Free Online English to Tamil Dictionaries in Tamil

இணையத்தை பற்றி எனக்கு தெரியாத ஆரம்ப கால கட்டங்களில் நான் ஆங்கிலம் கற்கும்போது பெரிய அளவில் இருக்கும் ஆங்கில-தமிழ் அகராதியை உபயோகித்து ஒவ்வொரு புதிய தெரியாத வார்த்தையை நான் கண்டறிந்துகொண்டு இருந்தேன்.

அந்த சமயங்களில் தெரியாத அந்த ஒரு புது வார்த்தையை கண்டறிய எனக்கு குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களாவது எடுத்துக்கொள்ளும். சில சமயங்களில் நான் வைத்திருக்கும் அகராதிகளில் அந்த வார்த்தைகளே இருக்காது.

மேலும் நான் வைத்திருந்த dictionary 1000 பக்கங்களுக்கு மேல் இருக்கும். என்னால் எங்கு வேண்டுமோ அங்கு எடுத்துச்செல்ல இயலாது. ஏனெனில் பெரிய dictionary அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும் மேலும் அதிக எடையுடன் இருக்கும்.

பிறகு இணையத்தைப்பற்றி எனக்கு தெரிய ஆரம்பித்தபோது அதனை எப்படி நாம் ஆங்கிலம் கற்க உபயோகிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். இணையத்தில் ஆங்கிலம் கற்க பல வகைகள் உள்ளன அது அனைத்தும் முற்றிலும் இலவசமானவை என்பதையும் அறிந்து கொண்டேன். அவற்றில் மிக முக்கியமானது online free English to Tamil dictionaries ஆகும்.

இந்த  English to Tamil dictionaries ஐ பார்த்த பிறகு எனக்கு மிக ஆச்சர்யம். ஏனெனில் நான் மேலே கூறிய என்னுடைய இரண்டு பிரச்சனைகளையும் இந்த dictionaries ஆனது தீர்வு அளித்தது. ஆம். இணையம் இருந்தால் மட்டும் போதும். என்னால் இந்த வகை dictionaries ஐ எங்கும் எடுத்து செல்லலாம். மேலும் சில வினாடிகளில் எனக்கு எந்த ஒரு வார்த்தையின் பொருளையும் தந்து விடும்.

Free Online Resources for English Tamil Dictionaries in Tamil

நான் ஏன் இத்தனை dictionary களை உபயோகிக்கிறேன் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். சில சமயங்களில் சில வார்த்தைகள் ஒரு dictionary இல் இருக்காது. மற்ற dictionary களில் இருக்கும். இவாறு எப்போதாவது நடக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் மற்ற dictionary களை உபயோகிக்கும் சூழ்நிலை வரலாம். 

எனவே நான் என்னுடைய அனுபவத்தில் அடிக்கடி உபயோகிக்கும் சில  English – Tamil dictionariesகளை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். அவை முற்றிலும் இலவசம். அதனை நீங்களும் உங்கள் ஆங்கிலம் கற்க உங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்.

English-Tamil Cambridge Dictionary 

நான் அதிக அளவில் உபயோகிக்கும் ஆங்கில தமிழ் அகராதியில் இதுவும் ஒன்று. இது பல வசதிகளை கொண்டுள்ளது. அவை என்னனென்ன என்பதனை காண்போம். 

இந்த இலவச செயலியை உபயோகிக்க – English – Tamil Cambridge Dictionary

இதனை உபயோகிப்பது மிக எளிது. நான் மேலே கொடுத்துள்ள இணையதளத்தை கிளிக் செய்து, அதில் உள்ள search option இல் நாம் பொருள் கண்டறிய வேண்டிய வார்த்தையினை தட்டச்சு செய்து search செய்தால் போதும். அந்த வார்த்தை தொடர்பான அனைத்து தகவல்களையும் தரும்.

Free English Tamil Dictionary
Source: English-Tamil Cambridge Dictionary 

சிறப்பம்சங்கள் 

நாம் தட்டச்சு செய்த வார்த்தையை American English இல் எப்படி சொல்ல வேண்டும், British English இல் எப்படி  சொல்ல வேண்டும் என்பதை காட்டும். நமக்கு தேவையான pronounce ஐ தேர்வு செய்யும்போது அது தொடர்பான ஒலியை தரும்.

Free English Tamil Dictionary
Source: English-Tamil Cambridge Dictionary 

நாம் கொடுத்த வார்த்தையின் பொருள் என்ன, அவை எதன் கீழ் வரும், எடுத்துக்காட்டாக, noun , pronoun verb adjective adverb மற்றும் அதன் வகைகள் என அனைத்து தகவல்களையும் தரும். என்ன ஒரு சிறு குறை எனில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறியீட்டினை தரும். அதனை அறிய இது உதவும். 

மேலும் ஒவ்வொரு வகைக்கும் எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எடுத்துக்காட்டுக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இருக்கும்.

Free English Tamil Dictionary
Source: English-Tamil Cambridge Dictionary 

இந்த தமிழ் ஆங்கில அகராதி செயலியானது ஆங்கிலம் கற்க பேருதவியாக இருக்கும்.

Shabdkosh English to Tamil Dictionary 

என்னுடைய தினசரி ஆங்கில வார்த்தைகளின் பொருட்களை கண்டறியா நான் அதிக அளவு உபயோகிக்கும் dictionary இந்த Shabdkosh English Tamil Dictionary ஆகும். 

இது நாம் கொடுக்கும் ஆங்கில வார்த்தையின் அனைத்து வகையான பொருட்களை எடுத்துக்காட்டுகளுடன் மிகவும் விரிவான விளக்கங்களை த் தரும்.

இந்த இலவச செயலியை உபயோகிக்க – Shabdkosh English Tamil Dictionary 

Free English Tamil Dictionary
Source: Shabdkosh English to Tamil Dictionary 

இதன் சிறப்பம்சங்கள் 

நாம் கொடுக்கும் சொல்லின் தமிழ் பொருள், அந்த சொல்லின் அமைப்பு மற்றும் எவ்வொறு மாற்றி அமையும் (Word Forms & Inflections) என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் தரும். 

Free English Tamil Dictionary
Source: Shabdkosh English to Tamil Dictionary 

அந்த சொல்லின் மற்ற பொருட்கள், எடுத்துக்காட்டுகள், அவற்றின் தமிழாக்கம் என பல தகவல்களை தரும். இதை “Definitions and Meaning”பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.

Synonyms மற்றும் பகுதியில் அந்த வார்த்தைக்கு நிகரான மற்ற சொற்களை காணலாம். அதன் கீழ் உள்ள “View more Treasures” ஐ தொட்டால், நாம் கேட்ட வார்த்தைக்கு synonyms, antonyms பல்வேறு வகைகளாக தரும்.

Free English Tamil Dictionary
Source: Shabdkosh English to Tamil Dictionary 

Description பகுதியில் அந்த வார்த்தையினை பற்றி தெளிவான விளக்கத்தை தரும்.

நாம் கொடுத்த வார்த்தைகளை கொண்டு அது சம்பந்தமான பல வார்த்தைகளை தரும். அந்த வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தமும் இருக்கும். இதன் மூலம் அந்த வார்த்தையை பற்றி நம்மால் முழுதாக அறிந்துகொள்ள இயலும்.

Free English Tamil Dictionary
Source: Shabdkosh English to Tamil Dictionary 

நான் இங்கு taste என்ற சொல்லினை கொடுத்து மேலே நான் கூறியவற்றை எப்படி காட்டியுள்ளது என மேலே இருக்கும் படங்களில் காட்டியுள்ளேன்.

Free Online English to Tamil Dictionaries in Tamil

IndiaDict English to Tamil Dictionary 

இந்த Dictionary ஆனது ஆங்கிலம் கற்பவர்களுக்கு ஒரு சொல்லின் பொருளை காண மிகவும் உபயோகமுள்ள ஒன்றாக அமையும்.  

இந்த செயலியை உபயோகிக்க – IndiaDict English Tamil Dictionary 

Free English Tamil Dictionary
Source: IndiaDict English to Tamil Dictionary 

இதன் சிறப்புகள் 

நாம் தமிழ் பொருள் காண வேண்டிய சொல்லை இந்த இணையதளத்தில் கொடுத்து தேடினால் அது நாம் கொடுத்த வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்களை தரும்.

மேலும் இந்த செயலியானது “Suggested Words” என்னும் ஒரு பகுதியை தரும்.  அதில் அந்த சொல் தொடர்பான அல்லது அந்த சொல் உள்ள மற்ற சொற்கள் மற்றும் அந்த சொற்களின் தமிழ் பொருள் என தரும். ஆங்கிலம் கற்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனெனில் நாம் ஒரு வார்த்தை கற்றுக்கொள்ள போகும்போது அது சம்பந்தமான புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும்.

Free English Tamil Dictionary
Source: IndiaDict English to Tamil Dictionary 

சிறிய குறை 

இதில் உள்ள ஒரே ஒரு சிறிய குறைபாடாக நான் காண்பது அந்த சொல் தொடர்பான எடுத்துக்காட்டுகள் இல்லாமல் இருப்பது. மற்றபடி இந்த இணையத்தளமானது ஆங்கிலம் கற்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Tamillexicon English to Tamil Dictionary 

இந்த இணையதளமும் நாம் கொடுக்கும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் கொடுத்த வார்த்தைகளுக்கு சம்பத்தப்பட்ட மற்ற வார்த்தைகளையும் தந்து அதற்க்கான தமிழ் பொருட்களையும் தருகிறது.

Free English Tamil Dictionary
Source: Tamillexicon English to Tamil Dictionary 

இந்த செயலியை உபயோகிக்க – Tamillexicon English Tamil Dictionary 

மேலே உள்ள இணையதளத்திற்கு சென்று அங்கு நாம் தமிழ் பொருள் அறியவேண்டிய சொல்லை பதிவிட்டு “ English to Tamil” என்பதனை தேர்ந்தெடுத்து search definition ஐ தொட்டால் போதும். 

சிறப்பம்சம்

இதன் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு சொல்லுக்கு உண்டான பல தமிழ் பொருட்களை தருகிறது. நான் பார்த்த அளவு மற்ற English Tamil Dictionary களில் இவ்வளவு அர்த்தங்களை நான் காணவில்லை.

Free English Tamil Dictionary
Source: Tamillexicon English to Tamil Dictionary 

சிறிய குறை 

இதிலும் நான் மற்றவற்றில் கூறிய அதே குறை உள்ளது.ஆம், இதிலும் நாம் கொடுக்கும் வார்த்தைகளை  உபயோகப்படுத்தி அதற்கான எடுத்துக்காட்டுக்கள் இல்லை. மற்றபடி இந்த dictionary ஆனது மற்ற அனைத்து விதங்களிலும் சிறப்பாக உள்ளது. 

ஆங்கிலத்தை எப்படி திட்டமிட்டு படிப்பது என்பதை காண

Proven Tips To Learn English For Tamil Speakers

How To Plan Your English Learning In Day To Day Life – Tamil Tips

Tamil Speaker’s Path to English Proficiency: A Study Plan Guide

Bing English to Tamil Translator 

இந்த சேவையானது Microsoft Bing நிறுவனமானது வழங்குகிறது. இதன் மூலம் நாம் எந்த ஒரு வார்த்தையினை அளித்தாலும் அதற்க்கு சரியான தமிழ் பொருள், அது சம்பந்தமான மற்ற பொருட்களை தரும். அதாவது அது சம்பந்தமாக மற்ற ஆங்கில வார்த்தைகளையும் அது சம்பந்தமான தமிழ் வார்த்தைகளையும் தரும். 

Free English Tamil Dictionary
Source: Bing English to Tamil Translator 

சிறப்பம்சங்கள் 

நாம் தட்டச்சு செய்தும் புதிய வார்த்தைகளின் பொருளை கண்டறியலாம். இல்லையேல் நாம் “speak to translate” குறியை click செய்து பேசியும் அதன் பொருளை கண்டறியலாம்.

நாம் தட்டச்சு செய்த வார்த்தையினை எப்படி சொல்ல வேண்டும் என்பதை “pronounce” குறியை click செய்வதன் மூலம் அறியலாம். 

மேலே கூறிய இரண்டு சிறப்பம்சங்களை ஆங்கில வார்த்தைக்கும், அதன் பொருள் அறியப்பட்ட தமிழ் வார்த்தைக்கும் உபயோகிக்கலாம்.

இதில் ஒரு சிறிய குறைபாடு என்னவெனில்நாம் தட்டச்சு செய்த சொற்களின் எடுத்துக்காட்டுகளை இந்த செயலியானது தராது.

இந்த செயலியினை உபயோகப்படுத்த – Bing English Tamil Translator 

Google English to Tamil Translator 

இந்த மொழிபெயர்ப்பு செயலியை நமக்கு google நிறுவனமானது இலவசமாக தருகிறது. இந்த செயலியினை கொண்டு நம்மால், எந்த ஒரு ஆங்கில வார்த்தையின் பொருளையும் தமிழில் கண்டறியலாம்.

இந்த இலவச செயலியை உபயோகப்படுத்த – Google English Tamil Translator 

Free English Tamil Dictionary
Source: Google English to Tamil Translator 

இதன் அம்சங்கள் மற்றும் சிறிய குறை 

இந்த செயலியில் English என உள்ள பகுதியில் நாம் தமிழ் பொருள் அறிய வேண்டிய வார்த்தையினை தட்டச்சு செய்ய வேண்டும்.

அதற்க்கு இணையான தமிழ் பொருளானது “Tamil” என உள்ள இடத்தில வரும். இதனை நாம் படித்தும் கொள்ளலாம்

நாம் தட்டச்சு செய்த ஆங்கில வார்த்தையை அல்லது அதற்க்கு இணையான தமிழ் வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிய “mic” போன்று இருக்கும் குறியினை கிளிக் செய்தால் போதும். இதன் மூலம் அந்த வார்த்தையை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை கற்றுக்கொள்ளலாம்.

மேலும் இது நாம் தட்டச்சு செய்த சொற்களின் மற்ற தமிழ் வார்த்தைகளையும் குறிப்பிடும். இதன் மூலம் நாம் நமக்கு தேவையான வாக்கியத்தில் எப்படி சரியாக அந்த வார்த்தையினை உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

இதிலும் ஒரு சிறிய குறை உள்ளது. மேலே bing English Tamil Translator க்கு கூறியது போல இதில் நாம் கொடுத்த ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் மற்றும் ஆங்கில வாக்கிய எடுத்துக்காட்டுகள் இதில் கிடைக்காது.

Conclusion 

நான் இணையத்தில் ஆங்கிலம் கற்க ஆரம்பிதித்ததில் இருந்து நான் அடிக்கடி உபயோகிக்கும் உபயோகமான English Tamil Dictionary காலை பற்றி குறிப்பிட்டு உள்ளேன், இவை என்னுடைய ஆங்கிலம் கற்கும் பயணத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. மேலே நான் குறிப்பிட்டவற்றை படியுங்கள். அந்த இணையதளங்களை உபயோகப்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு எந்த தளமானது பிடிக்கிறதோ அதனை தொடர்ந்து உபயோகப்படுத்துங்கள். இவை உங்களுக்கு ஆங்கிலம் கற்க பெரும் உதவியாக இருக்கும்.

எங்களுடைய ஆங்கில அகராதியை உபயோகப்படுத்தி பாருங்கள். English Dictionary.

ஆங்கிலத்தில் புதிய வார்தைகளை வேடிக்கையாக விளையாட்டின் மூலம் கற்க word guessing or hangman game

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கள் comment இல் வரவேற்கப்படுகிறது. நான் கூறியது இல்லாமல் நீங்கள் வேறு ஏதேனும் dictionary உபயோகிக்கிறீர்களா எனில் comment இல் பதிவு செய்யவும். அது நம்முடைய மற்ற வாசகர்களுக்கும் உதவியாக அமையும்.

நன்றி! வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *