Top Free English Spelling & Grammar Checker Tools in Tamil

நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் எழுதுவது அத்யாவசியத் தேவையைப் போல் ஆகிவிட்டது. நாமும் பல இடங்களில் ஆங்கிலத்தில் எழுதுகிறோம். மாணவர்கள் முதல் உயர்பதவியில் உள்ளவர்கள் வரை அவரவர் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். அது essay வாக இருக்கலாம் அல்லது email ஆகவும் இருக்கலாம்.

பிழையில்லாமல் அவற்றை எழுதுகிறோமா என்பது தான் இங்கு பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது. தவறாக எழுதி விடுவோமோ என்ற பயமானது அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு வித பதட்டத்தை தரும். அது அவர்களின் எழுதும் திறனை பாதிக்கும்.

எனக்கும் அப்படிதான். ஆரம்பகாலங்களில் யாருக்காவது ஏதாவது எழுதி அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது படிப்பு சம்மந்தமானவற்றை assignments  எழுதும்போது பிழையுடன் எழுதக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன். இருப்பினும் பல பிழைகளுடன் தான் எழுதினேன். 

Free Spelling & Grammar Checker Tools in Tamil

ஆனால் இப்போது அப்படி இல்லை என்னால் ஆங்கிலத்தில் பிழை குறிப்பாக இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை   என்பதே இல்லாமல் எழுத முடியும். Punctuation  முதற்கொண்டு என்னால் சரியாக எழுத முடியும். எப்படி என அறிய ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது. 

நான் ஒரு சில ஆங்கில இணையப்பக்கங்களை உபயோகிக்கிறேன். அதன் உதவியுடன் தான் என்னால் அது சாத்தியமாகிறது.

இங்கு நான் குறிப்பிடுபவை நான் என்னுடைய தினசரி வாழ்வில் உபயோகிக்கும் grammar checker tools ஆகும். இந்த இணையப்பக்கங்களின் மற்ற சிறப்பங்சங்களை உபயோகிக்க பணம் செலுத்தி உபயோகிப்பது போல் இருக்கும். அனால், grammar, spelling, மற்றும் மற்ற பிழைகளை கண்டறிய முற்றிலும் இலவசம் ஆகும். அதற்கு நீங்கள் பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

அந்த இணையப்பக்கங்கள் என்னென்ன அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக காண்போம்.

நான் என்னுடைய தினசரி வாழ்வில் இந்த 6 இணையப்பக்கங்களை என்னுடைய ஆங்கில எழுதும் பணிக்கு உபயோகிக்கிறேன். இவை என்னுடைய வேலையை மிகவும் எளிமையாக்குகின்றன.

இந்த செயலிகளில் நாம் எந்த வகை ஆங்கிலத்தை உபயோகிக்கிறோம் என்று அதில் உள்ள option இல் செலக்ட் செய்வதன் மூலம் இந்த செயலிகள் எழுத்துப்பிழைகளை சரி செய்யும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் American English இல் எழுதி இருக்கிறீர்கள். அனால், செயலில் British English ஆக இருந்தால் சில வார்த்தைகள் பிழையாக காட்டும், எனவே இதனை கருத்தில் கொள்வது அவசியம்.  

  1. Quillbot 
  2. Grammarly
  3. Google Docs
  4. Scribens
  5. Prowritingaid
  6. Language Tool 

Quillbot

இணையப்பக்க URL  – Free Grammar Checker – QuillBot AI

Grammar and spelling check செய்ய நான் முதலில் சிபாரிசு செய்வது இதனைத்தான். 

Free-Grammar-Checker-QuillBot-AI - Englishpal.in
Source: Quillbot

எப்படி உபயோகிப்பது?

  1. மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பில் சென்றால் quillbot இன் grammar checker பகுதிக்கு நீங்கள் நேரடியாக செல்லலாம்.
  2. நீங்கள் அங்கு உள்ள எழுதும் பகுதியில் எழுத ஆரம்பிக்கலாம் அல்லது நீங்கள் முன்னரே எழுதிய வாக்கியங்களை, கட்டுரைகளை, மின்னஞ்சல்களை என எதை வேண்டுமானாலும் copy  செய்து எழுதும் பகுதியில் paste  செய்யலாம். அல்லது நீங்கள் document ஆக வைத்திருந்தாலும் அதனை upload செய்யலாம்.
  3. அவ்வளவு தான். Quillbot அதன் வேலையை செய்ய துவங்கி விடும்.
  4. நீங்கள் தவறாக எழுதி உள்ள வார்த்தைகள், நிறுத்தற்குறிகள், இலக்கணப்பிழைகள் என அனைத்தையும் சிவப்புநிறத்தில் அடிக்கோடிட்டு காட்டும்.
  5. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது என்ன தவறு ரின்பத்தை காரணத்துடன் கூறி அதனை சரி செய்யும் விதமாக சரியான வார்த்தையையே, நிறுத்தற்குரியோ, சரியான இலக்கணத்தையோ கூறும். நாம் அதனை தொடுவதன் மூலம் நாம் தவறாக உள்ளவற்றை சரி செய்ய முடியும்.
  6. சரியாக மாற்றியமைத்தவுடன் அதனை நாம் நம்முடைய தேவைகளுக்கு உபயோகித்துக்கொள்ளலாம்.

மற்ற சிறப்பம்சங்கள்

இந்த செயலியானது பல விதங்களில் நாம் ஆங்கிலத்தை எழுத உதவுகிறது. 

குறிப்பாக, paraphraser, Plagiarism checker, summarizer, Translator, citation generator ஆகியவை பெரிதளவில் உதவுகிறது.

Paraphraser என்பது நாம் எழுதியதை வேறு விதமாக மாற்றுவது. எடுத்துக்காட்டாக நாம் எழுதிய வாக்கியத்தின் தொனியை மாற்ற இந்த சிறப்பம்சம் உதவுகிறது. இலவச உபயோகிப்பில் நம்மால் standard, fluency என்ற இரு தொனியில் நம்மால் நம்முடைய வாக்கியங்களை மாற்ற முடியும்.

Plagiarism checker ஆனது இணையத்தில் கோடிக்கணக்கானவற்றை ஆராய்ந்து நம்முடைய கட்டுரையை, எழுத்து வேலைகளை ஆய்வு செய்து அவை ஒன்று போல் உள்ளதா என்பதை கண்டறிய உதவுகிறது. இது Quillbotஇன் இலவச சேவையில் வராது. 

Summarizer ஆனது பெரியதாக, பல பக்கங்களை உடைய ஒரு கட்டுரையையோ அல்லது பதிகளையோ சுருக்கி அதன் முக்கியமானவற்றை மட்டும் காட்ட இது உதவுகிறது. இது Quillbotஇன் இலவச சேவையின் கீழ் வரும்.

Translator ஆனது ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்ற உதவுகிறது, இது Quillbotஇன் முற்றிலும் இலவச சேவையின் கீழ் வரும்,

மேலும் இதனை நாம் நம்முடைய Microsoft word, Chrome browser, MacOS, Edge browser ஆகியவற்றிற்கு extension வடிவில் கிடைக்கிறது. இதுவும் இலவசமே. இதனை install செய்வதன் மூலம் நாம் Quillbot ஐ அதன் website க்கு செல்லாமலேயே நம்முடைய browser அல்லது word document யிலேயே உபயோகிக்க முடியும்.

இந்த Quillbot பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

Grammarly

Grammarly உம் Quillbot ஐ போன்றே ஆங்கிலத்தை பிழையின்றி எழுத உதவும் இணையதளம் ஆகும். இது என்னுடைய இரண்டாவது சிபாரிசாக வருகிறது. 

இதில் ஆங்கில எழுத்துப் பிழை, நிறுத்தற்குறி பிழைகள், மற்ற பிழைகளை கண்டறிய உதவுகிறது. 

இலவச வடிவில் நம்மால் முழுமையான முடிந்த அளவு பிழைகளை கண்டறிந்து அதனை நீக்க முடியும்.

 

Free-Grammar-Checker-Online-grammarly-englishpal.in
Source: Grammarly

எப்படி Grammarly மூலம் இலக்கண, எழுத்து, நிறுத்தற்குறிகள் மற்றும் மற்ற பிழைகளை கண்டறிவது?

  1. Grammarly  website URL – https://www.grammarly.com/
  2. மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து Grammarly க்கு செல்லவும்.
  3. Signup with Google ஐ கிளிக் செய்து, gmail account ஐ தேர்வு செய்து புது grammarly account ஐ திறக்கவும்.
  4. இப்போது https://app.grammarly.com/ என்ற URL உங்கள் பிரௌசர் இல் இருக்கும்.
  5. அதில் New என்பதை தேர்வு செய்து புது document ஐ திறந்து அதில் எழுத ஆரம்பிக்கலாம் அல்லது ஏற்கனவே எழுதி வைத்ததை paste செய்து பிழைகளைனை கண்டறியலாம். அல்லது நேரடியாக நாம் எழுதி வைத்திருக்கும் document ஐ upload என்னும் பதிவேற்றம் செய்தும் அதன் பிழைகளை சரி பார்க்கலாம்.
  6. எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, நிறுத்தற்குறி பிழைகள் ஆகியவற்றை சிவப்பு நிற அடிக்கோடிட்டு காட்டும். இது இலவசமாக நாம் பெறலாம்.
  7. மஞ்சள் நிற அடிக்கோடிட்டு அந்த வார்த்தை அல்லது வாக்கியங்களை எவ்வாறு எளிமையாக மாற்றுவது அல்லது சிறப்பாக எழுதுவது என்பதை காட்டும். அதை என்னென்ன என கண்டறிய நாம் premium version ஐ உபயோகிக்க வேண்டும்.
  8. மேலும், நாம் நாம் எந்த மாதிரியான வகையில் எழுத போகிறோம், யாருக்காக எழுத  போகிறோம், என்ன குறிக்கோளுக்காக எழுதுகிறோம் என்பதை நம்மால் குடுக்க முடியும். இதனை குடுக்க goals என்னும் option ஐ உபயோகிக்க வேண்டும்.
  9. மேலும் இது readability score ஐ தரும். அதாவது நாம் எழுதியதன் quality ஐ பரிசோதித்து 0 வில் இருந்து 100 வரை மதிப்பெண் தரும். குறைவான மதிப்பெண் எனில் நாம் எழுதியதை மறுபரிசுசீலனை செய்ய வேண்டும் என பொருள் ஆகும். மேலும் இது நாம் எழுதியதை எந்த வகுப்பு மாணவரால் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற தகவல்கள் முதற்கொண்டு தரும். இது முற்றிலும் இலவசமே.

மற்ற சிறப்பம்சங்கள் 

இதனை நாம் நம்முடைய Chrome browser extension, Windows computer, Android phone, Iphone, Ipad போன்றவற்றில் Application வடிவில் கிடைக்கிறது. இதுவும் இலவசமே. இதனை install செய்வதன் மூலம் நாம் Grammarly ஐ அதன் website க்கு செல்லாமலேயே நம்முடைய browser, android phone, ios devices களில் உபயோகிக்க முடியும்.

Grammarly Go என்ற option இதில் உள்ளது. இதனை மூலம் AI எனப்படும் Artificial Intelligence மூலம் நாம் நம்முடைய எழுதும் விதத்தை கூறினால் மட்டும் போதும், நமக்காக Grammarly எழுதும். இலவசமாக 100 முறை மாதத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம். Premium users 1000 முறை மாதத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம். 

Plagiarism checker ஆனது quillbot போலவே இதிலும் உள்ளது. இதிலும் free user ஆல் இதனை உபயோகிக்க முடியாது. Premium எனப்படும் paid users மட்டுமே இதனை உபயோகிக்க முடியும்.

இந்த Grammarly பற்றி மற்றொரு பதிவில் அதன் அனைத்து சிறப்பம்சங்கள், அதனை எப்படி உபயோகிப்பது, அதன் நன்மைகள் என்ன, குறைபாடுகள் என்ன என்பதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

ஆங்கில தமிழ் அகராதிகளை பற்றி அறிய Free Online English to Tamil Dictionaries in Tamil

ஆங்கிலம் எழுதும் பயிற்சியை அதிகரிக்க Free Online Resources for Improving English Writing Skills 

Google Docs

Google Docs ஆனது Google நிறுவனம் வழங்கும் மற்றொரு செயலி ஆகும். இது microsoft office ஐ போன்றது. இதில் நாம் microsoft office இல் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் ஏன் அதை விட இதில் சிறப்பாகவே செய்ய முடியும்.

இது online இல் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்.

நாம் நம்முடைய project ஐ முழுவதுமாக இந்த Google Docs இல் பதிவிட்டு விட்டு பின் நாம் அதில் உள்ள இலக்கணப்பிழைகளை கண்டறியலாம்.

அது எவ்வாறு என இதில் காண்போம்.

Google Docs இல் file  என்ற வரிசையில் “Tools” என்பது இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.

முதலாவதாக Spelling and grammar இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.

Google doc grammar and spelling checker- englishpal.in
Source: Google Docs

பின்னர்  Spelling and grammar check என்பதனை கிளிக் செய்யவும். அப்பொழுது உங்களின் வலது புற மேற்பக்கத்தில் ஒரு சிறு பேட்டி போல் தோன்றி அந்த வாக்கியங்களில் உள்ள பிழைகளை காட்டி எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதனை காட்டும். 

Google doc grammar and spelling checker 2- englishpal.in
Source: Google Docs

இந்த Spelling and grammar check ஐ நேரடியாக அணுக, Google Docs இல் Ctrl+Alt+X என்பதனை கீ போர்டு உதவியுடன் அழுத்தினாள் நேரடியாக அந்த சிறிய பெட்டியானது தோன்றும். அதாவது, Ctrl, Alt மற்றும் X பொத்தான்களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.

இதன்மூலம் உங்கள் எழுத்துக்களில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகளை சரி செய்ய முடியும்.

Scribens

Scribens website URL – https://www.scribens.com/

Scribens என்பது இலவசமாக நம்மால் ஆங்கிலத்தில் உள்ள இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகளை கண்டறிய உதவும் ஒரு இணையவழிச்  செயலி ஆகும். 

மேலே உள்ள URL ஐ கிளிக் செய்து Scribens இணையதளத்திற்கு செல்லவும். 

Free-Powerful-English-Grammar-Checker-SCRIBENS - englishpal.in
Source: Scribens

நீங்கள் இங்கே எழுத ஆரம்பிக்கலாம். இல்லையேல் ஏற்கனவே எழுதியதை இங்கு paste செய்யலாம்.

பின்பு check option ஐ கிளிக் செய்யவும். இது அந்த தட்டச்சு செய்யும் இடத்தின் மேலே உள்ளது.

Scribens ஆனது உங்கள் வாக்கியங்களில் உள்ள இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகளை கண்டறிந்து மற்றொரு நிறத்தில் அந்த வார்த்தைகளை காட்டும்.

நாம் அந்த தவறான வார்த்தைகளை தொடும்போது அது மாறி சரியான வார்த்தையாக மாறும்.

Prowritingaid

Prowritingaid இந்த இலக்கண பிழை கண்டறிய உதவும் இணையவழி செயலியின் URL – https://prowritingaid.com/grammar-checker

மேலே உள்ள URL ஐ கிளிக் செய்தால் நேரடியாக இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகளை சரி செய்ய உதவும் பக்கத்திற்கு செல்லும். 

அங்கு நாம் எழுத ஆரம்பிக்கலாம் அல்லது ஏற்கனவே எழுதி வைத்துள்ள கட்டுரைகளோ, பதிகளையோ இங்கு paste option மூலம் பதிவிடலாம்.

Free-Grammar-Checker-Online - prowritingaid - englishpal.in
Source: Prowritingaid

இந்த செயலியானது நாம் பதிவிடத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை, இலக்கணப்பிழைகளை அடிக்கோடிட்டு வெவ்வேறு நிறங்களில் காட்டும்.

Suggestions found என்று வலது பக்கத்தில் அந்த பிழைகள் என்னென்ன அதனை எவ்வாறு சரி செய்வது என காட்டும். அந்த சரியாக உள்ளதை தொடும்போது, நம்முடைய அந்த பிழைகள் சரியாகி சரியான வார்த்தைகளாக மாற்றும்.

Prowritingaid ஆனது Google chrome extension வடிவில் இலவசமாக கிடைக்கிறது. இதனை உபயோகிப்பதன் மூலம் இந்த இணையதளத்திற்கு வராமலே நம்மால் chrome browser இல் எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகளை கண்டறிய முடியும்.

Language Tool  

Language Tool என்ற இணைய வழி செயலியின் எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை சரி செய்ய உதவும் நிரல் (URL) – https://languagetool.org/

மேலே உள்ள நிரலை கிளிக் செய்து அந்த இணைய தளத்திற்கு செல்லவும்.

LanguageTool-Online-Grammar-Style-Spell-Checker-review-englishpal.in
Source: Language Tool  

பிறகு நீங்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை இங்கு paste  செய்யுங்கள் அல்லது முதலில் இருந்து பதிவிடுங்கள்.

இந்த செயலியானது மேலே கூறிய செயலிகளை போலவே இலக்கணப்பிழை மற்றும் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டும்.  அதாவது எங்கு பிழை உள்ளது எதனால் அதனை பிழை என கூறுகிறோம் என காரணங்கள் அனைத்தும் “correct” என்பதன் கீழ் காட்டும்.

அதில் உள்ள ஒவ்வொன்றாக கிளிக் செய்து நம் பதிவில் உள்ள பிழைகளை சரி செய்யலாம்.

Conclusion 

நான் மேலே கூறியுள்ள QuillBot முதல் Language Tool  வரை அனைத்து செயலிகளும் பணம் செலுத்தி உபயோகப்படுத்தும் வசதி உள்ளது. ஆனால், நாம் வார்த்தை மற்றும் இலக்கணப்பிழைகளுக்கு மட்டுமே இவைகளை உபயோகிப்போம் என்பதால் நாம் பணம் செலுத்த வேண்டியது இல்லை. முற்றிலும் இலவசம் ஆகும். எனவே இதனை பயன்படுத்தி அடுத்தமுறை இலக்கணப்பிழை அல்லது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுங்கள். என்னென்ன வகையான பிழைகளை செய்கிறோம் என்பது பற்றியும் இவைகள் கருத்துக்களை தருவதால் நம் அதனை தெரிந்து கொண்டு அந்த வகையான பிழைகளை தவிர்க்கவும் பெரிதளவில் உதவும்.

ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகள் மற்றும் தெரியாத வார்த்தைகளின் பொருளை அறிய English Dictionary.

வேடிக்கையான முறையில் புது ஆங்கில வார்த்தைகளை அறிய word guessing or hangman game

இந்த பதிவில் எப்படி இணையதளத்தின் உதவியுடன் நாம் ஆங்கிலத்தில் உள்ள இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகளை சரி செய்வது என்று பார்த்தோம். இது மிகவும் பயனுள்ளதாக இருந்து இருக்கும் என நம்புகிறோம்.

இந்த பதிவு பற்றியும் , எந்த இணையதளத்தை நீங்கள் உபயோகப்படுத்தலாம் என்று இருக்கிறீர்கள் என்பது பற்றியும், இது போல் வேறு எது சம்பந்தமான இணையதளங்கள் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் போன்றவற்றை பற்றி  உங்கள் கருத்துக்களை comments இல் தெரிவிக்கவும்.

உங்கள் comments எங்களுக்கு இது போல பல பதிவுகளை பதிவிடவும் உதவியாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *