How to use capital letters effectively in English?

Home Basic Grammar How to use capital letters effectively in English?

நாம் ஆங்கிலத்தில் எழுதும்போது பல விஷயங்களை நினைவில் கொண்டு எழுத வேண்டும். அவை, இலக்கணமாக இருக்கலாம், வாக்கிய அமைப்பு, காலம், என பலவற்றை சரியான இடத்தில சரியான சமயத்தில் உபயோகிக்க வேண்டும். அவற்றில் நாம் இந்த capital letters ஐ எப்படி எந்தெந்த இடத்தில எத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எனவே நாம் இந்த பதிவில் capital letters ஐ வார்த்தைகளில், வாக்கியங்களில் எங்கு, எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைப்பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுக்களுடன் காண்போம்.

I (நான்) என்ற எழுத்து எப்போதும்

“I” எழுத்தானது எப்பொழுதும் capital letter ல் மட்டுமே உபயோக்கிக்க வேண்டும்.

இங்கு “I” என்பது நான் என்பதை குறிக்கும். இது வாக்கியத்தின் முதலில் வந்தாலும் சரி, நடுவில் என எங்கு வந்தாலும் சரி. நாம் எப்போதும் capital letter ஐ உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. I am a boy.
  2. I like to watch movies.
  3. I am going to play.
  4. Do you know what I am doing?
  5. Am I mad?

அதாவது ஆங்கிலத்தில் நான் என்னும் I வரும்போது மட்டுமே நாம் எப்பொழுதும் capital letter ஐ உபயோகிக்க வேண்டும். மற்ற இடங்களில் capital letter ஐ உபயோகிக்க வேண்டியது இல்லை.

வாக்கியத்தின் முதல் எழுத்து

எப்பொழுதும் ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்தானது எப்போதும் capital letter ஐக் கொண்டு முடிய வேண்டும்.

Examples

  1. He always smiles.
  2. I know what I am doing.
  3. Do not tell him about our plan.
  4. He is more dangerous than we think.
  5. This is my book.
  6. They will enjoy the whole movie.

ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்தானது எப்போதும் small letter இல் தொடங்கக்கூடாது. capital letter இல் மட்டுமே தொடங்க வேண்டும்.

நேர்கூற்றின் முதல் வார்த்தையின் முதல் எழுத்து

நாம் ஒரு வாக்கியத்தினை நேர்கூற்றில் குறிப்பிடும்போது அந்த வாக்கியத்தின் முதல் வார்த்தையின் முதல் எழுத்தானது capital letter ஆக இருக்க வேண்டும். அதாவது மேற்கோள் குறிக்குள் வரும் வாக்கியத்தின் முதல் எழுத்தானது அவ்வாறு இருக்க வேண்டும்.

Examples

  1. He said, “I will take care of the issue.”
  2. I said, ”He will meet you tomorrow.”
  3. It is not good,” he shouted.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை கவனியுங்கள். நேர்கூற்று வாக்கியத்தின் முதல் எழுத்தானது capital letter உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.

மனிதர்கள் மற்றும் இடத்தினை குறிப்பிடும்போது

மனிதர்களின் பெயர்களை அல்லது இடங்களின் பெயரை குறிப்பிடும்போது அதன் முதல் எழுத்தானது capital letter ஆக இருக்க வேண்டும்.

Examples

  1. the United States
  2. Africa
  3. India
  4. Dhanush
  5. Anirudh
  6. Lucknow
  7. the Taj Mahal.
  8. Professor Peter.

இந்த எடுத்துக்காட்டுகளை உற்றுநோக்கும் நாம் அவற்றின் முதல் எழுத்தை capital letter இல் எழுதியுள்ளதை காணலாம்.

பெயரின் initial குறிப்பிடும்போது

ஒரு பெயரின் முதல் எழுத்துக்குறி (initial of the person) குறிப்பிடும் இடங்களில் நாம் capital letter ஐ உபயோகிக்க வேண்டும். அதாவது நாம் முன்னே பார்த்தோம் அல்லவா? பெயரின் முதல் எழுத்தை capital letter இல் குறிப்பிட வேண்டும் என்று. அதே போல் அந்த பெயரின் எழுத்துக்குறியையும் capital letter இல் உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. J.K. Rowling
  2. P.A. Dhanush
  3. V.K. Ramasamy
  4. A. Dhanam

Initial ஐ எப்பொழுதும் small letters இல் குறிப்பிடக்கூடாது.

வாரத்தின் நாட்கள்

வாரத்தின் உள்ள நாட்களைக் குறிப்பிடும்போது அதன் முதல் எழுத்தானது capital letter ஆக இருக்க வேண்டும். இது வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் பொருந்தும்.

Examples

  1. Sunday
  2. Monday
  3. Tuesday
  4. Wednesday
  5. Thursday
  6. Friday
  7. Saturday

மாதங்களை குறிப்பிடும்போது

மாதத்தின் முதல் எழுத்தானது capital letter ஆக இருக்க வேண்டும். இது அனைத்து மாதங்களுக்கும் பொருந்தும்.

Examples

  1. January
  2. February
  3. March
  4. April
  5. May
  6. June

நாம் எப்பொழுதும் வாரத்தின் நாட்கள் அதாவது கிழமைகள், மற்றும் மாதங்களை குறிப்பிடும்போது அதன் முதல் எழுத்து எப்போதும் capital letter ஆக இருக்க வேண்டும்.

பண்டிகை & விடுமுறைகள்

விடுமுறை மற்றும் சிறப்பு பண்டிகைகளின் பெயர்கள் எப்பொழுதும் capital letter ஐக் கொண்டு தொடங்க வேண்டும்.

Examples

  1. Diwali
  2. Pongal
  3. Thanksgiving
  4. Valentine’s Day
  5. Christmas
  6. Workers Day

மேலே சில பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களை எடுத்துக்காட்டுகளாக கொடுத்துள்ளோம். அதனை கவனியுங்கள். முதல் எழுத்தானது capital letter இல் எழுதி உள்ளோம்.

If clause, Modal Auxiliary verb, Auxiliary verb, tenses, active & passive voice பற்றி அறிய

Conditional Clauses If Clauses in Tamil With Examples

Modal Auxiliary verbs (மாதிரி துணை வினைச்சொற்கள்) in Tamil

Auxiliary verb or helping verbs in Tamil

Active and Passive voice in Tamil

All 12 Tenses in Tamil with examples

மொழி & தேசிய இனங்கள்

தேசிய இனப் பெயர்கள் (Nationalities) மற்றும் மொழிகள் ஆகியவற்றை குறிப்பிடும்போது அதன் ஆரம்ப எழுத்து எப்போதும் capital letter ஐக் கொண்டு தொடங்க வேண்டும். இவற்றை small letter ஐ கொண்டு ஆரம்பிக்க கூடாது.

Examples

  1. Indian
  2. Chinese
  3. Tamil
  4. English
  5. French
  6. British
  7. Asian

மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் தேசிய இனங்கள் மற்றும் மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் முதல் எழுத்தை கவனியுங்கள். நாம் capital letter ஐ உபயோகித்துள்ளோம்.

புத்தகம், திரைப்படம், நாடகம் தலைப்புக்கள்

புத்தக தலைப்புக்கள், படத்தின் பெயர்கள், மற்றும் நாடகத்தின் தலைப்புக்களை குறிப்பிடும்போது எப்போதும் நாம் capital letter ஐக் கொண்டு தொடங்க வேண்டும். அதுவே சரியான முறை ஆகும். இவற்றை சிறிய எழுதினால் ஆரம்பிப்பது தவறு.

Examples

  1. Alice in Wonderland.
  2. The Harrypotter
  3. Ponniyin Selvan
  4. Cats and Dogs

மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் திரைப்படத்தின் பெயர்கள், புத்தகம் மற்றும் நாடகத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் முதல் எழுத்துக்களை நாம் capital letter ஐயே உபயோகித்துள்ளோம்.

Hello & Bye வார்த்தைகள் வரும்போது

Hello, Bye போன்ற வார்த்தைகள் மற்றும் அதைக்கொண்டு வரும் சொற்களை குறிப்பிடும்போது நாம் அதன் முதல் எழுத்தினை capital letter ஐக்கொண்டு தொடங்கலாம். 

Examples

  1. Good Morning
  2. Take care
  3. Goodbye
  4. See you later.
  5. Hi
  6. Have a nice day.

ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகளை எங்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தெளிவாக அறிய இந்த பதிவை படிக்கவும்.

How to use punctuation marks in Tamil

Conclusion

இந்த பதிவில் ஆங்கிலத்தில் capital letters ஐ எங்கு எத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்கட்டுக்களுடன் அவற்றின் விளக்கங்களை என்பதைக் கண்டோம். இது உங்களுக்கு capital letters ஐ எங்கு உபயோகப்படுத்த வேண்டும், எங்கெங்கு உபயோகப்படுத்தக்கூடாது என ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

நாம் ஏதேனும் குறிப்பிடாமல் விட்டிருந்தாலோ அல்லது இந்த capital lettersஐ எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை எங்களுக்கு comment மூலம் தெரிவியுங்கள். உங்களின் சந்தேகங்களை தீர்க்க நாங்கள் இருக்கிறோம்.

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்களை comment இல் பதிவிடவும். இது எங்களுக்கு இதுபோன்று மேலும் பல பதிவுகளை எழுத ஊக்குவிக்கும்.

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *