nounsPlural nouns
Half halves
Leafleaves
Wolf wolves

சில nouns f இல் முடியும் போது அதனுடன் s மட்டும் சேர்த்தால் போதுமானது.

Singular nounsPlural nouns
Chiefchiefs
Puffpuffs
Cliffcliffs

Noun ஆனது “fe” இல் முடியும்போது

ஒரு noun -fe என்ற எழுத்தைக்கொண்டு முடியும்போது அதனை plural noun ஆக மாற்ற f க்கு பதில் v சேர்த்து அதனுடன் s ஐ சேர்க்க வேண்டும். இங்கு நாம் f ஐ நீக்கி விட்டு அதற்க்கு பதிலாக v ஐ சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பின் e க்கு அடுத்து s ஐ சேர்க்க வேண்டும்.

Wife என்பதனை plural ஆகா மாற்ற f ஐ நீக்கி அதன் இடத்தில் v சேர்த்து, பின்னர் e க்கு அடுத்து s சேர்த்து Wives என மாற்ற வேண்டும்.

Examples

Singular nounsPlural nouns
Wifewives
Lifelives
Knifeknives

Noun ஆனது “o ” இல் முடியும்போது

பெரும்பாலான nouns -o இல் முடியும் போது அதனுடன் -s சேர்த்தால் போதும். இங்கு நன்றாக கவனியுங்கள், இங்கு நாம் o வை நீக்கவில்லை. அதனுடன் S ஐ மாட்டு சேர்த்துக்கொள்கிறோம்.

Examples

Singular nounsPlural nouns
Videovideos
Zoozoos
Kangarookangaroos

ஆனால் ஒரு சில nouns -o இல் முடியும் போது அதனுடன் -es சேர்க்க வேண்டும். மேலே கூறியவாறு s மட்டும் சேர்த்தால் பத்து. நாம் அடிக்கடி இந்த வகை வார்த்தைகளை பயன்படுத்தி வந்தால் மட்டுமே நம்மால் எங்கு எவ்வாறு வரும் என்பதனை தெளிவாக அறிய முடியும்.

Examples

Singular nounsPlural nouns
Tomatotomatoes
Potatopotatoes
Heroheroes

spelling ஐ மாற்ற வேண்டி உள்ள nouns

சில noun களை singular to plural ஆக மாற்ற அதன் spelling ஐ மாற்ற வேண்டும். இது ஒவ்வொரு noun ஐ பொறுத்து மாறும்.இவ்வாறு வந்தால் இவ்வாறு spelling ஐ மாற்ற வேண்டும் என எந்த விதியோ அல்லது நியாபகம் வைத்துக்கொள்ளும்படியோ எதுவும் இல்லை.

எடுத்துக்காட்டாக person என்பதை persons என எழுதக்கூடாது. அதன் spelling ஐ மாற்றி people என எழுத வேண்டும்.

Examples

Singular nounsPlural nouns
Manmen
Womanwomen
Childchildren
Personpeople
Mousemice

Adverb, Adjective, Pronouns பற்றி படிக்க
Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil
Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil with examples

ஒருமை பன்மை பெயர்ச்சொற்கள் ஒன்று போலவே இருக்கும்

சில nounகளின் singular மற்றும் plural nouns ஒன்று போலவே இருக்கும். அதனை மாற்ற தேவை இல்லை. எவ்வாறு ஒருமை பெயர்ச்சொல் உள்ளதோ அவ்வாறே பன்மை பெயர்ச்சொல்லையும் எழுத வேண்டும்.

Singular nounsPlural nouns
aircraftaircraft (not aircrafts)
salmonsalmon (not salmons)
deerdeer (not deers)
fish fish (not fishes)
sheepsheep (not sheeps)

சில nouns எப்பொழுதும் plural nouns ஆக இருக்கும்

சில nouns எப்பொழுதும் plural ஆகவே இருக்கும். அதற்கு singular (ஒருமை பெயர்ச்சொல்) என்ற ஒன்றே கிடையாது. அதாவது அந்த பெயர்ச்சொல்லானது ஒருமையாக இருக்கும் போதும் சரி, பன்மை பெயர்ச்சொல்லாக இருக்கும்போதும் சரி அதன் spelling ஒரே மாதிரியாக இருக்கும்.

Examples

Singular nounsPlural nouns
TrousersTrousers
GlassesGlasses
SpectaclesSpectacles
JeansJeans
Pants Pants 
ScissorsScissors

Conclusion

இந்த பதிவில் நாம் எப்படி ஒரு ஒருமை பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல்லாக மாற்ற வேண்டும் என்பதை சில குறிப்பிட்ட விதிமுறைகளை கொண்டு நியாபகம் வைத்துக்கொண்டு நம் அன்றாட வாழ்வில் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை தெளிவாக எடுத்துக்கட்டுகளுடடன் கண்டோம். இது உங்களுக்கு ஆங்கில ஒருமை மற்றும் பன்மை பெயர்ச்சொற்களை பற்றி ஒரு தெளிவான புரிதலை தந்திருக்கும் என நம்புகிறேன்.

ஆங்கில இலக்கணத்தை பற்றி முழுமையாக தெளிவாக அறிய நமது மற்ற பதிவுகளையும் காணவும்.

உங்கள் கருத்துக்களை, சந்தேகங்களை இங்கு உள்ள comment இல் பதிவு செய்யவும். உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வளிக்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.

நன்றி! வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *