BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, HTML Full Form, Examples & Meaning in Tamil

நாம் முந்தைய இரு பதிவுகளில் Abbreviations பற்றியும், Acronyms பற்றியும், அவற்றை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதனை எடுத்துக்கட்டுகளுடனும் தெளிவாக விளைக்கியுள்ளோம். உங்களுக்கு Abbreviations மற்றும் Acronyms பற்றி தெளிவாக இங்கு இணைக்கப்பட்டுள்ள பதிவுகளை படித்துவிட்டு பின்னர் இந்த பதிவினை படிக்க தொடங்குங்கள்.

Learn Commonly Used Abbreviations & Acronyms in Tamil 

DIY, POV, FYI, ETA, VIP, ATM என்றால் என்ன, அவற்றை எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை படிக்கவும்.

இந்த பதிவில் BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, மற்றும் HTML ஆகியவற்றின் விரிவாக்கத்தையும் அவற்றை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. வாருங்கள், இவற்றை ஒவ்வொன்றாக காணலாம்.

Abbreviations and Acronyms in Tamil Part 3

BBC

British Broadcasting Corporation என்பதன் சுருக்கமே BBC ஆகும். BBC ஐ தமிழாக்கம்செய்தால் பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம் என பொருள் தரும்.

BBC ஆனது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது அக்டோபர் 18, 1922 இல் உருவாக்கப்பட்டது. கார்பரேட் நிறுவனமாக 1927 இல் மாற்றப்பட்டது.

 BBC நிறுவனமானது தொலைக்காட்சி சேனல், ரேடியோ, இணைய வழி செய்திகள் என பல வகைகளில் சேவைகளை வழங்குகின்றன.

உலகம் முழுக்க BBC க்கென்று வாசகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் அதிகமா உள்ளனர்.

BBC ஆனது செய்திகள், ஆவணப்படங்கள், அறிவியல் சம்பந்தமான காணொளிகள், கல்வி சம்பந்தமான செய்திகள், நாடகங்கள், என பல வகைகளில் தகவல்களை தருகின்றன.

எத்தகைய சூழ்நிலைகளில் BBC ஐ உபயோகிக்கலாம்?

இது ஒரு செய்தி ஒளிபரப்பு நிறுவனம் என்பதால், நாம் அந்த நிறுவனத்தை பற்றி பேசும் அனைத்து இடங்களிலும் BBC என உபயோகிக்கலாம்.

Examples 

  1. I saw this news on BBC News channel. – BBC செய்தி சேனலில் நான் அந்த செய்தியை பார்த்தேன்.
  2. I personally like BBC’s documentary shows. – தனிப்பட்ட முறையில் எனக்கு பிபிசியின் ஆவணப்படங்கள் மிக பிடிக்கும்.
  3. I often listen BBC Radio. – நான் அடிக்கடி BBC ரேடியோவை கேட்பேன்.
  4. BBC covers a wide range of information, from science to sports. – BBC ஆனது அறிவியல் முதல் விளையாட்டு வரை அனைத்து செய்திகளையும் தருகிறது.

PDF

Portable Document Format என்பதன் சுருக்கம் PDF ஆகும். PDF தமிழ் பொருள் கையடக்க ஆவண வடிவம் எனபதாகும்.

இது ஒரு வகையான கோப்பு வடிவம் (Extension type) ஆகும். இது மிகவும் எளிமையானது. பெரும்பாலும் அனைத்து வகை கோப்புகளையும் நாம் PDF ஆக மாற்றிக்கொள்ளலாம். Word, PPT, excel, Google Documents, Google Sheets, Images, இணைய பக்கங்கள் என பலவற்றையும் நாம் PDF ஆக மாற்றி நாம் உபயோகிக்க முடியும்.

PDF வகையானது படிக்கவும், அச்சிடவும் ஏற்ற கோப்பு வகை ஆகும். 

இந்த PDF கோப்பு வகையானது Adobe என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.  

இந்த PDF வகை கோப்புகளை நாம் எல்லா வகையான சாதனங்களிலும் உபயோகிக்க முடியும். அதாவது கணினி, தொலைபேசி, tablet வகை சாதனைகள் என அனைத்திலும் உபயோகப்படுத்த முடியும். எனவே இது மிகவும் அனைவருக்கும் பரிச்சயமாக உள்ளது.

நாம் எவ்வாறு ஒரு கோப்பை உருவாக்கினோமோ அதே வகையில் PDF ஆக மாற்றிக்கொள்ளலாம். அந்த கோப்பின் format இல் எந்த ஒரு மாற்றமும் நிகழாது. எனவே இது மிகவும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

PDF ஆனது படிக்க மட்டுமே (Read only) உபயோகிக்கப்படுகிறது. இதில் உள்ள தகவல்களை சாதாரண முறையில் மாற்ற முடியாது. அதற்கென சில இணையப்பக்கங்கள், செயலிகள் உள்ளன. அவற்றைக்கொண்டு மட்டுமே தகவல்களை மாற்றி (edit) செய்ய முடியும்.

நம்மால் இந்த PDF கோப்புக்களை கடவுச்சொல் மூலம் அந்த கோப்பில் உள்ள தகவல்களை பாதுக்காக்க முடியும். அந்த கடவுச்சொல்லை இட்டால் மட்டுமே நம்மால் அதில் உள்ள தகவல்களை பார்க்க முடியும். எடுத்துக்காட்டுக்கு, நாம் இணையத்தளத்தில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்தால் அது கடவுச்சொல்லுடன் பாதுகாக்கப்பட்டு இருக்கும். நாம் அந்த கடவுச்சொல்லை சரியாக பதிவிட்டால் மட்டுமே அதனை திறந்து உபயோகிக்க முடியும்.

எத்தகைய சூழ்நிலைகளில் PDFஐ உபயோகிக்கலாம்?

மேலே கூறியது போல PDF என்பது கோப்பு வகை என்பதால் அதனை நாம் அந்த வார்த்தை எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு எல்லாம் உபயோகிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு அந்த கோப்பின் தேவைகளை பற்றி பேசும்போது, செயல்பாடுகளை பேசும்போது, அனுப்ப சொல்லும் போது என அனைத்து இடங்களிலும் நாம் உபயோகிக்கலாம்.

Examples

  1. I want that report in PDF format. Please convert it to PDF. – எனக்கு அந்த அறிக்கை படப்பிவடிவில் வேண்டும். தயவு செய்து அதை PDF வடிவில் மாற்றவும்.
  2. Aadhar card PDFs are password-protected. – ஆதார் PDF கார்டானது கடவுச்சொல் பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது. 
  3. You can download the manual in PDF format from our website. – நமது இணையதளத்திலிருந்து அந்த PDF கையேடை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
  4. Please download that PDF document and send it to me ASAP. – அந்த PDF கோப்பை பதிவிறக்கம் செய்து விரைவில் எனக்கு அனுப்புங்கள்.
BBC, PDF, COD, HTML meaning in tamil

COD

Cash On Delivery என்பதன் சுருக்கமே COD ஆகும். COD தமிழ் அர்த்தம் பொருளை கொடுக்கும்போது பணம் கொடுத்தல் ஆகும்.

பொதுவாக இந்த வார்த்தையானது இணையத்தில் பொருட்களை, மளிகை சாமான்களை, உணவுகளை நாம் வாங்கும்போது இந்த COD என்ற வார்த்தையினை அடிக்கடி கேட்டிருப்போம். 

இணையத்தில் நாம் ஏதேனும் ஒன்றை ஆர்டர் செய்து அந்த பொருளை கொண்டு வரும் நபரிடம் நாம் பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதை COD அல்லது Cash On Delivery என கூறுவர்.

எடுத்துக்காட்டுக்கு, I ordered this mobile by choosing the COD option. – நான் இந்த தொலைபேசியை COD முறையை தேர்வு செய்து ஆர்டர் செய்தேன்.

நாம் அப்படி இணையத்தில் பொருட்களை வாங்கும்போது பல வழிகளில் அந்த பொருளுக்கு பணத்தை கட்டலாம். உங்கள் டெபிட் கார்டு மூலமாகவோ, UPI மூலமாகவோ, netbanking எனப்படும் இணைய வழி பண பரிமாற்றமோ, Cash On Delivery மூலமாகவோ பணத்தை செலுத்தி பொருளை வாங்கலாம். 

எத்தகைய சூழ்நிலைகளில் COD ஐ  உபயோகிக்கலாம்?

மேலே கூறியவாறு நாம் இணையத்தில் ஏதேனும் வாங்கும்போது, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இணையத்தின் மூலமாக பணத்தை செலுத்தாமல், அந்த பொருளை கொண்டு வரும் நபரிடம் பணத்தை செலுத்தும் இடங்களில், அதனை பற்றி பேசும் இடங்களில் என அனைத்து இடங்களிலும் நாம் COD ஐ உபயோகிக்கலாம். 

Example

  1. The local pizza shop allows COD for online pizza orders. – அருகில் உள்ள பீட்ஸா கடையில் நாம் இணையவெளியில் பீட்ஸாவை COD இல் ஆர்டர் செய்யலாம்.
  2. Is the laptop available for COD? – இந்த மடிக்கணினியானது COD யில் கிடைக்குமா?
  3. I always choose COD for costly items online to ensure quality before paying. – நான் இணையத்தில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும்போது COD முறையிலே பணம் காட்டுவேன். எனவே என்னால் பொருளின் தரத்தை பணம் செலுத்தும் முன் கண்டறிய இயலும்.
  4. The COD option is best for people who do not have credit or debit cards. – பற்று அட்டை அல்லது வரவு அட்டை இல்லாதவர்களுக்கு COD முறையானது மிகவும் உதவியாக உள்ளது.

NASA, RSVP, DVD, FAQ, KYC, மற்றும் EOD விரிவாக்கம் அறிய

NASA, RSVP, DVD, FAQ, KYC, மற்றும் EOD Meaning In Tamil

UPI

UPI என்பதன் விரிவாக்கம் Unified Payment Interface ஆகும். இதன் தமிழ் பொருள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஆகும்.

இந்த UPI மூலம் நாம் பல்வேறு வங்கிக்கணக்குகளை ஒரே ஒரு செயலியில் நம்மால் இணைத்து அந்த அனைத்து வங்கிக்கணக்குளையும் அந்த UPI யின் கீழ் ஒரே செயலியில் உபயோகிக்க முடியும்.

இந்த UPI உதவியுடன் நம்மால் பணத்தை உடனடியாக பணத்தை மற்றொருவருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ, மொபைல் கட்டணங்கள், பயணசீட்டு, திரையரங்க சீட்டு, DTH, காப்பீட்டு கட்டணங்கள், மற்றும் பல இணையவளி பண பரிமாற்றங்களை நமது தொலைபேசியின் உதவியுடன் நேரடியாக செய்ய இயலும்.

Example

  1. I booked the movie tickets by paying through UPI. – நான் திரைப்பட சீட்டினை UPI மூலம் பணம் செலுத்தி பதிவு செய்தேன்.
  2. This UPI interface is simple and user-friendly. – இந்த UPI இடைமுகமானது மிகவும் எளிமையாகவும், அனைவராலும் உபயோகப்படுத்தும்படியும் உள்ளது.
  3. Please send money to my UPI account. – என்னுடைய UPI கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.
  4. We can complete all the transactions online through UPI. – நாம் இணையத்தின் வழியாக UPI மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து முடிக்கலாம்.
UPI, UPI ID, UPI PIN, BHIM UPI meaning in tamil

UPI ID

UPI ID என்பதன் விரிவாக்கம் Unified Payment Interface Identification ஆகும். இதன் தமிழ் பொருள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக அடையாள எண் ஆகும். மேலே UPI பற்றி பார்க்கும்போது அதனை நம்மால் பல்வேறு வங்கிகளுடன் இணைக்க முடியும் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வங்கிகளுடன் நாம் இந்த எண்ணானது இணைக்கப்படும். இந்த எண்ணானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இரு நபர்களுக்கு ஒரே மாதிரியான UPI ID அமைய வாய்ப்பு இல்லை.

இது பொதுவாக நமது பெயர்@வங்கியின் பெயர்  அல்லது மின்னஞ்சல்@வங்கியின் பெயர் அல்லது தொலைபேசி எண்@வங்கியின் பெயர் போன்ற வடிவில் காணப்படும். 

இதுவும் UPI இல் ஒரு அங்கம் என்பதால் UPI இல் அணைத்து பயன்பாடுகளுக்கு இதன் பங்கும் உண்டு.

Example

  1. What is your UPI ID? – உன்னுடைய UPI எண் என்ன?
  2. How can I find my UPI ID in the UPI app? – இந்த UPI செயலியில் என்னுடைய UPI எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?
  3. What does the UPI ID look like? – UPI எண்ணானது பார்ப்பதற்கு எப்படி இருக்கும்.
  4. This is my UPI ID; please note it. – இது தான் என்னுடைய UPI எண். குறைத்துக்கொள்ளுங்கள்.

UPI PIN 

UPI PIN என்பதன் விரிவாக்கம் Unified Payment Interface Personal Identification Number 

 ஆகும். இதன் தமிழ் பொருள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக தனிப்பட்ட அடையாள எண் அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுக கடவு எண் ஆகும்.

இது 4 முதல் 6 வரையிலான எண்களை கொண்டது. இதனை சரியாக UPI செயலியில் பதிவிட்டால் மட்டுமே நம்மால் பண பரிவர்த்தனைகளை, கட்டணங்களை செலுத்த என அணைத்து செயல்பாடுகளையும் செய்ய முடியும். 

பொதுவாக 3 முறை தவறாக UPI PIN ஐ தவறாக பதிவிட முடியும். அதன் பின்னர் நீங்கள் உங்கள் UPI PIN ஐ புதிதாக உருவாக்க வேண்டும் அல்லது 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதற்கிடையே நம்மால் எந்த ஒரு செயல்களையும் UPI மூலமாக செய்ய இயலாது.

Example

  1. Do not share your UPI PIN with anyone. – உங்கள் UPI கடவுச்சொல்லை யாரிடமும் பகிராதீர்கள்.
  2. Do not forget your UPI PIN when you are at the store. –  நீங்கள் கடைகளில் இருக்கும் போது உங்கள் UPI கடவுச்சொல்லை மறந்து விடாதீர்கள்.
  3. Keep your UPI PIN strong and unique. – உங்களுடைய UPI கடவுச்சொல்லை கடினமானதாகவும் தனிப்பட்டு இருக்கும்படியும் அமைத்துக்கொள்ளுங்கள்.

BHIM UPI

BHIM UPI என்பதன் விரிவாக்கம் Bharat Interface for Money Unified Payment Interface ஆகும்.BHIM என்பதன் தமிழ் பொருள் பணத்திற்கான இந்திய இடைமுகம் என்பதாகும். 

BHIM UPI ஆனது இந்திய அரசால் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட UPI செயலி ஆகும். இதன் மூலமும் நம்மால் கட்டணங்களை செலுத்தவும், பண பரிவர்த்தனைகள் செய்யவும், மற்ற பணம் சார்த்த செயல்களை செய்யம் உதவுகிறது.

Example

  1. BHIM UPI is an indian government initiative. – இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒரு புதிய முயற்சி இந்த BHIM UPI ஆகும்.
  2. I paid my bills using BHIM UPI. – BHIM UPI மூலமாக நான் என்னுடைய கட்டணங்களை செலுத்தினேன்.
  3. BHIM UPI interface is simple and easy to use. – BHIM UPI செயலியின் இடைமுகமானது எளிமையாக உபயோகிக்கும் வகையில் உள்ளது.

HTML

Hypertext Markup Language என்பதன் சுருக்கம் HTML ஆகும். இது இணையப்பக்கங்களை உருவாக்க பயன்படக்கூடிய ஒரு கணினி மொழி ஆகும். இந்த HTML ஐ கொண்டு நாம் இணையதளத்தின் அமைப்பு (structure) எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை உருவாக்க முடியும். இதன் உதவியாலே நாம் இணையத்தில் தலைப்புக்கள், துணை தலைப்புக்கள், பத்திகள், படங்கள்(images), அட்டவணைகள், links போன்றவற்றை நம்மால் உருவாக்க முடியும்.

Example

  1. She is learning HTML to build my own website. – அவளுடைய இணையதளத்தை உருவாக்க HTML ஐ கற்றுக்கொண்டு இருக்கிறாள். 
  2. This website is created using html and styled with CSS. – இந்த இணையத்தளமானது HTML கொண்டு உருவாக்கப்பட்டு, CSS கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Conclusion

இந்த பதிவில் நாம் BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, மற்றும் HTML ஆகியவற்றின் விரிவாக்கத்தையும், எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளோம். இவை உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்திருக்கும் என நம்புகிறோம்.

உங்களுக்கு வேறு ஏதேனும் Abbreviations மற்றும் Acronyms வார்த்தைகளை பற்றி தெரிய வேண்டும் என விரும்பினால் அவற்றை comment இல் பதிவு செய்யவும். நாங்கள் உங்களின் கேள்விக்கு பதிலளிக்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.

இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் மற்ற அடிக்கடி நாம் உபயோகிக்கும் Abbreviations மற்றும் Acronyms ஐ பதிவிட உள்ளோம். அந்த பதிவுகளின் விவரத்தை இங்கு இணைக்கிறேன். அவற்றையும் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை comment இல் தெரிவிக்கவும்.

நன்றி!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *