Learn Commonly Used Abbreviations & Acronyms in Tamil 

வணக்கம். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் பல abbreviations மற்றும் acronyms ஐ அதன் பொருள் தெரிந்தோ தெரியாமலோ உபயோகித்து வருகிறோம். குறிப்பாக, பேசும்போது, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும்போது, சமூக வலைத்தளங்கள் என அணைத்து இடங்களிலும் நாம் உபயோகிக்கின்றோம். 

இந்த பதிவில் நாம் பொதுவாக அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் Abbreviations & Acronyms ஐ பற்றி காண்போம். குறிப்பாக அவற்றின் விரிவாக்கம், அதன் தமிழ் பொருள், எந்த இடங்களில் உபயோகிக்க வேண்டும், போன்றவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.

Abbreviations and Acronyms in Tamil

Abbreviations & Acronyms என்றால் என்ன?

முதலில் நாம் Abbreviations & Acronyms என்பதன் தமிழ் பொருளை அறியலாம். Abbreviations என்பது சுருக்கங்கள், Acronyms என்பதன் பொருள் சுருக்கெழுத்துக்கள் ஆகும். இரண்டும் கிட்டத்தட்ட ஒரு பெரிய சொற்றொடரின் சுருக்கங்கள் ஆகும். அனால் இரண்டுக்கும் வித்யாசம் உள்ளன. அவை என்னென்ன என்பதை காண்போம்.

Abbreviations

ஒரு வார்த்தையோ அல்லது பல வார்த்தைகள் கொண்ட தொகுப்பையோ அதன்  முதல் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது வார்த்தைகளின் syllable (தமிழில் அசை என கூறுவோம்) ஐ கொண்டோ, அல்லது சில எழுத்துக்களை நீக்கியோ நாம் சுருக்கி பயன்படுத்துவது Abbreviations அல்லது சுருக்கம் என அழைக்கப்படுகிறது.

நாம் இந்த Abbreviations ஐ உச்சரிக்கும்போது அதனை தனித்தனி எழுத்துக்களாக மட்டுமே உச்சரிக்க வேண்டும். அதனை ஒரே வார்த்தையாக உபயோகிக்கக்கூடாது. 

Example 

நாம் United Arab Emirates என்பதனை அதன் முதல் எழுத்துக்களை சேர்த்து UAE என எழுதலாம். இதனை நாம் சொல்லும் போது ஒவ்வொரு எழுத்தாக U A E  என கூற வேண்டும். UAE என ஒரு வார்த்தையாக அமைத்து கூறக்கூடாது.

Acronyms 

Acronyms என்பதும் ஒரு வகை Abbreviation ஆகும். இதுவும் ஒரு வார்த்தையோ அல்லது பல வார்த்தைகள் கொண்ட தொகுப்பை அதன் முதல் எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படுவது ஆகும். இதற்கும் Abbreviation க்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நாம் அப்படி உருவாக்கிய எழுத்துக்களை தனித்தனியாக கூற மாட்டோம். அதனையே ஒரு வார்த்தையைப் போல அமைத்துக்கொள்வோம். 

Example 

எடுத்துக்காட்டாக, As Soon As Possible என்பதன் சுருக்கம் ASAP ஆகும். இதனை நாம் ASAP  (ஏசாப்) என்று தான் கூற வேண்டும். A S A P என்ன தனி தனி எழுத்துக்களாக உச்சரிக்கக் கூடாது.

நாம் இனி பொதுவாக அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் Abbreviations ஐ பற்றி காண்போம்.

ASAP, OMG, LOL, CEO, HR, IQ meaning in tamil

ASAP 

ASAP என்பதன் விரிவாக்கம் As Soon As Possible ஆகும். ASAP தமிழ் பொருள் விரைவாக, விரைவில், உடனுக்குடன், எவ்வளவு உடனுக்குடன் செய்ய முடியுமோ அவ்வளவு உடனுக்குடன் போன்ற அர்த்தங்களை தரும். 

எத்தகைய சூழ்நிலைகளில் ASAP ஐ  உபயோகிக்கலாம்?

நீங்கள் ஒரு செயலை மற்றொருவரிடம் கூறி விரைவாக செய்ய சொல்கிறீர்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வேலையாக இருக்கலாம், வர சொல்வதாகவோ, போக சொல்வதாகவோ, என எதுக்காவ வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த செயலானது எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலைகளில் நாம் ASAP என்பதனை உபயோகிப்போம்.

Examples

  1. Finish this task ASAP; it’s very urgent. – இந்த வேலையை விரைவாக முடிக்கவும்; மிக மிக அவசரம்.
  2. We need to fix this tape ASAP; otherwise, the water will be wasted. – இந்த டேப்பை விரைவில் சரி செய்ய வேண்டும்; இல்லையேல், தண்ணீரானது வீணாகிவிடும்.
  3. Can you bring the house key ASAP? I have been waiting here for 3 hours outside. – விரைவில் வீட்டு சாவியை கொண்டு வர முடியுமா? நான் இங்கு 3 மணி நேரமாக வீட்டுக்கு வெளியே காத்துக்கொண்டு இருக்கிறேன்.
  4. Can you send the report to the client ASAP? They have been asking continuously. – சீக்கிரமாக வாடடிக்கையாளருக்கு அறிக்கையை அனுப்புகிறாயா? அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
  5. I forgot to bring my bus ticket. Can you bring it to me ASAP? – என்னுடைய பேருந்து பயணசீட்டை கொண்டு வர மறந்துவிட்டேன். உடனடியாக கொண்டு வருகிறாயா?

OMG 

OMG என்பதன் விரிவாக்கம் Oh My God என்பதாகும். OMG பொருள் அடக்கடவுளே, கடவுளே, அய்யய்யோ, போன்றவை ஆகும். 

எத்தகைய சூழ்நிலைகளில் OMG ஐ  உபயோகிக்கலாம்?

மகிழ்ச்சி, ஆச்சரியம், நம்பிக்கையின்மை, துக்கம், சோகம்,  உற்சாகம், திகைப்பு போன்ற சூழ்நிலைகளில் நாம் OMG அல்லது Oh My God என்பதனை உபயோகிப்போம். இது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப மகிழ்ச்சியான சொல்லாகவோ அல்லது துக்கமான சொல்லாகவோ அல்லது ஆச்சரியமான சொல்லாகவோ மாறும். 

Examples

  1. OMG, this sweet is so amazing. You must try this.- கடவுளே, இந்த இனிப்பு மிகவும் அருமையாக உள்ளது, நீங்கள் இதை சுவைத்துப்பார்க்க வேண்டும்.
  2. OMG, I forgot my mobile at home. Not sure what I am going to do. – அடக்கடவுளே, நான் என்னுடைய தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டேனே. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. 
  3. OMG, I won the lottery! – ஐயோ! நான் லாட்டரியில் பரிசு வென்றேன்.
  4. OMG, this looks so big. – அடக்கடவுளே, இது பார்க்க மிக பெரியதாக உள்ளது.
  5. I see him. OMG, I cannot believe my eyes. – நான் அவனை பார்க்கிறேன். கடவளே, என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை.

LOL 


LOL என்பதன் விரிவாக்கம் Laugh Out Loud ஆகும். LOL தமிழ் பொருள் சத்தமாக சிரிக்கவும் என்பதாகும். 

எத்தகைய சூழ்நிலைகளில் LOL ஐ  உபயோகிக்கலாம்?

கேளிக்கை, நகைச்சுவைகள், சிரிப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகள், வேடிக்கையான நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் நாம் LOL ஐ உபயோகிப்போம். பொதுவாக நாம் குறுஞ்செய்திகள், சமூக வலைத்தள பதிவுகள் போன்றவற்றில் இவற்றை நாம் அதிகமாக உபயோகிப்போம்.

சில நேரங்களில் LOL ஆனாது வினைச்சொல்லாகவும் வரும். அதற்க்கு சிரித்தல் அல்லது சிறு மகிழ்ச்சி என்ற பொருளும் வரும்.

நாம் கடிதம் எழுதும்போது LOL  என குறிப்பிட்டால், அது Lots Of Love என்ற பொருள் ஆகும்.

Examples 

  1. Watched this comedy scene. LOL, best stress relief. – இந்த நகைச்சுவையை பார்த்தேன். மனஅழுத்தத்திற்கு சிறந்த நிவாரணியாக இருந்தது.
  2. Tried to learn dance. LOL, it’s a work in progress. – நடனம் ஆட முயட்சி செய்தேன். நடனம் கற்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.
  3. LOL, this is too funny. I couldn’t stop laughing. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
  4. LOL, this is hilarious. – இது மிகவும் வேடிக்கையானது.
  5. You are the most funny guy I have ever met, LOL. – நான் சந்தித்ததிலேயே நீ தான் சிறந்த வேடிக்கையான மனிதன்.

CEO 

CEO என்பதன் விரிவாக்கம் Chief Executive Officer ஆகும். CEO தமிழ் பொருள் தலைமை நிர்வாக அதிகாரி ஆகும். நிறுவனத்தில் மிகவும் உயரிய பதவி அல்லது பொறுப்பு என CEO வை கூறலாம். அந்நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுப்பதும் (Decision), நிறுவனத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளை நிர்வகிப்பதும் (Management) இவருடைய பணியாக இருக்கும்.

எத்தகைய சூழ்நிலைகளில் CEO ஐ  உபயோகிக்கலாம்?

மேலே கூறியதுபோல இது ஒரு பதவியின் பெயர் ஆகும். எனவே நாம் CEO வை பற்றி பேசும் எல்லா சூழ்நிலைகளிலும் உபயோகிக்கலாம்.

Examples 

  1. Hello, everyone, Meet our new CEO, Mr. Ram. – அனைவருக்கும் வணக்கம் இவர் தான் புதிய CEO திரு.ராம்.
  2. The CEO of the company announced new updates during the meeting. – இந்த சந்திப்பின்போது நிறுவனத்தின் CEO புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
  3. I will probably have a meeting with the CEO tomorrow. – நாளை நான் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)யுடன் ஒரு சந்திப்பை நடத்துவேன். 
  4. Our CEO is a more influential person. – நமது  தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மிக்க செல்வாக்கு உடையவர்.

HR

HR என்பதன் விரிவாக்கம் Human Resources ஆகும். HR தமிழ் பொருள் மனித வளம் ஆகும். இது நிறுவனங்களில் உள்ள ஒரு துறை ஆகும். இந்த துறையை ஆங்கிலத்தில் Human Resources Department என்பர். இது அந்த நிறுவனத்தில் உள்ள வேலையாட்களை அல்லது பணியாளர்களை நிர்வகித்தல், பணியாளர்களை தேர்வு செய்தல், வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்தல்,  பணியாளர்களுக்கு ஏற்படும் பணி ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் இவர்களின் வேலை ஆகும்.

எத்தகைய சூழ்நிலைகளில் HR ஐ  உபயோகிக்கலாம்?

மேலே கூறியதுபோல இது ஒரு பதவியின் பெயர் அல்லது ஒரு துறையின் ஆகும். எனவே நாம் நாம் HR துறையை பற்றி பேசும்போதோ அல்லது HR இல் வேலை செய்பவர்களை பற்றி பேசும் எல்லா சூழ்நிலைகளிலும் உபயோகிக்கலாம்.

Examples 

  1. I want to contact HR to discuss EPF. – EPF பற்றி விசாரிக்க நான் HR ஐ சந்திக்க விரும்புகிறேன்.
    I have submitted a leave request to HR for approval. – நான் HR க்கு எனது விடுப்பு கோரிக்கையை அனுமதிக்க வேண்டி சமர்பித்துள்ளேன்.
  2. I cleared the HR interview. – நான் HR நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றேன்.
  3. If you are facing any work related issues, you should contact HR to resolve them. – வேலை சம்பந்தமாக ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், கண்டிப்பாக HR ஐ தொடர்பு கொண்டு அவைகளை சரி செய்ய வேண்டும். 
  4. The HR team organized a fun Friday event. – HR குழுவானது fun Friday நிகழ்வை ஏற்பாடு செய்தது.

IQ

IQ என்பதன் விரிவாக்கம் Intelligence Quotient ஆகும். IQ தமிழ் பொருள் நுண்ணறிவு அளவு, நுண்ணறிவு ஈவு, நுண்ணறிவு எண், புத்திகூர்மை என பல்வேறு பொருள்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் அறிவை பற்றியே குறிப்பிடுகின்றன. 

இந்த IQ ஆனது மனிதனின் அறிவுத்திறனை அளவிட அல்லது கண்டறிய உதவுகிறது. இதில் பல்வேறு அறிவாற்றல் திறன் (cognition) சம்பந்தமான வினாக்கள் கேட்டகப்படும். குறிப்பாக, சிக்கல்களை திருத்துதல் (problem solving), நினைவாற்றல் (memory), பகுத்து அறிந்து தீர்வு காணுதல் (reasoniing), பேசுதலை கேட்டு அவற்றை புரிந்து வினாக்களுக்கு விடையளித்தல் (verbal comprehension) போன்றவை அடங்கும்.

ஒரே ஒரு IQ தேர்வு என்று இல்லை. பல விதமான IQ தேர்வுகள் உள்ளன. தேர்வு விதம், மதிப்பெண்கள் ஒவ்வொரு வகைக்கு தேர்வுக்கும் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக இத்தகைய தேர்வுகள் உளவியலாளர்கள், கல்வி நிபுணர்கள் போன்றவர்கள் இத்தேர்வினை நடத்துவார்கள்.

IQ மதிப்பெண்கள் சராசரி 100 மற்றும் அதன் நிலை விலகல் 15 ஆகும். அதாவ்து ஒரு தேர்வு எழுதும் நபர் 70 முதல் 130 க்கும் மேல் மதிப்பெண் எடுக்க வாய்ப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக,70 க்கும் குறைவு, 70-85 மதிப்பெண்கள், 85-115 மதிப்பெண்கள் 115-130 மதிப்பெண்கள், 130 க்கும் மேல் மதிப்பெண்கள் என வகைப்படுத்தி அவர்களின் அறிவாற்றலை குறிப்பிடலாம்.

மதிப்பெண் அறிவுத்திறன் 
70 க்கும் குறைவு அறிவாற்றல் குறைவு 
70-85சராசரியை விட குறைவான அறிவாற்றல் 
85-115சராசரி அறிவாற்றல் 
115-130சராசரியை விட அதிகமான அறிவாற்றல் 
130 + நல்ல அறிவாற்றல்

இந்த தேர்வில் மதிப்பெண்ணானது நாம் சரியாக பதிலளித்த வினாக்களின் எண்ணிக்கையை சராசரி மதிப்பெண்ணுடன் தொடர்புபடுத்தி IQ value ஆனது கணக்கிடப்படுகிறது.

நாம் எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாம் நன்றாக பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளித்து, அதனை சராசரி IQ மதிப்பெண்ணை விட அதிகமாக எடுத்தால் நமது மதிப்பெண் அதிகமாக இருக்கும். சராசரியை எண்ணிக்கையை விட நாம் குறைவான கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் நமது IQ மதிப்பெண்ணும் குறைவாக இருக்கும்.

பழைய முறையில், (மன அறிவு வயது/உண்மையான வயது)x100 என்பதனைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அது என்ன மன அறிவு வயது, உண்மையான வயது என உங்களுக்கு தோன்றலாம். உதாரணத்திற்கு ஒரு சிறுவனின் உண்மையான வயது 8. ஆனால் அவனது சிக்கலை தீர்க்கும் அறிவானது 12 வயது சிறுவனுக்கு உள்ளதை போல் இருக்கிறது என வைத்துக்கொண்டால் அவனது மன அறிவு 12, உண்மையான வயது 8 ஆகும்.

(மன அறிவு வயது/உண்மையான வயது)x100 = (12/8)x100 = 150 எனில் அவரது IQ 150 ஆகும். 

இப்போது நடக்கும் தேர்வுகளில் இந்த முறையானது உபயோகப்படுத்தப்படுவது இல்லை.

IQ தேர்வுகள் 

  1. Stanford-Binet Intelligence Scales
  2. Wechsler Adult Intelligence Scale
  3. Woodcock-Johnson Tests of Cognitive Abilities
  4. Mensa Admission Test
  5. Differential Ability Scales

எத்தகைய சூழ்நிலைகளில் IQ ஐ  உபயோகிக்கலாம்?

மேலே கூறியதுபோல இது ஒரு தேர்வின் பெயர் ஆகும். எனவே அது சம்பந்தமாக பேசும் அனைத்து இடங்களிலும் நாம் IQ வை உபயோகிக்கலாம்.

Examples 

  1. I scored 130 on my IQ test. – நான் IQ தேர்வில் 130 மதிப்பெண்கள் எடுத்தேன்.
  2. Some companies use IQ test as part of hiring process to assess cognitive skills. – சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய IQ தேர்வைக்கொண்டு  அவர்களின் அறிவுத்திறனை கணக்கிடுகிறார்கள்.
  3. I would like to take an IQ test. – நான் IQ தேர்வை எழுத விரும்புகிறேன்.

கீழே உள்ளவற்றில் விரிவாக்கங்களை காண

DIY, POV, FYI, ETA, VIP, ATM

BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, மற்றும் HTML

NASA, RSVP, DVD, FAQ, KYC, மற்றும் EOD

Conclusion

இந்த பதிவில் Abbreviations என்றால் என்ன, Acronymsஎன்றால் என்ன, எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் ASAP, OMG, LOL, CEO, HR, மற்றும் IQ போன்றவற்றை பற்றியும் தெளிவாக பார்த்தோம்.

இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் மற்ற Abbreviations மற்றும் Acronyms ஐ பதிவிட உள்ளோம். அந்த பதிவுகளை இங்கு இணைக்கிறேன். அவை அத்தனையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் comment இல் பதிவிடுங்கள். அது எங்களுக்கு இது போன்று மேலும் பல பதிவுகளை எழுத ஊக்குவிக்கும்.

நீங்கள் எதாவது புதிதாக இதில் கற்றுக்கொண்டீர்கள் என்றாலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அத்தனையும் comment இல் பதிவு செய்யவும்.

நன்றி! வணக்கம்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *