NASA, RSVP, DVD, FAQ, KYC, EOD Full Form, Examples & Meaning In Tamil

நாம் முந்தைய மூன்று பதிவுகளில் Abbreviations பற்றியும், Acronyms பற்றியும், அவற்றை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதனை எடுத்துக்கட்டுகளுடனும் தெளிவாக கண்டோம். ஒரு வேலை அதனை நீங்கள் காணாவிடில் கீழே உங்களுக்கு Abbreviations மற்றும் Acronyms பற்றிய பதிவின் இணைப்பை இணைத்துள்ளோம். அதனை படித்துவிட்டு பின்னர் இந்த பதிவினை படிக்க தொடங்குங்கள். மேலும் நாங்கள் பொதுவாக உபயோகிக்கும் மற்ற Abbreviations மற்றும் Acronyms களை இங்கு இணைத்துள்ளோம் அத்தனையும் படியுங்கள்.

Learn Commonly Used Abbreviations & Acronyms in Tamil 

DIY, POV, FYI, ETA, VIP, ATM என்றால் என்ன, அவற்றை எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை படிக்கவும்.

BBC, PDF, COD, UPI, UPI ID, UPI PIN, BHIM UPI, மற்றும் HTML என்பது பற்றியும் எங்கு உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பை படிக்கவும்.

நாம் இந்த பதிவில் NASA, RSVP, DVD, FAQ, KYC, மற்றும் EOD ஆகியவற்றை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

abbreviations-and-acronyms-in-tamil

NASA

National Aeronautics and Space Administration என்பதன் சுருக்கம் NASA ஆகும். NASA வின் தமிழ் பொருள் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் ஆகும்.

NASA ஒரு அமெரிக்க அரசு நிறுவனம் ஆகும். 1958 இல் NASA வானத்து தொடங்கப்பட்டது. NASA ஆனது வானில் உள்ள கோள்களை ஆராய்தல், விண்வெளியில் அறிவியல் ஆராய்ச்சி நடத்துதல், செயற்கைகோள்களை ஏவுதல், விண்வெளி ஆராய்ச்சி தொழிநுட்பங்களை மேம்படுத்தல் ஆகியவற்றை திறம்பட செய்து வருகின்றன.

இதில் விண்வெளி திட்டங்களுக்கும், விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Examples 

  1. NASA sent astronauts to the moon in 1969. – NASA 1969 இல் விண்வெளி வீரர்களை நிலாவுக்கு அனுப்பியது.
  2. My biggest dream is work for NASA. – NASA வில் வேலை பார்க்கவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவாகும்.
  3. I follow NASA’s social media accounts to stay updated on their work. – நான் NASA வின் வேலை நிகழ்வுகளை அறிந்துகொள்ள அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடர்கிறேன்.

RSVP

Répondez S’il Vous Plaît என்ற பிரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கமே இந்த RSVP ஆகும். இதன் ஆங்கில பொருளானது Please Respond ஆகும். இதனை நாம் தமிழில் தயவுசெய்து பதிலளிக்கவும் என கூறலாம்

RSVP என்பது நிகழ்ச்சிகளில் அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களின் வருகையைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களிடம் கேட்கப்படும் மரியாதையான கோரிக்கை ஆகும். அவர்கள் வருகிறார்களா, இல்லையா அல்லது இன்னும் முடிவு செய்யவில்லையா என்பதை தெரிந்து கொண்டு நாம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர இது உதவும். 

.எடுத்துக்காட்டாக, The email invitation reminded everyone to RSVP for the learning activity. – மின்னஞ்சல் அழைப்பிதழானது அனைவருக்கும் கற்றல் செயல்பாடுகள் சம்பந்தமாக நினைவூட்டியது. இந்த வாக்கியத்தில் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக நினைவூட்டப்படுகிறது. அவர்கள் அதற்க்கு வருகிறோம், இல்லை அல்லது இன்னும் முடிவு செய்யவில்லை என அவர்கள் பதிலை தருவார்கள்.

எத்தகைய சூழ்நிலைகளில் RSVPஐ உபயோகிக்கலாம்?

நீங்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறீர்கள். அதற்க்கு பல சிறப்பு விருந்தினர்களை அழைத்திருக்கிறீர்கள். நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன் அவர்களின் வருகையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். ஏனெனில் அவர்கள் வருகைக்கான திட்டங்கள் மற்ற செயல்களை செய்ய வேண்டும் அல்லவா? எனவே அந்த சிறப்பு விறு தினர்களிடம் அவர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை கேட்டறிய இந்த RSVP என்ற சுருக்கத்தை உபயோகப்படுத்தி கேட்கலாம். அதாவது  Please Respond என்பதற்கு பதிலாக RSVP என்பதனை உபயோகிக்கலாம். அதற்க்கு அந்த சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்களா, இல்லையா அல்லது இன்னும் அதைப்பற்றி முடிவு எடுக்கவில்லையா போன்ற பதிலை தெரிந்து கொள்ளலாம்..

Examples 

  1. Please take a moment to RSVP to the charity event. – தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையை பற்றி பதிலளிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
  2. Thanks for the wedding invitation; I will RSVP as soon as I check my schedule. – திருமணத்திற்கு அழைத்ததற்கு நன்றி. நான் என்னுடைய கால அட்டவணையை பார்த்து எனது வருகைக்கான பதிலை தெரிவிக்கிறேன்.


DVD

Digital Video Disc or Digital Versatile Disc என்பதன் சுருக்கமே DVD ஆகும். DVD தமிழ் பொருள் மின்னிலக்க பலதிற ஆற்றல் வட்டு அல்லது மின்னிலக்க பல்திறன் வட்டு ஆகும்.

DVD ஆனது ஆப்டிகல் டிஸ்க் (Optical Disc) வகையை சார்ந்தது. 1995 இல் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இதில் நம்மால் காணொளிகள் (video), ஆடியோ என பெரிய பெரிய கோப்புக்களை சேகரிக்க முடியும். இதனை விட பல மேம்பட்ட சேமிப்பு சாதனங்கள்(advanced storage devices) தற்போது உள்ளன.

எடுத்துக்காட்டாக, I watched this movie on DVD during my childhood days. –  நான் இந்த திரைப்படத்தை என்னுடைய சிறுவயதில் DVDயின் மூலம் பார்த்தேன்.

எத்தகைய சூழ்நிலைகளில் DVD ஐ  உபயோகிக்கலாம்?

புகைப்படங்கள், திரைப்படங்கள், ஆடியோக்கள் என பலவற்றை சேமிக்க முடியும். மேலும் மென்பொருள் செயலிகள் கணினியில் நிறுவவும் உபயோகிக்கலாம்.இந்த DVD பற்றி பேசும் இடங்களில் மற்றும்  அதன் பயன்பாடுகளை பேசும் இடங்களில் நாம் இதனை உபயோகித்து வாக்கியங்களை அமைக்கலாம்.

Examples 

  1. I borrowed this DVD from my friend. – இந்த DVD ஐ எனது நண்பனிடம் கடன் வாங்கினேன்.
  2. This music program is available on DVD exclusively for the fans. – இந்த இசை நிகழ்ச்சியானது DVD வடிவில் பிரத்யேகமாக ரசிகர்களுக்கு கிடைக்கிறது.
  3. I need to get a DVD copy of my favorite music director’s new album. – எனக்கு பிடித்த இசையமைப்பாளரின் புதிய இசை DVD யை வாங்க வேண்டும்.
  4. This software comes with a DVD for easy installation. – இந்த மென்பொருள் செயலியானது DVD வடிவில் இருப்பதால் எளிமையாக அதனை நிறுவ முடியும்.

FAQ

Frequently Asked Questions என்பதன் சுருக்கமே FAQ ஆகும். FAQ இன் தமிழ் பொருள் அடிக்கடி கேட்கும் வினாக்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதிகமாக திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகள் ஆகும். 

வாடிக்கையாளர்கள் அந்த பொருளினை அல்லது சேவையினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அது பற்றிய பொதுவான கேள்விகள் மற்றும் பதில்களை கொண்ட தொகுப்பை நாம் FAQ என்போம்.

எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் வாங்க எண்ணி அதனை பற்றி தகவல்களை அந்த இணைய பக்கத்தில் காண்கிறீர்கள். அதில் அந்த பொருளை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை தொகுத்து வழங்கியிருப்பார்கள். அதனை படிக்கும்போது உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் தெளிந்து அந்த பொருளை வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்வீர்கள். அங்கு அவர்கள் அந்த கேள்வி பதில்களை குறிப்பிட்டது இந்த FAQ வின் கீழ் வரும்.

எத்தகைய சூழ்நிலைகளில் FAQ ஐ  உபயோகிக்கலாம்?

பொதுவாக இந்த FAQ வை நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஆவணங்கள், இணைய பக்கங்கள், இணையதளங்கள்,ஒரு பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என இருக்கும் ஆவணங்கள் (product manual) ஆகியவற்றில் அந்த பொருளினை அல்லது சேவையினை பற்றிய மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிக்கான பதில்களும் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கும்.

Examples 

  1. For more information, check out our FAQ section. – மேலும் தகவல்களுக்கு, எங்களுடைய FAQ பகுதியை காணவும்.
  2. Our product manual includes an FAQ page to guide our users. – எங்கள் பயனாளர்களுக்கு வழிகாட்ட, தயாரிப்பு கையேட்டில் FAQ  பக்கமானது இணைக்கப்பட்டுள்ளது.
  3. product FAQ document is very helpful for me to understand their product more clearly. – பொருளினை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள, அந்த பொருளின் FAQ ஆனது மிகவும் உதவிகரமாக உள்ளது.  
  4. Before contact our customer support, please have a look at our FAQ. – எண்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்வதற்கு முன், எங்களது FAQ வை படிக்கவும்.
NASA, RSVP, DVD, FAQ, KYC, and EOD meaning in Tamil

KYC 

Know Your Customer என்பதன் சுருக்கமே இந்த KYC ஆகும். இதன் நேரடி தமிழ் பொருள் “உங்கள் வாடிக்கையாளரை பற்றி அறிந்துகொள்ளுங்கள்” ஆகும்.

அனைத்து  துறைகளிலும், சேவைகள் வழங்கும் நிறுவங்களிலும் இந்த KYC யானது செயல்பாட்டில் உள்ளது. இது பெரும்பாலும் நிதி சார்ந்த துறைகளில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் உண்மையான விவரங்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை சேகரித்து அதனை சரி பார்க்கும். இதன் மூலம் அந்த நபர் பற்றிய அனைத்து தகவல்களும் நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும். எனவே அவர் ஏதேனும் மோசடியில், குறிப்பாக பண மோசடியில் ஏதேனும் ஈடுபட்டுள்ளாரா என்பதனை பற்றி அறிந்து அதற்கேற்றாற்போல் அந்த வாடிக்கையாளருக்கு நிதி சார்ந்தவற்றை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும், இனி அப்படி எந்த ஒரு நிகழ்வுகள் எந்த வகையில் நடைபெறாமல் இருக்கவும் வாடிக்கையாளர் தகவல்களை KYC மூலம் நிதி நிறுவனங்கள் பெறுகின்றன.

எங்கெங்கு இந்த KYC நீங்கள் அடிக்கடி காணலாம்?

வங்கிகளில் புது வாடிக்கையாளர் கணக்கை திறக்கும்போது, வங்கிகள் நம்முடைய அடிப்படை தகவல்கககளை கேட்குமல்லவா? அது ஒரு வகை KYC ஆகும்.

நீங்கள் இணைய வழியாக அல்லது UPI மூலமாக அடிக்கடி பணம் அனுப்புபவர் பெறுபவர் எனில் அந்த செயலிகளில் நீங்கள் KYC சரிபார்க்க வேண்டும்.

வங்கிகளில் அல்லது பிற இடங்களில் கடன் வாங்கும் போது நமது பழைய கடன்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை KYC மூலமாக கடன் தரும் நிறுவனங்கள் சரி பார்க்கும்.

நீங்கள் புது SIM உங்கள் தோலை பேசிக்கு வாங்கும்போது, ஆதார் அட்டை, அல்லது பிற ஆவணங்களை வைத்து வாங்குகிறோம் அல்லவா? அதுவும் ஒரு வகை KYC க்கு கீழ் வரும்.

நீங்கள் கிரெடிட் கார்டு எனப்படும் பற்று அட்டை வாங்கும்போது, உங்கள் தகவல்களை KYC மூலம் பெறப்பட்டு, உங்களுக்கு இந்த கடன் அட்டையை வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

இது போல பல இடங்களில் நாம் KYC மூலம் நமது தகவல்களை தர வேண்டி இருக்கும். இன்சூரன்ஸ் காப்பீடு வாங்கும் போது, UPI செயலிகளில், பங்கு சந்தையில், என பணம் பரிமாற்றங்கள் நடக்கும் இடங்களில் இந்த KYC அனைத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

எந்த வகையான ஆவணங்கள் இந்த KYC இல் கேட்கப்படுகிறது?

இது ஒவ்வொரு நிறுவனங்களை பொறுத்து, எந்த வகையான தொழிலை பொறுத்து, நாடுகளை பொறுத்து மாறுபடும். இதில் பயனரின் ஆவணங்கள் கேட்கப்படும். அதன் மூலம் பயனரின் தகவல்களை பெற்று தகவல்களை சரி பற்க முடியும்.

பொதுவாக கேர்க்கப்படும் சில ஆவணங்கள் என்னென்னவென்று காணலாம்.

  • National Identity Number (Aadhar card)
  • Passport
  • Driver’s Licence
  • Social Security Number
  • Bank Statements
  • Electricity, gas, water bills
  • Income details
  • Photo of a person and basic details about the person.

எடுத்துக்காட்டுகள் 

  1. Our KYC process is very simple and fast.- எங்களுடைய KYC செயல்முறை எளிமையானது முற்றும் வேகமானது.
  2. I have to activate my SIM card by completing the KYC. – என்னுடைய SIM கார்டை வேலை செய்ய வைக்க நான் KYCயை முடிக்க வேண்டும். 
  3. I completed all my interviews and am waiting for the KYC process to be completed. – அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் முடித்துவிட்டு, KYC செயல்முறை முடிய காத்துக்கொண்டு இருக்கிறேன்.
  4. To prevent unauthorized access of our services, everyone must undergo our KYC process. – எங்கள் சேவைகளை அங்கீகரிக்கப்படாத நபர்களின் அணுகலை தவிர்க்க அனைவரும் KYC செயல்முறையை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

EOD 

End of Day என்பதன் சுருக்கமே EOD ஆகும். இதன் தமிழ் பொருள், நாள் இறுதிக்குள், நாள் முடிவில் போன்றவை ஆகும்.

ஒரு செயல் முடிய வேண்டிய நேரத்தையோ, ப்ராஜெக்ட் முடியும் காலக்கெடுவை குறிப்பிடும் இடங்களில் இந்த EOD ஐ உபயோகிப்போம்.

எந்தெந்த இடங்களில் EOD ஐ உபயோகிக்கலாம்?

இதனை அடிக்கடி வேலை செய்யும் இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 

  • பணியை முடிக்க வேண்டும் எனும் காலக்கெடுக்களை குறிப்பிடும் இடங்களில் 
  • வேலை எதிர்பார்ப்புகளை தெரிவிக்கும் சூழ்நிலைகளில் 
  • வேலைகளை ஒருங்கிணைக்கும் சூழ்நிலைகளில் 
  • வேலையின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை கூறும் இடங்களில் 

மேலும் இது போன்று வேலை சம்பந்தமாக காலக்கெடுக்களை கூறும் இடங்களில் நாம் EOD ஐ உபயோகிப்போம்.

EOD மற்ற விரிவாக்கங்கள் 

EOD – End Of Discussion

EOD – Engineering Operations Division

EOD – Estimated OnDock

எடுத்துக்காட்டுகள் 

  1. I will update you with the requested information by EOD. – நீங்கள் கேட்ட தகவல்களை இன்றைய நாள் இறுதிக்குள் அனுப்புவேன்.
  2. I have assigned a few tasks to you. Please complete them before EOD. – சில பணிகளை உங்களுக்கு கொடுத்துள்ளேன். தயவு செய்து அவை அனைத்தையும் இந்த நாள் இறுதிக்குள் முடியுங்கள்.
  3. Please send the client’s sale report before EOD. – வாடிக்கையாளர்களின் விற்பனை அறிக்கையை இன்றைய நாள் இறுதிக்குள் அனுப்பவும்.
  4. We need to increase our sales by 30% more by EOD of this quarter. – நம்முடைய விற்பனையை இந்த காலாண்டு இறுதிக்குள் 30% அதிகரிக்க வேண்டும்.

Conclusion

இந்த பதிவில் நாம் NASA, RSVP, DVD, FAQ, KYC, மற்றும் EODஆகியவற்றின் விரிவாக்கத்தையும், எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுகளுடன்தெளிவாக புரியும்படி விளக்கியுள்ளோம் என நம்புகிறேன். இவை உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்திருக்கும் என நம்புகிறோம்.

உங்களுக்கு வேறு நாங்கள் குறிப்பிடாத ஏதேனும் Abbreviations மற்றும் Acronyms வார்த்தைகளை பற்றி தெரிய வேண்டும் என விரும்பினால் அவற்றை comment இல் பதிவு செய்யவும். நாங்கள் உங்களின் கேள்விக்கு பதிலளிக்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.

இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் மற்ற அடிக்கடி நாம் உபயோகிக்கும் Abbreviations மற்றும் Acronyms ஐ பதிவிட உள்ளோம். அந்த பதிவுகளின் விவரத்தை இங்கு இணைக்கிறேன். அவற்றையும் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை comment இல் தெரிவிக்கவும்.

நன்றி! வணக்கம்!

haran

Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *