Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & its types in Tamil with examples
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல் / சுட்டுப் பெயர்ச்சொல்)
பெயர்ச்சொல்லுக்கு (noun) மாற்றாக பயன்படுத்தப்படும் சொல் Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) என அழைக்கப்படுகிறது. இது அந்த பெயர்ச்சொல்லின் மறுவடிவம் ஆகும். மீண்டும் மீண்டும் அந்த பெயர்ச்சொல் உபயோகிக்காமல் அதற்கு பதிலாக மற்றொன்றை வைத்து அந்த பெயர்ச்சொல் சுட்டிக் காட்ட உதவுகிறது.
ஒரு நபரின் பெயரையோ, பொருளின் பெயரையோ, ஒரு வாக்கியத்தில் திரும்ப திரும்ப உபயோகப்படுத்தும் இடங்களில் நாம் இந்த Pronoun ஐ உபயோகிக்கலாம்.
pronoun ஐ பற்றி அறியும் முன் நாம் noun அதாவது பெயர்ச்சொல்லை பற்றி அறிந்து இருக்க வேண்டும். அதனை பற்றி அறிய Noun(பெயர்ச்சொல்) and it types in Tamil இதனை காணவும்.
Example
Good morning, Praba! You may sit down now.
காலை வணக்கம், பிரபா! நீங்கள் அமரலாம்.
மேலே உள்ள எடுத்துக்காட்டை பார்க்கும் போது உங்களுக்கு எளிதாக புரியும். அதாவது முதல் வாக்கியத்தில் காலை வணக்கம், பிரபா என்று கூறிவிட்டு அடுத்த வார்த்தையை ஆரம்பிக்கும்போது பிரபா என கூறாமல் நீங்கள்(you) என உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு you என்பது pronoun ஆகும்.
The pronouns are classified into 8 types. They are
இந்த pronouns எட்டு வகைகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன. அவையாவன,
- Subject pronouns
- Object pronouns
- Reflexive pronouns
- Interrogative Pronouns
- Demonstrative pronouns
- Possessive Pronouns
- Indefinite pronouns
- Relative Pronouns
Pronoun பத்தின உங்க புரிதலை தெரிஞ்சுக்க இந்த Test ஐ try பண்ணுங்க – Pronoun Quiz
Subject pronoun
ஒரு subject ஐ வாக்கியத்தில் குறிப்பிட்டு பின்பு அதே subject ஐ மீண்டும் குறிப்பிடும் போது எளிமையாக குறிப்பிட பயன்படுகிறது. இதன் மூலம் அந்த subject ஐ நேரடியாக உபயோகிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக நாம் I, we, you, they, he, she, it போன்றவற்றை அந்த subject ஐ பொறுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.
Examples of subject pronouns
Ravi likes cats. Ravi has four cats.
ரவிக்கு பூனைகள் பிடிக்கும். ரவியிடம் நான்கு பூனைகள் உள்ளன.
என்பதற்கு பதிலாக,
Ravi likes cats. He has four cats.
ரவிக்கு பூனைகள் பிடிக்கும். அவரிடம் நான்கு பூனைகள் உள்ளன.
இங்கு முதல் வாக்கியத்தில் இரு முறை ரவி வந்துள்ளது. நாம் இரண்டாவது முறை ரவி ஐ குறிப்பிடாமல் அவருக்கு என குறிப்பிட்டுள்ளோம். அவருக்கு என்பது இங்கு ரவியை குறிக்கிறது. இவ்வாறு பல முறை noun ஐ குறிப்பிடாமல் இருக்க Subject pronouns உதவுகிறது.
Subject pronoun list
I | நான் |
We | நாம் / நாங்கள் |
You | நீ / நீங்கள் |
They | அவர்கள், அவைகள் |
He | அவன் |
She | அவள் |
It | அது |
More examples of subject pronoun
- My name is Praba. I am twenty seven.
- My father works hard. He works on a farm.
Object pronouns
ஒரு வாக்கியத்தில் செயப்படு பொருளாக (Object) பயன்படும் பிரதி பெயர்ச்சொல் ஆகும். மேலே பார்த்த subjective pronoun ஆனது subject ஐ மாற்றி கூற பயன்படுகிறது. அதே போல இங்கு உள்ள object pronoun ஆனது, செயப்படு பொருளை மாற்றிக்கூற உதவுகிறது.
Examples of object pronouns
Where is Praba? I need to speak to him.
பிரபா எங்கே? நான் அவனிடம் பேச வேண்டும்.
Where is Praba? I need to speak to praba. என்பதற்கு பதிலாக Where is praba? I need to speak to him. என உபயோகிக்கலாம்.
Object pronouns list
Me | என்னை |
Us | நம்மை, எங்களை |
You | உன்னை, உங்களை |
Them | அவைகளை, அவர்களை |
Him | அவனை |
Her | அவளை |
It | அதை |
More examples of object pronouns
- The dog is very dirty. Mom is cleaning it.
- Baby birds cannot fly. Mother birds have to feed them.
Three groups of pronouns
இந்த pronoun ஆனது மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன
- First person pronoun
- Second person pronoun
- Third person pronoun
Pronoun | Where it is used? | Singular pronoun | Plural pronoun |
First person pronoun | யார் பேசுகிறார்களோ அவர்களை குறிப்பது இந்த first person pronoun ஆகும். தன்னைப்பற்றி, தன்னை போன்றவை ஆகும்.. | I, me | We, us |
Second person pronoun | பேசப்படும் நபரை (முன்னிலை or முன்னால் இருப்பவரை) குறிப்பிட Second person pronoun உதவுகிறது. | You | You |
Third person pronoun | தன்னையோ, முன்னால் இருப்பவரையோ இல்லாமல் மூன்றாவது உள்ளவரை (படர்க்கை) குறிப்பிட உதவுகிறது. | he, she, it, him, her | They, them |
Reflexive Pronoun
Reflexive Pronoun ஆனது தமிழில் அனிச்சை பிரதி பெயர்ச்சொல் என அழைக்கப்படுகிறது.
ஒரு செயல் அதே பொருளால் (நபரால்) செய்யப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது என்பதைக் குறிப்பிட reflexive pronoun பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக எனக்கு நானே உடைகளை தெய்த்துக்கொண்டேன் என கூறும்போது நானே என்று அந்த நபர் அவரையே குறிப்பிடுகிறார். இத்தகைய சூழ்நிலைகளில் உபயோகிக்கப்படும் பிரதி பெயர்ச்சொற்கள் தன்னிச்சை பிரதி பெயர் சொற்கள் என அழைக்கப்படுகிறது.
Reflexive pronouns list
Myself | நானே |
Yourself | நீயே |
Himself | அவனே |
Herself | அவளே |
Itself | அதுவே |
Ourselves | நாங்களே |
Yourselves | நீங்களே |
Themselves | அவர்களே |
I, me | Myself | நானே |
You | Yourself | நீயே |
He, Him | Himself | அவனே |
She, her | Herself | அவளே |
It | Itself | அதுவே |
We, us | Ourselves | நாங்களே |
You | Yourselves | நீங்களே |
They, them | Themselves | அவர்களே |
Examples of reflexive pronouns
- Praba fell and hurt himself. – பிரபா கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
- We fried the chicken by ourselves. – நாங்கள் எங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை நாங்களே சமைத்தோம்.
Interrogative Pronouns
Interrogative pronoun ஆனது தமிழில் வினா பிரதி பெயர்ச்சொல் என அழைக்கப்படுகிறது. இதனை நாம் கேள்வி கேட்கும் இடங்களில் உபயோகப்படுத்துகிறோம். பொதுவாக who, whom, whose, what, which போன்றவற்றை உபயோகிப்போம்.
Examples of interrogative pronouns
Who are those people? – யார் அந்த மனிதர்கள்?
Who – யார்
யார் என்ற கேள்வி கேற்கும் இடங்களில் நாம் who வை உபயோகிப்போம். அதாவது எழுவாய் (subject) மற்றும் செயப்படுபொருள் (Object) பற்றி கேள்வி கேற்கும் இடங்களில் நாம் உபயோகிப்போம். பெரும்பாலான இடங்களில் செயபடுபொருளை பற்றி கேள்வி கேற்கும் இடங்களில் whom ஐ உபயோகிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் நாம் who உபயோகிக்கலாம்.
- Who are you? – யார் நீங்கள்?
- Who is the current president of India? இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவர் யார்?
Whom – யாரை
மேலே நாம் கூறியது போலெ எந்தெந்த இடங்களில் நாம் செயப்படு பொருளை (object) பற்றி கேள்வி கேற்கிறோமோ அங்கு நாம் whom ஐ உபயோகிப்போம்.
- Whom are you talking to? – யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
- Whom did the raja criticize? – ராஜ யாரை விமர்சித்தார்?
மேலே உள்ள எடுத்துக்காட்டை கவனித்தீர்களானால், ராஜா யாரையோ பற்றி விமர்சமாம் செய்துகொண்டு இருக்கிறார். அவர் யார் என எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். எனவே நான் ராஜா அருகில் உள்ளவரிடம் யாரை விமர்சித்தார் என கேற்கிறேன். எனவே நான் இங்கு whom ஐ உபயோகித்துள்ளேன்.
Whose – யாருடைய
ஒரு பொருளானது மற்றொருவருக்கு சொந்தமானது என வைத்துக்கொள்வோம். அதனையுடைய சொந்தக்காரர் யார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் சூழ்நிலையில் இது யாருடையது என்று கேர்ப்போம் இல்லயா? அத்தகைய சூழலில் நாம் இந்த whose ஐ உபயோகிப்போம்.
- Whose pen is this? – யாருடைய பேனா இது?
- Whose is this sketch? – யாருடைய ஓவியம் இது?
What – என்ன
உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஏதேனும் தகவல் தேவைப்படும்போது நாம் அதனை கேள்வியாக கேட்க what அதாவது என்ன என்பதை உபயோகிப்போம்.
- What does haran want? – காரனுக்கு என்ன வேண்டும்?
- What is your sister’s name? – உன் தங்கையின் பெயர் என்ன?
Which – எந்த
எந்த என்று கேள்வி கேட்கும் அனைத்து இடங்களிலும் நாம் which என்பதனை உபயோகிக்க வேண்டும். மனிதர்களை பற்றியோ அல்லது பொருட்களை பற்றியோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- Which dress do you like? – உங்களுக்கு எந்த ஆடை பிடிக்கும்?
- Which of your brothers is the tallest? – உங்களின் எந்த சகோதரர் உயரமானவர்?
Demonstrative pronouns
Demonstrative Pronouns ஆனது தமிழில் சுட்டு பிரதி பெயர்ச்சொல் என அழைக்கப்படுகிறது. இது ஒன்றினை சுட்டிக்காட்டி அதனை குறிப்பிட உதவுகிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
Demonstrative Pronouns பொருட்களினை குறிப்பிட்டு சுட்டிக் காட்ட உதவுகிறது.
- This – இது, இந்த
- That – அது, அந்த
- Those – அவை, அவைகள்
- These – இவை, இவைகள்
Singular Demonstrative Pronoun
this மற்றும் that ஆனது ஒருமை சுட்டு பிரதிப்பெயர்ச்சொல்லின் கீழ் வரும். இது அருகில் மற்றும் தொலைவில் இருக்கும் ஒரு பொருளை, நபரை என ஏதேனும் ஒன்றை குறிப்பிட உதவுகிறது.
This
This ஆனது அருகில் இருக்கும் ஒரு பொருளை குறிப்பிட உபயோகிக்கலாம். அதாவது சுட்டிக்காட்டும் நபருக்கு அருகே இருக்கும் பொருளை சுட்டிக்காட்ட this உதவுகிறது.
That
That ஆனது தொலைவில் இருக்கும் ஒரு பொருளை குறிப்பிட உபயோகிக்கலாம். அதாவது சுட்டிக்காட்டும் நபருக்கு தொலைவில் அதாவது கையை நீட்டி சொல்லும் அளவிற்கு இருக்கும் பொருளை சுட்டிக்காட்ட that உதவுகிறது.
Examples of Singular Demonstrative Pronouns
- This is a pen. – இது ஒரு பேனா.
- What is this? – என்ன இது?
- Did you drop this? – இதை நீங்கள் தவறவிட்டீர்களா?
- That is a mountain. – அது ஒரு மலை.
- That is my daughter’s house. – அது என்னுடைய மகளின் வீடு.
Plural Demonstrative Pronoun
these மற்றும் those ஆனது பன்மை சுட்டு பிரதி பெயர்ச்சொல்லின் கீழ் வரும். மேலே பார்த்த this மற்றும் that ஆனது ஒருமையில் உள்ள நபரை அல்லது பொருளை சுட்டிக்காட்ட உதவுவது போல் இது பல பொருட்கள் கொண்ட தொகுப்பை சுட்டிக்காட்ட these மற்றும் those ஆனது உதவுகிறது.
These
These ஆனது அருகில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை குறிப்பிட உபயோகிக்கலாம். சுட்டிக்காட்டும் நபருக்கு அருகே கூட்டமாக இருக்கும் பொருளையோ அல்லது மனிதர்களையோ குறிப்பிட்டு சொல்ல இந்த these உதவுகிறது.
Those
Those ஆனது தொலைவில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை குறிப்பிட உபயோகிக்கலாம். சுட்டிக்காட்டும் நபருக்கு தொலைவில் கூட்டமாக இருக்கும் பொருளையோ அல்லது மனிதர்களையோ குறிப்பிட்டு சொல்ல இந்த those உதவுகிறது.
Examples of plural demonstrative pronouns
- These are dogs. – இவை நாய்கள்.
- Those are dogs. – அவை நாய்கள்.
- These are elephants, but those are donkeys. – இவை யானைகள், ஆனால் அவை கழுதைகள்.
Indefinite pronoun
ஒரு நபரையோ, ஒரு பொருளையோ பற்றி குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் குறிப்பிட Indefinite Pronouns உதவுகிறது.
All | அனைத்து, எல்லாம் |
Another | மற்றொன்று |
Any | ஏதாவது,ஏதேனும் |
Anybody | யாரேனும் |
Each | ஒவ்வொன்றும் |
Everybody | எல்லோரும். |
Everyone | அனைவரும் |
Many | பல |
Most | பெருபாலான |
Some | சில |
Such | அத்தகைய |
They | அவர்கள் (we can use They when it makes an indefinite reference). |
Examples of Indefinite pronouns
- All of you, please wake up. – அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள்.
- anyone can answer this question. – இந்த வினாவிற்கு யார் வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம்.
Pronoun பத்தின உங்க புரிதலை தெரிஞ்சுக்க இந்த Test ஐ try பண்ணுங்க – Pronoun Quiz
Conclusion
இந்த பதிவில் நாம் pronoun என்றால் என்ன அதன் வகைகள் என்ன, எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுக்களுடன் தெளிவாக பார்த்தோம். இவற்றினை அடிக்கடி படுத்தி நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் நம்மால் எளிமையாக இந்த pronouns ஐ ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதவும் பேசவும் இயலும். உங்கள் ஆங்கில பயணத்தில் நாங்களும் சிறு பங்காற்றுகிறோம் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை comments இல் தெரிவிக்கவும். இது எங்களுக்கு இது போன்ற பல பதிவுகளை இட ஊக்குவிக்கும். உங்களுடைய சந்தேகங்களையும் இங்கு பதிவிடுங்கள். உங்களுக்கு பதிலளிக்க நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம். .
நன்றி! வணக்கம்.