DM Meaning in Tamil
DM என்பதன் முழு விரிவாக்கம்(full form) Direct Message ஆகும்.
DM தமிழ் பொருள் தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் குறுஞ்செய்தி அல்லது நேரடி குறுஞ்செய்தி ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் instagram , whatsapp, Telegram , Messenger , SMS என ஏதாவது ஒரு சமூக வலைத்தளங்களில் அவருக்கு நேரடியாக அனுப்பும் குறுஞ்செய்தி ஆகும். அவ்வாறு அனுப்புவதன் மூலம் நீங்கள் அனுப்பும் நபர் மட்டுமே அந்த குறுஞ்செய்தியை காண முடியும்.
பெரும்பாலும் இந்த DM என்ற சொல்லானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் சொல்லாக உள்ளது.
குறிப்பாக Instagram DM, LinkedIn DM, WhatsApp DM எனவும் Check your DM என்றும் கூறுவதை நாம் கண்டிருப்போம். குழுக்களில் அல்லது பொதுவெளியில் அனைவரும் பார்க்கும்படி குறுஞ்செய்தி அனுப்பாமல் தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு மட்டும் அனுப்புதலை Direct Message எனலாம்.
Instagram Direct Message என்பதன் சுருக்கி Instagram DM என்பர். Instagram இல் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தியை அனுப்புதலை கூற Instagram DM பண்றேன் என கூறலாம்.
LinkedIn Direct Message என்பதன் சுருக்கி LinkedIn DM என்பர். LinkedIn சமூக வலைத்தளத்தில் நாம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் message அல்லது குறுஞ்செய்தியை அனுப்ப LinkedIn ல DM பண்றேன் என கூறலாம்.
WhatsApp Direct Message என்பதன் சுருக்கி WhatsApp DM என்பர். WhatsApp இல் நாம் ஒருவருக்கு தனியாக அவருக்கு மட்டும் குறுஞ்செய்தியை அனுப்ப WhatsApp ல DM பண்ணுகிறேன் எனலாம்.
பொதுவாக உபயோகிக்கப்படும் DM வார்த்தைகள்
பொதுவாக கீழ்கண்ட DM தொடர்பான வார்த்தைகளை நீங்கள் சமூக வலைத்தளங்களில் காணலாம். அவையாவன
DM for more details meaning in Tamil
ஒரு நபர் DM for more details என குறிப்பிட்டால், அவ்வாறு குறிப்பிடும் நபருக்கு நாம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தியை அனுப்பும்போது, அவர் மேலும் விவரங்களை தருவார்.
Check your DM meaning in Tamil
check your DM என ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உங்களுடைய சமூக வலைத்தளங்களில் உள்ள குறுஞ்செய்திகளை பார்க்க வேண்டும். அதாவது அவர் உங்களுக்கு நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார், அதை நீங்கள் காண வேண்டும் என அர்த்தம் ஆகும்.
check your Instagram DM என குறிப்பிட்டு கூறினால் நீங்கள் உங்களுடைய Instgram இல் குறுஞ்செய்தியை பார்க்க வேண்டும். இது மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களும் அமையும். எடுத்துக்காட்டாக check your WhatsApp DM, check your LinkedIn DM, check your Facebook DM, check your Messenger DM என்று கூறினால் நாம் அந்தந்த குறிப்பிடப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் வந்துள்ள குறுஞ்செய்திகளை காண வேண்டும்.
Tense, Direct & Indirect மற்றும் voice பற்றி தெரிந்து கொள்ள
Active and Passive voice in Tamil
DM for order meaning in Tamil
DM for order என் ஒருவர் கூறினால், அந்த பொருளினை நாம் வாங்க அவருக்கு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என பொருள் ஆகும். அதாவது, ஒருவர் அவரது instagram பக்கத்தில் ஒரு வீடியோவில் ஒரு குறிப்பிட்ட பொருளினை விளம்பரம் செய்கிறார். அதனை நாம் வாங்க வேண்டும் எனில் DM for order என்று கூறுவார் என வைத்துக்கொண்டால் நாம் அந்த பொருளை வாங்க அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
DM for booking meaning in Tamil
DM for booking என்பதும் DM for order என்பதன் பொருளும் கிட்டத்தட்ட ஒன்றே ஆகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள், அப்போது ஒரு வீடியோவில் சுற்றுலாக்களை ஒருங்கிணைத்து ஆட்களை கூட்டி செல்வதை பற்றி பார்க்கிறீர்கள். அதே வீடியோவில் உங்களுக்கும் சுற்றுலாக்களுக்கு கூட்டி செல்ல வேண்டுமா? உடனே DM for booking என கூறுவார். அதாவது நாம் முன்பதிவு செய்ய அந்த நபருக்கு நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும்.
kindly DM meaning in Tamil
kindly DM என்பதன் பொருள், நேரடியாக தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தியை அனுப்புங்கள் என்பதாகும்.
DM me meaning in Tamil
DM me என்பதன் பொருள் எனக்கு நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்பு என்பதாகும்.
DM for promotion meaning in Tamil
DM for promotion என்பதனை அடிக்கடி நீங்கள் சமூக வலைதள விடீயோக்களில் கேட்டிருக்க கூடும். அதன் பொருள் உங்கள் தொழில் விளைபரங்களை எங்கள் விடீயோக்களில் கட்ட எங்களுக்கு நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்புங்கள் என்பதாகும்.
கீழே உள்ளவற்றில் விரிவாக்கங்களை காண
எத்தகைய சூழ்நிலைகளில் DM ஐ உபயோகிக்கலாம்?
அனைத்து சமூக வலைத்தளங்களிலும் நம்மால் குழுக்களை உருவாக்கி அதில் குறுஞ்செய்திகளை அனுப்பலாம். வாறு அனுப்பாமல் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் அனுப்பும் இடங்களில், தனிப்பட்ட முறையில் அனுப்ப சொல்லும் இடங்களில் நாம் DM ஐ உபயோகிக்கலாம்.
DM Examples
- Check your DM. I have sent some details there. – உன் DM ஐ பார்க்கவும். சில தகவல்களை அனுப்பியுள்ளேன்.
- I received my job offer through a DM on LinkedIn. – எனக்கு LinkedIn DM மூலமாக பனி நியமன ஆணையை பெற்றேன்.
- Please DM these details. Do not share it in our group.இந்த தகவல்களை DM செய்யவும். நமது குழுவில் பகிர வேண்டாம்.
- DM me for more offers. – மேலும் பல சலுகைகளுக்கு DM செய்யவும்.
Conclusion
நாம் இந்த பதிவில் DM என்றால் என்ன, அவற்றை எங்கு எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக பார்த்தோம். இது உங்களுக்கு DM பற்றய தெளிவான புரிதலை தந்திருக்கும் என நம்புகிறோம்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி!