How to use punctuation marks (நிறுத்தற்குறிகள்) in Tamil?
Punctuation Marks ஐ தமிழில் நிறுத்தற்குறிகள் என அழைக்கப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் இந்த நிறுத்தற்குறிகளை அவற்றின் இடங்களுக்கு ஏற்ப சரியாக உபயோகிக்க வேண்டும். அப்போது தான் அதை படிப்பவரால் எளிதில் படிக்க முடியும். அதில் உள்ளதை எந்த சூழ்நிலைகளில் எழுதினார்களோ அதே சூழ்நிலையில் உணர முடியும். மேலும் இது வாக்கியத்தை படிக்க ஒரு தெளிவு கிடைக்கும்.
ஒரு வாக்கியத்தினை படிக்கும்போது அல்லது எழுதும்போது அதன் பொருளை தெளிவாக, எளிமையாக புரிந்துகொள்ள நாம் Punctuation Marks (நிறுத்தற்குறிகள்) உபயோக்கிறோம்.
ஆங்கிலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட நிறுத்தற்குறிகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. அவையாவன,
- Periods,
- Commas,
- Question marks,
- Exclamation points,
- Apostrophes
- Quotation marks
இவை ஒவ்வொன்றம் வாக்கியத்தில் எவ்வாறு, எந்தெந்த சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும் என்பதனையும் இந்த பதிவில் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.
இந்த குறியீடுகளை உபயோகப்படுத்தும் முன் நமக்கு noun, pronoun, adjective, adverb, போன்றவற்றை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதனைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகளை காணவும்.
Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil
Preposition with examples in Tamil
Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil
Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil with examples
Period or full stop (.)
ஒரு வாக்கியமானது முடியும் இடத்தில் நாம் Periods உபயோகிப்போம்.
Period என்பதை தமிழில் முற்றுப்புள்ளி என அழைப்போம். அதன் வார்த்தையில் உள்ளதுபோல் வாக்கியமானது முற்று பெறும்போது அல்லது முடியும்போது நாம் period ஐ உபயோகிப்போம்.
Examples
- The plane arrived quickly. – விமானம் வேகாக வந்தது.
- We will see you soon. – நாம் விரைவில் சந்திப்போம்.
- She lent me her book. – அவள் புத்தகத்தை எனக்குக் கொடுத்தாள்.
- He is good at singing. – அவன் நன்றாக பாடுவான்.
Commas(,)
ஆம் or இல்லை
நாம் ஒரு வினாவினை கேட்கும்போது அதற்கு ஆம், இல்லை என பதில் கூறும் இடங்களில் comma வை உபயோகிப்போம்
ஆம், இல்லை ஆகியவற்றிற்குப் பிறகு நாம் Comma உபயோகிப்போம்.
Examples
1. Yes, we saw you.- ஆம், நாங்கள் உன்னை பார்த்தோம்.
2. No, I did not. – இல்லை, நான் செய்யவில்லை.
3. Do you watch movies? – நீ திரைப்படங்கள் பார்ப்பாயா?
Yes, I do. – ஆம், பார்ப்பேன்.
No, I do not. – இல்லை, பார்க்க மாட்டேன்.
4. Did you wish him on his birthday? – அவனது பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்தாயா?
Yes, I did. – ஆம், தெரிவித்தேன்.
No, I did not. – இல்லை, தெரிவிக்கவில்லை.
வாக்கியத்தில் பல பெயர்கள் வரும்போது
ஒரு வாக்கியத்தில் பல பெயர்சொற்கள் வரும்போது அந்த பெயர்சொற்களுக்கு இடையே நாம் comma வை உபயோகிக்கலாம். அல்லது ஒரு வாக்கியத்தில் பல பெயர்கள் வரும்போது நாம் comma வை உபயோகிக்கலாம்.
Examples
- I bought 1 kg of apples, 2 kg of oranges, and half a kg of grapes. – நான் ஒரு கிலோ ஆப்பிள், இரண்டு கிலோ ஆரஞ்சு, மற்றும் அரைக்கிலோ திராட்சை வாங்கினேன்.
- We planned to visit Tamil Nadu, Andhra Pradesh, and Karnataka. – நாங்கள் தமிழ் நாடு, ஆந்தர பிரதேசம், மற்றும் கர்நாடகா செல்ல திட்டமிட்டோம்.
- I studied Tamil, English, Math, Science, and Social Science in my 10th standard. – நான் எனது பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்தேன்.
பல உரிச்சொற்களை வாக்கியத்தில் உபயோகிக்கும்போது
நாம் ஒரு வாக்கியத்தில் பல உரிச்சொற்களை(adjectives) பயன்படுத்தும்போது அந்த உரிசொற்களுக்கிடையே நாம் comma வை உபயோகிப்போம்.
Examples
She is a short, handsome, and smart girl. – அவள் சிறிய, அழகான, மற்றும் புத்திசாலி பெண்.
He is always polite, genuine, and smart. – அவன் எப்போதும் கண்ணியமானவன், உண்மையானவன், மற்றும் புத்திசாலி.
எதிரில் உள்ளவரிடம் பேசும்போது அவரை குறிப்பிட
நீங்கள் உங்கள் எதிரே உள்ளவரிடம் பேசும் போது அவரின் பெயரை குறிப்பிட்டு, அல்லது அவரின் பதவியை குறிப்பிட்டு பேசும்போது அந்த பெயர்க்கு முன்னால் அல்லது பின்னால் நாம் comma உபயோகிக்க வேண்டும்.
Examples
- Good night, sir. – இரவு வணக்கம், அய்யா.
- Hello, Peter. – ஹலோ, பீட்டர்.
- See you, Mr. Haran. – சந்திப்போம், திரு. கரன்.
- Haran, this is Praba. – கரன், இது பிரபா.
மேலே உள்ள எடுத்துக்காட்டில் முதல் எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். ஒருவர் தூங்க செல்கிறார் அவர் எதிரே உள்ளவரிடம் good night சொல்கிறார். அதனுடன் sir என்பதையும் செல்கிறார். அந்த sir அவருக்கு எதிரே உள்ளவர். எனவே நாம் sir க்கு முன்னால் comma சேர்த்துள்ளோம்.
please, thank you வார்த்தைகளுக்கு முன்பு
please, and thank you போன்ற வார்த்தைகளுக்கு முன்பு நாம் comma உபயோகிக்க வேண்டும்.
Examples
- No, thank you. – இல்லை, நன்றி.
- Could you help me resolve this issue, please? – நீங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவ முடியமா?
- Would you like to take a rest? – நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?
- Can you call her, please? – தயவுசெய்து அவளை அழைக்கிறீர்களா?
- Yes, I can. – சரி, அழைக்கிறேன்.
- Okay, thanks. – சரி, நன்றி.
இடங்களின் பெயர்களுக்கிடையே
இடங்களின்(location) பெயர்களுக்கிடையே நாம் comma உபயோக்கிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக நாம் முகவரியை குறிப்பிடும்போது பல இடங்களை குறிப்பிடுவோம். அப்போது ஒவ்வொரு இடங்களுக்கும் இடையே comma வை உபயோகிக்க வேண்டும்.
Examples
- Coimbatore, Tamil Nadu, India. – கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
- London, New York. – லண்டன், நியூ யார்க்.
வாக்கியத்தில் சிறு இடைவேளை தேவைப்படும் இடங்களில்
ஒரு வாக்கியத்தில் ஒரு சிறிய இடைவேளை தேவைப்படும் இடங்களில் நாம் comma வை உபயோகிப்போம்.
எடுத்துக்காட்டுக்கு நீங்கள் தேர்வில் தெறிச்சி பெற்று விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளீர்கள். உங்கள் நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து நான் தெறிச்சி பெற்று விட்டேன் கடவுளுக்கு நன்றி என்று கூறுகிறீர்கள். இங்கு தெறிச்சி பெற்று விட்டேன் என்று கூறி அதற்கு அடுத்து ஒரு சிறிய இடைவேளை விட்டு கடவுளுக்கு நன்றி சொல்கிறீர்கள். எனவே அந்த இடத்தில நாம் comma உபயோகிக்க வேண்டும்.
Thank God, I passed the exam. – நான் தேர்வில் தேர்ச்சி பெற்றேன், கடவுளுக்கு நன்றி.
Examples
- Unfortunately, he got into an accident. – துரதிஷ்ட்டவசமாக, அவர் விபத்தில் சிக்கினார்.
- I am reading a book, hearing music. – நான் ஒரு புத்தகம் படிக்கிறேன், இசை கேட்கிறேன்.
Question mark (?)
Question mark ஐ தமிழில் கேள்விக்குறி என அழைப்போம். இது பெரும்பாலும் வினா வாக்கியங்களில் நாம் உபயோகிப்போம்.
நாம் வினாக்களைக் கேற்கும்போது அந்த வாக்கியத்தின் இறுதியில் நாம் Question mark (கேள்விக்குறி) உபயோகிக்க வேண்டும்.
Examples
- How many exams do you have? – உனக்கு எவ்வளவு தேர்வுகள் உள்ளன?
- Where are you going? – நீ எங்கு செல்கிறாய்?
- What is happening here? – இங்கு என்ன நடக்கிறது?
- Who invented the telephone? – தொலைபேசியை கண்டுபிடித்து யார்?
- Why are you crying? – ஏன் அழுதுகொண்டு இருகிறாய்?
- Do you like it? – உனக்கு பிடித்திருக்கிறதா?
- Does she wear this? – அவள் இதை அணிகிறாளா?
Exclamation mark (!)
Exclamation mark ஐ தமிழில் ஆச்சர்யக்குறி என அழைப்போம். பல்வேறு சூழ்நிலைகளில் நாம் இந்த ஆச்சர்ய குறியினை உபயோகிப்போம். அவை என்னென்ன என இப்போது காண்போம்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது
பொதுவாக, ஒரு வாக்கியமானது பயம் அல்லது மகிழ்ச்சியை வலுவாக குறிப்பிடும்போது நாம் அந்த வாக்கியத்தின் இறுதியில் Exclamation mark (ஆச்சர்யக்குறி) உபயோகிப்போம்.
Examples
- What a shame! – என்ன ஒரு அவமானம்!
- How beautiful you are! – எவ்வளவு அழகு நீ!
- Thank you for this gift! – இந்த பரிசுக்கு நன்றி!
- You are absolutely right! – நீ சொல்வது முற்றிலும் சரி!
வலுவான கட்டளைளின் போது
நாம் வலுவான கட்டளைகளை இடும்போது Exclamation mark (ஆச்சர்யக்குறி) உபயோகிப்போம். வலுவான கட்டளை என்பது சற்று கோபத்துடன் அல்லது மகிழ்ச்சியுடன் கட்டளை இடுவதை குறிக்கலாம்.
Examples
- Get down! – இறங்கு!
- Stand up! – எழுந்து நில்!
- Do it now! – உடனே செய்!
- Do not touch the key! – சாவியைத் தொடாதே!
இடைச்சொற்களுக்கு(interjections) அடுத்து
இடைச்சொற்களுக்கு பிறகு exclamation mark ஐ கட்டாயம் உபயோகிக்க வேண்டும்.
நமக்கு திடீரென சந்தோஷம், மகிழ்ச்சி, வலி, கோபம் ஆகியவை ஏற்படும்போது ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை உபயோகிப்போம். அந்த சொற்களானது interjections (இடைச்சொற்கள்) எனப்படுகின்றன.
Examples
- Hello!
- Happy Birthday!
- Happy Anniversary!
- Hurray!
- Ouch!
- Cheers!
- Oh dear!
- Ssh!
- Look out!
Apostrophe (‘)
Apostrophe ஐ தமிழில் எழுத்தச்சக்குறி என அழைக்கப்படும். ஒரு பொருளானது யாருக்கு சொந்தமானது (belongs to) என்பதை காட்ட இந்த Apostrophe உதவுகிறது. இவை nouns மற்றும் pronouns க்கு சொந்தமானதை குறிப்பிட, இப்பெயர்கள் ஒரு வாக்கியத்தில் வரும்போது என பல சூழ்நிலைகளில் நாம் இதனை நாம் உபயோகிப்போம். அவை என்னென்ன என தெளிவாக இப்போது காண்போம்.
Nouns & pronouns உடன்
நாம் இந்த apostrophe ஐ பெயர்சொற்கள் மற்றும் பிரதிப் பெயர்சொற்களில்( nouns and pronouns) உபயோகிப்போம்.
Noun மற்றும் pronoun க்கு சொந்தமானதை பற்றி குறிப்பிடும்போது நாம் apostrophe ஐ உபயோகிப்போம்.
Examples
- Are you Haran’s dad? – நீங்கள் கரனின் அப்பாவா?
- The monkey’s tail is very long. – அந்த குரங்கின் வாலானது மிகவும் நீளமானது.
- This is Ram’s room. – இது ராமின் அறை.
- I am going to my colleague’s home. – நான் என்னுடன் வேலை செய்பவரின் வீட்டுக்கு செல்ல உள்ளேன்.
இரு பெயர்கள் வரும்போது
ஒரு பொருளானது இரண்டு பேர்க்கு சொந்தம் என குறிப்பிடும்போது நாம் இரண்டு நபர்களுக்கும் apostrophe (‘) குறிப்பிட அவசியம் இல்லை. இரண்டாம் நபருக்கு மட்டும் தந்தால் போதுமானது.
Examples
1. Ram and Saran’s vans are very big.
ராம் மற்றும் சரணின் வேன் மிகவும் பெரியது.
வேன் ஆனது ராம் மற்றும் சரண் இருவருக்கும் சொந்தமானது.
சில நேரங்களில் இரண்டு பெயர்களுக்கும் apostrophe ஆனது வரலாம். அது எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்து மாறும்.
Example
1. This is Dhanush’s brother’s cat.
இது தனுஷின் தம்பியின் பூனை.
(பூனை தனுஷின் தம்பிக்கு சொந்தமானது.)
S இல் முடியாத plural noun வரும்போது
s இல் முடியாத plural noun க்கு possessive form ஆக மாற்ற apostrophe உடன் s சேர்க்க வேண்டும்.
Example
Some people’s houses are bigger than ours. – சிலரது வீடுகள் நம்முடையதை விட பெரியதாக இருக்கும்.
S இல் முடியும் plural noun வரும்போது
S ல் முடியும் plural noun ஐ progressive form ஆக மாற்ற, S க்கு பின்னால் apostrophe சேர்த்தால் போதுமானது.
Example
The boys’ college is bigger than the girls’ college. – பெண்கள் கல்லூரியை விட ஆண்கள் கல்லூரி பெரியது.
contractions வரும்போது
Pronouns உபயோகிக்கும் போது அவற்றை துணை வினைச்சொல்லுடன் சுருக்கி கூறுவோம் அல்லவா? அத்தகைய சுருக்கங்களுக்கு(contractions) apostrophe யை உபயோகிக்க வேண்டும்.
Examples
- We’re
- You’re
- She’s
- He’s
- They’ve
- I’m
Quotation marks (“ “)
Quotation marks ஐ தமிழில் மேற்கொள் குறி என அழைக்கப்படும். ஒருவர் உங்களிடம் குறிப்பிட்டதை நீங்கள் அப்படியே மற்றவரிடம் குறிப்பிடுபோதும் மற்றும் மேற்கொள் காட்டும் இடங்களில் நாம் Quotation marks (மேற்கோள் குறிகள்) ஐ உபயோகிக்க வேண்டும்.
அந்த வாக்கியத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் நாம் “ உபயோகிக்க வேண்டும்.
நாம் மேற்கோள் குறிக்கு முன்னால் comma உபயோகிப்பதன் மூலம் அந்த மேற்கோள் வாக்கியத்தினை மற்றவற்றுடன் எளிதாக பிரிக்கலாம்.
Examples
- “That car is mine,” he said.
- “I would like to take a leave today, please,” said Dhanush.
- “Let’s go to the hospital,” screamed Anirudh.
நாம் மேற்கோள் குறிக்கு முன்னால் period உபயோகிப்பதன் மூலம் அந்த மேற்கோள் வாக்கியத்தினை மற்றவற்றுடன் எளிதாக பிரிக்கலாம்.
Examples
- The teacher said, ”Get out of the class and meet me in my room.”
- He said, “I love you.”
நாம் வினாக்குறி, ஆச்சர்யக்குறி ஆகியவற்றை அதன் இடங்களுக்கு தகுந்தாற்போல் நாம் மேற்கோள் குறி முடியும் இடங்களில் உபயோகிக்கலாம்.
Examples
- He said, “Stop it right now!”
- She said, “What a man he is!”
- “How do I get to the hospital?” he asked.
இந்த quotation mark, comma போன்றவற்றை அதிக அளவு direct speech and indirect speech இல் உபயோகப்படுத்துவோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவை காணவும்.
Direct speech and Indirect speech in Tamil
ஆங்கிலத்தில் capital letters ஐ வாக்கியத்தில் அல்லது வார்த்தைகளில் எப்படி எவ்வாறு உபயோகிக்க வேண்டு என்பதைக் காண கீழே உள்ள பதிவை படிக்கவும்.
How to use capital letter effectively in English?
Conclusion
இந்த பதிவில் நாம் நிறுத்தற்குறிகள் என்றால் என்ன அவற்றின் வகைகள் என்ன, அவற்றை எங்கு சரியாக உபயோகிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இவை உங்களுக்கு எந்தெந்த இடங்களில் எத்தகைய சூழ்நிலைகளில் நாம் சரியான நிறுத்தற்குறிகளை இட வேண்டும் என ஒரு தெளிவு பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த நிறுத்தற்குறிகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை comment இல் தெரிவிக்கவும்.
இந்த பதிவினைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை comment இல் பதிவு செய்யவும்.
நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!