Learn phrasal verbs with examples in Tamil
Phrasal verb என்பதன் தமிழ் பொருள் வாக்கிய வினைச்சொல் ஆகும். இந்த வாக்கிய வினைச் சொல்லானது, முதன்மை வினைச்சொல்லுடன்(main verb) முன்னிடைச்சொல் (preposition) அல்லது வினையுரிச்சொல்(adverb) சேர்ந்து உருவாகிறது. இது முதன்மை வினைச்சொல்லின் பொருளை தராமல் வேறு ஒரு புது பொருளினைத் தரும்.
நாம் சேர்க்கும் அந்த முன்னிடைச்சொல் (preposition) அல்லது வினையுரிச்சொல்லானது(adverb) அந்த முதன்மை வினைச்சொல்லின் பொருளை மாற்றுகிறது.
இந்த வாக்கிய வினைச்சொல்லினை ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் அதிக அளவில் நாம் உபயோகிக்கின்றோம்.
ஏன் phrasal verbs ஐ கற்க வேண்டும்?
ஆங்கிலத்தில் phrasal verb ஆனது கற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கும். நம்மால் அந்த வார்த்தைகளின் பொருட்களை கணிப்பது சிரமமாக இருக்கும். முதன்மை வினைச்சொல்லுக்கான பொருளுக்கும், வாக்கிய வினைச்சொல்லுக்கும் பொருளானது வேறு வேறாக இருக்கும். எனவே அவற்றை கணிப்பது கடினம்.
ஆனால் நாம் இந்த வாக்கிய வினைச்சொல்லினை கற்றுக்கொண்டால் நம்முடைய ஆங்கில அறிவு இன்னும் விரிவடையும் மேலும் நம்மால் சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடியும்.
Phrasal verbs கற்பதன் பயன்கள்
ஆங்கிலத்தில் தினசரி பேச்சுவழக்கில் நாம் அடிக்கடி இந்த வாக்கிய வினைச்சொல்லினை உபயோகிப்போம். எனவே இதனை கற்றுக்கொண்டால் நம்மால் ஆங்கிலத்தில் எளிமையாக மற்றவர்களுடன் பேச முடியும், அவர்கள் பேசுவதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.
ஆங்கிலத்தினை மிக ஆழமாக கற்றுக்கொள்ள இந்த வாக்கிய வினைச்சொற்கள் உபயோகமாகும். அதாவது இந்த வினைச்சொற்கள் உபயோகிக்கப்படும் சூழ்நிலைகள், அதன் பொருட்கள், உபயோகிக்கும் இடங்கள் என ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.
இது நமது ஆங்கிலதில் எழுதும் திறனை அதிகரிக்கும். அதிக அளவில் வாக்கிய வினைச்சொற்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் எந்தெந்த சூழ்நிலைகளில் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது எளிமையாக தெரியும். எனவே அதனை கொண்டது நம்மால் சிறப்பாக நமது எழுதும் திறனை அதிகரிக்க முடியும்.
Commonly used Phrasal verbs
நாம் இந்த பதிவில் நம்முடைய அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வாக்கிய வினைச்சொற்கள் என்னென்ன எனவும், அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக காண்போம்.
இவை உங்களின் ஆங்கில கற்றலுக்கு பெரும்பங்கு ஆற்றும் என நம்புகிறோம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள phrasal verbs ஒவ்வொன்றும் பல வகை பொருட்களை தரும். நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் அர்த்தங்களை மட்டும் கொடுத்துள்ளோம்.
இந்த பதிவில் நாம் 10 phrasal verbs மட்டுமே கொடுத்துள்ளோம். அடுத்தடுத்த பதிவுகளில் நாம் மற்ற phrasal verbs ஐ பற்றி எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.
Try on
இதன் ஒரு பொருள் ஆடை பொருத்தத்தை சரி பார்க்க (to test the fit of clothing)
- The tailor told me to try on the dress. – தையல்காரர் ஆடையை போட்டு பார்த்து சரியாக இருக்கிறதா என சரி பார்க்க சொன்னார்.
- He is trying on clothes for a bridal event. – திருமண நிகழ்விற்காக அவன் ஆடைகளை சரியாக உள்ளதா என பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
மற்றொரு பொருள் – மோசமாக நடந்து கொள்ளுதல் (To behave badly)
- The new employee surprised everyone by trying on a disrespectful tone during the meeting. – புதிதாக பணியில் சேர்ந்த நபர், மரியாதை குறைவாக மீட்டிங்கில் பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
- He tries on others with his words. – வார்த்தைகளால் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார்.
Turn down
பொருள் 1 – நிராகரித்தல், மறுத்தல் ( to reject or refuse)
- the officer turned down the bribe. – அதிகாரி லஞ்சத்தை நிராகரித்தார்.
- because of plagiarism, his project was turned down. – திருட்டு (மற்றவருடைய வேலை) காரணமாக அவனது திட்டமானது நிராகரிக்கப்பட்டது.
பொருள் 2 – குறைதல் (To reduce)
- Please turn down the volume on your mobile. – உங்கள் தொலைபேசியின் ஒலி அளவை குறைக்கவும்.
- The bank planned to turn down the interest rate. – வங்கியானது அவர்களின் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
பொருள் 3 – மடித்தல் (To fold)
- Please carefully turn down the corners of the paper to create a paper plane. – தாளில் விமானம் செய்ய கவனமாக தாளின் மடிப்புகளை மடிக்க வேண்டும்.
- Turn down your clothes properly and put them in your closet. – உனது துணிகளை நன்றாக மடித்து அலமாரியில் வைக்கவும்.
Turn on
இதன் பொருள் இயக்குதல் (to activate)
- the child doesn’t know how to turn on the computer. – குழந்தைக்கு கணினியை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியவில்லை.
- my mom told me to turn on the fan. – எனது அம்மா மின்விசிறியை இயக்க சொன்னார்.
இரண்டாம் பொருள் – துரோகம் செய்தல் (To betray)
- He turned on me and revealed my secrets to my enemies. – அவன் என்னுடைய அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டு எனக்கு துரோகம் செய்து விட்டான்.
- Turning on a company’s sharing of confidential information is a policy breach. – நிறுவனத்தின் ரகசிய தகவல்களை வெளியிடுதல் கொள்கை மீறல் ஆகும்.
மூன்றாம் பொருள் – திடீரென்று உருவாக்குதல் அல்லது ஏற்படுத்துதல். (To produce suddenly)
- When you open the tiffin box, the smell turns on quickly. – டிபன் பாக்ஸை திறந்தால், வேகமாக வாசனை ஏற்படுகிறது.
- Your words turned me on to this wonderful idea. – உங்கள் வார்த்தைகள் எனக்கு இந்த அற்புதமான யோசனையை ஏற்படுத்தியது.
Wake up
இதன் பொருள் – தூக்கத்தில் இருந்து எழுதல் (to stop sleeping)
- She wakes up early in the morning. – அவள் தினமும் அதிகாலையில் விழிப்பாள்
- My dad usually wakes me up at 6 o’clock. – என்னுடைய அப்பா காலை 6 மணிக்கு தினமும் எழுவார்.
Warm up
பொருள் 1 – உடற்பயிற்சிக்கு தயார் செய்தல்.
- I warm up daily before I go jogging. – நான் தினமும் காலை ஓட்டத்துக்கு முன் சிறியதொரு உடற்பயிற்சி செய்வேன்.
- The coach asked us to warm up on the ground before his arrival. – பயிற்சியாளர் அவர் மைதானத்துக்கு வருவதற்கு முன் சிறு உடற்பயிற்சிகளை செய்ய சொன்னார்.
பொருள் 2 – சூடாக அல்லது வெதுவெதுப்பாகுத்தல்
- Please warm up a bit with this tea; it is cold. – இந்த் டீயை சிறிது சூடு செய்து தாருங்கள், ஆறி உள்ளது.
- I warm myself up with the help of fire during the winter season. – குளிர்காலத்தில் நெருப்பின் உதவியுடன் குளிர் காய்வேன்.
பொருள் 3 – ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு தயாராதல்
- Before going to the interview, I warm up my communication skills once. – நேர்முக தேர்வுக்கு செல்லும் முன், என்னுடைய ஆங்கில மொழி புலமையை ஒரு முறை சரி பார்த்துக்கொள்கிறேன்.
- Let us have a brief warm up session to discuss the points in the meeting. – மீட்டிங்கில் பேச வேண்டிய விஷயங்களை பற்றி இப்போது சிறு அமர்வை நடத்தலாம்.
Wash up
இதன் தமிழ் பொருள் – உங்களை சுத்தம் செய்தல் (to clean yourself)
- I wash up my face every morning. It keeps me refreshing.
- He washed himself up early in the morning. – அவன் அதிகாலையில் தன்னை சுத்தம் செய்தான்.
இரண்டாம் பொருள் – எடுத்துச்செல்லுதல் (Carry)
- During this December flood, all the waste was washed up in the city. – இந்த டிசம்பரில் வெள்ளம் வந்தபோது அனைத்து கழிவுகளையும் அடித்து சென்றன.
- The school uniform always washes up my childhood memories. – பல்ளிசீருடையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு சிறு வயது குஞபாகங்கள் வருகின்றன.
மூன்றாம் பொருள் – அனுப்புதல் (Transmit)
- Now a days, social media platforms wash up the news for global audiences quickly. – இப்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் செய்திகளை உலக அளவில் எளிதில் கொண்டுசெல்ல உதவுகிறது.
- We set up the solar panel in our house. It washes up the electricity in my house. – நாங்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை பொருத்தினோம். அதன் மூலம் எங்களின் வீட்டில் எல்லா இடங்களுக்கும் மின்சாரம் கிடைக்கிறது.
Break down
இதன் முதல் பொருள் – வேலை செய்வதை நிறுத்தவும்
- my car broke down on my way to work. – நான் வேலைக்கு செல்லும்போது என்னுடைய மகிழுந்தானது பழுதானது.
- The lift broke down. I have to go by the staircase – லிப்ட்டானது பழுதாகிவிட்டது. நான் மாடிப்படி வழியாக எற வேண்டும்.
இரண்டாம் பொருள் – பெரிய ஒன்றை சிறிது சிறிதாக்குதல்
- When you want to simplify a big task, break it down into smaller parts. – நீங்கள் ஒரு பெரிய வேலையை முடிக்க அதனை சிறு சிறு வேலைகளாக பிரிக்கவும்.
- Please read this book and break down your points on chapter wise. – இந்த செய்தியை படித்து பாட வாரியாக முக்கிய குறிப்புகளை எடுக்கவும்.
மூன்றாம் பொருள் – மன மற்றும் உணர்ச்சி ரீதியாக நன்றாக இல்லாத போது (To collapse emotionally or mentally)
- Whenever you feel like breaking down, please call me. – எப்போது உனக்கு நன்றாக இல்லாமல் இருப்பதாக உணர்கிறாயோ, எனக்கு தொலைபேசி மூலம் அழை.
- he was completely broken down when he heard the bad news. – அவன் அந்த கேட்ட செய்தியை கேட்ட பொது சுக்கு நூறாக நொறுங்கினான்.
Bring up
இதன் பொருள் – ஒரு தகவலை குறிப்பிட அல்லது தொடங்க (To mention or introduce your topic)
The speaker will bring up his speech at 12 o’clock – இந்த பேச்சாளர் மதியம் 12 மணிக்கு தனது உரையை ஆரம்பிப்பார்.
He brings up the importance of this project. – அவர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இரண்டாம் பொருள் – கீழிருந்து தூக்க (To elevate or lift something)
The elevator is not working. So, I have to bring my luggage up the staircase. – லிப்ட்டானது வேலை செய்யவில்லை. எனவே நான் என்னுடைய பொருட்களை படிக்கட்டு வழியே மேலே கொண்டு செல்ல வேண்டும்.
We bring up this 1000 kg machine to the top floor with the help of advanced lifting machines. – நவீன பளு தூக்கும் இயந்திரங்களின் உதவியுடன் இந்த 1000 கிலோ எடையுள்ள இயந்திரத்தை மேலே கொண்டு வந்தோம்.
மூன்றாம் பொருள் – குழந்தையை வளர்த்தல் (To raise a child)
She brought up five children – அவள் ஐந்து குழந்தைகளை வளர்த்தாள்.
My mother did her best to bring us up. – எனது அம்மா அவர்களால் முடிந்த அளவுக்கு நன்றாக வளர்த்தார்.
Parents play a crucial role in bringing up their children with more social responsibility. – சமகூட அக்கறையுடன் குழந்தைகள் வளர்வதற்கு அவர்கள் பெற்றோர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
Call off
இதன் பொருள் – செயலை கைவிடல் அல்லது ரத்து செய்தல் (to cancel or abandon an activity)
- my manager has urgent work, so he called off this meeting. – எனது மேலாளருக்கு அவசர வேலை இருந்த காரணத்தால் மீட்டிங்கை ரத்து செய்தார்.
- due to heavy rain, the match was called off. – பலத்த மலை காரணமாக போட்டியானது கைவிடப்பட்டது.
மற்றொரு பொருள் – தேடுதலை முடிவுக்கு கொண்டு வருதல் (To end a search)
- I called off the missing pen search when my dad found it. – எனது தந்தை நான் தொலைத்த பேனாவை கண்டுபிடித்தவுடன், நான் தேடுவதை நிறுத்தினேன்.
- The police decided to call off the search for a criminal.. – குற்றவாளியை தேடும் பணியினை கைவிட முடிவு செய்தனர்.
இதன் மற்றுமொரு பொருள் – கோரிக்கையை திரும்ப பெறுதல் (To withdraw a request)
- The manager called off the tasks that were assigned to me. – என்னுடைய மேலாளர் எனக்கு அளித்த வேலைகளை திரும்ப பெற்றார்.
- The government called off the new rules.- அரசாங்கமானது புது விதிகளை திரும்ப பெற்றது.
Check in
இதன் பொருள் – வருகையை பதிவு செய்தல் (to register upon arrival)
The librarian requested that I check in to confirm my attendance. – நூலகர் எனது வருகையை உறுதிப்படுத்த சரிபார்க்கும் படி கேட்டுக்கொண்டார்.
he needs to check in at the restaurant before 7:00 p.m. – மாலை ஏழு மணிக்குள் அவர் உணவகத்துக்கு வர வேண்டும்.
இதன் இரண்டாம் பொருள் – வருகை அல்லது பங்கேற்பை உறுதிப்படுத்துதல் (To confirm the participation or attendance.)
Students must check in at the HM office if they come late. – மாணவர்கள் தாமதமாக வந்தால் தலைமை ஆசிரியரை அவர் அலுவலகத்தில் பார்த்து விட்டு வர வேண்டும்.
Passengers are requested to check in at least 60 minutes before their train departure. – பயணிகள் ரயில் வருவதற்கு குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் முன்னரே வந்து அவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூன்றாம் பொருள் – தகவலை புதுப்பித்தல் (To reconnect or update information.)
- I need to check in with my manager to update my leave. – எனது விடுமுறையை பற்றி தெரிவிக்க எனது மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
- We should check in regularly to get the information correctly. – நாம் தகவலை சரியாக பெற அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும்.
இந்த பதிவில் நாம் 10 phrasal verbs மட்டுமே கொடுத்துள்ளோம். இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி உபயோகிக்கும் phrasal verbs ஐ காணலாம். அந்த பத்விக்குகளின் இணைப்புகளை இங்கு கொடுக்கிறேன்.
Conclusion
இந்த பதிவில் நாம் phrasal verbs என்றால் என்ன, அவற்றின் பயன் என்ன, எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றியும், நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் phrasal verbs என்னென்ன, அவற்றின் பல்வேறு பொருட்கள் என்னென்ன என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம். இது உங்களுக்கு phrasal verb பற்றி தெளிவான ஒரு புரிதலை தந்திருக்கும் என நம்புகிறேன்.
Abbreviations & Acronyms என்றால் என்ன பொதுவாக நன் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் Abbreviations மற்றும் Acronyms என்னென்ன என்பதை காண Learn Commonly Used Abbreviations & Acronyms in Tamil
உங்களுக்கு இது சம்பந்தமாக சந்தேகங்கள் ஏதேனும் இருப்பினும் அல்லது இந்த பதிவை பற்றிய கருத்துக்கள் இருப்பினும் அதனை comment இல் பதிவு செய்யுங்கள்.
நன்றி! வணக்கம்.