Preposition (முன்னிடைச்சொல்) Meaning in Tamil

Home Basic Grammar Preposition (முன்னிடைச்சொல்) Meaning in Tamil

Prepositions என்பதனை தமிழில் முன்னிடைச்சொல் என அழைக்கப்படுகிறது. இதன் பெயரில் உள்ளவாறு ஒரு செயலுக்கும் மற்றொரு செயலுக்கும் இடையே இருந்து அவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பினை கூற இந்த preposition உதவுகிறது.

ஒரு பொருளை அல்லது செயலை மற்றொன்றுடன் தொடர்புபடுத்த prepositions உதவுகிறது.

மேலும், அந்த செயலானது ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட உதவுகிறது.

பொதுவாக preposition ஆனது நேரம், இடம், திசை, மற்றும் இருப்பிடத்தை குறிப்பிட பயன்படுகிறது.

prepositions ஆனது வாக்கியத்தின் கடைசியில் வரக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்டால் அது இலக்கணப்பிழை ஆகும். ஆனால் சில நேரங்களில் வாக்கியத்தின் இறுதியில்  குறிப்பிடலாம்.

How to Use Preposition with Examples in Tamil

Common Preposition words with Tamil meanings

நாம் ஆங்கிலத்தில் பல செயல்களை சேர்க்க நாம் பொதுவாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிப்போம். அவை என்னென்ன வார்த்தைகள் எனவும், அவை அவற்றின் தமிழ் பொருள் என்ன எனவும் இங்கே கொடுத்துள்ளேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  1. About – பற்றி 
  2. Above – மேலே 
  3. Across – முழுவதும் 
  4. After – பின்பு 
  5. Ago – முன்பு 
  6. At – இல், கிட்ட 
  7. Below – கீழே 
  8. By – மூலமாக, அருகில் 
  9. Down – கீழ் 
  10. During – போது, நேரத்தினிடையே 
  11. For – க்கு, ஆக, க்கான 
  12. From – இருந்து 
  13. In – இல், இடத்தில், உள்ளே 
  14. Into – உள்ளே, உள்ளாக 
  15. Off – down or away from a present place, position, or time, 
  16. On – அன்று, மேல், மீது 
  17. Over – மேலாக, மேலே, முடிந்தது
  18. Past – கடந்த 
  19. Since – முதற்கொண்டே, இருந்து 
  20. Through – வழியாக, இடைவழியாக, மூலம் 
  21. To – க்கு, 4 ஆம் வேற்றுமை உருபு, இடத்துக்கு 
  22. Under – அடியில், கீழே 
  23. Until – வரையிலும் 
  24. Up – உயரத்தில் 
  25. With – உடன், கூட, 

Types of preposition

மூன்று வகையான prepositions ஆங்கிலத்தில் உள்ளன.

  1. Preposition of time.
  2. Preposition of place.
  3. Preposition of direction.

Preposition of time in Tamil

ஏதாவது ஒரு செயலானது நடக்கும்போது அது நடந்த காலத்தை அல்லது எப்போது நடக்கிறது என்பதை பற்றி குறிப்பிட உதவுகின்றன.

In, on, at – Preposition of time

காலத்தைப் பொறுத்து In, on, மற்றும் at ஆனது எவ்வாறு உபயோகமாகிறது என காண்போம்.

Preposition of time with Examples in tamil

காலத்தைப் பொறுத்து In (இல்) 

in ஆனது பொதுவான காலத்தை குறிப்பிட உதவுகிறது. அதாவது வருடங்கள், மாதங்கள், நூற்றாண்டுகள், மற்றும் ஒரு நாளின் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட நாம் in ஐ உபயோகிப்போம்.

Examples

  1. He was born in 1994. – அவன் 1994 இல் பிறந்தான்.
  2. I worked there in 2000. – நான் 2000 இல் அங்கே வேலை செய்தேன். 
  3. His birthday is coming in October. – அவரது பிறந்த நாள் அக்டோபர் மாதம் வருகிறது.
  4. The king ruled here in the 18th century. – 18 ஆம் நூற்றாண்டில் அரசர் இங்கு ஆட்சி செய்தார்.

காலத்தைப் பொறுத்து On (அன்று) 

தேதிகள், வாரத்தின் நாட்கள், மாதத்தின் நாட்கள், விடுமுறை நாட்கள், நாள் என முடியும் சொற்களை குறிப்பிட on உதவுகிறது.

Examples

  1. Our office will be closed on Independence Day. – சுதந்தர தினத்தன்று நம் அலுவலகம் மூடப்படும்.
  2. I will meet you on Monday. – திங்கள்கிழமையன்று நான் உன்னை சந்திக்கிறேன்.
  3. Most of our shops will be open on Fridays. – எங்களுடைய பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமையன்று திறந்திருக்கும்.

காலத்தைப் பொறுத்து At (க்கு, இல்) 

குறிப்பிட்ட நேரம், ஒரு நாளின் நேரத்தையும், day என முடியாத விடுமுறை நாட்களை குறிப்பிட நாம் at ஐ உபயோகிப்போம்.

Examples

  1. I will see you at 3 p.m. – மதியம் 3 மணிக்கு உங்களை சந்திக்கிறேன்.
  2. We will go there at midnight. – நாம் நள்ளிரவில் அங்கு செல்வோம்.
  3. I saw him at 3 p.m. today. – இன்று மதியம் 3 மணிக்கு அவனை பார்த்தேன்.

Examples of preposition of time

  1. We play in the evening. – நாங்கள் மாலையில் விளையாடுவோம்.
  2. We go to sleep at night. – நாங்கள் இரவில் தூங்கச் செல்கிறோம்.
  3. We get up in the morning. – நாங்கள் காலையில் எழுந்திருப்போம்.
  4. We go to sleep at night. – நாங்கள் இரவில் தூங்கச் செல்கிறோம்.
  5. They were married in 1981. – அவர்கள் 1981 இல் திருமணம் செய்து கொண்டனர்.
  6. I have been working here since 2020. – நான் 2020 முதல் இங்கு வேலை செய்து வருகிறேன்.
  7. She has been waiting for 4 hours. – அவள் நான்கு மணி நேரமாக காத்துக்கொண்டு இருக்கிறாள்.
  8. I will meet you on Thursday. – வியாழன் அன்று உங்களை சந்திக்கிறேன்.
  9. We watched the whole movie until 3 p.m. – நாங்கள் 3 மணி வரை முழு படத்தையும் பார்த்தோம்.
  10. Many shops open on Fridays. – வெள்ளிகிழமையன்று பல கடைகள் திறக்கப்படும்.
  11. Everyone should wash their hands before eating food. – உணவு உண்பதற்கு முன் அனைவரும் அவரவர் கைகளை கழுவ வேண்டும்.
  12. Could you come after some time? – சிறிது நேரம் கழித்து வர முடியுமா?
  13. Do not interfere during the meeting. Don’t disturb. – சந்திப்பின்போது குறுக்கே தலையிட வேண்டாம். தொந்தரவு செய்யாதே. 
  14. Do not speak while I am talking. – நான் பேசும் போது நீ பேசாதே.
  15. Our office will be open from 8 a.m. to 8 p.m. – எங்கள் அலுவலகம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.

Conjunctions, Adverbs, Adjective, Pronoun, Noun போன்றவற்றை அறிய

Conjunctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil

Adverbs (வினை உரிச்சொல்) with examples in Tamil

Adjective (உரிச்சொல்) & its types in Tamil with examples

Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil with examples

Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil

Prepositions of place in Tamil

ஏதாவது ஒரு செயலோ அல்லது நிகழ்வோ நடக்கும்போது அது எங்கு நடக்கிறது அல்லது நடக்கும் இடம்  பற்றி குறிப்பிட உதவுகின்றன.

In, on, at – preposition of place

In, on, at ஆனது இடத்தைப் பொறுத்து எப்படி மாறுகிறது என காண்போம்.

Preposition of Place with Examples in tamil

இடத்தைப் பொறுத்து In (bigger areas and general)

நாடுகள், மாநிலங்கள், நகரங்கள், எல்லைகளை உடைய இடங்கள் மற்றும் சுற்றுப்புற இடங்களை குறிப்பிட உதவுகிறது.  

Examples

  1. I lived in England. – நான் இங்கிலாந்தில் வாழ்ந்தேன்.
  2. She lives in Africa. – அவள் ஆப்ரிக்காவில் வசிக்கிறாள்.
  3. The meeting will be held in a hotel. – சந்திப்பு ஒரு ஹோட்டலில் நடைபெறும்.

இடத்தைப் பொறுத்து On (small areas and more specific)

தெருக்கள், வழிகள், தீவுகள், பெரிய வண்டிகளில் பயணம் செய்யும்போது போன்றவற்றை குறிப்பிடும் போது நாம் On உபயோகிக்கலாம். 

Examples

  1. He lives on the second floor. – இரண்டாம் தளத்தில் அவன் வசிக்கிறான்.
  2. We traveled to the USA on a plane. – நாங்கள் அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்தோம்.
  3. I traveled to Tamil Nadu on the bus. – நான் பேருந்தில் தமிழ் நாட்டுக்கு சென்றேன்.
  4. We saw you on the Andaman Islands. – நாங்கள் அந்தமான் தீவில் உன்னை சந்தித்தோம்.

இடத்தைப் பொறுத்து At (exact address and more specific)

ஒரு குறிப்பிட்ட முகவரியைக் குறிப்பிட அல்லது துல்லியமாக இடத்தினை குறிப்பிடும்போது நாம் At ஐ உபயோகிப்போம்.

Examples

  1. You can meet him at his home. – நீ அவனை அவனது வீட்டில் சந்திக்கலாம்.
  2. I will wait for you at the park. – உனக்காக பூங்காவில் காத்திருப்பேன்.
  3. I studied at a government high school. – அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.
  4. I am working at TCS. – TCS இல் நான் பணிபுரிகிறேன்.

Other Prepositions of place words

  1. Under – கீழே, அடியில் 
  2. Underneath – அடியில், கீழாக 
  3. Inside – உள்ளே 
  4. Besides – மேற்கொண்டு, தவிர  
  5. Over – மேலே மேலாக 
  6. In – இல், இடத்தில் 
  7. In front of – முன்னால் 
  8. In the middle of – மத்தியில் 
  9. In the top of – மேல்பகுதியில் 
  10. On – அன்று, மேல் 
  11. Behind – பின்னால் 
  12. Between – இடையில், நடுவில்  

Examples preposition of place

  1. He hides behind the door. – அவன் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.
  2. I am waiting outside of your home. – நான் உங்கள் வீட்டுக்கு வெளியே காத்துக்கொண்டு இருக்கிறேன்.
  3. She told me to wait in front of your office. – உன் அலுவலகத்தின் முன்னால் காத்திருக்குமாறு கூறினாள்.
  4. He is talking to her under the tree. – அவன் மரத்தின் அடியில் ஆவலுடன் பேசிக்கொண்டு இருக்கிறான்.
  5. There were trees beside the river. – ஆற்றன் ஓரத்தில் மரங்கள் இருந்தன.
  6. I live in Tamil Nadu. – நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன்.

Preposition of directions in Tamil

ஏதாவது ஒரு செயல் அல்லது நிகழ்வு நடக்கும்போது அது எங்கு செல்கிறது அல்லது செல்லும் திசை  பற்றி குறிப்பிட உதவுகின்றன.

Examples

  1. The boys run after each other. – சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து ஓடுகிறார்கள்.
  2. He moved happily towards his mother. – அவன் மகிழ்ச்சியுடன் அம்மாவை நோக்கி சென்றான்.
  3. Please pass this note to Haran. – கரனுக்கு இந்த குறிப்பை அனுப்பவும்.
  4. He lived across the street. – தெருவில் வசித்து வந்தான்.

Preposition of directions words

Preposition of directions இல் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளை இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன்.

  1. Into – உள்ளே, உள்ளாக 
  2. To – கு 
  3. From – இருந்து 
  4. Towards – நோக்கி, சார்பாக 
  5. Across – குறுக்காக 
  6. After – பின்பு 
  7. Down – கீழே 
  8. Along – சேர்ந்து, கூட, நெடுகிலும் 
  9. Through – ஊடே, இடைவளியாக 
  10. Out of – வெளியே 
  11. Past – கடந்த 

From

ஒரு செயலின் தொடக்க இடத்தைக் குறிப்பிட from உதவுகிறது. அதாவது ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு போகிறோம் எனில் அந்த ஆரம்பிக்கும் இடத்தை குறிப்பிட இந்த from உதவுகிறது.

Examples

  1. Have you started from Coimbatore? – கோயம்புத்தூரிலிருந்து கிளம்பி விட்டாயா?
  2. I got a notice from the court.- எனக்கு நீதி மன்றத்திலிருந்து நோட்டீஸ் வந்தது.

To 

ஒரு செயலின் முடிவுறும் இடத்தைக் குறிப்பிட to உதவுகிறது. மேலே from க்கு நாம் ஆரம்பிக்கும் இடத்தை குறிப்பிட்டோம் அல்லவா? அதே போல் நாம் சென்று ஒரு சேர வேண்டிய இடத்தை சேர்ந்து விட்டோம் என வைத்துக்கொண்டால் அந்த சேரும் இடத்தை குறிப்பிட இந்த to உதவுகிறது.

Examples

  1. We went to the UK. – நாங்கள் இங்கிலாந்துக்கு சென்றோம்.
  2. I am going to give my shoes to him – நான் என்னுடைய காலனியை அவனுக்கு கொடுக்கபோகிறேன்.

By

நாம் by ஐ பல்வேறு இடங்களில் உபயோகிக்கலாம். அவை என்னென்ன இடங்களில் என்னென்ன பொருள் தரும் என காணலாம்.

  1. உங்களுக்கு அருகில் அல்லது அருகில் 
  2. கொடுக்கப்பட்ட நேரம் அல்லது  கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி இல்லாமல் 
  3. ஒரு செயலினை செய்தவரினை பற்றி குறிப்பிட 

மேலே கூறிய மூன்று வகையான நிகழ்வுகளை குறிப்பிடும் இடங்களில் by ஐ உபயோகிக்க வேண்டும்.

அருகில் இருப்பதை கூற

உங்களுக்கு அருகில் அல்லது அருகில் இருப்பதை பற்றி பேசும்போது நாம் by உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. Is my house by the police station? – எனது வீடு காவல் நிலையத்துக்கு அருகில் உள்ளதா?
  2. Your office is by the mall. – உங்கள் அலுவலகம் மாலுக்கு அருகில் உள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் என கூறும்போது

குறிப்பிட்ட நேரம் அல்லது  குறிப்பிட்ட நேரத்தை தாண்டி இல்லாமல் இருக்குமாறு அமையும் வாக்கியங்களில் நாம் by உபயோகிக்கலாம்.

Examples

  1. See you in the theater by 10 p.m. – இரவு 10 மணிக்கு திரையரங்கில் சந்திப்போம்.
  2. I will message you by 3 a.m. – நான் காலை 3 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.

செயலை செய்தவரை

ஒரு செயலினை செய்தவரினை பற்றி கூறும் இடங்களில் நாம் by ஐ உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. This poem was written by the poet. – இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் ஆவார்.
  2. This thriller story was written by my master. – இந்த திரில்லர் கதையை எனது ஆசிரியர் எழுதினார்.

With

with ரன்பதன் தமிழ் பொருள் உடன் என்பதாகும். நாம் with ஐ பல்வேறு இடங்களில் உபயோகிக்கலாம். அவை என்னென்ன என காணலாம்.

Examples

  1. In the company of 
  2. In addition to
  3. By means of

குழுவாக செய்யும் செயலை கூறும் இடங்களில்

ஒரு செயலை மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும்போது உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. I went to the cinema with my friends. – எனது நண்பர்களுடன் திரைப்படத்துக்கு சென்றேன்.
  2. We are going with him. – நாங்கள் அவனுடன் செல்கின்றோம்.
  3. I planned to go to Goa with colleagues. – நான் என்னுடைய சக பணியாளர்களுடன் கோவாவுக்கு செல்கிறேன்.

கூடுதலாக என்னும் இடங்களில்

மேலும் வேண்டும் எனும் சூழ்நிலைகளில் உபயோகிக்க வேண்டும்.

Examples

  1. Can you give me the noodles with more sauce? – எனக்கு நூடுல்ஸ் உடன் அதிக சாஸ் சேர்த்து தர முடியுமா?
  2. We would like to have a meal with ice cream. – நாங்கள் உணவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்புகிறோம்.

ஒன்றின் உதவியால் என்னும் இடங்களில்

ஒன்றன் உதவியுடன் செய்தோம் என கூறும் போது உபயோகிக்க வேண்டும். 

Examples

  1. I broke the tree with an ax. – நான் கோடாலியின் உதவியுடன் அந்த மரத்தை வெட்டினேன்.
  2. I drew an animal with a pencil. – பென்சிலின் உதவியைக்கொண்டு மிருகத்தை வரைந்தேன்.

Conclusion

இந்த பதிவில் prepositions மற்றும் அதன் வகைகள், எடுத்துக்காட்டுக்கள், எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை அல்லது ஏதேனும் இது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அதனை கீழே comment இல் பதிவு செய்யுங்கள். உங்களுக்கு பதில் அளிக்க நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்

நன்றி! வாழ்த்துக்களும் அன்புகளும்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *