Noun(பெயர்ச்சொல்) and its types in Tamil

Home Basic Grammar Noun(பெயர்ச்சொல்) and its types in Tamil

Ultimate guide to nouns and their types with examples

What is noun?

பெயர்ச்சொல்லானது(noun) மக்களை, விலங்குளை, இடங்களை, பொருட்களை, செயல்களை குறிப்பிட உதவுகிறது.பொதுவாக, nouns இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. Common Nouns (பொதுப் பெயர்ச்சொல்)
  2. Proper Nouns (சிறப்புப் பெயர்ச்சொல்)

Common Nouns

Common Noun (பொதுப் பெயர்ச்சொல்)

பொதுவான பெயர்ச்சொல் என்பது அதன் பெயரில் உள்ளது போலவே பொதுவாக உள்ள பெயர்களை குறிப்பிட பயன்படுகிறது.

அதாவது மக்கள், இடங்கள், பொருட்களுக்கான பொதுவான பெயர்களே இந்த பொதுவான பெயர்ச்சொல் ஆகும்.

Examples for Common Nouns

People (மக்கள்):

மக்களை பற்றி பொதுவாக குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்கள் இந்த பொது பெயர்ச்சொல்லின் கீழ் வரும். எடுத்துக்காட்டாக கீழே உள்ளதை கவனியுங்கள்.

  • Baby (குழந்தை)
  • Brother (சகோதரன்)
  • Friend (நண்பன்)
  • Teacher (ஆசிரியர்) 
  • Farmer (விவசாயி) 
  • Doctor (மருத்துவர்) 
  • Nurse (செவிலியர்)

 Places (இடங்கள்)

இடங்களைப் பற்றி பொதுவாக குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்கள் இந்த பொது பெயர்ச்சொல்லின் ஒரு அங்கம் ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை கவனமாக பாருங்கள்.

  • Bank (வங்கி)
  • Hospital (மருத்துவமனை)
  • Airport (விமான நிலையம்)
  • Zoo (உயிரியல் பூங்கா)
  • The Temple (கோவில்)
  • Restaurant (உணவகம்)
  • School (பள்ளி)

Things (பொருட்கள்)

கீழே குறிப்பிட்ட அனைத்தும் பொருட்களை பொதுவாக குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.

  • Pen (பேனா, எழுதுகோல்)
  • Pencil(பென்சில், எழுதுகோல்)
  • Chair (நாற்காலி)
  • Table (மேசை)
  • Ladder (ஏணி)
  • Bus (பேருந்து)
  • Computer (கணினி)

ஆக பொருட்களை பற்றி பொதுவாக கூறும் சொற்கள் அனைத்துமே இந்த Common Noun எனப்படும் பொதுப் பெயர்ச்சொல்லின் கீழ் வரும்.

Proper Nouns

Proper Nouns (சிறப்புப் பெயர்ச்சொல்)

பொதுவாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ, இடத்தையோ குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்கள் Proper Nouns (சிறப்புப் பெயர்ச்சொல்) எனப்படுகிறது.

எப்பொழுதும் Proper Nounsஇன் முதல் எழுத்து capital Letterஇல் தொடங்க வேண்டும்.

Examples of proper nouns

People’s Names (மக்களின் பெயர்கள்)

  • Prabaharan
  • Gandhi
  • Nehru
  • Professor Haran

Name of the week & months

மாதம் மற்றும் வார நாட்கள் இந்த proper Noun இல் அடங்கும்.

Days of week

  • Sunday
  • Monday 
  • Friday

Names of the month

  • January
  • February
  • May

Special days & festival days

பண்டிகை நாட்கள், சிறப்பு நாட்கள் இந்த proper Nouns இன் கீழ் வருகின்றன.

Examples

  • Special days
  • Labour Day
  • Independence Day
  • Celebrations
  • Diwali
  • Pongal
  • Ramadan

Famous places , building names

புகழ்பெற்ற இடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்களின் பெயர்களும் இந்த proper Nouns இன் கீழ் வருகின்றன.

Examples

  • The Taj Mahal
  • The Eiffel Tower
  • The Great Wall of China
  • Buckingham Palace

ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசிக்கும் மக்களினை குறிப்பிடும் பெயர்களும் இந்த proper Nouns இன் கீழ் வருகின்றன.

Examples

  • India  –  Indians
  • Italy  –  Italians
  • Thailand  –  Thais

pronoun, Adjective, மற்றும் Adverb பற்றி படிக்க
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & its types in Tamil with examples
Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples
Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil

Singular noun

Singular noun (ஒருமை பெயர்ச்சொல்)

ஒரு நபர் அல்லது பொருளைப் பற்றி பேசும்போது, நாம் கண்டிப்பாக singular noun (ஒருமை பெயர்ச்சொல்) உபயோக்கிக்க வேண்டும்.

Examples 

  • a doctor
  • a lady
  • a player
  • a chair

Plural Noun

Plural Noun (பன்மை பெயர்ச்சொல்)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பொருட்கள், அல்லது இடங்களைப் பற்றி பேசும்போது, ​​நாம் Plural nouns (பன்மை பெயர்ச்சொல்) உபயோக்கிக்க வேண்டும்.

Examples

  • computers
  • buses
  • babies
  • monkeys
  • wolves

Collective nouns

Collective nouns (கூட்டு பெயர்ச்சொற்கள்)

மக்களை, விலங்குகளை அல்லது பொருட்கள் கூட்டமாக இருக்கும்போது அந்த கூட்டமாக உள்ளவற்றை குறிப்பிட இந்த கூட்டு பெயர்ச்சொற்கள் உதவுகின்றன.

மக்கள் குழுக்கள், விலங்குகள் அல்லது பொருட்களின் குழுக்களை குறிப்பிட  கூட்டு பெயர்ச்சொற்கள் பயன்படுகின்றன.

மக்கள்

  • a family
  • a band
  • a gang
  • The army

விலங்குகள்

  • a herd of cattle
  • a pack of wolves
  • a litter of puppies
  • a pride of lions
  • a troop of monkeys

பொருட்கள்

  • a bunch of bananas
  • a deck of cards
  • a cluster of grapes
  • a flight of steps
  • a bunch of flowers
  • a suite of rooms

Note

இந்த Collective nouns ஐ நாம் ஒருமை வினைச்சொல்(singular verb) மற்றும் பன்மை வினைசொல்லிலும்(plural verb) உபயோக்கிக்கலாம்.

ஒரு குழுவானது ஒன்றாக செயல்படும்போது நாம் singular verb (ஒருமை வினைச்சொல்) ஐ உபயோக்கிக்கலாம்.

ஒரு குழுவில் உள்ளவர்கள் ஒரு செயலினை செய்யும் போது தனித்தனியாக செயல்பட்டால், நாம் plural verb (பன்மை வினைச்சொல்) ஐ உபயோக்கிக்கலாம்.

Examples

1. The crowd was orderly.

கூட்டம் ஒழுங்காக இருந்தது.

இதில் கூட்டமானது ஒன்றாக செயல்படுகிறது. எனவே இங்கு singular verb உபயோக்கிக்கப்பட்டுள்ளது.

2. The crowd were clapping.

கூட்டம் கைதட்டிக்கொண்டிருந்தது

இதில் கூட்டமானது ஒவ்வொருவரின் செயலையும் குறிப்பிடுகிறது. எனவே plural verb உபயோகிக்கப்பட்டுள்ளது.

people, police always use plural verbs. Do not use singular verbs

Masculine and Feminine Nouns

Masculine and Feminine Nouns (ஆண் மற்றும் பெண் பெயர்ச்சொற்கள்)

Masculine nouns

இதன் பெயருக்கு ஏற்றவாறு ஆண்மை, ஆண்கள், ஆண் விலங்குகள் போன்றவற்றை குறிக்க பயன்படுகிறது.

Examples

  • Boy
  • Man
  • Son
  • King
  • actor
  • prince

Feminine nouns

இதன் பெயருக்கு ஏற்றவாறுபெண்மை , பெண்கள், பெண் விலங்குகள் போன்றவற்றை குறிக்க பயன்படுகிறது.

Examples

  • Girl
  • Woman
  • Daughter
  • Queen
  • Actress
  • Princess

The Possessive Form of Nouns

1. ஒரு பொருளானது யாருக்கு சொந்தமானது என்பதை காட்ட இந்த Possessive Form of Nouns உதவுகிறது.

Possessive form க்கு மாற்ற, singular noun இன் கடைசியில் apostrophe (‘) இட்டு அதனுடன் s சேர்த்தால் போதும்.

Example

We all like Mom’s cooking.- எங்களுக்கு அம்மாவின் சமையல் பிடிக்கும்.

இங்கு அம்மாவினுடைய என்பதை  குறிப்பிட mom’s என உபயோகிக்கிறோம்.

2. ஒரு பொருளானது இரண்டு பேர்க்கு சொந்தம் என குறிப்பிடும்போது நாம் இரண்டு நபர்களுக்கும்  apostrophe (‘) குடுக்க வேண்டியது இல்லை. இரண்டாம் நபருக்கு மட்டும் தந்தால் போதுமானது.

Example

Ram and Saran’s cars are very big. – ராம் மற்றும் சரணின் கார் மிகவும் பெரியது.

கார் ராம் மற்றும் சரண் இருவருக்கும் சொந்தமானது.

3. சில நேரங்களில் இரண்டு possessive forms ஒரே வாக்கியத்தில் வரும்.

Example

This is Vijay’s brother’s cat. – இது விஜய்யின் தம்பியின் பூனை.

பூனை விஜய்யின் தம்பிக்கு சொந்தமானது.

4. -s இல் முடியாத plural noun க்கு possessive form ஆக மாற்ற apostrophe உடன் s சேர்க்க வேண்டும்.

Examples

1. Some people’s houses are bigger than ours. – சிலரது வீடுகள் நம்முடையதை விட பெரியதாக இருக்கும்.

2. Women’s voices are softer than men’s voices. – பெண்களின் குரலானது ஆண்களின் குரலை விட மென்மையாக இருக்கும்.

5. -s ல் முடியும் plural noun ஐ progressive form ஆக மாற்ற, S க்கு பின்னால் apostrophe சேர்த்தால் போதுமானது.

Example

The boys’ college is bigger than the girls’ college. – பெண்கள் கல்லூரியை விட ஆண்கள் கல்லூரி பெரியது.

Singular noun ஐ plural noun ஆக மாற்றுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள இதனை படிக்கவும்.

Conclusion

இந்த பதிவில் நாம் noun என்றால் என்ன, அதன் வகைகள் என்ன குறிப்பாக common noun அதன் வகைகள், proper noun அதன் வகைகள், singular, plural nouns மற்றும் அதன் வகைகள், collective noun, possessive noun, masculine and feminine noun ஆகியவற்றின் வகைகள், எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் படித்தோம்.

இது உங்களுக்கு noun மற்றும் அதன் வகைகளை பற்றிய ஒரு நல்ல புரிதலை தந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள comment இல் பதியவும். இது தொடர்பான ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் comment செய்யுங்கள். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கேற்க ஆவலாக உள்ளோம்.

நன்றி வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *